சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, August 28, 2012

பதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும்


பதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் பதிவெழுதி பொங்கலிட்டு விட்டார்கள். நாம் இனிமேல் சொல்ல புதுசா என்ன இருக்கு. ஆனா ஒன்னு இருக்கு. யாருக்கும் தெரியாமல் என் பொருளை காப்பாற்ற நான் செய்த தில்லாலங்கடி தான்.

பதிவர் சந்திப்புக்கு என்னிடமிருந்த கதர் வெள்ளைச் சட்டையை போட்டுக் கொண்டு போவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் பாருங்க, முதல் நாள் இரவு முழுவதும் கடும் மழை பெய்து சென்னையில் எங்கும் சேறும் சகதியுமாகி விட்டது.

சட்டையை போட்டுக் கொண்டு அம்பத்தூர் எஸ்டேட் வழியாக லூகாஸ் செல்லும் சாலையில் நாம் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் எவனாவது டபக்கென்று சாலையில் இருக்கும் சேற்றை எடுத்து சட்டையில் கோலம் போட்டு விடுவான்.

என் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.

காலையில் 8 மணிக்கு மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கதர் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் பட்டை, கூலிங்கிளாஸ், ஹெல்மெட்டுடன் ரெயின் கோட்டையும் போட்டுக் கொண்டு மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.

தஞ்சை குமணன் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு ஜெமினி சர்க்கஸ்ஸில் சாகசம் செய்யும் பைக்காரனைப் போல சாகசங்கள் செய்து ஒரு வழியாக பதிவர் சந்திப்பு திருவிழா நடக்கும் மண்டபத்தை அடைந்தேன்.

அப்பாடா ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்ற இறுமாப்பை அடைந்தேன். வெளியிலேயே வேஷத்தை கலைத்து விட்டு காவி உடை தரித்த நல்லவனைப் போல மண்டபத்தில் உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் அமரும் போது கூட பார்த்து பார்த்து அமர வேண்டியதாயிற்று. என்னா கஷ்டம்டா.

பதிவர் சந்திப்பு சிறப்பாக துவங்கி நடைபெற்று மதிய இடைவேளை வந்தது. மற்றவர்கள் உணவருந்திய பின்பே விழா ஏற்பாட்டாளார்கள் சாப்பிட வேண்டுமென கலந்தாய்வில் கேட்டுக் கொண்டதால் கடைசி பந்தியில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.

இலை வந்தவுடன் தண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன். ஹி ஹி ஹி சாரி என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

பறிமாறியவர்களில் ஒருவர் ஐஸ்கிரீம் டம்ளரில் கிரேப் ஜூஸை வைத்து விட்டு சென்றார். பின்னாடியே சாம்பார் சாதம் பரிமாறியவர் என் இலைக்கு பரிமாறும் போது சிறிது சாதம் டம்பளரில் உள்ள கிரேப் ஜூஸில் விழுந்தது. கிரேப் ஜூஸ் சில்லென்று சட்டையில் தெளித்தது. விதி மீண்டும் சிரித்தது.

அதன் பிறகு பரிமாற வந்தவர்களை முன்பே மெதுவாக பறிமாறும்படி எச்சரித்து அரைகுறையுடனே சாப்பிட்டு எழுந்தேன். சட்டையை சுத்தம் செய்து காய்ந்ததும் கறை தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது. இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கியது திருவிழா.

பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் விழா களை கட்ட துவங்கியது. கடைசி நேரத்தில் போண்டா வந்தது. நான் இப்பொழுது பரிமாற துவங்க வேண்டாம். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேசி முடித்ததும் போண்டாவை கொடுக்கலாம் என்று கூறினேன். அதற்கு மறுத்த பதிவு நண்பர் ஒருவர் போண்டா சூடு ஆறிவிடும். நாம் தட்டில் வைத்து அனைவரிடமும் சென்று கொடுப்போம் என்றார்.

நானே சட்டையில் சட்னி பட்டு விடும் என்று பயந்து போண்டாவை வேண்டாம் என்று ஒதுக்கினால் விதி தேடி வந்து தள்ளுதே என்று புலம்பியபடியே தட்டில் வைத்து கொடுக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் போண்டா கொடுக்கும் இடத்தில் கூட்டம் சேர ஆரம்பிக்கவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சுரேகா அவர்கள் அனைவரையும் அமரும்படியும் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அழைக்க அனைவருக்கும் கொடுத்து மட்டுமே கொண்டிருந்த நான் வழிந்து கொண்டே அமர வந்தேன்.

என்னை போண்டா கொடுக்கும்படி பணித்த நண்பர் பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டே போண்டா தின்று கொண்டிருந்தார். என் கெரகம் அப்படினு நினைத்துக் கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தேன்.

விழா இனிதே நிறைவடைந்தது. வெற்றிகரமாக நடந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. முடிந்து செல்லும் போது முக்கால்வாசி நண்பர்கள் நடத்திக் காட்டியதற்கு நன்றி தெரிவித்து சென்றனர். நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை நடத்திய நண்பர்கள் மற்றும் சில சீனியர் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி சிறு மீட்டிங் போட்டோம். அதுவும் முடிந்து 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். வரும்வழியெங்கும் சட்டையில் எதுவும் படக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒட்டி வந்தேன்.

வீட்டின் அருகில் வந்ததும் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்தேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது பாழாய்ப்போன ஆப்பாயில் வரும் வரை. ஆர்வத்தில் ஆப்பாயிலை எடுத்து வாயில் போட முயற்சிக்கும் போது வழியில் உடைந்து சட்டையில் மஞ்சள் கரு கொட்டியது.

இதன் பிறகு வீட்டில் நடந்ததை சொன்னால் உலகம் என்னை வெளியில புலி வீட்ல எலி என்று பரிகாசம் செய்து கைகொட்டி சிரிக்கும். தலையில் வாங்கிய அடி புடைத்துக் கொண்டு வலித்தது. சத்தியமாக விதி வலியது.

ஆரூர் மூனா செந்தில்

68 comments:

  1. ஹா... ஹா... நன்றி சார்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்தீர்களா?

      Delete
  2. அருமை...இதுக்கு இப்படி ஒரு விளக்கமா

    ReplyDelete
    Replies
    1. ஏங்க, சந்திப்புல நடந்ததைத்தான் எல்லோரும் பிரித்து பிரித்து சொல்லி விட்டார்கள். நாம வேற இறங்கி குட்டைய குழப்புறத விட நாம தனி ரூட்ல போயிடுவோம்னு தான். இப்பல்லாம் யாரையும் வம்பிழுக்கனும்னு நினைக்கிறதே இல்லை.

      Delete
  3. /// நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன். ///

    அப்படியா...?

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாங்க, சைவமாவே கிளம்பி விட்டார்.

      Delete
  4. தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன்.// சோறு போட வேண்டிய நேரத்துல தண்ணிய தெளிச்சுக்கிட்டு...

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாங்க. அதுவும் பசி நேரத்துல.

      Delete
  5. Replies
    1. இன்னும் கொஞ்சம் விளக்கமா சிரிச்சிருக்கலாம். நீங்க சும்மா ஊர் போய் சேர்ந்ததை சங்கமே பெருமையா பேசிக்கிட்டு இருந்தது.

      Delete
  6. "குத்து வாங்கினவன்" -னு Profile ல போட்டுருக்கீங்களே!

    எங்க வாங்கினீங்க ,இந்த பதிவுலதானே தெரியுது..

    வாழ்த்துக்கள்.... (இது விழாவிற்கு ., விழுந்ததிற்கு அல்ல)

    ReplyDelete
    Replies
    1. அட லோகோவுல குத்து வாங்கிக்கிடக்கிறது நான்தான்னு சிம்பாலிக்கா சொல்ல முயற்சித்தேனுங்க. அதப்பாருங்க, இந்தப் பதிவுக்கு பொருத்தமா அமைச்சிட்டது போல.

      Delete
  7. மச்சி உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    அதிகம் பேச இயலவில்லை பரவாயில்லை போனில் பேசுவோம்...

    கட்டி அணைத்து வாங்க என்றது இன்னும் என் நினைவில் இருந்து அகலவில்லை..

    ReplyDelete
    Replies
    1. அட எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க மச்சி. முதல்நாள் இரவுல உங்களை சந்திக்க முடியல. மறுநாள் பதிவர் திருவிழாவில் நாம் பேசிக்கொண்டிருந்தோமானால் விழாவை கவனிக்க முடியாமல் போயிருக்கும். பரவாயில்லை. நாட்கள் இன்னும் இருக்கின்றன. நிதானமாக அளவளாவுவோம்.

      Delete
  8. தம்பி இப்போ நான் போட்ட பதிவிலிருந்து கூட, சுட சுட போட்டோ உருவியிருக்கே ! என்னா ஸ்பீடு !

    இது மாநாட்டு கதை இல்லை. கதர் சட்டை கதை

    நாய் நக்ஸ் நைட் கூட தீர்த்தம் சாப்பிடலையா ? என்ன ஆச்சரியம் இது !

    நாளை அசத்தலா காரியத்தை முடிங்க. அப்புறம் அந்த அனுபவத்தை எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, என் கிட்ட கேமராவும் இல்ல, நான் புகைப்படம் எடுக்கவும் இல்லை. நண்பர்கள் எடுத்த படங்கள் எனக்கானவையும் கூட தானே, அதான் எடுத்துக் கொண்டேன்.

      மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி விரைவாக கிளம்பி சென்று விட்டார்.

      கண்டிப்பாக அண்ணே.

      Delete
  9. // மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.//

    ஹி ஹி... நல்லா இருக்கு கதை... தெரிஞ்சா நான் வந்து சாஷ்டாங்கமா சாம்பார் ஊத்திருப்பேனே....:)

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சு தான் யாருகிட்டயுமே சொல்லலை மயிலன். ஆனாலும் உங்கள் கவிதை சூப்பர். எதிர்பாராத தருணத்தில் நீங்கள் அரங்கின் ஹீரோவானது தான் ஹைலைட்.

      Delete
  10. வெள்ளை சட்டையில சும்மா ஜம்முன்னு இருந்திங்க செந்தில்....

    ஆனா இம்புட்டு அவஸ்தை பட்டும் எங்க முன்னாடி சிரிச்சு பேசிட்டு இருந்திங்களே.... செம செம செம....

    ReplyDelete
    Replies
    1. அது என் ராசி பிரகாஷ். எப்ப வெள்ளை சட்டை புதுசா போட்டாலும் ஒன்னு எதிலயாவது மாட்டி கிழிஞ்சு போகும். அல்லது நீக்கவே முடியாத கறைபடும். எப்பவுமே வெள்ளை சட்டை போடாமல் மிக முக்கிய இடங்களுக்கு போகும் போது மட்டும் தான் போடுவேன்.

      Delete
  11. செந்தில்,நான் கூட அன்று வெள்ளைச் சட்டைதான்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்கள் வெள்ளை சட்டையை மிக லாவகமாக கையாளத்தெரிந்தவர்கள். எனக்கு வெள்ளை கலர் சட்டை போட்டால் கறைபடுவது தான் ராசி.

      Delete
  12. நீங்க சந்திப்புக்கு முன்னாடி சூடா போண்டா சுட்டுகிட்டிருந்ததால் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தேன்.பதிவர் குழும விழா சிறப்பாக இருந்ததை நேரலையில் காண முடிந்தது.

    மோகன்குமார் படங்கள் வெளியிட்டதில் உங்களை கோடம்பாக்கத்துக்கு விஜயகாந்துக்கு பதிலாக சிபாரிசு செய்திருந்தேன்.முதலில் சினிமா முயற்சி செய்யுங்க.கொஞ்சம் காசு சேர்த்துட்டு அப்புறம் விஜயகாந்துக்கு போட்டியா கட்சி ஒன்னு ஆரம்பித்து விடலாம்:)

    ReplyDelete
    Replies
    1. இருக்குற வேட்டியே போதும்ணே, பெரிசா ஆசப்பட்டு கோவணத்தை உருவிட்டானுங்கன்னா.

      Delete
  13. இந்த சட்டைக்கு பின்னாடி இம்புட்டு சங்கதி இருந்துச்சா ...
    தெரியாமே போச்சே ,,, ம்ம்ம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பா.

      Delete
  14. ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.
    /////////////
    நெம்பிட்டோம்...!துணி துவைப்பது யாருன்னு எங்களுக்கு தெரியாதா...?அவ்வ்வ்வ்............

    ReplyDelete
    Replies
    1. யோவ். போது இடத்துல உண்மைய சொல்லிப்புட்டு மாட்டி விடுறீங்களே.

      Delete
  15. Replies
    1. ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம பக்கம் பின்னூட்டமா? நன்றி கருண்.

      Delete
  16. இதுக்குத்தான் எப்பவும் வீட்டு அம்மா சொல்ரதக் கேக்கனுங்க! நகைச்சுவை நல்லாவே பின்னீட்டிங்க போங்க! செம செம!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சாமுண்டீஸ்வரி.

      Delete
  17. ahhahaaha அடிவாங்குறதுல என் இனம்டா......

    ReplyDelete
    Replies
    1. சேம் பிளட்? ஹா ஹா ஹா

      Delete
  18. அதெல்லாம் போகட்டும் விடுங்க மனிதாபிமானி ஆஷிக் என்ன சொன்னார், அதை சொல்லுங்கள் முதலில் நக்ஸ் & ஆஷிக்கும் கட்டி பிடித்து நட்பு பாராட்டினார்கள் என்று ஒரு பதிவில் படித்தேன் உண்மையா?.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பாஷா, முதல் நாள் இரவே அலைபேசியில் பேசி சமாதானமாகி விட்டோம். விழாவில் நேரிலும் சந்தித்துக் கொண்டோம்.

      நக்கீரனும் ஆஷிக்கும் கூட சமாதானமாகி விட்டார்கள்.

      Delete
  19. விதி ஆப்பாயில் ருபத்துல வந்து விளையாடிவிட்டது பாருங்க....உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லவது என்பதே தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சகோ

      Delete
  20. It is indeed a nice write-up! Keep up the good work!

    ***என் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.***

    தம்பி தம்பினு மோஹன் குமார் விளிப்பதால் நீங்க இன்னும் திருமணம் ஆகாதவர்னுதான் நெனச்சேன். நீங்க திருமணம் ஆனவர்னு இப்போத்தான் தெரியுது. போன பதிவுல நீங்க திருமணம் ஆகாதவர் என்று நினைத்து ஒரு "வெட்டி காமெண்ட்" போட்டேன். எல்லாம் இந்த மலராலதான். அந்தாளை அடிக்கனும். :) My apologies for that mistake. Anyway, it was not that offensive, so I let it go as it is.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கருண். அதெல்லாம் விடுங்க. நட்புடனே இருப்போம்.

      Delete
  21. பதிவர் விழாவிற்கு வரமுடியல வருந்துகிறேன். இன்றும் அதே டிரெஸ் போட்டுனு வாங்க மாலை விட்டுக்கு போனதும் இராஜமரியாதை கிடைக்கும் ஏதோ என்னால முடிஞ்சத செய்வேன் கறை படுறதால நல்லது நடந்தா கறை நல்லது தானே.

    ReplyDelete
    Replies
    1. படிக்கிற உங்களுக்கு நல்ல பொழுது போக்கா இருக்குது. வாங்குன எனக்கு தானே வலிக்குது.

      Delete
  22. Replies
    1. எங்க வீட்ல சர்ஃப் எக்சல் வாங்குறது இல்லீங்கண்ணா,

      Delete
  23. நல்ல நகைச்சுவை பதிவு. காமெடி த்ரில்லர் போல இருந்தது. என்னமோ ஆகப்போகுதுன்னு தெரிந்தது. ஆனாலும் கிளைமாக்ஸ் சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே

      Delete
  24. Replies
    1. ஹி ஹி... ஹி ஹி...

      Delete
  25. பாஸ்,
    வழக்கம்போல் உங்க ஸ்டைல்ல சொல்லி இருக்கேங்க. செம.
    வீட்டு அம்மா கிட்ட "கறை நல்லதுன்னு" சொல்லி தப்பிச்சு இருக்கலாம்ல..??

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ். நான் சொன்னா கேக்க அவங்க என் டீச்சரோ அம்மாவோ கிடையாதுங்க, என் மனைவி, அவங்க சொன்னா நான் கேக்கணும்.

      Delete
  26. தண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது.
    >>>
    அடி ரொம்ப பலமோ. சாரி சாரி

    ReplyDelete
    Replies
    1. ஏன்க்கா, தண்ணிய தெளிச்சது யாரோ ஒரு பதிவர்னு சொல்லி உங்களை தப்பிக்க வைக்கலாம்னு பாத்தா ஸாரி சொல்லி நீங்களே மாட்டிக்கிட்டீங்களே

      Delete
  27. ஆஃபாயில் ஆர்வக்கோளாறுனால வெள்ளை சட்டை மஞ்சள் சட்டையாயிடுச்சு போல. வீட்ல சொல்ற பேச்சைக் கேட்கணும்னு இதுக்கு தான் சொல்றது.

    ReplyDelete
    Replies
    1. பட்ட பிறகு தான் தெரியுதுங்க.

      Delete
  28. அண்ணே சூப்பர்ணே!!!!

    நல்ல ஒரு திரில் + நகைச்சுவை தொடர் ....

    ரசிக்கும்படி இருக்கிறது...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே.

      Delete
  29. நன்றி மனோ

    ReplyDelete
  30. ஓ...அந்த போண்டா வாய்க்காத புண்ணியவான் நீங்கதானா? அப்ப நான் உங்களை சட்னிக்கறையிலிருந்து காப்பாற்றி இருக்கேன்....!!

    ReplyDelete
    Replies
    1. இன்று முதல் "சட்னிக்கறையிலிருந்து காப்பாற்றிய சிரோன்மணி" என்று சுரேகா அழைக்கப்படுவாராக.

      Delete
  31. போண்டாவை // வேண்டா என்று மறுத்த சிங்கம் அரூர் மூணா வாழ்க வாழ்க

    ReplyDelete
    Replies
    1. நானும் வாழ்க, வாழ்க.

      Delete
  32. அருமையான நட்புகள். சிறப்பான விழா. ஒன்றுபட்டு சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் செந்தில். சந்தித்ததில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவோ சீனியர் பதிவர்கள் தங்களை கூப்பிட்டால் தான் வருவோம் என்று மற்றவர்களிடம் பதிவர் சந்திப்பைப் பற்றி மட்டம் தட்டிப் பேசியும், வராமல் இருந்துவிட்டு செலவுகளை சர்ச்சைக்குள்ளாக்குவதுமாக இருக்கும் போது தங்களது தம்பிகள் நடத்திய விழாவுக்கு வந்து கலந்து கொண்டு, வாழ்த்தியும் இறுதியில் தக்க ஆலோசனையும் கூறிய தங்களுக்கு எங்களின் நன்றிகள். அடுத்த பதிவர் சந்திப்பிலும் இது போலவே தங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

      Delete
    2. அதுமட்டுமின்றி தங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஷங்கர்.

      Delete
  33. மாப்ள எங்கள போல ஆட்கள் முட்டை சாப்பிடலாமோ இனியும் தாங்குமா இந்த உடம்பு?;-))

    ReplyDelete
    Replies
    1. முட்டைய அவிச்சி சாப்பிடுங்க, தப்பிச்சிக்குவீங்க.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...