சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, October 31, 2013

தீபாவளி கொண்டாட்டம் - மறக்க முடியாத நினைவுகள்

தீபாவளி வந்தாலே வீரதீர சாகசங்கள் செய்வது வழக்கமாக இருக்கும். லட்சுமி வெடியை பற்ற வைத்து வானில் பறக்க விடுவது, ராக்கெட்டை கையில் வைத்து விடுவது, புஸ்வாணத்தை கையில் வைத்து கொளுத்துவது, சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சரத்தை கொளுத்தி கையில் வெடிக்க வைத்து தெருவை ரவுண்ட் அடிப்பது என ஏகப்பட்ட செயல்கள் செய்திருக்கிறேன். கையை சுட்டுக் கொண்டு பல்புகளும் வாங்கியதுண்டு.


எங்களது பூர்வீக ஊர் பட்டுக்கோட்டை நகரம். தாத்தா இருந்த வரை தீபாவளிக்கு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டாடுவதையே பழக்கமாக வைத்திருந்தோம். தாத்தா இறந்த பிறகு சொத்துகள் விற்று என் அப்பாவுடன் பிறந்த 12 பேருக்கும் பைசல் செய்யப்பட்டது.

அதன்பிறகு பங்காளிகள் ஒவ்வொருவரும் பணிநிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு சென்று செட்டிலானார்கள். அதன் பிறகு சமீபகாலம் வரை பொங்கல் தீபாவளி திருவாரூரில் தான்.

என் 14வயது வரை வடக்கு வீதியில் இருந்தோம். தீபாவளி கொண்டாட்டம் காலை 4 மணிக்கே ஆரம்பித்து விடும். விடியற்கால எழுப்பி அப்பா ஒரு சரம் பண்டிலை கொடுத்து வெடித்து வரச் சொல்லுவார். முதல் சரம் வெடித்ததுமே தூக்கம் கலைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.


பட்டாசை வெடித்து காலி செய்து விட்டு உள்ளே வந்தால் அம்மாவும் அப்பாவும் வடையும் சுளியனும் சுட்டுக் கொண்டு இருப்பார்கள். மணம் தூக்க ஆரம்பித்து விடும். 4.30 மணிக்குள் பூஜையை போட்டு தலையில் எண்ணெய் தேய்த்து விடுவார் அப்பா.

குளித்து விட்டு வந்ததும் பூஜையறையில் இருந்து அப்பா எடுத்துத் தரும் புதுத்துணியை கையில் வாங்கியதுமே இனம் புரியாத மகிழ்ச்சி முளைத்து ரெக்கை கட்டி பறக்கும். ஆறுமணிக்கு பூஜை படையலை் போட்டுவோம்.

இட்லி சாம்பார் சட்னி வடை சுளியன் தீபாவளி பலகாரங்கள் வைத்து ஒரு கட்டு கட்டி விட்டு கையில் வெடியுடன் தெருவில் இறங்கினால் நான் வீடு திரும்ப மதியமாகி விடும். அதற்குள் அப்பா கடைக்கு போய் ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் வாங்கி அம்மாவிடம் கொடுத்து விடுவார்.




நான் தெருவில் நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஒரு இடத்தில் கூடி சாகசங்களுடன் வெடிய வெடிப்போம். ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து வந்து அதனுள் வெடியை நுழைத்து வெடிப்பது, கொட்டாங்குச்சியில் வைத்து வெடிப்பது என ஏகப்பட்டது நடந்திருக்கிறது. ஒரு நண்பனுக்கு பாட்டில் உடைந்து கையை கிழித்த பிறகு பாட்டில் சாகசம் மட்டும் கைவிடப்பட்டது.

மதியம் வீட்டுக்கு வந்ததும் தோசை ஆட்டுக்கறி குழம்பு கோழிக்கறி வறுவல் என போட்டுத்தாக்கிய பிறகு சைக்கிளை எடுத்துக் கொண்டு சினிமாவுக்கு போவோம். எனக்கு விவரம் தெரிந்து பத்து வயதில் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த முதல் படம் அவசர போலீஸ் 100. சென்னைக்கு படிக்க வருவதற்கு முன்பு தீபாவளியன்று கடைசியாக பார்த்த படம் அவ்வை ஷண்முகி.

சினிமா முடிந்து வீட்டுக்கு வந்ததும் பலகாரங்களை சாப்பிட்டு விட்டு மறுபடியும் வெடியுடன் தெருவுக்கு இறங்கினால் நள்ளிரவாகி விடும். பால்ய வயது முதல் பதிண் வயது வரை இது தான் தீபாவளி ஷெட்யூல்.


பட்டாசு வாங்குவது முதல் வெடித்து தீர்க்கும் வரை அதன் மீதுள்ள மோகம் தீராது. பட்டாசு விலைப்பட்டியலை பார்த்து ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அப்பாவுடன் கடைக்கு போய் வாங்கி வந்து அந்த இரவு முழுக்க தூங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பேன்.

மறுநாளிலிருந்து பகல் நேரத்தில் வெடியை வெயிலில் காய வைத்து பக்கத்தில் காவலுக்கு உக்காந்து இருப்பேன். வெயில் தணிந்ததும் பத்திரமாக எடுத்து பரணில் வைத்து விட்டு தான் விளையாட போவேன்.

பிஜிலி வெடியை பிரித்து மாற்று வெடி செய்வது, நாலு யானை வெடி மருந்துகளை ஒன்று சேர்த்து குமுதம் புத்தகத்தில் சுற்றி உலக்கை வெடியாக மாற்றி வெடிப்பது, புஸ்வாணத்தை பிரித்து ஒரு பேப்பரில் மருந்தை கொட்டி கொளுத்திப் பார்ப்பது என அப்போதே ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது, போன வருடமும் சரி, இந்த வருடமும் சரி ஒரு வெடி கூட வாங்கவில்லை.

சென்னை வந்த பிறகு தீபாவளிக்கு திருவாரூர் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும். பாரிமுனையில் இருந்த திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் புறப்படும். என்று கிளம்புவது என்பதை முன்பே திட்டமிட முடியாது. அதனால் முன்பதிவு செய்யாமல் புறப்படும் அன்று பேருந்து நிலையத்திற்கு சென்றால் கூட்டம் அள்ளும்.

இப்போது போல் சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படாது. டிக்கெட்டுக்காக டோக்கன் வாங்க கியூவில் நின்று சிரமப்பட்டு சில சமயம் அதுவும் கிடைக்காமல் இரவு முழுவதும் நின்று கொண்டே பயணமானதும் உண்டு.

அவ்வளவு சிரமத்திற்கிடையில் பயணம் செய்து ஊரில் இறங்கியதும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அந்த நாளை என்ஜாய் செய்து அன்று இரவே கிளம்ப வேண்டியிருக்கும். என் குரூப்பிலேயே நான் மட்டும் தான் சென்னையில் அதுவும் அப்ரெண்டிஸ் படித்தேன்.

தனியாக பேருந்தில் ஏறியதும் மனதில் இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து போகும். இரவு முழுவதும் அழுது கொண்டே பயணம் செய்து சென்னைக்கு வந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓட வேண்டியிருக்கும்.

எவ்வளவு சிரமப்பட்டாலும் தீபாவளிக்கு திருவாரூர் போவது தவறியதே இல்லை. என்னைப் போல் எல்லோருக்கும் அந்த உற்சாகம் சொந்த ஊரில் கிடைக்கும். சென்ற வருடம் பாட்டி இறந்து போனதால் தீபாவளி கிடையாது. அதனால் போக முடியவில்லை.

கடந்த எட்டு வருடங்களாக தோல்வியையும் கசப்புகளையும் மட்டுமே சந்தித்து வந்த நான் இந்த வருடம் தான் அதுவும் இப்போது தான் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வை அனுபவிக்கிறேன். இந்த நேரத்தில் பயணம் இருக்கக்கூடாது என்பதால் இந்த வருட தீபாவளி பண்டிகை திருவாரூரில் கொண்டாடுவதை சந்தோஷமாக ரத்து செய்கிறேன்.

ஆரூர் மூனா

29 comments:

  1. வணக்கம்

    மறக்கமுடியாத இளமைக்கால நினைவுகளை பகிர்ந்த விதம் அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      நன்றி ரூபன்

      Delete
  2. வாழ்த்துகள்-மகிழ்வான நிகழ்விற்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோகுல்

      Delete
  3. ரசிக்க வைக்கும் இனிய நினைவுகள்...

    இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      நன்றி தனபாலன்

      Delete
  4. நினைவலைகள் அருமை.

    இனி எல்லாம் சுகமே!

    தீபாவளி பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)க்ள். நல்லா இருங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா,

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  5. வீட்டில வீசேஷங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேது, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  6. இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் செந்தில்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணே

      Delete
  7. abbaya, ammaya? inti bariammakku ,meekku diwali pandagalu!

    ReplyDelete
    Replies
    1. మీరు మీ కుటుంబం కోసం సంతోషంగా Deevali విష్

      Delete
  8. அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் !

    நகர வாழ்க்கையில் இத்துனை பரவசங்களையும் அசை போடுவதே கூட இனிய அனுபவமாகிறது.

    வீர தீர செயல்கள் தொடரட்டும்......

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜமால்

      Delete
  9. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்

      Delete
  10. இனிமையான நிகழ்வுகள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் !!!இனிய தீபாவளி வாழ்த்துக்கள் செந்தில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சலீம்

      Delete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி

      Delete
  12. மகிழ்ந்திருங்கள்.

    தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாதேவி

      Delete
  13. அருமையான தீபாவளி நினைவுகள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுரேஷ்

      Delete
  14. டென்ஷன் இல்லாத தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்...

    ஒரு போட்டோவுல சந்திரசேகர் ஐயாவோட ரெண்டாவது பையன் மணிகண்டன் இருக்காரே... வேறு யாரையும் எனக்கு தெரியலை.
    -------------------------------

    ///////கடந்த எட்டு வருடங்களாக தோல்வியையும் கசப்புகளையும் மட்டுமே சந்தித்து வந்த நான் இந்த வருடம் தான் அதுவும் இப்போது தான் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வை அனுபவிக்கிறேன். இந்த நேரத்தில் பயணம் இருக்கக்கூடாது என்பதால் இந்த வருட தீபாவளி பண்டிகை திருவாரூரில் கொண்டாடுவதை சந்தோஷமாக ரத்து செய்கிறேன்.///////

    மகிழ்ச்சியான நிகழ்வு தொடர வாழ்த்துக்கள்...

    //////இந்த நேரத்தில் பயணம் இருக்கக்கூடாது////

    இது நியாயமான எண்ணம்... நேற்று இரவு சென்னையிலிருந்து திருவாரூருக்கு டிக்கட் புக் செய்திருந்த ஒருவர் இன்று காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    காரணம் கேட்டேன். இன்று அதிகாலை 3.45 மணிக்குதான் பேருந்து கோயம்பேட்டை விட்டு புறப்பட்டதாம்.

    ----------------
    நான் 2006 தீபாவளி, 2007 பொங்கல் சமயத்தில் சென்னையில் இருந்தேன். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே திருவாரூர் வந்துவிட்டதால் அவஸ்தை இல்லை. ஆனால் பொங்கலுக்கு முன் பதிவு இன்றி பேருந்தை பிடித்து வருவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. 7 மணியிலிருந்து போராடி நள்ளிரவு ஒண்ணே முக்காலுக்கு பேருந்தில் ஏறினோம்.

    அந்த அவஸ்தையை நினைத்து பார்க்கும்போது நீங்கள் சென்னையிலேயே கொண்டாட முடிவு செய்தது சரி என்று நினைக்க தோன்றுகிறது.

    -----------------
    6 வழிப்பாதை அளவுக்கு தார்ச்சாலை போட்டு டோல்கேட்டுல ஒரு சைக்கிள் காரன் கூட அவங்க அனுமதி இல்லாம கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு பிரமாதமா வேலை பார்க்குறாங்க. ஆனால் இரட்டை ரயில் பாதை அமைக்க நிலம் கிடைக்குறது இல்லையாம். இந்த கொடுமை தொடர்ற வரை வெளியூர் வாசிகள் சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடுவது என்பது சாகசப் பயணமாகத்தான் இருக்கும்.

    ---------------
    நம்ம ஊர் தைலம்மையில் ஆரம்பம் அசத்தலா போய்கிட்டு இருக்கு. நடேஷ் தியேட்டரில் அழகு ராஜா, சோழாவில் பாண்டிய நாடு நாளைக்கு ரிலீஸ்.
    ----------------
    பத்து வருஷத்துக்கு முன்னால இந்த மாதிரி தீபாவளி பொங்கலுக்கு டி. வி பார்க்குறது புடிக்கும். ஆனா இப்போ எரிச்சல்தான் வருது. ஜனவரி மாசம் வெளியிட வேண்டிய ஒரு புத்தகத்தை எடிட் செய்ய வேண்டிய வேலை வந்திருக்கு. பேசாம நாளைக்கு நம்ம அலுவலகத்துக்கு போய் அந்த வேலையை பார்த்துடலாம்னு நினைக்குறேன்.

    -----------------

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன், அது மணிகண்டன் இல்லை மணிவண்ணன். என் தம்பியின் வகுப்புத் தோழன் அவன். என் தம்பி திருவாரூரில் பாப்ளி ரெடிமேட்ஸ் என்ற கடை பனகல் ரோட்டில் வைத்துள்ளான்

      Delete
  15. Happy Deepavalli. Even though all of us have enjoyed similar childhood, it very nice to read some one who can narrate it so well.If I think what you mentioned as a pleasant addition to the family, then all the best. Take care. Spend more quality time with your wife.

    All the best

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...