சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, June 6, 2013

நான் தோற்ற சம்பவங்களில் ஒன்று

ஒரு பெரிய சறுக்கலுக்கு பிறகு சென்னையை விட்டு திருவாரூருக்கு சென்று எதையாவது செய்து தோல்வியில் இருந்து மீ்ண்டு விடுவது என்று கிடைத்த தொழில்களையெல்லாம் செய்து வந்தேன். கிடைத்தது லாபங்களல்ல, அனுபவங்கள் மட்டுமே.


2010ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் பூண்டு விலை ரூ300க்கு மேல் விற்றுக் கொண்டு இருந்தது. அந்த சமயம் இந்தூர் என்ற மத்திய பிரதேச பெருநகரில் உள்ள பூண்டு மார்க்கெட்டில் விலை 120 தான் என தெரிய வந்தது. பெருமளவில் வாங்கி வந்து சென்னையில் விற்றால் பெரும் லாபம் கிடைக்கும் என இந்தூருக்கு பயணமானேன்.

நான் இந்தூருக்கு போனதை ஒரு தொடராக எழுதலாம் அவ்வளவு சிரமப்பட்டு தான் போனேன். திருச்சியிலிருந்து போபால் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்தேன். வெயிட்டிங் லிஸ்ட் தான் கிடைத்தது. என் நண்பனிடம் சொல்லி EQ போட்டேன். அதிகாலை 2.30க்கு திருச்சியில் ரயில் புறப்படும் நேரம். சென்று விசாரித்தால் EQ கிடைக்கவில்லை.


நண்பனுக்கு போனைப் போட்டால் அதிகாலையில் அவன் போனை எடுக்கவும் இல்லை. வடமாநிலங்களுக்கு அன்ரிசர்வ்டு பெட்டியில் செல்வது உகந்தது இல்லை என தெரியும். இருந்தாலும் பணத்தின் தேவை என்னை பயணம் செய்ய வைத்தது. சரியாக 28 மணிநேரம் நின்று கொண்டே பயணமானேன்.

நரக பயணம் அது. ஆந்திரா வந்ததும் அவனவன் வண்டியிலேயே பீடி பிடிக்க ஆரம்பித்தானுங்க. கக்கூஸை நாரடித்து வைத்தார்கள். வழியில் எங்காவது இறங்கி விடலாம் என்று கூட நினைத்தேன். ஒரு வழியாக பல்லைக் கடித்துக் கொண்டு பயணம் செய்து இந்தூர் சென்றேன்.


சென்ற போது நல்ல விலையில் பூண்டு ஒரு லாட் கிடைத்தது. ஆனால் ஊரில் பணம் ரெடி செய்து அது என் கையில் கிடைப்பதற்குள் அந்த லாட் விற்று விட்டது. தென் மாநிலங்களில் விலையேறி விட்டதால் டிமாண்ட் அதிகமாகி விட்டதாக அங்குள்ள ஏஜெண்ட்டுகள் தெரிவித்தார்கள்.

பிறகு மார்க்கெட்டில் நடக்கும் ஏலத்திற்கு சென்று கவனிக்க ஆரம்பித்தேன். காலை பத்து மணிக்கு துவங்கும் ஏலம் ஒரு மணிக்குள் முடிந்து விடும். விலை எனக்கு புரிந்து கேட்க ஆரம்பிப்பதற்குள் ஏலம் முடிந்து விடும்.


அது மட்டுமில்லாமல் உள்ளூர் வியாபாரிகள் தமிழ்காரனான என்னை ஏலம் கேட்க விடாமல் மிரட்ட ஆரம்பித்தார்கள். இப்படியே பத்து நாட்கள் ஓடி விட்டது. வெறும் சப்பாத்தி தான் சாப்பாடு.

அங்கு காலை உணவு என்று ஒன்று கிடையவே கிடையாது. எந்த ஹோட்டலிலும் காலை உணவுகள் கிடைக்காது. நமக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால் டீக்கடையில் பொஹா என்று ஒரு அவல் உப்புமா போன்ற அயிட்டம் தான் கிடைக்கும். அதையும் சுண்டல் போல பேப்பரில் தான் தருவார்கள்.

நாள் செல்லச் செல்ல நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. வாங்காமல் போனால் ஊரில் ஒரு பயல் மதிக்க மாட்டான் எனவே எப்படியாவது வாங்க வேண்டும் என்று மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தேன். அங்கு நான் தங்கயிருந்த ஹோட்டலில் சப்ளையராக இருந்த ஒரு நபர் நண்பனாகினான்.

அவனை வைத்து ஏலம் கேட்டால் என்ன என்று யோசித்து அவனை வைத்தே ஏலம் கேட்டேன். இரண்டு நாள் படியவில்லை. மூன்றாம் நாள் ரூ 130க்கு இரண்டு டன் கிடைத்தது. பிறகு ரயில்வே ஸ்டேசனில் லோடு போட கேட்டால் மூன்று நாட்களுக்கு வண்டிகளில் இடமில்லை போபால் சென்று தான் போட வேண்டும் என்றார்கள்.

ஒரு டாட்டா ஏஸ் வண்டியை வைத்து லோடு ஏற்றிக் கொண்டு சாயங்காலம் போல நானும் அறையை காலி செய்து அந்த வண்டியிலேயே பயணமானேன். இரவு 8 மணிக்கு போபால் போய் சேர்ந்தோம்.

வண்டியை ரயில்வே ஸ்டேசனில் விட்டதும் சரசரவென லேபர்கள் வண்டியில் குவிய ஆரம்பித்தார்கள். ரேட்டு படியவில்லை. பிறகு வண்டியை வெளியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு நான் மட்டும் தனியாக வந்து ஒரு நபரிடம் விசாரித்தேன்.

சென்னைக்கு இரண்டு டன் ஏற்றுவதற்கு 10000 ரூபாய் கேட்டார்கள். ஆனால் அன்று நேரம் முடிந்து விட்டபடியால் மறுநாள் காலை தான் ஏற்ற வேண்டும். வண்டிக்காரன் வேறு லோடை இறக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருந்தான். நான் தனியாள், இரண்டு டன் பூண்டுடன் இரவு முழுவதும் என்ன செய்வது என்று யோசனையாக இருந்தது.

சரி ஒரு கை பார்த்து விடுவோம் என பார்சல் ஆபீஸ் வாசலில் மூட்டைகளை அட்டி போல அடுக்கி வைத்தோம். வண்டிக்காரன் போனதும் நான் மூட்டைகளின் மீது அமர்ந்து கொண்டேன். நான் எங்காவது சென்று விட்டால் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்றால் கூட பிரச்சனையாகி விடும் என பயந்தேன்.

குளிர் வேறு பயமுறுத்திக் கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் இருந்தது. என்னிடம் போர்வையும் இல்லை. ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியினால் ராத்திரி முழுக்க கண்விழித்து அமர்ந்து இருந்தேன்.

காலையில் பத்து மணியானதும் பார்சலில் மூட்டைகளை போட்டு விட்டு ஒரு ரூம் எடுத்து தூங்கினேன். போபாலில் எப்படி குளிரோ அதை விட அதிகமாக சென்னையில் கடும் மழை. மறுநாள் நான் சென்னை வந்ததும் கொட்டும் மழையிலேயே கோயம்பேடு சென்று ஒரு வியாபாரியிடம் சாம்ப்பிளை காட்டி விலை பேசி ரூ240க்கு முடித்தேன்.

மொத்த மூட்டைகளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு கனவுகளுடன் கோயம்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். எப்படியும் இரண்டு லட்சம் லாபம் வந்து விடும், இனி வாரம் ஒரு முறை இந்தூர் சென்று பூண்டு வாங்கி வந்தால் என் கடன்களையெல்லாம் அடைத்து மறுபடியும் மேலே வந்து விடலாம் என்று பெருமிதத்துடன் வந்தேன்.

வந்து மூட்டையை இறக்கி மூட்டைகளை அவன் சோதித்துக் கொண்டு வந்தான். இரண்டாவது மூட்டையிலேயே அவனுக்கு சந்தேகம் வந்து மொத்த மூட்டையையும் பிரித்து கொட்டினான். சோதித்து விட்டு "இந்த பூண்டு விலைக்கு போகாது. நாங்களும் வைத்துக் கொள்ள முடியாது, நீங்கள் எடுத்து சென்று விடுங்கள்" என்று சொன்னான்.

"என்னய்யா என்ன ஆச்சு" என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். "பூண்டு மழையில் நனைந்ததால் பழுத்து விட்டது. இதனை வைத்து விக்க முடியாது" என்று சொன்னான். எனக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

அந்த மூட்டையிலிருந்து கொஞ்சம் பூண்டுகளை எடுத்துக் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த எல்லாம் பூண்டு வியாபாரிகளிடமும் காட்டி விலை கேட்டேன். ஒருத்தனும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

கவலையுடன் இடிந்து போய் உக்கார்ந்து இருந்தேன். அப்போது என் நண்பன் ஒருவன் புதிய ஆள் ஒருவனை அழைத்து வந்தான். விசாரித்ததில் அவன் பூண்டு இஞ்சியை பேஸ்ட்டாக அரைத்து கடைகளில் விற்பனை செய்பவன் என்றும் இந்த பூண்டை கிலோ ரூ60க்கு வேண்டுமானால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினான். அப்பொழுது சென்னையில் பூண்டின் விலை கிலோ ரூ320.

வெறுத்துப் போய் அந்த விலைக்கே அவனிடம் கொடுத்து விட்டு வந்தேன். ஒரு மாதம் சிரமப்பட்டு வடமாநிலத்தில் தங்கியிருந்து, குளிரில் காய்ந்து அந்த பொருளை கொண்டு வந்ததில் எனக்கு கிடைத்தது அனுபவமும் 1 லட்ச ரூபாய் நஷ்டமும் தான்.

ஆரூர் மூனா செந்தில்
 

70 comments:

  1. ஐயோ பாவம்.... கொடுமையான அனுபவம்... நானாக இருந்தால் டிக்கட் கிடைக்காததை அபசகுனமாக எடுத்துக்கொண்டு பயணத்தையே ரத்து செய்திருப்பேன்...

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடக்கக் கூடாதுன்னு இருந்தா நம்மளை கெடுக்க மழை போதும்.

      Delete
  2. ஆம்.. இதுபோல பலப்பல அனுபவங்கள் எனக்கும் உண்டு. உங்களது தோத்தவண்டா லேபிள் அடிக்கடி நான் நினத்துப் பார்பதும் எனக்கு கச்சிதமாக பொருந்துவதுமாகும். நமக்கு நேரம் சரியில்லாதபோது நம்மால் தடுக்கவோ வேறு வகையில் சமாளிக்கவோ முடியாத அளவுக்கு இப்படி நம்மை ஏதோ ஒரு சக்தி வழிகாட்டியாக இருந்து இழுத்து சென்று சிக்கலில் மாட்டி விடும்.அபசகுனமாக தவிர்ப்பது என்பதெல்லாம் இப்படியான ஒரு நெருக்கடியில் ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் இயலாத ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
    2. am also from ur area.. sirkali. moreover my mom is from thiruvarur area. i like the place when i visit my relatives there. But after so many twists i am now at another place. Haha . All fate

      Delete
  3. நீங்க பிளான் பண்ணப்படி சரியான நேரத்துல பூண்டை வாங்கியிருந்தால் நல்ல லாபம் பார்த்திருப்பீங்க. காலத்தாமதமே உங்க நஷ்டத்துக்கு காரணம். இருந்தாலும் ஒரு அனுபவத்தின் விலை 150000க்குறாது கொஞ்சம் ஓவர்தான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது கரெக்ட்டு தான். ஆனால் நடப்பதை யாரால் தடுக்க முடியும்

      Delete
  4. Replies
    1. நன்றி சிவா

      Delete
  5. இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வாங்கிய நீங்கள் அது மழையில் கெடும் என்று தெரியாமலா அதை நனைய விட்டீர்கள்? ஒன்றும் குறைத்து போக வில்லை, மீண்டும் நீங்கள் இதனை செய்யலாம் கிடைத்த அனுபவங்களை கொண்டு. கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மழையில் நனைந்தது ரயிலில் பார்சலில் போட்டதால். அப்போது லாரி வாடகையாக 40000 கேட்டார்கள். கொடுத்திருந்தால் ஒரு வேளை தப்பித்திருக்கும். நன்றி தோழரே.

      Delete
  6. அய்யோ... பாவம். சிரமபட்டது இப்படி ஆகிவிட்டதே.

    அனுபவங்கள்தான் பல பாடங்களை கற்றுதருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  7. கொடுமையான அனுபவம்! உங்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  8. நீங்க வருங்காலத்துல பெரிசா ஜெயிப்பீங்க செந்தில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிகண்ணன்

      Delete
  9. உங்கள் தன்னபிக்கையையும் தைரியத்தையும் பாத்தா ஆச்சர்யமத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன்

      Delete
  10. எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது
    ஒவ்வொரு நயா பைசா சம்பாரிப்பதற்கும் .
    மிகவும் பாவமாக இருக்கிறது தங்கள்
    அனுபவத்தைக் கேட்டு . இப்படி எல்லாமா
    சிரமம் வரும் ஒரு மனிதனுக்கு ...
    கொடுமை ......
    வீட்டில் உள்ள பெண்கள் அருமை
    உணர்ந்து நடந்தால் வாழ்வு இனிக்கும் .
    உங்கள் தன்னம்பிக்கை வியக்க வைப்பதாய்
    உள்ளது. நீங்கள் இந்நேரம் நிச்சயம்
    உயர்ந்து இருப்பீர்கள் . வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரவாணி

      Delete
  11. எத்தனை ரூபாய் நஷ்டம் ஆனாலும்...உங்களின் மன தைரியம்...!

    அனுபவங்கள் ஒரு நாள்... சந்தோசத்துடன் பலவற்றை அள்ளிக் கொடுக்கும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  12. ஷேர் மார்க்கெட்டில் அடி வங்கியதை பற்றி எழுதினால் நல்லா இருக்கும் கூடவே ரியல் எஸ்டேட் பிரடுதனங்கள் பற்றியும் :)

    ReplyDelete
    Replies
    1. அது பெரிய சோகக் கதைங்க, அதை நினைவுப்படுத்துனா எனக்கும் வலிக்கும், படிக்கிறவங்களுக்கும் வலிக்கும்.

      Delete
    2. அடப்பாவி ஆனா மூனா, ஒண்ணையும் விட்டு வைக்கலையா அப்போ?!!!

      Delete
    3. இல்லீங்க, அது தான் பெரிய சறுக்கல். பெரிய முதலீடு பெரிய நஷ்டம், அதனால் தான் சென்னையை விட்டு திருவாரூருக்கு வந்தேன்

      Delete
  13. Mr. Senthil, even though you would have lost 1 Lakh, you gained lot of experience. Definitely this will stop from you big loss. Wish you good luck

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமுடு

      Delete
  14. தோல்விதான் வெற்றிக்கு படிக்கல்....ஒரு சில தோல்விகள் பல வெற்றிகளுக்கு அடித்தளம்.... உங்களின் இந்த அனுபவ பாடம் எதிர்கால முயற்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே

      Delete
  15. விஜய் சேதுபதியை போட்டு இத ஒரு படமாவே எடுத்துரலாம் போலிருக்கே. ஒரு பூண்டுக்கு பின்னாடி இத்தனை அட்வெஞ்சரா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா என்ன செய்ய நண்பா, இது எனக்கு சத்திய சோதனை

      Delete
  16. What an experience!
    I am glad you are doing fine now.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  17. //சரியாக 28 மணிநேரம் நின்று கொண்டே பயணமானேன்.//
    .
    அதனால் தான் இன்றும் ரயில் உறவு தொடர்கிறாதா?.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, நன்றி முருகபூபதி

      Delete
  18. தங்கள் அனுபவம் பலருக்கு பல புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது.அந்த வகையில் பலபேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.தடர வேண்டும் இந்த விழிப்புணர்வு பாடத்தை. . . . .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரிப்

      Delete
  19. தோத்தாத்தான் ஜெயிக்க முடியும் மச்சி...

    அன்றைய தோல்வி இன்றைய வெற்றி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி

      Delete
  20. அருமையாக எழுதி இருகீறேர்கள் நல்ல அனுபவம் குட

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஹ்மான்

      Delete
  21. Yo have transferred the pain, really astonishing and the railway- Cheap behaviour of public service system. Handle with care ,...will throw first

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன்

      Delete
  22. Padikkum podhey romba kastmaa irukku....
    Ungallukku anubavumum thannambikkaiyum adhigam ........
    Keep it up......

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருண்பிரசாத்

      Delete
  23. செந்தில் உங்கள் பதிவை ஒன்று விடாமல் படிப்பவன் நான் .அனால் இந்த பதிவு மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  24. இனியாவது உஷாரா இருய்யா...!

    ReplyDelete
    Replies
    1. இருப்போம், நன்றி மனோ

      Delete
  25. தோல்வி என்ற அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது தான் உண்மையான தோல்வி.

    பூண்டின் ரகம் தரத்தைத் தெரிந்துகொண்டு மீண்டும் முயற்சி செய்திருந்தால் வெற்றி உங்கள் பக்கம் தான் தோழரே.

    மூர்த்தி

    ReplyDelete
    Replies
    1. நன்றி மூர்த்தி

      Delete
  26. படிச்ச எனக்கே இம்ம்புட்டு கஷ்டமா இருக்கே அனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும் யப்பா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி

      Delete
  27. Senthil sir 2-3 months back i told u to write about u r business failures. Thankyou for post. and see the comments sections 54 comments. see how many of then is interested in this topic pls continue ......


    rajan

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜன், முயற்சிக்கிறேன்.

      Delete
  28. Pls write about Sharemarket experience

    ReplyDelete
    Replies
    1. அதை நினைவுபடுத்தினால் எனக்கு இன்னும் வலிக்கும் அதான் பாக்கிறேன்.

      Delete
  29. எளிமையாக எழுதியிருந்தாலும் அந்த கொடுமையான சூழலை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள் :-(

    ReplyDelete
    Replies
    1. நன்றி லக்கி

      Delete
  30. Padikkum bodhu ungal vali enakkum valithadhu.thanks for sharing..

    ReplyDelete
  31. தம்பி . . .

    அந்த பூண்டு புருஷோத்தமன் நீங்கதானா . . . ?



    மிக நெகிழ்வான பதிவு . . .

    ReplyDelete
  32. very useful for me senthil.appreciate u to continue ur expeiences with us.na sellilnu baga pettukko penlikodukku.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுகந்த்,

      Delete
  33. I know how Koyambedu works. Deliberately they will kill the business of new comers.
    Next time take help from local ADMK politicians.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நண்பா

      Delete
  34. அழகான பதிவு... கண்ட சோதனைகளை மிக அழ்காககூரியுள்ளீர்கள்... சோதனைகள் அனைத்தும், சாதனையாகும். வாழ்த்துகள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...