சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, March 25, 2012

பஞ்சேந்திரியா - 25.03.2012


சும்மா கலவையா எழுத ஒரு பொருத்தமான தலைப்பு தேடிக்கிட்டு இருந்தப்ப எங்க வூட்டு ஆத்தா ஒன்று பஞ்சேந்திரியா தான் முக்கியம் முக்கியம்னு கூவிக்கின்னு இருந்தது. அதுகிட்ட அர்த்தம் கேட்டப்ப அப்படின்னா பஞ்சபூதம் என்று சொன்னது, உடனே தலைப்பு கிடைத்ததா பட்சி உள்ளே கூவிச்சு. அதனால் இனிமேல் வாரம் ஒரு முறை ஐந்து செய்திகளுடன் கூடிய பஞ்சேந்திரியா உண்டு.

------------------------------------------

வெற்றிகரமாக ஆசிய கோப்பையை வென்ற பிறகு தாயகத்திற்கு திரும்பிய அப்ரிடி விமான நிலையத்தில் வரவேற்பதற்காக நின்றிருந்த ரசிகர்களில் சிலரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியது.


ஆனால் அப்ரிடியோ தன் மகள் தன்னை வரவேற்க காத்திருந்த போது ரசிகர்களின் முட்டல் மோதலில் சிக்கி காயம் பட்டதாகவும் அவளை காப்பாற்றவுமே தான் தாக்கியதாகவும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது அவருடைய சொந்த விஷயம் எனவும் தாங்கள் தலையிட முடியாது எனவும் கூறி விட்டது.

பாகிஸ்தான் நாட்டின் ஜனநாயகம் சில சம்பவங்களிலேயே சந்தி சிரிக்கிறதே.

--------------------------------

கூடங்குளத்தில் என்னதான் நடக்கிறது. நாளொருமேனியாக புதுப்புது தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு நாள் ஜெர்மன் உளவாளி நாகர்கோவிலில் இருந்து உதவியாக இருக்கின்றன என்று தகவல்கள் வருகின்றன. மறுநாள் இது நக்சலைட்கள் உதவுவதாக செய்திகள் வருகின்றன. என்ன தாங்க நடக்கிறது.

அரசாங்கமோ கடலோர காவல், விமானப்படை காவல், அதிரடிப்படை காவல், உளவுத்துறை என அளவுக்கதிகமான பாதுகாப்பை அள்ளிக்குவிக்கிறது. விளம்பரங்களில் மிகப்பிரபலங்கள் மூலம் இது பாதுகாப்பானது என்பதை தெரிவிக்கிறது.

திருப்பூர், கோவை மற்றும் பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இந்த அணுஉலை எதிர்ப்பால் கரண்ட் கிடைக்காமல் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கிறது என சொல்கிறார்கள்.

என்னைப் போல் நடுநிலையான இது பற்றிய போதிய அறிவற்ற மக்கள் ஙே ஙே என காதல் பரத் போல் திரிய வேண்டியது தான் போல இருக்கிறது.

-------------------------------

எனக்கு மகேஷ்பாபுவை மிகவும் பிடிக்கும் என்பதால் இன்று ஜெமினி டிவியில் ஒளிபரப்பான கலீஜா படத்தை பார்த்தேன். இந்த ஆந்திராகாரர்களுக்கு எதையுமே கொஞ்சம் காரசாரமாக கூடுதலாக செய்தால் தான் பிடிக்கும் போல இருக்கிறது.

இன்று அப்படத்தின் காட்சியில் ஒரு ஸ்கார்ப்பியோ கார் வந்து மகேஷ்பாபுவின் மீது மோதுகிறது. அப்படியே எகிறி போய் எதிரில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் விழும் அவர் ஸ்பிரிங் போல் எகிறி வந்து மீண்டும் அதே காரின் பேனட்டில் குதிக்க இரண்டு முன் டயர்களும் பக்கவாட்டில் எகிறி விழுகின்றன. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். இது போல் அபத்தங்கள் நிறைய தெலுங்கு சினிமாவில் பார்த்திருக்கிறேன். அவற்றை வரும் வாரங்களில் விவரிக்கிறேன். நீங்களும் முடிந்தால் பார்த்து மெய் சிலிருங்கள். தமிழ் சினிமா இன்னும் வளரணும் என்பது மட்டும் புரிந்தது. என்னா ஜம்ப்புடா சாமி...

----------------------------------

இந்த வார ஹீரோ


----------------------------------

சென்னையில் கேபிளில் ஜெமினி மற்றும் மா டிவி மட்டுமே வருகிறது. இரண்டிலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தினம் ஐந்து என இரண்டு டிவிக்களில் ஒரு நாளைக்கு பத்து படம் என மொத்தம் 20 படங்கள் ஒளிபரப்பாகின்றன. உலகம் தாங்காதுடா சாமி.

இதுக்கு தமிழ் சேனல்கள் எவ்வளவோ தேவலாம் போல, பாதிக்கு மேல் கேம் ஷோ தான் வருகிறது. ஒரு சேனலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு படம் மட்டுமே ஒளிபரப்பாகிறது கேடிவி தவிர.

----------------------------------

இந்த வார தத்துவம்

காதல் என்பது கார்ப்பரேசன் கக்கூஸ் மாதிரி

வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான்
உள்ளே இருப்பவன் வெளியே வர தவிக்கறான்

--------------------------------

ஆரூர்
மூனா செந்தில்

18 comments:

  1. நல்லா இருக்கு உங்க பஞ்சேந்திரியா..
    5 நியூஸ்... + 1 தத்துவம்... அசத்துங்கள்...வார வாரம் எதிர்பார்க்கலாமா..????

    ReplyDelete
  2. /// ராஜ் said...

    நல்லா இருக்கு உங்க பஞ்சேந்திரியா..
    5 நியூஸ்... + 1 தத்துவம்... அசத்துங்கள்...வார வாரம் எதிர்பார்க்கலாமா..???? ///

    கண்டிப்பா ராஜ், தொடருகிறேன். ஆனா நம்ம ஸ்பைடர்மேன் பத்தி சொல்லவேயில்லையே

    ReplyDelete
  3. புதுசு புதுசா யோசிக்கிறாங்க பா..ஹி..ஹி..நான் தலைப்பை சொன்னேன்,,,

    ReplyDelete
  4. /// Kovai Neram said...

    புதுசு புதுசா யோசிக்கிறாங்க பா..ஹி..ஹி..நான் தலைப்பை சொன்னேன்,,, ///

    ஏதோ டபுள் மீனிங்கா தெரியுதே ஜீவா.

    ReplyDelete
  5. தலைப்பு நச்சுன்னு இல்லையே... வேற ஏதாவது யோசிக்கலாம்...

    நான் வாராவாரம் ஃபிகருங்க ஸ்டில் போடுறா மாதிரி ஏதோ ட்ரை பண்ணியிருக்கீங்க போல...

    ReplyDelete
  6. கலவைப்பதிவு வெற்றி பெற வாழ்த்துகள். அப்ரிடி செய்தது என்னைப்பொறுத்தவரை சரியே. ரசிகர்கள் இதுபோன்ற பிரபலங்களை கண்டால் அளவுக்கு மீறி உணர்ச்சி வசப்படுதால் வரும் விளைவிது. பெற்ற மகள் கீழே விழுவதை பார்த்து சட்டென அப்ரிதி இவ்வாறு ரியாக்ட் செய்துள்ளார். சில விஷயங்களுக்கு இடம், பொருள்,ஏவல் பார்க்க முடியாமல்தான் போகிறது.

    ReplyDelete
  7. /// Philosophy Prabhakaran said...

    தலைப்பு நச்சுன்னு இல்லையே... வேற ஏதாவது யோசிக்கலாம்...

    நான் வாராவாரம் ஃபிகருங்க ஸ்டில் போடுறா மாதிரி ஏதோ ட்ரை பண்ணியிருக்கீங்க போல... ///

    பிரபா, தலைப்புனா யாருக்கும் புரியக்கூடாது, நம்ம தலைவருங்க மாதிரி.

    உன்னுடைய இந்த வார போட்டோவில் பிகருங்கள் போட்டோ மட்டும் தானே வரும், இதில் நையாண்டி போட்டோக்கள் மட்டுமே வரும்.

    ReplyDelete
  8. /// ! சிவகுமார் ! said...

    கலவைப்பதிவு வெற்றி பெற வாழ்த்துகள். ///

    நன்றி சிவா.

    ReplyDelete
  9. கோர்வையான செய்திக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. புது முயற்சி - பஞ்சேந்திரியா..? வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. தெலுங்கில் ஹாப்பி டேஸ், பொம்மரில்லு, கொத்த பங்காரு லோகம், 100% லவ், கீ, ஷோ, மாதிரியான திரைப்படங்கள்தான் என் சாய்ஸ்...


    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  12. ஐந்து செய்திகளும் ரசிக்கும்படியாக இருந்தது
    கடைசியில் காதல் குறித்த விளக்கம்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. பஞ்சேந்திரி நல்லாதான் இருக்கு..
    தொடருங்கள்..!

    ReplyDelete
  14. /// சங்கவி said...

    கோர்வையான செய்திக்கு வாழ்த்துக்கள்.... ///

    நன்றி சங்கவி.

    ReplyDelete
  15. /// திண்டுக்கல் தனபாலன் said...

    புது முயற்சி - பஞ்சேந்திரியா..? வெற்றி பெற வாழ்த்துக்கள் ! ///

    நன்றி தனபாலன்

    ReplyDelete
  16. /// கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

    தெலுங்கில் ஹாப்பி டேஸ், பொம்மரில்லு, கொத்த பங்காரு லோகம், 100% லவ், கீ, ஷோ, மாதிரியான திரைப்படங்கள்தான் என் சாய்ஸ்...

    நட்புடன்
    கவிதை காதலன் ///

    நீங்கள் தரமான படங்களின் ரசிகன் என நினைக்கிறேன் மணிகண்டவேல்.

    ReplyDelete
  17. /// Ramani said...

    ஐந்து செய்திகளும் ரசிக்கும்படியாக இருந்தது
    கடைசியில் காதல் குறித்த விளக்கம்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள் ///

    நன்றி ரமணி அய்யா

    ReplyDelete
  18. /// வெங்கட் said...

    பஞ்சேந்திரி நல்லாதான் இருக்கு..
    தொடருங்கள்..! ///

    நன்றி வெங்கட்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...