சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, January 13, 2012

நண்பன் விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு

அய்யா எல்லாருக்கும் வணக்கமுங்க.

எல்லாரும் என்னை மன்னிக்கனுமுங்க. நானா வேணும்னு செய்யலீங்க. நான் நேர்மையாத்தான் செய்யனும்னு நெனச்சேனுங்க. ஆனா நேத்து அது என்னகடுப்பேத்திச்சிங்க. அதனால நான் பதிலுக்கு விமர்சனத்தை போட்டுப்புட்டேங்க. உண்மையா உழைச்ச சிபிகிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேனுங்க. போன் செய்து பேசியும் வாய் வரைக்கும் வந்த உண்மைய கஷ்டப்பட்டு மறைச்ச மோகன் குமார் அண்ணன் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேனுங்க.

நடந்தது என்னன்னா எங்க ஏரியாவுல நேத்து நண்பன் படம் ரிலீசாகல. அம்பத்தூர், ஆவடி, பாடி எங்கேயும் படம் நேத்து வெளியாகல. நேத்து காலையில 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிட்டு ராக்கி வந்தேன், படம் இல்லை. அடுத்ததா முருகன் வந்தேன், அங்கேயும் இல்லை. அப்புறம் 8 மணிக்கு கொளத்தூர் கங்காவுல ஷோவுன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. என்னடா கடுப்பேத்துதேன்னு மற்றொரு நண்பன் கிட்ட போன் பண்ணி வேற நம்ம பக்கம் எங்க ஒடுதுன்னு கேட்டேன். மூலக்கடை சண்முகான்னு சொன்னான். அங்கே போனேன். அங்கேயும் டிக்கெட் இல்லை.

பொறுமை இழக்க ஆரம்பித்தேன். அப்புறம் 9 மணிக்கு கோயம்பேடு ரோகிணில பாக்கலாம்னு வந்தேன். அங்கேயும் ஹவுஸ்புல். கொலைவெறியாகிட்டு வீட்டுக்கு வந்தேன். ஏன்னா அதுக்கு மேல படம் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதினா வேஸ்ட் ஆகிடும்.

ஒயின்ஷாப்ல ப்ளாக்ல ஆப் சரக்கு வாங்கினேன். வந்து ஆப்பையும் அடிச்சேன். த்ரீ இடியட்ஸ் மனசுல ஒட்டிக்கிட்டேன். கேரக்டர் பேரு வேணும்ல அதுக்காக யூடியூப்ல டிரைலர் டவுன்லோட் பண்ணேன். விவரங்கள் எடுத்துக்கிட்டேன். த்ரீ இடியட்ஸை அப்படியே நானே தமிழ்பெயர்களுடன் விமர்சனம் எழுதினேன். மட்டையாகிட்டேன். மதியம் மோகன் குமார் அண்ணன் போன் செய்து என்னுடைய விமர்சனத்தை யாரோ காப்பியடி்த்து போட்டிருக்கிறதா சொன்னார். நானே பொய்யான விமர்சனம் போட்டேன். அதையும் ஒரு நாதேரி காப்பியடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொல்ல முடியல. முழுங்கிட்டேன. சாரி மோகன் குமார் அண்ணா.

ஆனால் நாளைக்கு சத்தியமா வேட்டை படம் பார்த்திட்டு தான் விமர்சனம் எழுதுவேன். ஏன்னா இப்ப நான் இருக்கிறது என் ஊர்ல. இப்ப உண்மையிலேயே நண்பன் படத்துக்கு போறேன். நன்றி


ஆரூர் மூனா செந்தில்


26 comments:

  1. என்னய்யா இது சினிமா மாதிரி ஷாக் மேல ஷாக்கா குடுக்குறீங்க !!

    படம் பார்க்காம எழுதுற ஆட்கள் நிறைய உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன். முதல் முறையா நீங்க ஒத்துக்கிட்டது மகிழ்ச்சி என்றாலும் இனி இப்படி செய்யாதீர்கள் செந்தில். வலை உலகம் ரொம்ப மோசமானது. இங்கே தனி மனித தாக்குதல் பயங்கரமா இருக்கும். சிறு தப்பு செய்தாலும் தூக்கி போட்டு மிதிக்க ஆட்கள் காத்துக்கிட்டே இருப்பாங்க

    ReplyDelete
  2. நல்லவேளை,மப்புல நண்பனுக்கு பதில் வேட்டை விமர்சனம் சுடச்சுடன்னு போடாம விட்டீங்களே.

    ReplyDelete
  3. உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா

    இந்த வசனத்தை "நீங்கள்" வைக்கலாமா வேண்டாமா என்பதை உங்கள் சுய பரிசோதனைக்கே விட்டு விடுகிறேன்

    ReplyDelete
  4. அதே நேரத்தில் உண்மையை ஒப்பு கொண்டதால் நீங்கள் "சிறிது" பாராட்டுக்கும் உரியவர்.

    ReplyDelete
  5. என்னய்யா நடக்குது இங்க???? ட்விஸ்ட்டு மேல ட்விஸ்டு? ஹாங் ஓவர் பாத்த எஃபெக்ட் வருது தல.

    சரி விடுங்க பாஸ். ஒத்துக்கிட்டீங்களே. அது போதும்.

    இனி கொஞ்சம் லிமிட் பண்ணியே தண்ணிய போடுங்க. ஏன்னா இந்த ரேஞ்சுல போனா கோச்சடையான், மாற்றானுக்கும் விமர்சனம் எழுதிருவீங்க போலருக்கு. :)

    ReplyDelete
  6. இதுக்கெல்லாம் போயி ஃபீல் பண்ணிக்கிட்டு. ஐ லைக் திஸ்.
    அடுத்து மருதநாயகத்துக்கு ஒரு விமர்சனபதிவை தட்டி வுடுங்க! என்ன ஒரு கஷ்டம்னா படம் நல்லா இருக்கிறதனால தப்பிச்சீங்க...படம் மட்டும் வழக்கமான விஜய் படமா இருந்திச்சு எத்தனை ஜீவன்கள் உங்க விமர்சனத்தை நம்பி அதைப் பாத்திருக்கும்.ப்ரம்மஹத்தி தோஷம் உங்களுக்கு வந்திருக்கும்.

    ReplyDelete
  7. ஆஹா....!இது ஒன்றும் தவறு இல்லை செந்தில்....உங்க விமர்சனம் சரியாத்தான் இருந்தது!உண்மையை நீங்க கூறாமல் விட்டிருக்கலாம்...அடுத்த விமர்சனம் போடும் போது இதை படம் பார்த்துதான் போட்டிருப்பிங்களோன்னு சந்தேகமாதான் படிக்க வேண்டியிருக்கும்...

    ReplyDelete
  8. //என்னய்யா இது சினிமா மாதிரி ஷாக் மேல ஷாக்கா குடுக்குறீங்க !!

    படம் பார்க்காம எழுதுற ஆட்கள் நிறைய உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன். முதல் முறையா நீங்க ஒத்துக்கிட்டது மகிழ்ச்சி என்றாலும் இனி இப்படி செய்யாதீர்கள் செந்தில். வலை உலகம் ரொம்ப மோசமானது. இங்கே தனி மனித தாக்குதல் பயங்கரமா இருக்கும். சிறு தப்பு செய்தாலும் தூக்கி போட்டு மிதிக்க ஆட்கள் காத்துக்கிட்டே இருப்பாங்க//

    உண்மைதாங்க நான் நண்பன் விமர்சனம் என்று போடாமல் சும்மா காலாய்ச்சு ஒரு பதிவ போட்டேன் ஒரு புரபைல் இல்லாத ஒரு நாதாரி....விமர்சனம்ன்னா என்னவென்று உனக்கு தெரியுமா?பொறம்போக்கு அவனே...இவனே...என்று திட்டி கமெண்ட் போடுது.....இது என்னங்க கொடுமை!

    ReplyDelete
  9. naan unnai nambinen nee ennai konjam uyarathil thooki vachitte mikka nandri

    ReplyDelete
  10. அவனே...இவனே என்ன கொடுமை இது

    ReplyDelete
  11. ஆஹா.. இனிமேல் நீங்க எழுதற ஒவ்வொரு விமர்சனமும்.. படம் பாத்து எழுதுனதா.. இல்லாவிட்டால் half போட்டுட்டு எழுதுனதா என்ற சந்தேகம் தான் மொதல்ல வரும்..

    ReplyDelete
  12. oh...wat a crime u hav committed...oh mi gosh...especially in place tamil nadu...where we r only choosing our political figures from cinema....shame...shame..puppy shame!!....(NO WONDER Y MALAYALIS R SCREWING U)

    ReplyDelete
  13. /// மோகன் குமார் said...

    என்னய்யா இது சினிமா மாதிரி ஷாக் மேல ஷாக்கா குடுக்குறீங்க !!

    படம் பார்க்காம எழுதுற ஆட்கள் நிறைய உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன். முதல் முறையா நீங்க ஒத்துக்கிட்டது மகிழ்ச்சி என்றாலும் இனி இப்படி செய்யாதீர்கள் செந்தில். வலை உலகம் ரொம்ப மோசமானது. இங்கே தனி மனித தாக்குதல் பயங்கரமா இருக்கும். சிறு தப்பு செய்தாலும் தூக்கி போட்டு மிதிக்க ஆட்கள் காத்துக்கிட்டே இருப்பாங்க ///

    அண்ணே, அது டிக்கெட் கிடைக்காத கடுப்பில் போட்டது, கண்டுக்காதீங்க.

    ReplyDelete
  14. /// பொ.முருகன் said...

    நல்லவேளை,மப்புல நண்பனுக்கு பதில் வேட்டை விமர்சனம் சுடச்சுடன்னு போடாம விட்டீங்களே. ///

    அதான் இன்னைக்கு அதுவும் போட்டாச்சே பாசு.

    ReplyDelete
  15. /// R.Puratchimani said...

    உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா

    இந்த வசனத்தை "நீங்கள்" வைக்கலாமா வேண்டாமா என்பதை உங்கள் சுய பரிசோதனைக்கே விட்டு விடுகிறேன் ///

    அய்யா புரட்சி மணி,

    நாங்களெல்லாம் புரட்சியை தப்புல காட்ட மாட்டோம், தப்பை ஒத்துக்கிறதுல காட்டுவோம். வேற யாரையாவது வீழ்ச்சில தப்ப ஒத்துக்க சொல்லுங்க. நாங்களே, புரட்சிக்காரங்க தானுங்கப்பே.

    ReplyDelete
  16. /// ஹாலிவுட்ரசிகன் said...

    என்னய்யா நடக்குது இங்க???? ட்விஸ்ட்டு மேல ட்விஸ்டு? ஹாங் ஓவர் பாத்த எஃபெக்ட் வருது தல.

    சரி விடுங்க பாஸ். ஒத்துக்கிட்டீங்களே. அது போதும்.

    இனி கொஞ்சம் லிமிட் பண்ணியே தண்ணிய போடுங்க. ஏன்னா இந்த ரேஞ்சுல போனா கோச்சடையான், மாற்றானுக்கும் விமர்சனம் எழுதிருவீங்க போலருக்கு. :) ///

    பாஸ், அடுத்த மாதம் நீங்க சொன்ன படங்களின் விமர்சனங்களை நம்ம பிளாக்ல ரிலீஸ் பண்றோம். அதுக்கப்புறம் தான் படம் ரிலீசாகுது. ஒகேவா.

    ReplyDelete
  17. /// மௌனகுரு said...

    Unga vimarsanasm mela Ulla trust ellame damaal ///

    நான் சொன்ன விமர்சததில் ஒரு பகுதியாவது படததில இல்லைன்னு சொல்லுங்க, நான் உங்கள் முன் சரண்டர்.

    ReplyDelete
  18. /// Chilled beers said...

    இதுக்கெல்லாம் போயி ஃபீல் பண்ணிக்கிட்டு. ஐ லைக் திஸ்.
    அடுத்து மருதநாயகத்துக்கு ஒரு விமர்சனபதிவை தட்டி வுடுங்க! என்ன ஒரு கஷ்டம்னா படம் நல்லா இருக்கிறதனால தப்பிச்சீங்க...படம் மட்டும் வழக்கமான விஜய் படமா இருந்திச்சு எத்தனை ஜீவன்கள் உங்க விமர்சனத்தை நம்பி அதைப் பாத்திருக்கும்.ப்ரம்மஹத்தி தோஷம் உங்களுக்கு வந்திருக்கும். ///

    அய்யா சுவாமி, நான் ஹிந்தில படத்தை நூறு முறைக்கு மேல் பார்த்தவன், படம் நல்லாயிருக்கும் என்றதால் தான் நம்பி விமர்சனம் எழுதினேன்.

    ReplyDelete
  19. /// veedu said...

    ஆஹா....!இது ஒன்றும் தவறு இல்லை செந்தில்....உங்க விமர்சனம் சரியாத்தான் இருந்தது!உண்மையை நீங்க கூறாமல் விட்டிருக்கலாம்...அடுத்த விமர்சனம் போடும் போது இதை படம் பார்த்துதான் போட்டிருப்பிங்களோன்னு சந்தேகமாதான் படிக்க வேண்டியிருக்கும்... ///

    இல்லை சுரேஸ், இது பழிக்குப் பழி.

    ReplyDelete
  20. /// தஞ்சை குமணன் said...

    அவனே...இவனே என்ன கொடுமை இது ///

    டேய் ராஸ்கோலு, நான் போட்ட டப்பா பதிவையே காப்பியடிச்ச நாதேரி நீ, நீ எனக்கு அட்வைஸ் பன்றீயா.

    ReplyDelete
  21. /// bandhu said...

    ஆஹா.. இனிமேல் நீங்க எழுதற ஒவ்வொரு விமர்சனமும்.. படம் பாத்து எழுதுனதா.. இல்லாவிட்டால் half போட்டுட்டு எழுதுனதா என்ற சந்தேகம் தான் மொதல்ல வரும்.. ///

    அய்யா பந்து, உங்களுக் சந்தேகமே வேண்டாம், திருவிழா சமயங்களில் நாங்களெல்லாம் ஆப் போட்டு விட்டு தான் படத்திற்கே செல்வோம்.

    ReplyDelete
  22. // நானே பொய்யான விமர்சனம் போட்டேன். அதையும் ஒரு நாதேரி காப்பியடிச்சிருக்கு. //

    சூப்பர்...

    குறிப்பிட்ட பதிவை படித்தேன்... உண்மையாவே பார்த்துட்டு எழுதின மாதிரியே இருந்தது...

    ஒரு தத்துவம்...
    ஒன்னு தப்பு செய்யாம இருக்கணும், இல்லைன்னா செஞ்ச தப்பை வெளியே சொல்லாம இருக்கணும்...

    நீங்க வேணா பாருங்க... ஆரூர் மூனா செந்திலு விமர்சனம்ன்னா கரெக்டா இருக்கும்ன்னு நம்பி வந்த பயலுக இனி வரமாட்டாங்க...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...