ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை அதிகமாக கிண்டலடிக்கப்படும் திரையுலகினரில் இயக்குனர் சேரனும் ஒருவர். ஆனால் எனக்கு மட்டும் மனிதனின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறந்த இயக்குனராக படுகிறார். படங்களின் வியாபாரத்திற்காக காம்பரமைஸ் செய்து கொள்ளாத இயக்குனர் என்பதால் மேலும் உயர்ந்தவராக என் மனதில் படுகிறார்.
இயக்குனர் சேரன் அவர்களின் முதல் படமான பாரதி கண்ணம்மா நான் 12ம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்தது. அப்பொழுதும் எந்தப்படமானாலும் நண்பர்களுடன் முதல் நாளே செல்வது வழக்கமாக இருந்தது. ஒரு தினத்தில் எந்தப்படமும் கிடைக்காமல் எந்தவித எதிர்ப்பார்ப்புமில்லாமல் திருவாரூர் தைலம்மை திரையரங்கிற்கு சென்றேன். படம் துவங்கியதிலிருந்து காமெடியில் நம்மை அசத்திக் கொண்டிருந்த படம் நேரம் செல்லச் செல்ல அந்த காதலுக்குள் நம்மை இழுத்துச் சென்று பார்த்திபன் உடன்கட்டை ஏறும் காட்சியில் கதறி கதறி அழவும் வைத்து விட்டது. அதன் பிறகு அந்தப்படத்தை நான் ஐந்து முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்தேன். கண்டிப்பாக இந்த இயக்குனர் கவனிக்கப்பட வேண்டியவர் என்று முடிவு செய்தேன். அன்று முதல் சேரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரானார்.
சேரனின் அடுத்த படமான பொற்காலம் வெளிவந்தபோது நான் பட்டயப்படிப்பிற்காக சென்னை வந்து விட்டேன். ஆனால் அது பொங்கலன்று வெளியானதால் திருவாரூரில் தான் பார்த்தேன். அந்த படமும் கலங்க வைத்து விட்டது. அழுது கொண்டே தான் பார்த்தேன். ஹீரோயிசம் இல்லாத மிக உண்மையாக உழைப்பவனும் ஒரு மாற்று திறனாளி பெண்ணின் அண்ணனுமாக முரளி நடித்திருந்த படம். மிக நேர்மையான இயக்குனராகவும், இந்த காலத்திலும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் சொல்லும் இயக்குனராகவும் என் மனதில் உயர்ந்து நின்றார்.
அடுத்த படம் தேசியகீதம். அந்தப்படம் சங்கத்தில் பார்த்தேன். அந்தப் படம் பார்த்த போது நடந்த சுவாரஸ்யம் என்னவென்றால் நான் திருவாரூரிலிருந்து வந்தவன். அதிகமாக கட்சித்தலைவர்களை நேரில் பார்த்திராதவன். நான் படம் பார்க்க சங்கம் தியேட்டர் சென்ற அதே காட்சியை பார்க்க ஜி.கே.மூப்பனார் வந்திருந்தார். அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வந்திருந்தனர். நான் அமர்ந்திருந்த நான்கு வரிசை முன்பாக அவர் அமர்ந்து பார்த்தார். தியேட்டர் முழுவதும் அவரது கட்சியினரே அமர்ந்திருந்தனர். படம் பார்த்ததே வித்தியாசமான அனுபவம். படமும் நக்கலும் நையாண்டியுமாக இன்றைய அரசியல்வாதிகளை கிண்டலடித்து எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சரியாக போகவில்லை.
அடுத்த படமாக வெற்றிக் கொடிகட்டு வந்தது. இது வரை வந்த சேரனின் படங்களில் நல்ல மெசேஜ் சொன்ன படம் இது தான். கொளத்தூர் குமரன் தியேட்டரில் பார்த்தேன். பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் மிக எளிமையாக சொன்ன படம். பார்த்திபன் - முரளியின் இயல்பான நட்பு, மனோரமாவின் தாய்ப்பாசம், மீனாவின் தன்னம்பிக்கை என மனிதர்களின் பாசிடிவ் பக்கங்களை சொன்ன படம். சார்லியின் நடிப்பு மிகப்பிரமாதமாக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.
ஆரூர் மூனா செந்தில்
தொடரும்...
நல்ல தொகுப்பு....
ReplyDeleteஎனக்கு ஏனோ சேரனை பிடிக்காது.....நாடக தன்மையோடு படம் எடுப்பவர் என்பதால்..
சன் டிவி சீரியல் மாதிரி அவர் படம் இருக்கும்...
ஆனால் சேரனின் உங்கள் பார்வை ரொம்ப வித்தியாசமா இருக்கு.
/// ராஜ் said...
ReplyDeleteநல்ல தொகுப்பு....
எனக்கு ஏனோ சேரனை பிடிக்காது.....நாடக தன்மையோடு படம் எடுப்பவர் என்பதால்..
சன் டிவி சீரியல் மாதிரி அவர் படம் இருக்கும்...
ஆனால் சேரனின் உங்கள் பார்வை ரொம்ப வித்தியாசமா இருக்கு. ///
நன்றி ராஜ்.
சேரன் எளிய வாழ்க்கை வாழும் சமுதாயத்திலிருந்து வந்தவர்!அவர் படங்கள் நாடக தன்மையோடு இருப்பதின் காரனம் அதுவே...
ReplyDeleteஉங்கள் கோணம் சரியே! ஆனால் நடிக்க மட்டும் சொல்லாதிங்க..!இயல்பான முரன், சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மட்டுமே அவருக்கு எடுபடும்!
/// வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteசேரன் எளிய வாழ்க்கை வாழும் சமுதாயத்திலிருந்து வந்தவர்!அவர் படங்கள் நாடக தன்மையோடு இருப்பதின் காரனம் அதுவே...
உங்கள் கோணம் சரியே! ஆனால் நடிக்க மட்டும் சொல்லாதிங்க..!இயல்பான முரன், சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மட்டுமே அவருக்கு எடுபடும்! ///
அது தான் நானும் சொல்றேன். அவரது நடிப்பைப் பற்றி எங்கேயும் சொல்லலையே.
சேரன் ஒரு சிறந்த இயக்குனர். இவரின் பல படங்கள் என்னை பாதித்தன, எளிமையான முறையில் மெசேஜ் சொல்லும் இயக்குனர். நல்ல கதையை மசாலாவாக ஆக்க விரும்பாத இயக்குனர் . நாடகதன்மையாக இருந்தாலும் நகைச்சுவையும் கிண்டலும் இவரின் இயல்பான இயக்கும் தன்மை . இயக்கத்தை விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டுவதை தவித்து மீண்டும் நல்ல படங்களை இயக்க வரவேண்டும் .
ReplyDeleteநல்லவேளை இயக்குநர் சேரன் என்று எழுதியிருக்கிறீர்கள்.நடிகர் என்று எழுதியிருந்தால கொலவெறியே வந்திருக்கும்.நடிப்பு சகிக்காது எனக்கு.இயக்குநராக பாராட்டப்படவேண்டியவர்
ReplyDeleteAs a director I like cheran much and as an actor few fils he has done very good.
ReplyDeleteautograph and solla marantha kathai, noth movies are for cheran only.
Mayakannadi is a nice attempt from cheran which as been rejected by our people, from tha tmovie I am not able to see cheran direction
/// Sebstian D Alagu said...
ReplyDeleteசேரன் ஒரு சிறந்த இயக்குனர். இவரின் பல படங்கள் என்னை பாதித்தன, எளிமையான முறையில் மெசேஜ் சொல்லும் இயக்குனர். நல்ல கதையை மசாலாவாக ஆக்க விரும்பாத இயக்குனர் . நாடகதன்மையாக இருந்தாலும் நகைச்சுவையும் கிண்டலும் இவரின் இயல்பான இயக்கும் தன்மை . இயக்கத்தை விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டுவதை தவித்து மீண்டும் நல்ல படங்களை இயக்க வரவேண்டும் .
///
நம்முடைய கோரிக்கையும் அதுதான் ஒவ்வொரு படத்திலும் மனிதனின் வாழ்வியலை காண்பித்த சேரன் தான் நமக்கு வேண்டும்.
/// Chilled Beers said...
ReplyDeleteநல்லவேளை இயக்குநர் சேரன் என்று எழுதியிருக்கிறீர்கள்.நடிகர் என்று எழுதியிருந்தால கொலவெறியே வந்திருக்கும்.நடிப்பு சகிக்காது எனக்கு.இயக்குநராக பாராட்டப்படவேண்டியவர் ///
நன்றி சில்ட் பீர்ஸ்.
/// DHANS said...
ReplyDeleteAs a director I like cheran much and as an actor few fils he has done very good.
autograph and solla marantha kathai, noth movies are for cheran only.
Mayakannadi is a nice attempt from cheran which as been rejected by our people, from tha tmovie I am not able to see cheran direction ///
நீங்கள் சொல்வது தான் சரி தன்ஸ்.
எனக்கு சேரன் அறிமுகமாகியது “பாண்டவர் பூமி” படத்தின் மூலம் தான். வித்தியாசமான நல்ல கதைக்களம் அவருடன் ஒட்ட வைத்தது. அதன் பின் ஆட்டோகிராப் ... முக்கியமாக “தவமாய் தவமிருந்து” படங்களின் பின்னர் கவனத்திற்குரிய டைரக்டர் ஆகிவிட்டார்.
ReplyDeleteஅதிலும் மாயக்கண்ணாடி என்ற படத்தில் ஒரு இடத்தில் ராதாரவி சேரனுக்கு வாழ்க்கையைப் பற்றி விளக்கிப் பேசும் இடம் படத்தின் ஹைலைட்.
ஆனா நீங்க சொன்ன இரண்டு படங்களைப் பார்க்க கிடைக்கவில்லை. சீக்கிரம் சீடி வாங்கிப் பார்க்கணும்.
I likes most of his Film. Particularly "Davamai Davamirundhu". Do u like the movie?
ReplyDelete/// ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDeleteஎனக்கு சேரன் அறிமுகமாகியது “பாண்டவர் பூமி” படத்தின் மூலம் தான். வித்தியாசமான நல்ல கதைக்களம் அவருடன் ஒட்ட வைத்தது. அதன் பின் ஆட்டோகிராப் ... முக்கியமாக “தவமாய் தவமிருந்து” படங்களின் பின்னர் கவனத்திற்குரிய டைரக்டர் ஆகிவிட்டார்.
அதிலும் மாயக்கண்ணாடி என்ற படத்தில் ஒரு இடத்தில் ராதாரவி சேரனுக்கு வாழ்க்கையைப் பற்றி விளக்கிப் பேசும் இடம் படத்தின் ஹைலைட்.
ஆனா நீங்க சொன்ன இரண்டு படங்களைப் பார்க்க கிடைக்கவில்லை. சீக்கிரம் சீடி வாங்கிப் பார்க்கணும். ///
பார்க்க வேண்டிய படங்கள் தவற விடாமல் பாருங்கள்.
/// Senthilkumar said...
ReplyDeleteI likes most of his Film. Particularly "Davamai Davamirundhu". Do u like the movie? ///
2ம் பகுதியில் தவமாய் தவமிருந்து பற்றி எழுதுகிறேன் செந்தில்.
I think desiya geetham is his first movie.... And porkkaalam is the remake of a award winner Malayalam movie... Name theriyala jeyaram thaan hero
ReplyDelete/// மௌனகுரு said...
ReplyDeleteI think desiya geetham is his first movie.... And porkkaalam is the remake of a award winner Malayalam movie... Name theriyala jeyaram thaan hero ///
இல்லை மெளனகுரு. நான் சொன்னது தான் சேரன் பட வரிசை. தேசிய கீதம் மூன்றாவது படம்.
இயல்பான களங்களில் புகுந்து விளையாடக்கூடியவர்தான்.ஆனால் சில காட்சிகளில்(மட்டும்)நாடகத்தன்மை இயல்பாக வந்துவிடும்,ஆனாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் இவரும் ஒருவர்.அதில் நோ டவுட்.
ReplyDeleteஆனாலும் மாயக்கண்ணாடியில் ரொம்பவே சோதித்திருப்பார்.ஹாலிவுட் சொன்னது போல் ராதாரவி பார்ட் நல்லாருக்கும்.இந்த படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன்.
ReplyDelete