சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, August 12, 2013

கண்ணீர்க் காவியம் புல்லுகட்டு முத்தம்மா

புல்லுகட்டு முத்தம்மாவுடன் கதாநாயகன் பம்புசெட்டு ரூமில் படுத்துக் கொண்டு முத்தம்மாவின் பவுடர் வாசனையை முகர்ந்து பார்த்து பிராண்ட் கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கிறான். அப்பொழுது அந்த பக்கமாக வந்த சித்ரா அவர்களை ஜன்னல் வழியாக பார்த்து விடுகிறார். அந்த கணத்தில் ஜன்னல் உள்ளேயிருந்து இடைவேளை என்ற எழுத்து வந்து விழுந்தது பாருங்கள் அங்கு நிற்கிறார் இயக்குனர்.


சித்ராவை வீட்டுக்கு ட்ராப் செய்ய கதாநாயகன் வீட்டுக்கு அழைத்து வரும் போது வழியில் ஆக்சிடெண்ட் ஆகி சித்ராவுக்கு கால்முட்டியில் அடிபட வீட்டுக்கு அழைத்து வந்து "மருந்து போடும் போது புடவையில் பட்டால் கறையாகி விடும். நீங்கள் உடைமாற்றிக் கொண்டு வாருங்கள்" என்று கதாநாயகன் கூற உடனே உள்ளே சென்று தான் ஐந்தாம் வகுப்பு படித்த போது போட்ட ப்ராக்கை அணிந்து கொண்டு சித்ரா வரும் காட்சியின் ஆக்கம் தான் இந்த தமிழ்திரையுலகிற்கு ஒரு புது ட்ரெண்ட் உருவாக்கும் இயக்குனர் வந்து விட்டார் என்பதை பறைசாற்றுகிறது.

படத்தின் கதை இது தான். ராஜாவுக்கும் ராதாவுக்கும் திருமணமாகிறது. அவர்களுக்குள் அது நடக்கும் போது ராஜாவுக்கு அது வராமல் அது நடக்காமலே போய்விடுகிறது. மறுநாள் அது நடக்க வேண்டி சேலம் சித்த வைத்தியரிடம் மாத்திரை வாங்கி போட்டு போகிறார் ராஜா, ஆனால் மாத்திரையோ ஓவர்டோஸாகி ராஜாவை கோமாவுக்கு ஆழ்த்தி விடுகிறது.

மருத்துவமனையில் டாக்டரிடம் தன்முன்காலத்தில் தான் ஆடிய ஆட்டங்களின் தொகுப்பை நாம் பார்த்து ரசிக்கும் விதத்தில் சொல்கிறார் ராஜா. ஏகப்பட்ட சிக்ஸர் விளாசியதால் பேட்டு உடைந்து போனது டாக்டருக்கு தெரிய வருகிறது கூடவே நம்மளுக்கும் தான்.


இந்நிலையில் அவர்களுக்குள் அது நடக்காமலே ராதாவுக்கு அது உருவாகி விடுகிறது. அந்த ரகசியம் அறிந்த ராஜா என்ன முடிவெடுக்கிறார் என்பது தான்  உலகத்தரம் வாய்ந்த க்ளைமாக்ஸ்.

கதாநாயகனாக ராஜா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முகத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் இவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் சிவாஜி கமலுக்கு அடுத்த வரிசையில் இடம் பிடிக்கும் எல்லாத் தகுதியும் அவருக்கு இருக்கிறது.

கதாநாயகியாக ராதா நல்ல ரூம்லியான சாரி ஹோம்லியான முகம். சுஜாதா, சுஹாசினி, ரேவதி வரிசையில் பெர்பார்மன்ஸ் செய்யும் நாயகி. அந்த நாளில் அது நடக்கும் போது அவர் காட்டும் முகபாவனைகள் டன்டனா டன். கடைசியில் அது எங்கேயோ நடந்து அது உருவாகி விட்டதை அவர் விவரிக்கும் போது கல்நெஞ்சும் கரைந்து விடும். நானெல்லாம் குமுறிக் குமுறி அழுதேன்.

கவர்ச்சிப் புயல் முத்தம்மா கலக்கியிருக்கிறார். கண்களாலேயே கிளாமரை வழிய விடுகிறார். அடுத்த நமீதாவாக வர எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. பம்புசெட்டில் குளிக்கும் போது தியேட்டரில் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருவது வருங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருந்தால் குஷ்புவுக்கு சரியான போட்டியாக இருந்திருப்பார். தமிழ்நாடு அந்த சமயத்தில் இந்த வாய்ப்பை இழந்து விட்டது.

அடுத்ததாக படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்ரா, கணவன் வெளிநாட்டில் இருக்க விரகதாபத்தில் அவஸ்தைப்படும் கேரக்டரில் வருகிறார். ஆசைப்பட்டு தவறு செய்து பின் திருந்தி விஷம் குடித்து இறந்து இந்த சமுதாயத்திற்கு தீயவழியில் செல்லக்கூடாது என்ற கருத்தை சொல்லும் உன்னத கதாபாத்திரம்.

பாடல்கள் அனைத்தும் அதிஅற்புதம், அதிலும் சந்திரமுகி படத்தில் கொஞ்சநேரம் என்ற பாடலை பாடலை பாடிய மதுபாலகிருஷ்ணன் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். சூப்பரான அந்த பாடல் எனக்குத்தான் மறந்து விட்டது. ஞாபகமறதிக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கி இளஞ்சூடாக நாக்கில் படாமல் விழுங்க வேண்டும்.

உண்மையிலேயே படம் ஹிட்டு என்பதை நான் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன். இரண்டாவது வாரம் மதியம் ஒரு மணிக்காட்சிக்கு ஒரு திருநங்கை, ஒரு நாலுவயசுப் பையன் உட்பட 80 பேர் வந்திருந்தார்கள் என்பதை விட ஒரு சாட்சி வேண்டுமா என்ன.

பிறர்பொருளுக்கு ஆசைப்படுபவன் தன் பொருளை இழப்பான் என்ற கருத்தை வலியுறுத்தும் புல்லுகட்டு முத்தம்மா காண வேண்டிய கண்ணீர்க் காவியம்

ஆரூர் மூனா செந்தில்

24 comments:

  1. மூனா,

    போஸ்டரர் மறைக்காமல் மெட்ராசு போல ஒதுங்கி நின்னு போஸ் கொடுக்க கத்துக்கிடும் :-))

    பி.கு:

    புல்லுக்கட்டு இருக்கட்டும், அந்த போஸ்டர் கீழ ஒரு நாபிக்கமலம் மட்டும் தெரியுதே அது என்னப்படம்,நல்லா இருக்கும் போல தெரியுதே(படத்த சொன்னேன்), புல்லுக்கட்டு போஸ்டரை கிழிச்சாவது என்னப்படம்னு பார்த்து பேர சொல்லும் :-))

    ReplyDelete
    Replies
    1. நாங்க புல்லுகட்டு முத்தம்மாவை பார்த்த மயக்கத்தில் இருந்ததால் பின்னால் இருந்த போஸ்டரின் மேல் கவனம் செல்லவில்லை. உமக்கு பேர் தான் வவ்வாலு ஆனா ஆந்தை கண்ணுய்யா.

      Delete
    2. பின்னாடி இருப்பதும் புல்லுக்கட்டு முத்தம்மாவின் வேறு ஒரு போஸ்டர் தான்...

      Delete
    3. பிரபா நீ அதிதீவிர எலக்கியவாதி ஆவதற்கான எல்லா தகுதியும் உனக்கு இருக்கு

      Delete
  2. Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  3. நாலுவயசுப் பையன்???

    ReplyDelete
  4. ”ரூம்லியான முகம்”...ஹ...ஹா... ரஸித்து சிரித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொன்சந்தர்

      Delete
  5. //அவர்களுக்குள் அது நடக்கும் போது ராஜாவுக்கு அது வராமல் அது நடக்காமலே போய்விடுகிறது. மறுநாள் அது நடக்க வேண்டி//

    அதுவுக்கு அருஞ்சொற்பொருள் பிளீஸ்....

    // ஏகப்பட்ட சிக்ஸர் விளாசியதால் பேட்டு உடைந்து போனது ///

    ஹா ஹா ஹா....

    ReplyDelete
    Replies
    1. அது அதுக்கு அது அதுன்னு விளக்கம் போட்டா பதிவை 18+ என்று தான் போட்டிருக்கனும். பதிவை படிக்கிறவங்க எல்லாம் புத்திசாலிங்க சரவணன், அதுக்கு அர்த்தம் அவங்களுக்கு புரியும்

      Delete
  6. SOMBU ROMBA ADI VAANGIDUCHU POLA...........

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க

      Delete
    2. நன்றி சேது

      Delete
  7. Replies
    1. நன்றி நண்பா

      Delete
  8. //ஏகப்பட்ட சிக்ஸர் விளாசியதால் பேட்டு உடைந்து போனது டாக்டருக்கு தெரிய வருகிறது கூடவே நம்மளுக்கும் தான்.//

    விழுந்து புரண்டு சிரிச்சேன் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வால் பையன்,

      Delete
  9. செந்தில் நீங்க ஆல் ரௌண்டர் போல !!! ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்கீங்க !!!

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி உண்மைய படக்குனு போட்டு உடைப்பீங்களா, நன்றி மணிகண்டன்

      Delete
  10. ஏணுங்கண்ணா புல்லுக்கட்டு முத்தம்மா bluray எங்கண்ணா கிடைக்கும்?????

    ReplyDelete
  11. அப்பா சாமி தாங்கமுடியல.

    Charles

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...