சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, December 3, 2012

திருவாரூரும் நடுவுல காணாம போன கொஞ்சம் பக்கமும்

கடந்த சில நாட்களாக வேலையும் அதிகமாகி ஊருக்கு செல்வதும் அதிகமாகி விட்டதனால் கண்டினியுட்டியாக எழுத முடியவில்லை. இணையத்திலும் புழங்க முடியவில்லை. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப பழைய பதிவுகளை எடுத்து விட்டால் தெரியாது என்று புத்திசாலித்தனமாக யோசித்ததில் நிறைய நண்பர்களிடம் திட்டுடன் பல்பும் வாங்கியது தான் மிச்சம். சரக்கு தீரத்தொடங்கியிருப்பதை கண்டுபிடித்த நண்பர்களுக்கு நன்றி.

சென்ற வார இறுதியில் திருச்சி, வயலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சித்தப்பா மகன் திருமணத்திற்காக சென்று விட்டு விட்டு வார இறுதியை திருவாரூரில் செலவிட்டு வந்தேன். கோயில்களில் நடைபெறும் திருமண சடங்குகளில் வயலூர் சற்று வித்தியாசமானதாக தெரிகிறது.

வடபழனி போன்ற கோயில்களில் திருமணம் தனியாக ஒரு புரோகிதர் வைத்து மண்டபத்தில் நடைபெறும். ஆனால் வயலூர் முருகன் கோயிலில் புரோகிதர் இல்லாமல் நேரடியாக மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் சன்னதிக்கு சென்றதும் அங்குள்ள அர்ச்சகரே மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். உடனே வெளியில் வந்து விட வேண்டும்.

இதற்காகவே கோயிலைச் சுற்றி திருமண மண்டபங்கள் மட்டுமே அதிகம் இருக்கின்றன. காலையில் திருமணத்திற்கு வந்தவர்களை கோயிலின் எதிரில் இருந்த மண்டபத்தில் வரவேற்று காலை சிற்றுண்டிக்கு பிறகு முகூர்த்த நேரத்தில் பத்து உறவினர்களும் மணமக்களும் கோயிலுக்குள் சென்று பத்து நிமிடத்தில் தாலி கட்டி வந்து விட்டனர்.

அதன் பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள், உறவினர்களுடன் புகைப்படம் எடுத்தல், மதிய உணவு எல்லாம் மண்டபத்தில் நடைபெற்றது. எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது. ஏனெனில் வடபழனி கோயிலில் நடைபெற்ற நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். கடைசி வரை அவர்கள் திருமணம் நடைபெறும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி போய் வெளிவந்தேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏகப்பட்ட வித்தியாசங்கள். சில ரசிக்கத்தக்கதாகவும் இருந்தன.

திருமணம் முடிந்து திருவாரூருக்கு திரும்பியதும் சினிமா பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நடேஷ் திரையரங்கத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திற்கு நண்பனுடன் சென்றேன். திரையரங்கில் மொத்தமே 12 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

இது மாதிரி வித்தியாசமான சூழலில் படம் பார்க்கும் போது சில சிரமங்கள் இருக்கும். என்னவெனில் திரையரங்கில் உடன் பார்ப்பவர்களின் ரியாக்ஷனை பார்த்தே படத்தின் ரிசல்ட்டை கணித்து விட முடியும். பத்து பேர் அமர்ந்திருக்கும் சூழலில் என்னத்தை ரியாக்சன் பார்ப்பது, நாமே கணித்து தான் முடிவெடுக்க வேண்டும்.

படத்தின் கதை நமக்கு வேண்டாம். படம் எப்படியிருந்தது என்பதை மட்டும் பார்த்து விடுவோம். படத்தின் பலமே படத்தில் வைக்கும் காட்சிகளுடன் இயக்குனர் எப்படி ஒன்றியிருந்தார் என்பதில் அடங்கி இருக்கிறது. அது இந்த படத்தில் கிரிக்கெட் காட்சியில் அப்படியே தெரிகிறது.

நான் கூட இது போல் நான்கு பேருடன் ஆளில்லாத மைதானத்தில் மொட்டை வெயிலில் விளையாடி இருக்கிறேன். அது போன்ற சமயங்களில் எப்படி விளையாட்டு இருக்குமோ அப்படியே இயல்பு மாறாமல் எடுத்து இருக்கின்றனர். அதனால் அந்த காட்சியில் இருந்தே நான் படத்துடன் ஒன்றி விட்டேன்.

மருத்துவமனையில் பஜ்ஜிக்கு பக்ஸ் இந்த வியாதி வந்தவர்களுக்கு நடக்கப் போவதை விவரிக்கும் காட்சியில் என்னை மறந்து சிரித்துக் கொண்டு இருந்தேன். பக்ஸ் விவரிக்க பஜ்ஜி அவஸ்தையுடன் சரஸ்ஸை எதிர்பார்த்து எட்டிப் பார்க்கும் போது மொக்க நண்பர்களுடன் இது போல் தனிமையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்ட என் அனுபவம் போலவே இருந்தது.

மண்டப காட்சிகளும் நண்பர்கள் மட்டும் ஒருவருக்கு ஒருவர் திருட்டு முழி முழித்து பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சிகளும் சிரிப்பை வரவழைத்தன. சரஸ் என்ன சொன்னாலும் ஹீரோ கேட்பதை பார்த்து பஜ்ஜியும் அது போல் செய்ய முற்பட்டு திட்டு வாங்கும் காட்சியில் சத்தமாகவே சிரித்தேன்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் தவற விட்டு விட்டேன். மற்ற நண்பர்கள் பாரில் உக்கார்ந்துக் கொண்டு போன் அடித்துக் கொண்டே இருந்ததால் ஹீரோவுக்கு நினைவு திரும்பும் காட்சியுடன் திரையரங்கை விட்டு வெளியேறி விட்டேன்.

மொத்தத்தில் படம் நல்லாயிருக்கு, இல்லை என்ற விமர்சனத்தை தாண்டி எனக்கு பிடித்திருக்கிறது. என் அலைவரிசையில் ஒத்துப் போனவர்களுக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.



ஆரூர் மூனா செந்தில்

24 comments:

  1. விமர்சனம் அருமை தோழமையே. :-)))

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுவது அருமை நட்பே :))))

      Delete
  2. முதன் முதலா உம்பதிவுல, முதல் கமெண்ட் போட்ருக்கேன் , பார்த்து செய் செந்திலு :-))

    ReplyDelete
    Replies
    1. எக்ஸ்ட்ராவாக ஒரு குவாட்டர் ஒயின் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்

      Delete
    2. கழுதை தேய்ஞ்சி கட்டெரும்பானது மாதிரி...
      இங்கே ஃபுல்லு தேய்ஞ்சி க்வாட்டர் ஆகிருக்கு....:-))

      Delete
    3. லோக்கல் ஆப் சரக்குக்கே சலம்புற ஆளு நீ உனக்கு புல் கேக்குதா?

      Delete
    4. இப்படுக்கூட சங்கதி உள்ளதோ?

      Delete
  3. ''படத்தின் பலமே படத்தில் வைக்கும் காட்சிகளுடன் இயக்குனர் எப்படி ஒன்றியிருந்தார் என்பதில் அடங்கி இருக்கிறது''
    தாண்டவம், துப்பாக்கி, போடாபோடி, முகமூடி எனும் குப்பையெல்லாம் இங்கு திரையிடுகிறார்கள் (லண்டன்) ஆனால் இவ்வாறன திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை,

    ReplyDelete
    Replies
    1. இங்க இருக்கிறவங்களுக்கு மட்டும் என்ன வாழுது, பத்து மொக்கைப்படங்களுக்கு பிறகு தான் ஒரு நல்லப்படம் கிடைக்குது சுதர்ஸன்

      Delete
  4. நல்லதொரு பகிர்வு, திருவாரூர் டூர், கலியாண சாப்பாடு, சினிமா, அப்புறம் நண்பர்களோடு டாஸ்மாக் பாரு, புண்ணியம் செஞ்சவருங்க நீங்க.. நல்லாயிருங்க.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய இக்பால். மாதம் ஒரு முறை அமையும் இது போன்ற சம்பவங்கள் தான் இன்னும் நம்மை பழைய நினைவுகளுடன் அசை போட்டு மகிழ்வுடன் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

      Delete
  5. @ சுதசன் - சரியா சொன்னீங்க, குப்பை படங்களே கனடாவில் திரையிடுகின்றார்கள். நல்ல படம் எல்லாம் சிடியில் தருகின்றார்கள். என்ன செய்ய? :(

    ReplyDelete
  6. தல எனக்கும் படம் பிடிச்சுருக்கு, கொஞ்சம் எடுத்து சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி கதிர்.

      Delete
  7. அன்னே எப்ப பார்த்தாலும் ரவுண்லே இருக்கீங்க போல.

    ReplyDelete
    Replies
    1. இப்ப மூனாவது ரண்டாம், அஞ்சாவது ரவுண்ட் எண்டர் ஆனது உங்களுக்கு, பதில் கமெண்ட் போடுவார் :-)))

      Delete
    2. ஆரிப் வீட்டுக்கு மூத்தப்பிள்ளை நானு. எந்த விசேசமாக இருந்தாலும் நம்ம வருகை முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் ட்ரிப்லயே இருக்கேன்.

      Delete
    3. சிட்டிக்காட்டான் கழுதை எந்த ரவுண்டுக்கு எந்த ரவுண்ட்டை கோத்து விடுற.

      Delete
  8. திருமண அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது! ஒவ்வொரு ஊரில் ஒருமாதிரி இருக்கும் போல!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நன்றி சுரேஷ்

      Delete
  9. நல்லா என்ஜாய் பண்ணுயா............

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார். நல்லாயிருக்கீங்களா. ரொம்ப நாளா நம்ம பக்கமே காணுமே. என்னாச்சு

      Delete
  10. ஊருக்கு போகும்போது தங்களோட சிஷயனையும் கூட்டிசெல்லவும் .. இல்லையெனில் விவாகரத்துதான்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த ட்ரிப்புக்கு போகும் போது அரசனுக்கு ஒரு டிக்கெட்டை சேத்து போடுப்பா.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...