சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, July 5, 2012

பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்

ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்)

10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் அருண் ஐஸ்கிரீமுமே மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்)

****

பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை

10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )


எப்பூடி

ஆரூர் மூனா செந்தில்
(இணையத்தில் படித்தேன் பிடித்திருந்தது, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
0

21 comments:

  1. முதல் பத்து காரணம்....
    உங்க அனுபவம் போல....

    ReplyDelete
    Replies
    1. ஏங்க ரகசியத்தை இப்படியா பட்டுனு போட்டு ஒடைக்கிறது?

      Delete
  2. மனச நல்லா படிச்சி இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொண்ணு மனசப் படிச்சதுக்கே இங்கே டப்பா டான்ஸ் ஆடுதுங்கோ

      Delete
    2. இந்த டான்சு நல்லாதான் இருக்குதுங்கோ..

      Delete
  3. பொண்ணுக்கு பத்து காரணம் ஆணுக்கு ஒரே காரணம்.... ககக போ

    ReplyDelete
    Replies
    1. ஆண்களின் நிலையே அதுதான்

      Delete
  4. Replies
    1. நன்றி சரவணன்

      Delete
  5. கதை கதையாய் காரணமாம் !!!

    ReplyDelete
    Replies
    1. சோக கதைங்கண்ணா

      Delete
  6. ரொம்ப பாதிக்க பட்டு இருக்கீங்க போல...

    ReplyDelete
    Replies
    1. சொந்த கதை சோகக்கதை ஜீவா

      Delete
  7. பொண்ணுங்க மனச இப்படி ஆராய்ந்ததுக்கே உங்களுக்கு ஏதாச்சு அவார்ட்டு கொடுக்கணுமே?

    ஆனா பொண்ணுங்க ப்ரபோஸ் பண்ணினா ஆண்கள் வேணாம்னு சொல்லும் நிலை ரொம்ப ரொம்ப குறைவு, நீங்க சொன்ன காரணத்தை தவிர்த்து. :) :)

    ReplyDelete
    Replies
    1. அவார்டு வழங்கும் விழா எங்கங்க நேரு உள் விளையாட்டு அரங்கத்திலயா

      Delete
  8. நல்லதொரு ஆய்வு சார் ! நன்றி ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  9. Great!!!!!!!!!!!!!!!

    Senthil,Coimbatore

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில்

      Delete
  10. Replies
    1. என்ன ஒத்த வரில முடிச்சிட்டீங்க

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...