சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, January 9, 2014

பாட்டியின் மரணத்திலும் தவிர்க்க முடியாத பிரியாணி

போன வருசம் அக்டோபர் மாசம் என் நண்பர் குழாமில் உள்ள ஒரு நண்பனுக்கு திருமணம் முடிந்திருந்தது. மற்றொரு நண்பனான சத்தியமூர்த்தி வீட்டில் கறிவிருந்து ஏற்பாடு செய்திருந்தோம்.


எங்கள் நண்பர் குழாமில் ஒரு  பழக்கம் உண்டு. நண்பர்களுக்கு திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதம் ஒரு வெயிட்டான விருந்து வைப்பது. அப்போது தான் புதிதாக வந்திருக்கும் பெண்ணும் எங்கள் நட்பைப் பற்றியும் எங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வாரென இந்த ஏற்பாடு.

மற்றவர்கள் அரிசி காய்கறி வாங்குவது மற்ற நண்பர்கள் குடும்பத்துடன் வருவதற்கு வண்டி அனுப்புவது என பிஸியாகி விட நான் மட்டும் காலை கடைக்குச் சென்று பார்த்து பார்த்து சிக்கன் மட்டன் எல்லாம் வாங்கி வந்தேன். 

திருமுல்லைவாயில் ஏரியாவிலேயே புகழ்பெற்ற ஒரு இஸ்லாமிய சமையற்காரரை பிடித்து மணக்க மணக்க பிரியாணியும் சிக்கன் குருமாவும் இதர பதார்த்தங்களும் செய்தாகி விட்டது. நான் தான் கிச்சன் சூப்பர்வைசர்.


எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பெண்களையும் குழந்தைகளையும் நண்பன் வீட்டில விட்டதும் அவரவர்கள் அரட்டையையும் விளையாட்டையும் ஆரம்பித்து விட்டனர். 

நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து யானை மிதிக்குமளவுக்கு மகாதியானம் செய்தால் பிரியாணியை நன்றாக சாப்பிட முடியாது என்பதால் எறும்பு கடிக்கும் அளவுக்கே தியானத்தை லைட்டாக முடித்து விட்டு பிரியாணியை சாப்பிட பந்தியில் அமர்ந்தோம்.

பார்வையாலேயே பிரியாணியை காதலித்துக் கொண்டு இருந்தேன். மாப்பிள்ளையும் பெண்ணும் சாப்பிட்ட பிறகு தான் நாங்கள் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட துவங்கியதும் எனக்கு போன் வந்தது.


அப்பா அழைத்தார். அழைப்பை எடுத்தேன். அந்த பக்கமிருந்து அப்பா கதறி அழுதார். என்னவோ ஏதோ என்று எனக்கு பயமாகி விட்டது. இரண்டு நிமிடம் அப்பா அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். 

முடித்ததும் அப்பா சொன்னார் என் பாட்டி இறந்து விட்டாரென. என் அப்பாவின் அம்மா, என் 85 வயது பாட்டி. மூப்பு காரணமாக இறந்து விட்டார். "நான் உடனே கிளம்புகிறேன் நீங்கள் மற்ற ஏற்பாடுகளை கவனியுங்கள்" என்று அப்பாவிடம் கூறி விட்டு போனை கட் செய்தால் நண்பர்கள் எல்லோரும் எனக்கு போன் வந்ததை கூட கவனிக்காமல் பிரியாணியை வெளுத்துக் கொண்டு இருந்தனர்.

என் பாட்டி இறந்து விட்டார். நான் உடனடியாக ஊருக்கு கிளம்ப வேண்டும். இலையில் அமர்ந்து இருக்கிறேன். நண்பர்களிடம் விவரம் கூறினால் என்னை சாப்பிடக் கூட விடாமல் கிளப்பி விட்டு விடுவர். என்ன செய்வது. பாட்டியின் நினைவு வேறு வந்து என்னை சிரமப்படுத்தியது.

என்னை சிறு வயதிலிருந்து பாலும் தேனும் கொடுத்து வளர்த்த பாட்டி. பாசமிக்கவர். 14 பிள்ளைகளை பெற்ற பெரிய குடும்பத்தின் மூத்த வேர். எனக்கு அழுகையும் வேறு வந்தது. இடையில் பிரியாணி மணம் குறுக்கிட்டது.

பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி பாட்டி பிரியாணி.

பதினைந்து நிமிடத்திற்கு பாட்டியை ஒத்திப் போடுவது, பிரியாணியை முடித்து விட்டு விஷயத்தை சொல்லாம் என்று முடிவு செய்து பிரியாணியை புல் கட்டு கட்டி விட்டு கை கழுவியதும் தான் நண்பர்களிடம் விவரம் சொன்னேன் பாட்டி இறந்து விட்டாரென.

என் துக்கத்தை  சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்வார்கள் என எதிர்பார்த்தால் அவனவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான். என் வீட்டம்மாவோ என்னை கழட்டி எடுக்கிறாள். 

"என்ன ஆள் நீ. பாட்டி செத்துப் போயிருக்கிறார். உக்காந்து வக்கனையா பிரியாணியை சாப்டுருக்க, வெக்கமாயில்லையா" என. உண்மையிலேயே எனக்கு வெக்கமா இல்லை. அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்.

ஒரு சோகத்தை முகத்தில் போலியாக உருவாக்கிக் கொண்டு சொன்னேன், "அப்படியில்ல, பாட்டி செத்துப் போயிட்டார். கருமாதி முடியும் வரை அசைவம் சாப்பிட விட மாட்டார்கள். இப்ப விட்டா 15 நாட்கள் காத்திருக்க வேண்டும் அதனால் தான்".

அதுக்கு அப்புறம் எனக்கு மண்டையில் வீங்கியிருந்தது நிலைப்படியில் இடித்துக் கொண்டதால் தான் என் வீட்டம்மா ஒன்னுமே செய்யலை என்று சொன்னா நீங்க நம்பவா போறீங்க.

ஆரூர் மூனா

டிஸ்கி : நாளை காலை எட்டு மணிக்கு ஜில்லா சினிமா விமர்சனம் நமது வலைத்தளத்தில்

30 comments:

 1. இதெல்லாம் நியாயமே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமுங்க.

   Delete
  2. அண்ணே அரசியலுக்கும் பிரியாணிக்கும் என்ன சம்பந்தம் .............ஹி ஹி ஒரு டவுட்டு

   Delete
 2. ஜமாய்ங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. பாட்டியை விட பிரியாணி ரொம்ப முக்கியமா போச்சு.....

  ReplyDelete
  Replies
  1. பின்ன அது பிரியாணியாச்சே

   Delete
 4. பாட்டி செத்ததுக்கு காரணம் வயது மூப்பு!
  கோழியும் ஆடும் செத்ததுக்கு ஒரு ரீசனே இல்லாமல் ஆகிடக்கூடாது என்பதால்தானே பாஸு நீங்க அப்படி செஞ்சீங்க!!
  தப்பே இல்லை!!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னா சரி தான் அஜீஸ் அண்ணே

   Delete
 5. செம போஸ்ட்... ஜாக்கி நடை...

  ReplyDelete
 6. பிரியாணியா, பாட்டியா என்று வரும்போது, பாட்டி தான் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். பாட்டி உங்களை மன்னித்திருப்பார்
  தங்களின் ஜில்லா விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. பிரியாணி சூப்பரா அண்ணே?
  அப்புறம் ஜில்லா விமர்சனம் எப்போ?

  ReplyDelete
  Replies
  1. பிரியாணி பிரமாதம் அண்ணே

   Delete
 8. பார்வையாலேயே பிரியாணியை காதலித்துக் கொண்டு இருந்தேன்.
  முடியல தல
  (மஹா தியானம் இல்லையா)
  அரே ஓ பிளாக் லேபிலாய நமஹ.

  ReplyDelete
  Replies
  1. மகா தியானம் நிறுத்தப்பட்டு விட்டது, அரே ஓ சாம்பா

   Delete
 9. என் தாத்தா கடைசி நேர உயிர் போராட்டத்தில் இருக்கும்போது என் அப்பாவைக் கூப்பிட்டு, நான் செத்த பின் யாரும் பட்டினியா இருக்க கூடாது. அதனால, சாப்பாட்டுக்கு யார் வீட்டுலயாவது சொல்லி ஏற்பாடு செய். சடங்கு செய்ய நீ மட்டும் விரதமிருந்தால் போதும்ன்னு சொல்லிட்டுதான் இறந்தார். அதுப்படியே என் அப்பாவும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாராம். என் பாட்டி அடிக்கடி சொல்லும். இது நடந்தது 30 வருசத்துக்கு முன்..., எனக்கு நினைவில் இல்லை. இப்ப, மூணு வருசம் முன் பாட்டி செத்த போதும் எங்கப்பா தவிர வேறு யாரையும் பசியோடு இருக்க விடாம காஃபி, டீ, டிஃபன், சாப்பாடுன்னு பசி இல்லாம பார்த்துக்கிட்டார். அதனால், நீங்க சாப்பிட்டது தப்பில்லே செந்தில். பசியோடு இருந்து வயிறு செத்தவங்களை சபிப்பதைவிட இது எவ்வளவோ பரவாயில்ல. அதுமில்லாம அது ஒண்ணும் அகால மரணமில்லையே! சோ, நான் உன் கட்சிதான்!!

  ReplyDelete
  Replies
  1. சோத்துக் கட்சின்னு சொல்லுங்க

   Delete
 10. இந்த பதிவு படிக்கும் போது உங்களிடம் நேரில் நின்று பேசிக்கொண்டு இருப்பது போலவே அருமையாக எழுதுகிறிர்கள் உங்கள் நண்பர்களை போலவே நானும் சிறிது மாளலை அவளவு காமெ

  ReplyDelete
 11. அதெப்படி நண்பரே
  தாங்கள் எதை எழுதினாலும் எங்களை வாசிக்க வைத்து அதனை இரசித்து மனதுக்குள் அசைபோட வைத்துவிடுகிறீர்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 12. பிரியாணி டேஸ்டடா இருந்துச்சா ? :)

  ReplyDelete
  Replies
  1. சுவையோ சுவை பிரமாதம் போங்கள்

   Delete
 13. pasi vanthaa paththum paranthidum thaane anne neenga paattiya maranthutinga

  ReplyDelete
 14. பாட்டி மேலேயிருந்து தன் பேரனின் வக்ரதுண்டதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார். தவறே இல்லை. நல்ல பதிவு... ராஜாமணி :)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...