சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, October 31, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

காலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மாவட்ட தலைமை, நகர தலைமை கிடையாது. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு மட்டும் அளவே கிடையாது. போன தீபாவளியன்று துப்பாக்கி காலை 4 மணிக்காட்சி பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்த ஓப்பனிங் மாஸ் விஜய்க்கு கூட கிடையாது.


என்ன ஒரு ஸ்கிரீன் ப்ரசன்ஸ். என்ன ஒரு அழகு. என்ன ஒரு வசீகரம். என்ன ஒரு ஸ்டைல். ரஜினிக்கு அடுத்து சந்தேகமில்லாமல் அஜித் தான். படம் முழுக்க அஜித் அஜித் அஜித் தான். அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி சந்தேகமில்லாமல் டபுள் கொண்டாட்டம் தான்.

இந்த படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை. அதனால் ஒப்பிட்டு பார்ப்பதை விட்டு விடுவோம்.

 ரசிகர்களின் உற்சாகம்

அஜித் மும்பையில் ஒரு உதவி கமிசனர். ஒரு தீவிரவாத தாக்குதலில் அவரது சக நண்பர் ராணா டகுபதி இறந்து விடுகிறார். அதில் புல்லட் ப்ரூப் ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது. ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கமிசனரும் அஜித்தின் குடும்பத்தை கொன்று விடுகின்றனர்.

அதில் இருந்து தப்பிக்கும் அஜித்தும் நயன்தாராவும் ஆர்யாவை பயன்படுத்தி வில்லன்கள் கூட்டத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். இறுதியில் வில்லன்களை வீழ்த்தி படத்தை முடித்து வைக்கிறார் அஜித்.

முதல்பாதியில் தாடியுடன் வரும் அஜித் வசீகரிக்கிறார். பிட்டாக இருக்கிறார். எப்போதும் போல் கோட்டு கோபி போல் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் மறந்தும் கோட்டை கையில் எடுக்கவில்லை. டிசர்ட் தான் படம் முழுக்க அருமையாக இருக்கிறது.

 காலை 5.30மணிக்கு திரையரங்கம் முன் நான் செல்வின் சிவா

ஆர்யா பாத்திரத்திற்கு சரியான தேர்வு. அவ்வப்போது நச் வசனங்களில் சிரிக்கவும் வைக்கிறார். முதலில் அஜித்திடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் இடைவேளைக்கு பிறகு உண்மை தெரிந்து உதவும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார்.

நயன்தாரா ம்ஹூம் ஒன்னும் சாதாரணமாக சொல்வதற்கில்லை. ஒரு வில்லனை கொல்வதற்காக ஒரு சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு எண்ணெய் வழியும் உடம்புடன் வரும்போது அப்படிேய டென்சனாகிட்டேன். சமநிலை வருவதற்கு பத்து நிமிடம் பிடித்தது. நாயனம் வாசிச்சவனெல்லாம் பாக்கியசாலிங்க.

 இடைவேளையில் காரசார விவாதம்

டாப்ஸி வழக்கமான தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகியாக வருகிறார். ஒரு பாடலுக்கு ஆர்யாவுடன் வந்து செல்கிறார். அவ்வப்போது பேபி பேபி என்று கொஞ்சுகிறார். நமக்குதான் கடுப்பாகிறது.

கிஷோர் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு நச்சென பொருந்துகிறார். அதுல் குல்கர்னியை வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். ராணா டகுபதியை தெலுகு மார்க்கெட்டுக்காக போட்டு இருக்கிறார்கள். பத்து நிமிடம் வந்து செல்கிறார்.

அஜித்தும் ஆர்யாவும் பணத்தை களவாடும் காட்சி தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். ஆனால் எனக்கு காட்சி சற்று சுமாராகத்தான் தெரிகிறது. இன்னும் இன்ட்ரஸ்டிங்காக யோசித்து இருக்கலாம்.

பாடல்கள் எல்லாமே கடுப்பேற்றுகி்ன்றன. தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாடல்கள் வருகின்றன. ஹீரோ இன்ட்ரோ சாங்க் சுமாராக இருக்கிறது.

முதல்பாதியில் சுவாரஸ்யமே இல்லை. காலங்காத்தால பார்ப்பதால் கொட்டாவி வரவைத்தது. பின்பாதி தான் படத்தின் பக்கா பேக்கேஜ். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் போறவன் வர்றவனையெல்லாம் சுட்டுக்கிட்டு இருக்கப் போறாங்களோ.

ஆர்யாவின் அந்த குண்டு பிளாஷ்பேக், படத்தின் ஓட்டத்தை இன்னும் குறைக்கிறது. அதை அப்படியே வெட்டி எறிஞ்சிடலாம். அது படத்தின் சுவாரஸ்யத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

அஜித்தை விட்டு இந்த படம் என்று பார்த்தால் சற்று தொங்கலாகத்தான் இருக்கும். ஆரம்பம் என்று பெயர் வைத்ததற்காக படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் ஆரம்பம் ஆரம்பம் என்று சொல்வது சற்று நெருடத்தான் செய்கிறது.

அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் டபுள் அடிப்பொளி. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஆனால் பொதுமக்களுக்கு ஒரு முறை பார்க்கலாம் ரகமே.

ஆரூர் மூனா

29 comments:

  1. தீபாவளி பட்டாசு சரியா வெடிக்கவில்லையா???

    அண்ணே விமர்சனம் சிம்பிள முடிச்சிட்டிங்க................

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முழு திருப்தி தரல, ஆனால் அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

      Delete
    2. Correct boss enakum anthalavuku pudikala . Thupaki sound thala vali pa and ajith edulayum rmba nadaka viturukanga

      Delete
    3. நன்றி ஈஸ்வர்

      Delete
  2. காலையில் இருந்து உஙக விமசர்னத்திற்காக வெய்டிங். நன்றி ஆனா மூனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜமால்

      Delete
  3. என்னவேனாலும் சொல்லுங்க தல படம் ஃபர்ஸ்ட் டே என்ஜாய்மென்ட் போல வருமா !

    ReplyDelete
    Replies
    1. அதுதான் படத்தை விட சிறந்த என்டர்டெயினர்

      Delete
  4. உங்க விமர்சணம் எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன்..அனா சுவாரஸ்யமில்லாம இருக்கு..மூடு சரியில்லயா பிரதர்...உங்க ஸ்டைல் என்னாச்சு...

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு கிளம்பும் போது அவசரமா அடிச்சேன், அதனால அப்படி இருக்கலாம், ஆனா எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியலையே

      Delete
  5. vijay thaan mass ajith waste aarur

    ReplyDelete
    Replies
    1. இது வேறயா, ம் நடத்துங்க

      Delete
  6. நானும் காலைக் காட்சியே பாத்துட்டேன் படம் நல்லா இல்ல வழக்கம் போல அஜித்தின் ரசிகர்கள் தான் திரும்ப பார்க்க வருவார்கள்
    பொதுமக்கள் கடுப்பு ஆயிடுவாங்க பேமிலியோட போறவங்களாம் அந்த குழந்தை சீனுக்கு டென்சன் ஆவது நிச்சயம் அஜித் முக்கியமா தவிர்த்து இருக்க வேண்டிய காட்சி அது

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  7. இனித்தான் பாஸ் படம் பார்க்கணும்!

    ReplyDelete
    Replies
    1. பார்த்து ரசியுங்கள்

      Delete
  8. இடைவேளையில் காரசார விவாதம்
    >>
    இது விவாதம் போல தெரியல. டான்ஸ் பிராக்டீஸ் போல தெரியுது

    ReplyDelete
    Replies
    1. பயங்கர கற்பனை சக்தி உங்களுக்கு

      Delete
  9. கோர்வையான விமர்சனம் ! மற்றும் படம் பார்க்க தூண்டும் எழுத்து நடை .
    ஏன் பாஸ் 5:30 க்கு எடுத்த போட்டாவுல நீங்க இருப்பதுல வெறும் கப் மட்டும்தான் theriudhu ...நீங்கதானா அது

    ReplyDelete
    Replies
    1. நாம என்ன பண்றது நம்ம கலரு அப்படி

      Delete
  10. Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  11. Replies
    1. நன்றி விவேக்

      Delete
  12. காலை 5.30மணிக்கு திரையரங்கம் முன் நான் செல்வின் சிவா///// போட்டோவுல சிவாதான் தெரியறாரு... சிங்கம் ஏதோ ஹிந்திப்பட வில்லன் போல டார்க்கா கொஞ்சமாத் தெரியறாரு... ஆரூர் மூனான்னு ஒரு மானஸ்தன் எங்கய்யா இருககாரு...? சுருக்கமான, அழகான விமர்சனம் நன்று! உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த மகிழ்வான தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் செந்தில்!

    ReplyDelete
    Replies
    1. நம்ம கலருக்கு நானே என்னை டார்ச் அடிச்சி காண்பிச்சா தான் தெரிய வருது. நான் என்ன செய்ய,

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணே

      Delete
  13. படம் ஓகே அளவில் தான் உள்ளது.மாவட்ட அளவில் அவருடைய ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்து ஒரு உருப்படியான விஷயத்தை செய்து இருக்கலாம்.ஆனால் இணையத்தில் அவரே ஒரு virtual fan club ஊட்டி வளர்ப்பது போல தெரிகிறது. facebook முழுவதும் ஏகப்பட்ட தமிழ் பக்கங்களில் அஜித் அஜித் என்றும் இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்கள் இதை எதோ மகா காவியம் போலவும் சித்தரிப்பதும் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது.
    இனி திரைப்படம் எடுபவர்கள் இந்த மார்க்கெட்டிங் முறை கற்று கொள்ள வேண்டும். தெரு தெருவாக போஸ்டர் ஓட்டுவதை விட இணையத்தில் முடிந்த வரை பரப்பினால் மொக்கை படங்கள் குட ஓர் அளவுக்கு ஹிட் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள். நிதர்சனமான உண்மை

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...