சாப்பிடும் அளவுக்கு உடல் உழைப்பு இருக்க வேண்டும். இது கொஞ்சம் தவறினால் உடம்பு பெருக்க ஆரம்பித்து விடும். இது எனக்கு புரிவதற்குள் எடை சதத்தை தாண்டி விட்டது. பட்டயப்படிப்பு முடியும் காலம் வரை சைக்கிள் வைத்திருந்ததால் எவ்வளவு சாப்பிட்டு இருந்தாலும் அதுக்கு சமமான அளவுக்கு தினமும் சைக்கிள் ஒட்டுவது இருந்ததால் ஸ்டாமினா குறையாமல் இருந்தது. உடல் எடையும் கட்டுக்குள் இருந்தது.
படிப்பு முடிந்ததும் வேலைக்கு சேர்ந்து பைக்கிற்கு மாறியதால் சகீலா மாதிரி இடுப்பில் மடிப்பு விழ ஆரம்பித்தது. வருடம் செல்லச் செல்ல பேமிலி பேக் வயிற்றில் நிரந்தரமானது. ஸ்டாமினாவும் சுத்தமாக குறைந்து போனது. எப்போதாவது சைக்கிளில் ஏறி 2 கிமீ மிதிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்தது.
திருமணத்திற்கு முன்பு வரை என் பாஸ்ஸூம் திருமணத்திற்கு பின்பு இல்லாளும் உடற்பயிற்சி செய்ய வற்புறுத்தியும் சோம்பேறித்தனம் காரணமாக எதுவும் செய்யாமல் தவிர்த்தே வந்தேன். தினமும் ஆப் வேறு அடித்து வந்ததால் எடையும் நிற்காமல் கூடிக் கொண்டே சென்றது. நிற்க. அதுக்காக நிக்கக் கூடாது, உக்கார்ந்தே படிங்க. எல்லா சோம்பேறித்தனத்திற்கும் ஆப்பு வைப்பது போல் ரயில்வே வேலை வந்து சேர்ந்தது.
ரயில்வே பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி ஆணை பெற தாமதமாகி வந்து சில வாரங்களுக்கு முன் தான் வேலையில் சேர நேர்ந்தது. இப்போது ஏண்டா சீக்கிரம் சேர்ந்தோம் என்று வெந்து நொந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தொழிற்சாலை பெரிதாக இருக்கலாம் அதற்காக இவ்வளவு பெரிதாகவா அமைப்பான் வெள்ளைக்காரன். ஆம் நான் பணிபுரியும் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தான் இந்தியாவில் முதல் முதலாக ரயில்களை தயாரித்தது. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1856. நூற்றைம்பது ஆண்டுக்கும் மேலான வரலாறு கொண்டது.
இதில் எனக்கு பிரச்சனை என்பது பணிபுரிவதில் இல்லை. நடப்பதில் தான் உள்ளது. ஒவ்வொரு தேவைக்கும் கிமீ கணக்காக நடக்க வேண்டியுள்ளது. நுழைவாயிலில் இருந்து அட்டன்டென்ஸ் கார்டு அடிக்கும் இடத்திற்கு 2கிமீ தூரம் அங்கிருந்து சாப்பிடும் கேண்டீனுக்கு 1 கிமீ தூரம்.
காலை உணவு சாப்பிட்ட பிறகு எனது கப்போர்டிற்கு வர 1 கிமீ தொழிற்சாலை உடை மாற்றியதும் என் செக்சனுக்கு செல்ல 1 கிமீ, பிறகு எனக்கும் என்னுடன் பணிபுரியும் இருவருக்கும் சேர்த்து பணி ஒதுக்கப்படும். வேலை செய்யும் இடத்திற்கு செல்ல 2 கிமீ.
பணிமுடிந்த பிறகு மீண்டும் செக்சன் சென்று விவரத்தை தெரிவித்து விட்டு 2 கிமீ நடந்து அட்டன்டென்ஸ் கார்டு அடித்து விட்டு மெஸ்ஸிற்கு செல்ல 2 கிமீ, பிறகு வழக்கம் போல் அட்டன்டென்ஸ், செக்சன் என பட்டியல் மலைக்க வைக்கும். அட இவ்வளவு ஏங்க பணிபுரியும் இடத்தில் இருந்து ஒண்ணுக்கு அடிக்க வேண்டும் என்றால் கூட 1 கிமீ நடந்தால் தான் கழிவறையே வரும். குடி தண்ணீருக்கும் இதே கதி தான்.
என்னுடன் பணிபுரியும் மற்றவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. ஏனென்றால் அனைவரும் நடந்து பழகி விட்டனர். 59 வயதான என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் சர்வசாதாரணமாக நடக்கிறார். என்னுடன் புதிதாக இணைந்தவர்களுக்கு கூட பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து வர, செல்ல என நடந்து நடந்து பழகிவிட்டவர்கள் தான்.
நான் மட்டும் தான் இதுநாள் வரை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் பைக் எங்கு சென்றாலும் பைக் என காலத்தை கடத்தி விட்டதால் தினமும் 12 கிமீ களுக்கு குறையாமல் நடப்பது டங்குவாரை அறுக்கிறது. "நீ நடப்பது நல்லது தான், தினமும் இது போலவே நட" என்று மூளை சொன்னாலும் சோம்பேறியான மனசு "நீ நடப்பது சிரமம்" என பின்னால் இழுக்கிறது.
ஒன்று மட்டும் புரிந்து விட்டது. இன்னும் 29 வருடத்திற்கு இப்படித்தான் என் வாழ்க்கை முறை இருக்கப் போகிறது. இன்னும் சில வாரங்கள் சிரமமாக இருக்கும். பிறகு நடப்பது பழகி விடும். கொஞ்ச நாட்களில் உடல் எடையும் குறைய ஆரம்பித்து விடும் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த இரண்டு வாரத்திற்குள்ளேயே மூன்று கிலோ எடை இறங்கி விட்டது.
என்னைப் போல் எதற்கெடுத்தாலும் பைக்கையே நம்பி எதற்கும் நடக்காமல் இருப்பவர்களுக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது போல் நடந்தே ஆக வேண்டும் என வந்தால் சிரமமாக இருக்கும் என அனுபவஸ்தனின் கருத்து. நடை பயிலுங்கப்பா.
ஆரூர் மூனா செந்தில்

இன்னொரு பிரபா ஆக வாழத்துக்கள்.....
ReplyDeleteநடையா...இது நடையா....பார்த்துய்யா வெள்ளைக்காரன் பில்டிங்க உடைச்சிறாதிங்க.....
ReplyDeleteதினமும் வாக்கிங் போனா உடம்பு இளைக்கறது மட்டுமில்ல... சுகர் கூட வராது. இன்னும் நிறைய நீங்க நடையா நடக்க நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அறிவுரை
ReplyDeleteநடந்துதான் ஆகவேண்டும் என்கிற நிலை வரும் முன்
நடக்கத் துவங்குவதே புத்திசாலித்தனம்
பயனுள்ள பதிவு.தொடர (பதிவும்,நடையும்)வாழ்த்துக்கள்
Tha.ma 3
ReplyDeleteநடக்கவும் யாரவது சொல்லிக்கொடுதாதான் நடப்பாங்க போல நடப்போம் நம்மைக் காக்க .
ReplyDeleteTha.ma.4
ஸ்லிம் ஆன ஆரூர் முனாவை விரைவில் பார்க்கலாம் போல. ஷகீலா ஷேப் இடுப்பை போட்டோ எடுத்து வைத்து கொள்ளவும்..!!
ReplyDelete29 வருசத்துல கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோ மீட்டர் நடந்திடுவீங்க போல. சில பேரு கேட்குறாங்கன்னு ஷகீலா மாதிரி இருக்குற இடுப்பின் போட்டோவைப் போட்டு அடுல்ஸ் ஒன்லி சைட்டாக மாத்திராதீங்க. பிறகு என்னமாதிரியான சின்ன பையங்க எல்லாம் உங்க பதிவை படிக்கமுடியாம போயிரும்.
ReplyDeleteI am very happy to note that you are walking a lot. It is good for you.
ReplyDeleteநல்ல பதிவு sir ! வாழ்த்துக்கள் !
ReplyDelete/// NAAI-NAKKS said...
ReplyDeleteஇன்னொரு பிரபா ஆக வாழத்துக்கள்..... ///
நன்றி ஜிம் மாஸ்டர்
/// வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteநடையா...இது நடையா....பார்த்துய்யா வெள்ளைக்காரன் பில்டிங்க உடைச்சிறாதிங்க..... ///
பில்டிங் மட்டும் தான் வெள்ளக்காரன் கட்டினான். தளம் நம்மாளுங்க தான் சமீபத்தில் போட்டிருக்காங்க.
/// நிரஞ்சனா said...
ReplyDeleteதினமும் வாக்கிங் போனா உடம்பு இளைக்கறது மட்டுமில்ல... சுகர் கூட வராது. இன்னும் நிறைய நீங்க நடையா நடக்க நல்வாழ்த்துக்கள்! ///
நன்றி நிரஞ்சனா
/// Ramani said...
ReplyDeleteநல்ல அறிவுரை
நடந்துதான் ஆகவேண்டும் என்கிற நிலை வரும் முன்
நடக்கத் துவங்குவதே புத்திசாலித்தனம்
பயனுள்ள பதிவு.தொடர (பதிவும்,நடையும்)வாழ்த்துக்கள் ///
நன்றி ரமணி அய்யா
/// Sasi Kala said...
ReplyDeleteநடக்கவும் யாரவது சொல்லிக்கொடுதாதான் நடப்பாங்க போல நடப்போம் நம்மைக் காக்க . ///
நன்றி சசிகலா
/// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஸ்லிம் ஆன ஆரூர் முனாவை விரைவில் பார்க்கலாம் போல. ஷகீலா ஷேப் இடுப்பை போட்டோ எடுத்து வைத்து கொள்ளவும்..!! ///
டிஜிட்டல் ப்ரேம் போட்டே வச்சிடுறேன்
/// முஹம்மது யாஸிர் அரபாத் said...
ReplyDeleteசில பேரு கேட்குறாங்கன்னு ஷகீலா மாதிரி இருக்குற இடுப்பின் போட்டோவைப் போட்டு அடுல்ஸ் ஒன்லி சைட்டாக மாத்திராதீங்க. பிறகு என்னமாதிரியான சின்ன பையங்க எல்லாம் உங்க பதிவை படிக்கமுடியாம போயிரும். ///
ஹி ஹி ஹி அந்த தப்பை மட்டும் செய்ய மாட்டேன்
/// மோகன் குமார் said...
ReplyDeleteI am very happy to note that you are walking a lot. It is good for you. ///
என் நலனில் அக்கறை கொண்ட அண்ணனுக்கு நன்றிகள் பல.
/// திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநல்ல பதிவு sir ! வாழ்த்துக்கள் ! ///
நன்றி தனபாலன்
நடைபயில கற்றுத்தந்து குழந்தை பருவ காலத்தை ஞாபகப்படுத்தியதியதற்கு நன்றி. அதுமட்டுமல்ல இதனால் நீங்கள் உங்களுடய வலைப்பதிவு ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டிர்கள். அன்புடன் சினேகன் அசோக்...
ReplyDelete/// SNEHANASHOK said...
ReplyDeleteநடைபயில கற்றுத்தந்து குழந்தை பருவ காலத்தை ஞாபகப்படுத்தியதியதற்கு நன்றி. அதுமட்டுமல்ல இதனால் நீங்கள் உங்களுடய வலைப்பதிவு ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டிர்கள். அன்புடன் சினேகன் அசோக்... ///
நன்றி தம்பி
ஒவ்வொரு இடத்துக்கும் 1கி.மீ.2 கி.மீ கணக்கு சொல்றீங்க!அப்ப எப்பத்தான் பணி செய்வீர்கள்:)
ReplyDeleteஎப்படியோ உடம்பைக் குறைச்சால் சரி!வாழ்த்துக்கள் நடை பயில!
படங்களை மீண்டுமொரு முறை பார்த்தேன்.கர்ணன் கௌபாய் படம் எடுக்குறதுக்கு சரியான இடம் உங்கள் நடைசாலை.
ReplyDeleteஅழகா சொல்லி இருக்கீங்க மாப்ள...
ReplyDeleteநான் பணியில் சேரும்போது 67 கிலோ....விபத்து ஏற்பட்டு வெளியே வரும்போது(!) 143 கிலோ....உடல் முழுதும் மருந்தின் பரிணாம வளர்ச்சி....ஹாஹா...மிக கடுமையான பயிற்சி மூலம் 100 கிலோ கொண்டு வந்தேன்...இப்போவும் ஏறுவது இறங்குவதுமாக இருக்கும்...
ஆனால்...டென்னிஸ் ஆடுவதும்...கிரிக்கெட் ஆடுவதும் தொடர்வதால்...எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது...உங்க பதிவு பலருக்கு கஷாயம் தான் ஹிஹி!