சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, December 24, 2011

பூலான் தேவி கடைசி நாள் ...

"எம்.பி"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44_ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம். 2001_ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது.

எனவே, பூலான்தேவி டெல்லி வந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். 25_7_2001 அன்று பாராளுமன்ற கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1_30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டு முன் சென்று கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார்.

`கேட்'டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முபாக்கியால் சுட்டனர். இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி ன்னால் சென்றார். அப்போது, திடீரென்று முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாக துப்திருப்பி சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது. டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

கணவரும், உறவினர்களும் கதறி அழுதனர். பூலான்தேவியின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அதில் 3 குண்டுகள் தலையை ஊடுருவி இருந்தன. 2 குண்டுகள் மற்ற இடங்களில் பாய்ந்து இருந்தன. பாதுகாவலர் பல்வீந்தர்சிங் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பூலான்தேவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பூலான்தேவியின் சொந்த தொகுதியான மிர்சாபூரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. உத்தரபிரதேச மாநிலத்தில் "முழு அடைப்பு" நடந்தது.

பூலான்தேவியை கொன்ற மர்ம மனிதர்கள் 3 பேரும் பச்சை நிற மாருதி காரில் வந்தனர். பூலான்தேவியை எதிர்பார்த்து அவரது வீட்டு அருகில் காத்திருந்தனர். பூலான்தேவி காரை விட்டு இறங்கியதும், அவரை சுட்டு விட்டு, அதே காரில் தப்பிச் சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வந்து பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும், அந்தக் காரை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு, "ஆட்டோ"வில் ஏறிச்சென்று விட்டனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற காரை போலீசார் கைப்பற்றினர். காருக்குள் 2 கைத்துப்பாக்கிகள், 9 காலி தோட்டாக்கள், 15 சுடப்படாத குண்டுகள், 2 முகமூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்த குண்டுகள், வெளிநாட்டுத் துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடியவை. எனவே, கொலைக்கு வெளிநாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பூலான்தேவியின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் சென்று, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பூலான்தேவியின் தாயார் மூலாதேவிக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் பூலான்தேவியின் உடல் தனி விமானத்தில் வாரணாசி கொண்டு செல்லப்பட்டது. அந்த விமானத்தில் பூலான்தேவியின் தாயார் மூலாதேவி, கணவர் உமத்சிங், சகோதரிகள் முண்ணி, ருக்மணி, மைத்துனர் ஹர்கோவிந்த் ஆகியோரும் சென்றனர். வாரணாசி போய்ச் சேர்ந்ததும் பூலான்தேவியின் உடல் வேன் மூலம் மிர்சாபூருக்கு கொண்டு செல்லப்பட்டு சுடு காட்டில் தகனம் செய்யப்பட்டது.

ஆரூர் முனா செந்திலு


19 comments:

  1. பரபரப்பான அந்த நிமிடங்களை மட்டும் பகிர்நதது விறுவிறுப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. /// veedu said...

    பரபரப்பான அந்த நிமிடங்களை மட்டும் பகிர்நதது விறுவிறுப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. ///

    நன்றி சுரேஸ்.

    ReplyDelete
  3. /// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

    Reason for the murder? ///

    கொலையாளியின் தந்தையை பூலான்தேவி கொள்ளைக்காரியாக இருக்கும் போது சுட்டுக் கொன்றாள். ஏனென்றால் அவன் தந்தை பூலான்தேவியை கும்பலாக கற்பழித்த உயர்ஜாதி கிராமத்து பெரிய மனிதர்களுள் ஒருவர். அதனால் பூலான் தேவி அவனது தந்தையை கொன்றாள். அதற்கு பழி வாங்கவே அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் பூலான் தேவியை கொன்றான்.

    ReplyDelete
  4. Ennathu....
    GANDHI
    SETHUTTAARA?????????????????

    ReplyDelete
  5. /// NAAI-NAKKS said...

    Ennathu....
    GANDHI
    SETHUTTAARA???????????????? ///

    வாய்யா அறிவுப்புலி, உன் அறிவைக் கிள்ளி வாயில போட்டுக்க, வீட்டுக்கு போனதும் வீட்டம்மாகிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க. யார் கண்ணாவது பட்டுட போகுது. காந்தியின் உடல் இப்பொழுது தான் ராஜாஜி ஹால்ல வச்சிருக்காங்க, அகில உலக கில்மா ஸ்டார் நக்கீரன் வந்து மலர் வளையம் வைத்தால் தான் பாடிய எடுப்பாங்களாம்.

    ReplyDelete
  6. /// புஷ்பராஜ் said...

    அருமையான பதிவு ///

    நன்றி புஷ்பராஜ்.

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு பாஸ்.

    ReplyDelete
  8. /// Loganathan Gobinath said...

    அருமையான பகிர்வு பாஸ் ///

    நன்றி லோகநாதன்.

    ReplyDelete
  9. நான் அறியாத செய்தி!
    அறியத் தந்தீர் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. @senthil.......

    Idly thuniya kudava
    rajaji...halla
    vaippanga ???????

    ReplyDelete
  11. /// Blogger புலவர் சா இராமாநுசம் said...

    நான் அறியாத செய்தி!
    அறியத் தந்தீர் நன்றி

    புலவர் சா இராமாநுசம் ///

    நன்றி ஐயா.

    ReplyDelete
  12. ///
    NAAI-NAKKS said...

    @senthil.......

    Idly thuniya kudava
    rajaji...halla
    vaippanga ?????? ///

    ஒன்று மட்டும் தெரியுது, உமக்கு அறிவு வழிஞ்சு ஒடுது. கெட்டியா புடிச்சுக்கோங்கய்யா.

    ReplyDelete
  13. பழிக்கு பழி உண்மை விவரம் அருமை நன்றி மாப்ள!

    ReplyDelete
  14. /// விக்கியுலகம் said...

    பழிக்கு பழி உண்மை விவரம் அருமை நன்றி மாப்ள! ///

    நன்றி மாமா.

    ReplyDelete
  15. அறியாத பல தகவல்கள்!
    பகிர்விற்கு நன்றி Sir!
    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. நல்ல தகவல் நண்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...