சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, December 6, 2013

கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்

எப்போதுமே அடிதடி க்ரைம் மசாலா படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோமே இந்த முறையாவது ஒரு நீட் அண்ட் க்ளீன் மூவியாக போவோம் என்று முடிவு செய்து கல்யாண சமையல் சாதம் படத்தை தேர்வு செய்தேன். ஆனால் அது எவ்வளவு தப்பு என்பதை படம் போட்ட பத்து நிமிடத்தில் தெரிந்து விட்டது.


பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக பார்ப்பனர்களை வைத்து பார்ப்பனிய திருமணத்தை சார்ந்து வில்லங்க கதைக்கருவுடன் எடுக்கப்பட்ட பார்ப்பணீய திரைப்படம் கல்யாண சமையல் சாதம்.

படம் துவங்கியவுடன் ஒரு அக்மார்க் மாடர்ன் அய்யர் வீட்டுக்குள் நுழைந்த மாதிரி தோன்றியது. படம் முடியும் வரை அந்த பீல் போகவேயில்லை. ஏனப்பா இந்த கதைக்கருவுக்கு உங்களுக்கு எப்படி பார்ப்பனர்களை பின்புலமாக வைத்து எடுத்து அவர்களை கேவலப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.


நல்ல அய்யர் வீட்டு பையன் பிரசன்னாவுக்கும் நல்ல அய்யர் வீட்டு பொண்ணு லேகாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் கலந்து கட்டி எல்லாவற்றிலும் தங்களது புரிதலை வளர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு ஒரு நல்ல நாளில் இருவரும் சரக்கடித்து (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்) ஒன்று சேர முற்படுகின்றனர். அந்த நேரம் பார்த்து நாயகனுக்கு தற்காலிக எழுச்சியின்மை ஏற்படுகிறது.


இதனை தவறாக நினைக்காத நாயகியும் ஜஸ்ட் லைக் தட் (என்ன கொடுமை இது) எடுத்துக் கொள்கிறார். நாயகன் தன் உதவாக்கரை நண்பர்களுடன் கண்ட இடங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்க நினைக்கிறார். 

சில பல கலாட்டாக்களுக்கு பிறகு நாயகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை வெறும் மன அழுத்தம் தான் என்று தெரிய வர சுமூகமாக திருமணம் நடைபெறுகிறது.

நான் மட்டும் சென்சார் போர்டு அதிகாரியாக இருந்திருந்தால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து இருப்பேன். பொதுவாக ஆச்சாரம் அனுஷ்டானம் பார்க்கும் ஒரு இனத்திற்கு இப்போது சரக்கடிப்பதும் கல்யாணத்திற்கு முன்பு சேர நினைப்பதும் சகஜமான ஒன்று என்று கதையின் போக்கு இருப்பதால் தான் இந்த முடிவு

இந்த படத்திற்கு எத்தனை பார்ப்பனர் இயக்கங்கள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கப் போகின்றனவோ.

பிரசன்னா 5ஸ்டார் படம் முதல் கண்ட நாள் முதல் படம் வரை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரின் இயல்பான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இயக்கம் என்று வரும் போது சாரி பிரசன்னா, நீங்க அதை கை கழுவி விடுவது தான் அதற்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

படத்தில் நடித்துள்ள டெல்லிகணேஷ், ராகவ், உமா பத்மநாபன், கீதாரவிசங்கர், க்ரேஸி மோகன், நீலு, பிரசன்னாவின் நண்பர்கள் என எல்லாம் பிராமணர்கள் தான்.

லேகா வாஷிங்டன் மட்டுமே எனக்கு படத்தில் கிடைத்த ஆறுதல். 

பாடல்கள் எல்லாம் சொல்லிக் கொள்வது போல் இல்லை.

சர்வசாதாரணமாக ஆபாச வார்த்தைகளையும் பொதுவில் பேச தயங்கும் வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பேசுகின்றனர். என்ன நடக்குதுன்னு தான் புரியலை.

படம் நகைச்சுவை படமாகத்தான் இருக்கும் என நினைத்து சென்றேன். அவரும் அதை நினைத்து தான் இயக்கியிருக்கிறார். ஆனால் எனக்கு படம் முடியும் வரை ஒரு புன்முறுவல் கூட வரவில்லை என்பது தான் சோகம்.

நாயகி கோவப்பட்டு நாயகனை போடா உஸ் என்று திட்டுகிறார். நாயகன் சில மணிநேர முறைப்புகளுக்கு பிறகு ஒன்றுமே சொல்லாமல் நாயகியை கட்டிக் கொள்கிறார். வாழ்க தமிழ் சினிமா.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு வசனம் வரும், "போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும்." - இது தான் இந்த படத்திற்கான கமெண்ட்.

ஆரூர் மூனா

18 comments:

  1. "இயக்கம் என்று வரும் போது சாரி பிரசன்னா, நீங்க அதை கை கழுவி விடுவது தான் அதற்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. "


    ssss . . yabbaaa . . .

    ReplyDelete
  2. வணக்கம்
    விமர்சனம் நன்று வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. விளம்பரத்தையும், பிரசன்னாவையும் பார்த்து படம் நல்லா இருக்குமோன்னு நம்பிட்டேனே!

    ReplyDelete
  4. நண்பரே நடிகர் பிரசன்னா வேறு. இயக்குநர் பிரசன்னா வேறு.

    http://en.wikipedia.org/wiki/Kalyana_Samayal_Saadham

    ReplyDelete
  5. படத்தையும் " ஜஸ்ட் லைக் தட் " என்று எடுத்துக் கொள்ள முடியாது போலிருக்கே...!

    ReplyDelete
  6. ஏனுங்க இதுக்கு படம் பார்த்த கதை இல்லியா??? ..........விடு ஜீட்.........

    ReplyDelete
  7. விமர்சனத்துக்கு நன்றி .

    ReplyDelete
  8. //பொதுவாக ஆச்சாரம் அனுஷ்டானம் பார்க்கும் ஒரு இனத்திற்கு இப்போது சரக்கடிப்பதும் கல்யாணத்திற்கு முன்பு சேர நினைப்பதும் சகஜமான ஒன்று என்று கதையின் போக்கு இருப்பதால் தான் இந்த முடிவு//

    உங்களுக்கு பழக்க வழக்கம் பத்தல. என்னவோ போங்க......

    ReplyDelete
  9. நடிகர் பிரசன்னா வேறு, டைரக்டர் பிரசன்னா வேறுங்க! இரண்டும் வெவ்வேறு ஆளு!

    ReplyDelete
  10. தகராறோடு என்ன தகராறு
    அதன் விமர்சனத்தை எதிர்பார்த்தேன்

    ReplyDelete

  11. மாமா, நல்லவேளை நான் இந்த படத்த தியெட்டருக்கு போய்ப்பார்லாம் என்று நினைத்தென்.. அது சரி ஏன் இன்னும் நவீண சரஸ்வதி சபதம் படத்ததின் விமர்சனம் எழுதவில்லலை.,I,am. Waiting

    ReplyDelete
  12. //ஆனால் இயக்கம் என்று வரும் போது சாரி பிரசன்னா,//

    அப்போ ரெண்டு பிரசன்னாவுக்குமே இயக்கத்தில் தான் பிரச்சினையா?..வெரி பேட்.

    ReplyDelete
  13. //நடிகர் பிரசன்னா வேறு, டைரக்டர் பிரசன்னா வேறுங்க! இரண்டும் வெவ்வேறு ஆளு!//


    Yes boss Director Prasanna is a Malayalee

    ReplyDelete
  14. அண்ணே இயக்கம் வேறு பிரசன்னா \\\\\\\\\

    பிரசன்னாவின் அழகிய தீயே என்னை கவர்ந்த படம்

    ReplyDelete
  15. நானும் பிரசன்னாவின் ரசிகன் தான்.. முதல் பாதி நீங்கள் மேற்சொன்ன எல்லா இத்யாதிகளையும் வைத்து படுத்தியது.. ஆனால் இரண்டாம் பாதியில் இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையான புரிதல் எனும் விஷயத்தையும் அலசியிருக்கிறார்களே.. உண்மைதான் கொச்சையாக பேசும் வார்த்தைகள் நெளிய வைக்கின்றன.

    என் விமர்சனம் - http://www.kovaiaavee.com/2013/12/kalyanasamayalsadham.html


    மேலே சிலர் கூறியது போல் இயக்குனர் பிரசன்னா வேறு ஒருவர் அண்ணே..

    ReplyDelete
  16. செந்தில்! படத் தேர்வு, பார்வை, ரசனை, தகவல், பிரதிபலித்தல், விமர்சனம் - இப்படி தொடர்ந்து தோத்துக்கிட்டே வரீங்களே எப்படிங்க இதெல்லாம் ? 'தோக்கிறவண்டா'ன்னு மாத்திக்கிட்டா பொருத்தமா இருககுமோ ?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...