சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, October 1, 2011

சினிமா விமர்சனம்

திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம். என்னா பொழப்புடா இது, நம்ம கேபிள் அண்ணே, ஜாக்கி அண்ணே, சிபி அண்ணே மற்றும் பலர் எழுதும் விமர்சனங்களை பார்க்கும் போது நாமெல்லாம் செல்லாக்காசு போல் தோன்றும்.

இத்தனைக்கும் இத்தனை பதிவர்களுக்கு நான் சவால் விடுவேன். என்னைப்போல் சினமா பார்க்க இன்னொருவர் பிறந்து வரணும். உதாரணம் வேண்டுமா ஒரே நாளில் திருவாரூரில் மாணிக்கம், சிவசக்தி, மேட்டுக்குடி மற்றும் வேறு வேலையாக மதுரை சென்று அங்கு தேவர் பூஜையன்று வேறு வழியில்லாமல் வெளியில் வரமுடியாமல் இருந்த காரணத்தால் ஒரே நாளில் பார்த்த பாபா, பைவ் ஸ்டார், ரன் மற்றும் பல நாட்கள் பல படங்கள் என் நினைவில் இருக்கின்றன.

ஆனால் மேற்கூறிய சினிமா விமர்சன சீனியர்கள் போல் என்னால் சினிமா விமர்சன பதிவிட முடியாது. ஏனென்றால் எழுத்து என்பது என்னால் படிப்பது என்றளவில் இருக்கிறதே தவிர எழுதுவது என்பது இன்னும் நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய கலை, நான் இனிமேல் எழுதி எழுதி என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒன்று புரிகிறது, நான் எழுதியது இரண்டே இரண்டு சினிமா விமர்சன பதிவுகள் தான், ஆனால் இரண்டும் மொக்கை என எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய பலம் அதே நாளில் பதிவெழுதுவது ட்டும் தான். இந்த இரண்டு பதிவு நாட்களில் மட்டும் என் பிளாக் ஹிட்கள் தினம் 2000. மற்ற நாட்களில் 750 வருவதற்கு கூட முக்குகிறது. சரியோ தப்போ எவனோ பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை நான் எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வீட்டில் வந்து அடிப்பார்களோ என்று யோசித்து இருந்த நாட்கள் எல்லாம் உண்டு. ஆனால் சுயநலமாக சொல்கிறேன், படத்தை வெளியான அதே நாளில் விமர்சனம் செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். இப்படியெல்லாம் டகால்டி செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். அது மட்டும் புரிகிறது.

சில சமயங்களில் எனக்கு நானே யோசித்து கொள்கிறேன். இப்படி நாலு பேரை ஏமாத்தி ஹிட்ஸ் வாங்குறது ஒரு பொழப்பா? ஆனா மற்றவர்களை பாரக்கும் போது எனக்கும் தேவைப்படுகிறது. ஒன்று மட்டும் உண்மை அரசியலில் மட்டுமல்ல பதிவுலகிலும் சாணக்கியத்தனம் செய்து பெரிய ஆள் ஆவதே பலரின் லட்சியம் என்று புரிகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

இனிமேல் விமர்சனம் என்ற பெயரில் ஏமாற்ற போகும்

ஆரூர் முனா செந்திலு





7 comments:

  1. மாப்ள யாருக்கு இந்த அம்பு ஹிஹி...கொளுத்தி போட்டுட்டேன்!

    ReplyDelete
  2. மாப்ள யாருக்கு இந்த அம்பு ஹிஹி...கொளுத்தி போட்டுட்டேன்!

    ReplyDelete
  3. /// விக்கியுலகம் said...

    மாப்ள யாருக்கு இந்த அம்பு ஹிஹி...கொளுத்தி போட்டுட்டேன்! ///
    ஹி ஹி ஹி மாமா, காரம் இன்னும் வேணும் மாமா,

    ReplyDelete
  4. தொடர்ந்து கலக்குங்க பாஸ்!!

    ReplyDelete
  5. அட.. விமர்சனம் பத்தி இப்புடி ஒரு விமர்சனமா? நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  6. Unga vimarchanam nalla than iruku. Mathavangaloda comper pannama seynga. Namaku thonuradha solrom, ithilenna thappu iruku. Apdiye yedhanadhu thapppa sollitalum comment'sla discuss panna porom. Ok thane.

    ReplyDelete
  7. /// Saravanaa said...

    Unga vimarchanam nalla than iruku. Mathavangaloda comper pannama seynga. Namaku thonuradha solrom, ithilenna thappu iruku. Apdiye yedhanadhu thapppa sollitalum comment'sla discuss panna porom. Ok thane///

    ஓகே நண்பரே, பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...