சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, October 17, 2013

நாக்கில் நீர் ஊற வைக்கும் டாஸ்மாக் சைட்டிஷ்கள்

மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் கொஞ்ச நாளாக வீட்டில் நான் தான் சமைத்துக் கொண்டு இருக்கிறேன் மனைவிக்கும் சேர்த்து. இப்பத்தான் நல்ல சாப்பாட்டின் அருமை தெரிகிறது. பெரிய பெரிய ஹோட்டல்களை விடுங்கள். டாஸ்மாக் பாரில் கிடைக்கும் சில நல்ல சைட்டிஷ்கள் கூட நினைவுக்கு வந்து தொலைக்கிறது.


குரோம்பேட்டையில் உள்ள ஒரு பாரில் முட்டை முந்திரி போட்டி என்ற சைட்டிஷ் கிடைக்கும். மிகப் பிரமாதமாக இருக்கும், போட்டியை தோசைக்கல்லில் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மசாலாக்கள் சேர்த்து அதில் வறுத்த முந்திரியை போட்டுத் தருவார்கள். அந்த மணம் ம்ம்ம்ம், ஒரு தேக்கரண்டி சுவைத்தாலே ஒரு மடங்கு போதை கூடுதலாக ஏறும்.

அயனாவரத்தில் உள்ள ஒரு பாரில் சுடச்சுட இறா வறுவல் அப்புறம் ப்ரூட் சாலட் இரண்டையும் வாங்கி ஒரு டூத்பிக்கில் ஒரு தர்பீஸ் துண்டு ஒரு இறா துண்டு திராட்சை சொருகி ஒரே நேரத்தில் வாயில் வைத்து இழுத்து கடித்தால் ஒரு சேர கிடைக்கும் சுவை இருக்கிறதே அடடா அடடா சொர்க்கம் அங்கு தெரியும்.


பெரம்பூர் பட்மேடில் உள்ள பாரில் ரசவடை கிடைக்கும். அதில் உள்ள ஸ்பெசல் என்னவென்றால் ரசம் சாதா ரசம் கிடையாது. நண்டு ரசம். சரவணபவன் வடை சைசில் பெரியதாக இருக்கும் மெதுவடையை ரசத்தில் ஊறவைத்து துண்டு துண்டாக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பராக இருக்கும்.

அப்புறம் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் சிறுமசால் வடை இன்னும் சூப்பராக இருக்கும். நமது குரூப்பிலேயே செல்வின் அரசன் சும்மா உள்ளே வந்து வேடிக்கை பார்க்கும் சிவா வரை அந்த வடைக்கு ரசிகர்கள். கேட்டவுடன் கிடைக்காது. கேட்டதும் அரைமணிநேரம் கழித்து தான் தருவான். அவ்வளவு பேமஸ் அந்த வடை.
 

கேகேநகரில் உள்ள ஒரு பாரில் பணியாரம் பயங்கர பேமஸ். நம்ம பட்டிக்ஸ் இந்த பணியாரத்திற்காகவே அந்த பாருக்கு எங்களுடன் வருவார். பணியாரத்தை விட அதற்கு இணையாக கொடுக்கப்படும் கார குழம்பு அப்பப்பா. ஒரு விள்ளல் பணியாரத்தை பிட்டு கார குழம்பில் தொட்டு வாயில் வைத்தால் வழுக்கிக் கொண்டு போகும்.

திருவாரூரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாரில் கொடுக்கப்படும் முட்டை கலக்கி பிரமாதமாக இருக்கும். என்ன சுவை என்ன சுவை. அந்த சூட்டுடன் வாழையிலையில் போட்டுத் தரும் போது ஒரு வாசனை வரும். அது இன்னும் இன்னும் என்று நம்மை சொல்ல வைக்கும்.


2004ல் பம்மலில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 20பேர் ஒரு ஆறுமாசம் தங்கியிருந்தோம். அப்போது பாரில் சைட்டிஷ் வாங்கி கட்டுப்படியாகாததால் பர்மனன்ட்டாக ஒரு கேஸ் ஸ்டவ் சிலிண்டர் வாங்கி வைத்து தினம் இரண்டு டிரே முட்டை வாங்கி மொட்டைமாடியில் நடுவில் ஸ்டவ்வை பற்ற வைத்து அதனை சுற்றி அமர்ந்து கொண்டு ஆப்பாயில் போட்டுக் கொண்டே சரக்கடிப்போம்.

சுடச்சுட ஆப்பாயில் தோசைக்கல்லில் இருந்து எடுத்ததும் அப்படியே வாயில் போகும் போகும் போது கிடைப்பது தான் பேரானந்தம். பகல் முழுவதும் கடும்வேலையாக இருக்கும். நைட்டு அந்த நேரத்திற்கு நண்பர்கள் 20பேர் சூழ மொட்டை மாடியில் இந்த சூழ்நிலையில் நேரத்தை செலவிட்டது இப்பவும் பசுமையாய் என் நினைவு வங்கியில்.

விருதுநகரில் வெறும் பரோட்டா, சாத்தூரில் தட்டை வடை, மன்னார்குடியில் கடலை போட்ட சிக்கன், தூத்துக்குடியில கொத்து பரோட்டா, பட்டுக்கோட்டையில் வறுத்த நண்டு என இன்னும் பல மறக்க முடியாத டாஸ்மாக் சைட்டிஷ்கள் இருக்கின்றன.

ஆனால் இன்று நான் மொட்டை ரசம் தொட்டுக் கொள்ள கொத்தமல்லி துவையலுடன் என் டின்னரை கடக்க இருப்பது தான் சோதனை. நாளைக்கு கிரைண்டரில் மாவு அரைக்க வேண்டியிருப்பது சோதனை மேல் சோதனை.

ஆரூர் மூனா

41 comments:

  1. சைட் டிஷ்ஷைவிட நீங்க போன பார்கள் லிஸ்ட்தான் பெருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. அக்கா, இது என்ன ஒரே நாள்ல போனதா பத்து வருசம் சுற்றிய ஊர்களில் நடந்த அனுபவங்கள்

      Delete
  2. நாக்கில் நீர் ஊற வைக்கும் பதிவு

    ReplyDelete
  3. சில வருடங்களுக்கு முன்பு சிக்மங்களூரில் ஒரு பார்ல சரக்குக்கு சைடுடிஷ்ஷா ரசம் சாப்டு இருக்கேன்....அருமையா இருக்கும் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்தார்த்தன்

      Delete
  4. அண்ணே சும்மா பார், சைடு டிஷிற்கு ஒரு அகராதியே வச்சிருப்பீங்க போல.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே வாழ்க்கையே ஒரு அனுபவம் தானே

      Delete
  5. அடேங்கப்ப்ப்ப்பா...! என்னவொரு ரசனை...! செம ரவுண்ட் up...!

    வீட்டில் இப்போது நலமா...?

    ReplyDelete
    Replies
    1. தேவலாம், இன்னும் பத்து நாட்களுக்கு பெட் ரெஸ்ட்டா இருக்கனுமாம், என் பாடு தான் திண்டாட்டம்

      Delete
  6. நாக்கில் நீர் ஊற வைக்கும் பதிவு....

    ReplyDelete
  7. Did you tried Tenampet GRD bar. Toasted groundnut/cashew and salad mouth watering. Also vatha kolumbu + curd rice in their restaurant very tasty.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முயற்சிக்கிறேன், நன்றி

      Delete
  8. Dear Senthil,
    You must try the snacks at Sangeetha Bar in Luz Corner. The Rasa Vadai is "divine". if I have to borrow the term from Cable.If you have contacts , try the bar in Gandhinagar Club. All th side dishes are good. You dont have to take food at all. They are so tasty and filling.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சங்கர் சார்

      Delete
  9. பத்து வருசத்துல இத்தனை பார் மட்டும்தானா ? நம்மளையும் சேர்த்துக்குங்க உங்க கம்பெனில .......

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சேர்த்துக்குவோம் சேவியர்

      Delete
  10. //நமது குரூப்பிலேயே செல்வின் அரசன் சும்மா உள்ளே வந்து வேடிக்கை பார்க்கும் சிவா வரை அந்த வடைக்கு ரசிகர்கள்//

    அந்த வடைக்காக அரசன், அஞ் சாசிங் கத்துக்கு நடந்த அக்கப்போர் மறக்கவே முடியாது. சைட் டிஷ் கிங்ன்னா அது தி.நகர் அருணா பார்தான். அதை விட்டுட்டீங்களே.

    ReplyDelete
    Replies
    1. அருணா பார்ல கிடைப்பது எல்லா பார்களிலும் கிடைக்குமே

      Delete
  11. அடப்பாவி.....இத்தனை பாருக்கு போனா பர்ஸ் பல்லை காட்டிருக்குமே ஸ்ஸ்ஸ்ஸ் அபா மிடியல.

    ReplyDelete
    Replies
    1. அது வாலிப வயசு, என்ஜாய்மெண்ட் தான் முக்கியமாக தெரியும்

      Delete
  12. குடிக்கிறத நிறுத்தி 6 மாசம் ஆன நிலையில இது என்ன சத்திய சோதனை??

    இருந்தாலும் என் அனுபவத்தில் சில சைடு டிஷ்களை சொல்றேன்.
    அசோக் நகர் IDBI எதிரிலுள்ள ஒரு பாரில் பொன்னிறத்தில் வஞ்சிரம் வறுவல் கிடைக்கும். நாங்கள் அதற்கு வைத்த பெயரே வஞ்சிரம் ஜாயிண்ட்.
    DLF எதிரில் மற்றும் ஆதம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பார்களில் சிறு சிறு துண்டுகளாக தேங்காய் எண்ணையில் வறுத்த சிக்கன் சிந்தாமணி நச்சுன்னு இருக்கும்.

    என்ன இருந்தாலும்,, ஊறுகாயை அடிச்சிக்க முடியாது...!!!

    ReplyDelete
    Replies
    1. நல்லாயிருக்கே நீங்க சொல்றது, முயற்சித்து பார்த்து விட வேண்டியது தான்

      Delete
  13. மாப்ள இந்த பார் அட்ரஸ் குடுத்து இருக்கலாமே.. குடி மகன்களுக்கு உதவும்ல..

    ReplyDelete
    Replies
    1. உள்டப்பியில வந்து கேக்கிறவங்களுக்கு கொடுத்துடுவோம் மச்சி

      Delete
  14. ஒன்னு , ரெண்டு நாள் சமைக்கரதுக்கே இவ்வளவு பொளம்பளா..ஊட்டம்மா நிலைமைய நினைச்சு பாருங்க..இருந்தாலும் சைடு டிஸ் பட்டைய கிலப்புது...கூடவே உட்காந்து சரக்கடிச்ச திருப்தி..வாழ்க இந்திய குடிமகன்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்தி முருகேசன்

      Delete
  15. Pattukkottoikkellam vanthirukkengala sir !

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பூர்வீகம் பட்டுக்கோட்டை தானுங்க. அப்பாவுக்கு வேலை கிடைத்து செட்டிலானதால் தான் திருவாரூர் சொந்த ஊரானது

      Delete
  16. நன்றி அண்ணே

    ReplyDelete
  17. இதெல்லாத்தையும் விட மனைவிக்கு உதவும்போது அவர்தம் கண்களில் தெரியும் காதல் அதிக சுவையுடன் கூடிய போதை தரும் உண்மையா இல்லையா சொல்லுங்க நண்பா

    ReplyDelete
    Replies
    1. சத்தியமான உண்மை

      Delete
  18. ஆமா போட்டி-னா என்னங்க... கொஞ்சம் விவரமா சொல்றது...

    ReplyDelete
    Replies
    1. என்னங்க சின்னப்புள்ளையா இருக்கீங்க, ஆட்டுக்குடலுக்கு போட்டின்னு தானே சொல்லுவாங்க

      Delete
    2. ஹி ஹி சின்ன புள்ளையா இருப்பது தப்புங்களா...

      Delete
    3. அண்ணே தப்பே கிடையாதுண்ணே

      Delete
    4. ஆமா புதுசா கண்ணாடி வாங்கிருகீங்களாக்கும்... நல்லா தான் இருக்கு

      Delete
    5. ஆமாண்ணே இத்தாலியில் இருந்து வந்தது. 7000ஓவா

      Delete
  19. பாத்து அண்ணா இந்த பதிவை அண்ணி படிcரம

    ReplyDelete
  20. ஒ இதைதான் நம்ம பாரதி சொன்னாரா பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம நாடு என்று.,

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...