சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, January 22, 2011

சென்னை பயங்கரம் உஷார்

நேற்று என் பழைய அலுவலகத்தின் நண்பன் அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரியும் வட இந்தியாவை சேர்ந்த ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 22. ஒரு வேலையாக சென்ட்ரல் வந்து வேலையை முடித்து மீண்டும் அலுவலகம் வர பார்க் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போதுஒரு பெண்மணி அவனை சைகை காட்டி அழைத்துள்ளார். அப்பொழுது மணி மாலை ஏழு. பையனும் சபலப்பட்டு அவரை நோக்கி சென்றுள்ளார். அந்த பெண்மணி அவரை ரயில்வே டிராக் பக்கம் அழைத்து சென்றுள்ளார். பையன் உணர்ச்சியில் இருக்க அந்த பெண்மணி நன்றாக இருட்டு பக்கம் அழைத்து அவனை மேலும் சிறிது உணர்ச்சிவசப்படுத்தி இருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவனை பிடித்து அடித்து பின் பக்கம் கையை கட்டி இருக்கிறார்கள். அந்த பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்துள்ளார். பிறகு அவனிடமிருந்த பர்ஸ், பணம், செல் மற்றும் அவனது செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு . . . . . . . . . முதலில் அவ்வளவு தான் சொன்னான். ஆனால் அவன் அழுது கொண்டு பாத்ரூமில் இருக்க அவனை கொஞ்சம் தாக சாந்தி யில் கொஞ்சம் மூழ்க விட்டு பிறகு கிளறி கேட்டால் சொன்னான் பாருங்கள் - அய்யய்யோ இது சென்னை தானா.
இத்துடன் அவர்கள் விட்டிருந்தால் எந்த ப்ளாக் கிற்கே அவசியமில்லை. இது சாதாரண விஷயம் நகரத்தில் சபலத்தின் விலை என்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த வாலிபர்கள் அவனை . . . .
ஏங்க இது என்ன சரோஜா தேவி கதை புத்தகமா. . . இருங்க. . . டீன் எஜர்களே நீங்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள்.
உண்மை என்னவெனில் அவன் வடஇந்திய பையன் அல்லவா. நல்லா சிகப்பு. அவனை பிடித்து வாயை கட்டி பேண்டை கழட்டி இருவரும் அவன் ஆசன வாயில் . . . . வேண்டாம் இதற்கு மேல் சொல்ல வேண்டாம். நீங்களே யூகித்து கொள்ளுங்கள். எல்லாம் முடிந்த பிறகு அவனை அங்கேயே அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்கள். அதற்க்கு பிறகு அவன் கையில் காசில்லாமல் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து பணம் வாங்கி கொடுத்து ரூமிற்கு வந்து எனக்கு போன் செய்தான். பிறகு தான் எல்லாம் நடந்தது.
அவனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்று ஒரு செக் அப் செய்த பின் டாக்டர் தான் சொன்னார். அவன் பின்புறம் இருந்து ரத்தம் வருகிறது என்று. பிறகு எல்லாம் முடிந்த பிறகு அவனை அவன் ரூமில் விட்டு விட்டு வந்தேன்.
இது நடந்தது சென்னையில் எங்களால் யாரிடமும் புகார் செய்ய முடிய வில்லை. அவன் வேண்டாம் எனக்கு அசிங்கம் என்று கூறி விட்டான். நான் என் மனதுக்கு கேட்காமல் ப்ளாகில் எழுதுகிறேன். மக்களே உஷார் இது யாருக்கும் நடக்கலாம். அதனால் நீங்கள் உஷாராக இருங்கள். மீண்டும் அதே ரயில் நிலையத்தில் யாரையும் அதே போல் ஒரு பெண் அழைக்கலாம்.
யப்பா இது சென்னை வந்தாரை வாழ வைக்கும் சென்னை. சிறிது சபலப்பட்டால் விளைவு இது தான்.
செந்தில்

7 comments:

  1. நினைத்தாலே பயங்கரமா இருக்கு..

    நன்றி நண்பரே இதுவரை யாரும் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

    ReplyDelete
  2. நண்பரே! சும்மா சென்னை கெட்டு விட்டது என்று சொல்லாதீர்கள். திருத்த நினைப்பவராயிருந்தால் முதலில் போய் காவல்துறையில் புகார் கொடுங்கள். அதற்கும் தயக்கமாயிருந்தால் வெளியே சொல்லாமல் இருப்பதே உசிதம். சென்னை ஒன்றும் அத்தனை மோசமான நகரமல்ல.

    ReplyDelete
  3. ///நன்றி நண்பரே இதுவரை யாரும் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ///

    உங்கள் எண்ணப்பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. நண்பருக்கு நடந்தது முழுவதும் வருந்தத்தக்கதே என்றாலும்...

    //சபலப்பட்டு//

    தனிமனித ஒழுக்கம் என்பது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கடைப்பிடிக்க வேண்டியது என்பதை எல்லோரும் உணரவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  5. இது எல்லா ஊரிலும் நடக்கும் நிகழ்வே.
    நாம் சபலப் படாமல் இருக்க வேண்டும்

    ReplyDelete
  6. //செந்தில் குமார் said...

    நன்றி நண்பரே உங்கள் comment க்கு . இது சென்னை யை கேவலப்படுத்தும் விஷயமல்ல. சென்னை யை திருத்த நானும் சே குவேரா போல் போராளியல்ல. புதிதாக சென்னைக்கு வரும் இளவயது பசங்களுக்கு ஒரு விழிப்புணர்வு முயற்சி. இது கூட அநீதிக்கு எதிரான போராட்டமே. ஆனால் அமைதி யான முயற்சி. அவ்வளவே. இதன் மூலம் இருவர் எச்சரிக்கையானால் கூட எந்த பதிவிற்கு வெற்றியே.//

    நண்பரே, உங்கள் வலைப்பூவுக்கு மீண்டும் வந்திருக்கிறேன். :-)

    ஏதோ பேருந்தில் மணிபர்சைப் பறிகொடுத்தோம், செல்போனைப் பறிகொடுத்தோம்- போகிறது என்று காவல்துறைக்குப் போகாமல் விட்டு விட்டால்கூட பெரிதில்லை. ஆனால், உங்கள் இடுகையில் குறிப்பிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி வரவழைப்பது. அதை அவசியம் நீங்கள் புகாராகத் தெரிவித்திருக்க வேண்டும். இன்று உங்களது நண்பர்; நாளை நீங்களோ நானாகவோ கூட இருக்கலாம் அல்லவா?

    மேலும், இத்தனை வருட சென்னை வாழ்க்கையில் நடந்ததைக் காட்டிலும், எனக்கு கிருஷ்ணகிரி, கோவில்பட்டி, உடுமலைப்பேட்டை போன்ற ஊர்களில் மிக மிக கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதை வைத்து நான் அந்தந்த ஊர்களைப் பற்றி ஒரு முன்முடிவுக்கு வர முடியாதல்லவா? அதைத் தான் குறிப்பிட விரும்பினேன்.

    //இதன் மூலம் எனக்கு புது நண்பராக நீங்கள் கிடைத்தால் அது கூட வெற்றியே.//

    நண்பரே! ஒரு இடுகையை வாசித்து விட்டு, இவருக்கு நமது கருத்தைத் தெரிவிக்கலாம் போலிருக்கிறதே என்ற உட்குரல் கேட்டாலொழிய நான் எழுதுவதில்லை. நீங்கள் எனது நண்பரே தான்; சந்தேகமேயில்லை! :-))

    //உங்கள் நண்பராக நான் ரெடி நீங்கள் ரெடியா. நான் உங்க follower பா.//

    மிக்க நன்றி!

    நான் Eveready! :-)

    இதோ, உங்களை Follow பண்ண ஆரம்பிச்சிட்டோமில்லே? :-)

    ReplyDelete
  7. ஏராளமான நார்த் இண்டியன்ஸ் சென்னையில் நுழைந்துவிட்டதால் இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பீ கேர்புல்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...