இன்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பிய போது என் சக நண்பன் ஒருவன் டவுட்டனில் உள்ள வங்கிக்கு செல்ல வேண்டும் என்று கூறி என்னுடன் பைக்கில் வந்தான். அபிராமி மெகா மால் அருகில் வந்த போது காட்சிகள் நடைபெறவில்லை என்ற அறிவிப்பும் ஏகப்பட்ட கூட்டமுமாக இருந்தது.
வண்டியை நிறுத்தி என்னவென்று விசாரித்தால் இன்று காலை மால் துவங்கும் நேரத்திற்கு முன்பாக தரைத்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டு பெரிய அளவில் தீ பரவி சக்தி அபிராமி புட்கோர்ட் வரை தீயில் நாசமாகி விட்டது என அறிந்தேன். ஏற்கனவே அபிராமியின் நெரிசல் கண்டு எனக்கு ஏற்கனவே கடுப்பு உண்டு.
சந்து பொந்துகளில், படிக்கட்டுகளில் எல்லாம் கடை வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருப்பர். டிக்கெட்டும் 180, 160 என்று இஷ்டத்திற்கு விலை நிர்ணயம் உள்ள திரையரங்கம் இது. சாப்பிடுவதற்காக புட்கோர்ட் வந்தால் பத்து கடையின் பிரதிநிதிகள் வந்து நம்மை சூழ்ந்து கொண்டு நாம் எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி பர்ஸை காலி செய்து விடுவர்.
இத்தனைக்கும் 90களில் எனக்கு மிகவும் பிடித்த தியேட்டராக அபிராமி இருந்தது. திரைவளாகம் முன்பு மிகப்பெரிய கார்பார்க்கிங். கம்ப்யூட்டர் முன்பதிவு, நல்ல ஸ்பீக்கர்கள் என முன்னணியில் இருந்தது. காலியிடத்தை கட்டிடம் கட்டி காசு பார்க்க ஆரம்பித்த பின் எல்லாம் போய் விட்டது.
தீ விபத்து மட்டும் வாரயிறுதி நாட்களில் நடந்திருந்தால் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக மால் துவங்கும் முன்பே தீவிபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த மெகா மால் தொடங்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களை காட்டி வழிகளை விசாலப்படுத்தினால் மட்டுமே இன்னொரு முறை இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அரசு விழித்துக் கொள்ளுமா?
--------------------------
சகுனி விஷயத்தில் நான் சொன்னது போலவே நடக்கிறது. படம் எப்படியும் கலகலப்பைப் போல் ஒடிவிடும் என்று சொன்னேன். அது போலவே சகுனி ஒடும் திரையரங்குகள் இன்று வரை கூட்டத்தில் நிரம்பி வழிகின்றன. பதிவர்களாகிய நாம் தான் படம் டப்பா அது இது என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பாட்டுக்கு படத்தை ஒட்டி காசு பார்த்து விட்டார்கள். படம் பார்த்தவனும் என்னடா படம் இது நல்லாவேயில்லை என்று புலம்பிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் கூட்டம் எப்படித்தான் சேருகிறதோ யாருக்கும் புரியவில்லை.
------------------------
சனிக்கிழமையன்று தான் முதன் முதலாக என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் 60வயதில் ஒய்வு பெறும் நிகழ்வு நடைபெற்றது. இது வரை இது போன்ற நிகழ்ச்சிகளை காணாத எனக்கு புதிதாகவே இருந்தது. ஜூலை மாதத்தில் மட்டும் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் இருந்து 47 பேர் ஒய்வு பெற்றுள்ளனர். சனியன்று காலை என் செக்சனுக்கு சென்றதுமே சக ஊழியர் ஒரு கட்டிங்கை கொடுத்து அன்றைய நாளை மகிழ்வுடன் துவக்கினார்.
அன்று மட்டும் அபீசியல் வேலைகள் இல்லாமல் மேடை அமைத்தல், சால்வை வாங்கி வருதல், பிரியாணி பார்சல் வாங்கி வருதல் என செக்சனே களை கட்டியது. அரைமணிக்கொரு கட்டிங் வேறு. நான் பணிபுரியும் வெஸ்டிபுள் (Vestibule) செக்சனில் என்னுடன் 40 பேர் பணிபுரிகின்றனர். 55 வயதை கடந்தவர்கள் மட்டும் 30 பேர். ஆனால் இது போன்ற கொண்டாட்டங்களில் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் கூடி ஒய்வு பெற்ற ஊழியரை சந்தோஷமாக வீடு வரை சென்று விட்டு வந்தோம். நமக்கு தான் சந்தோஷம் எல்லாம் ஆனால் அந்த 36 வருடங்கள் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஊழியர் மனம் வருத்தப்படும் என்பதை நினைத்தால் எனக்கு வருத்தம் தான் வந்தது.
-------------------------
யூரோ கப்பில் எதிர்பார்த்தப்படியே ஸ்பெயின் வெற்றிப் பெற்று விட்டது. மாட்ச் தான் நடுராத்திரியில் 12.15 மணிக்கு துவங்கியது கண்முழித்து பார்த்த எனக்கு இன்றைய நாளை சோம்பலாக்கி விட்டது. ஆட்டம் துவங்கியதிலிருந்தே ஸ்பெயினின் ஆதிக்கம் தான். முதல்பாதி வரை 2-0 என்ற கோல்கணக்கில் இருந்த ஸ்பெயின் ஆட்டத்தை 4-0 என்று அட்டகாசமாக முடித்து விட்டது. தொடர்ச்சியாக இரண்டாம் முறை வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது ஸ்பெயின்.
ஆரூர் மூனா செந்தில்

வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com//////
நன்றி...நன்றி...நன்றி...
நன்றி சொன்ன அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி
Deleteஅட பாவி நான் உனக்கு சொன்னேன்யா....
Deleteபஞ்சேந்திரியா....
ReplyDeleteஓகேயா...
:)))))))
ரைட்யா
Deleteஅருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteகலக்குங்க!
ReplyDeleteநன்றி சகா
Deleteஅபிராமி மெகா மால் தான் தீக்கு இரையான திரையரங்கம் என்று இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்... இனியாவது Inclination Seat கொள்ளை குறையும் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteதிருந்துனா சரி பிரபா
Delete//சக ஊழியர் ஒரு கட்டிங்கை கொடுத்து அன்றைய நாளை மகிழ்வுடன் துவக்கினார்.// அதாவது அலுவலக நேரத்தில் அலுலகத்தில் மது அருந்தியிருக்கிறீர்கள். மது உங்கள் அலுவலை சரியாகச் செய்ய விடுமா?
ReplyDeleteஅய்யா முதல் விஷயம், அது அலுவலகம் இல்லை தொழிற்சாலை. அடுத்தது அன்று தான் அபீசியல் வேலைகளே நடைபெறவில்லை என்று கூறியுள்ளேனே
Deleteகலக்கல் ...! பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteஅடிக்கடி பதிவு போடுங்கள்
ReplyDeleteகண்டிப்பாக சேது
Deleteபெரம்பூர் லோகோ ஸ்டேஷன்ல விபத்துப்பத்தி ஒரு பதிவு போடுறேன்னு சொன்னீங்க.. நியாபகம் இருக்கா நண்பா... வெயிட்டிங் ஃபார் தட்..
ReplyDeleteஅது வேற ஒண்ணுமில்ல மணிகண்டவேல், அதுக்கு கொஞ்சம் சிந்திச்சி பழைய ஞாபகங்களை கிளற வேண்டியிருக்கு. அடுத்த வாரத்துல கண்டிப்பாக போட்டு விடுகிறேன்.
Deleteவேற படம் ஒன்னும் இல்ல ...அதனால குடும்பமா போறவங்க வந்ததுக்கு இதையாவது பார்ப்போம்ன்னு நினைக்கிறாங்க...அதான் கூட்டம்...பில்லா வந்தா இது விழுந்திரும்.....
ReplyDeleteநீங்க சொல்றது கரெக்ட்டு பரிதி.
Delete