சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, January 21, 2013

புத்தக கண்காட்சி - அறியாத தகவல்கள் - அரிய புகைப்படங்கள்

இந்துவா பொறந்தவன் கோயிலுக்கு போகலைனா தெய்வகுத்தம்னு சொல்றது போல பதிவெழுதுறவங்கன்னா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவா போடனும். கூடவே வாங்கின புத்தகங்களின் லிஸ்ட்டையும் விலையுடன் பகிரனும். இல்லைனா பிரபல(?) பதிவர்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.


ஆனா எல்லாப் பதிவர்களின் புத்தக கண்காட்சி பதிவையும் படித்துப் பார்த்தால் ஒரே டெம்ப்ளேட் தான். நானும் அதே போல் எழுவில்லையென்றால் ஆடையில்லாதவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்கிற மாதிரி என்னையும் ஒதுக்கிடுவாங்களோன்னு பயத்துல தான் இந்த பதிவு.

என்னடா தலைப்புல என்னன்னவோ விஷயங்கள் இருக்கிற மாதிரி இருக்கு, ஆனா பதிவுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லையேன்னு நினைக்கிறவங்க புத்திசாலிகள், வருங்காலத்தில் பிலாசபி பிரபாகரன் அளவுக்கு வம்பு வளர்க்கும் பதிவரா வளர வாய்ப்பிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு வீடுதிரும்பல் ப்ளாக்கை நினைவுபடுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.


தமிழ் டைப்பிங், பதிவை படிக்கிறது, பதிவை சுவைபட எழுதுவது போன்ற விஷயமெல்லாம் இரண்டு வருடத்திற்குள் தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே ஊறிய விஷயம். எனக்கு தெரிந்து 2002ம் ஆண்டிலிருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது.

அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.


இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகளில் எல்லாம் என்னுடைய அக்காமார்கள், மற்றும் தமிழாசிரியர்கள் எனக்கு நல்ல புத்தகம் என்று அறிமுகப்படுத்திய புத்தகங்களையெல்லாம் வாங்கி விட்டேன், பிறகு சிறந்த நாவலாசிரியர்கள் என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கியாகி விட்டது.

இந்த வருடம் வாங்குவதற்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் மற்றும் நண்பர் பாலகணேஷின் சரிதாயணம் மட்டும் வாங்கினால் போதும் பர்சை அவிழ்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் காஞ்சமாடு கம்புல புகுந்தது போல நிறையவே புத்தகங்களை வாங்கி விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சிகரமான தலைப்பு மட்டுமே.


கூடுதலாக இரண்டு சாப்ட்வேர் தமிழ்வழிக் கல்வி சிடிக்களை வாங்கினேன். போட்டோஷாப் மற்றும் வெப்டிசைனிங் தான் அவை. நேற்று போட்டோஷாப் சிடியை போட்டுப் பார்த்தேன், ஓரளவுக்கு புரிந்தது. இதை வைத்து இரண்டிலும் புகுந்து பார்த்து விட வேண்டியது தான்.

படித்து பார்த்தால் தான் இந்த புத்தகங்களின் தரம் புரியும். மீனாட்சி புத்தக நிலையத்தில் புகுந்து சுஜாதாவின் புத்தகங்களை கன்னாபின்னாவென்று வாங்கி விட்டேன், வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்த்தால் தான் தெரிகறது. ஏற்கனவே என்னிடம் இருந்த பல சுஜாதாவின் தொகுப்புகளில் இந்த நாவல்கள் இருக்கிறது என்று. எல்லாம் படித்த நாவல்கள்.

ராஜூ முருகனின் வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடராக இருந்தாலும் ஏற்கனவே எல்லா பகுதியையும் படித்து விட்டதால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது படித்ததெல்லாம் மறந்திருக்கும், அப்பொழுது வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு நாட்கள் பதிவுலக நண்பர்களோடு அளவளாவி கூத்தடித்தது நல்ல அனுபவம். நட்புகளை மேலும் நெருக்கமாக்கியது. நேற்று நானும் மெட்ராஸ் பவன் சிவாவும் சென்று பார்த்தால் ஒரு பதிவரையும் காணவில்லை. போரடிக்கவே அங்கிருந்து காமராஜர் அரங்கிற்கு கிரேசி மோகனின் கிரேசி கிஷ்கிந்தா நாடகத்திற்கு ஜூட் விட்டோம்.

பைக்கை எடுத்து வெளியில் வருவதே பெரும்பாடாகி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் போக்குவரத்து காவலர்கள் கார்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எப்படியும் ஆயிரம் கார்களுக்கு மேல் உள்ளே வரமுடியாமல் திரும்பி விட்டனர்.

நிர்வாகத்தினர் அடுத்த முறையாவது ஒழுங்கான இடத்தை தேர்வு செய்தால் வரும் மக்கள் நிம்மதியாக வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். போதும் ரொம்பவே பேசியாச்சு.

இனி பதிவர் மரபுப்படி நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன். அதில் சிறந்த புத்தங்களாக நான் நினைப்பதின் விமர்சனங்களை பகிர்கிறேன்.

தூக்கு கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி - விலை ரூ.200/-

மரப்பசு - தி.ஜானகிராமன் - விலை ரூ.100/-

வீடு கனவு இல்லத்துக்கான கைடு - தாஸ் - விலை ரூ.125/-

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன் - விலை ரூ.120/-

9/11 மாபெரும் சதியின் பின்னணி - பா.ராகவன் - விலை ரூ.150/-

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - விலை ரூ.250/-

வெளிச்சத்தின் நிறம் கருப்பு  மர்மங்களின் சரித்திரம் - முகில் - விலை ரூ.200/-

மோஸாட் இஸ்ரேலிய உளவுத்துறை - என்.சொக்கன் - விலை ரூ.110/-

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் - எஸ்.ராமக்கிருஷ்ணன் - விலை ரூ.225/-

அரவாணிகள் - மகாராசன் - விலை ரூ.210/-

சம்பிரதாயங்கள் சரியா - மஞ்சை.வசந்தன் - விலை ரூ.40/-

உடலினை உறுதி செய் - சி.சைலேந்திரபாபு - விலை ரூ.120/-

தோல் - டி.செல்வராஜ் - விலை ரூ.400/-

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - பா.ராகவன் - விலை ரூ.110/-

அமெரிக்க உளவுத்துறை FBI ரகசியங்கள் - என்.சொக்கன் - விலை ரூ.110/-

ISI நிழல் அரசின் நிஜ முகம் - பா.ராகவன் - விலை ரூ.120/-

கொலம்பிய போதை மாபியா - பா.ராகவன் - விலை ரூ.140/-

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - ராமன் ராஜா - விலை ரூ.220/-

தரணிகண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர் - எ.சங்கர்ராவ் - விலை ரூ.150/-

பாட்ஷாவும் நானும் சுரேஷ்கிருஷ்ணா - விலை - ரூ.125/-

போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

21ம் விளிம்பு - சுஜாதா - விலை ரூ.43/-

உயிராசை - சுஜாதா - விலை ரூ.22/-

24ரூபாய் தீவு - சுஜாதா - விலை ரூ.24/-

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - விலை ரூ.24/-

கமிஷனருக்கு கடிதம் - சுஜாதா - விலை ரூ.19/-

வடிவங்கள் - சுஜாதா - விலை ரூ.22/-

விபரீதக் கோட்பாடு - சுஜாதா - விலை ரூ.20/-

நீர்க்குமிழிகள் - சுஜாதா - விலை ரூ.11/-

ஓடாதே சுஜாதா - விலை - ரூ.24/-

சரிதாயணம் - பாலகணேஷ் - விலை ரூ.60/-

நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார் - விலை ரூ.15/-

கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார் - விலை ரூ.10/-

இது தான் மகாமகம் - தந்தை பெரியார் - விலை ரூ.3/-

புரோகிதர் ஆட்சி - கந்தையா பிள்ளை - விலை ரூ.12/-

யார் இந்த இராமன்? - அறிவரசன் - விலை ரூ.12/-

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள் - திக வெளியீடு - விலை ரூ.12/-

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் - விலை ரூ.15/-

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - திக வெளியீடு - விலை ரூ.10/-

சோதிட ஆராய்ச்சி - தந்தை பெரியார் - விலை ரூ.15/-

கடவளர் கதைகள் - சாமி - விலை ரூ.12/-

செயின்ட் கிட்ஸ் வழக்கும் பொது வாழ்க்கையும் - கி.வீரமணி - விலை ரூ.10/-

பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி -விலை ரூ.8/-

திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார் - விலை ரூ.5/-

ஆர்.எஸ்.எஸ் பற்றி - கி.வீரமணி - விலை ரூ.8/-

பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் - திக வெளியீடு - விலை ரூ.20/-

திருக்குர்ஆன் - திருக்குர்ஆன் அறக்கட்டளை - இலவசம்

அம்மா நீ வருவாயா - கவியாழி கண்ணதாசன் - இலவசம்


----------------------------

ஆரூர் மூனா செந்தில்
40 comments:

 1. பதிவு சுவை !
  உங்கள் பட்டியல்ஒரு புத்தக ஸ்டால்
  போலுள்ளதே !
  அடேங்கப்பா ! எப்ப படிக்கிறது ?
  ப்ளாக் படிக்கவே சரியா இருக்கே !

  ReplyDelete
  Replies
  1. எப்படியும் தினம் ஒரு புத்தகம் படித்து விடுவேன். நன்றி ஸ்ரவாணி

   Delete
 2. பெரியார் சுயமரியாதை பிரச்சார வெளியீடுகள் நிறைய வாங்கியிருக்கிறீர்கள் போலிருக்கு. மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி லக்கி. நாமே சுயமரியாதைக்காரர்கள் வழி வந்தவர்கள் தானே

   Delete
 3. இவ்வளவு புத்தகங்கள் வாங்கி விட்டீர்களா? புத்தக லிஸ்ட்படிக்கவே நீளமாக இருந்தது! புத்தகங்கள் எப்படி இருக்கும்! விரைவில் எதிர்பார்க்கிறேன் உங்கள் விமர்சனங்களை!

  ReplyDelete
 4. அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள்./////////////////////////
  இப்ப நிறைய பேரை தெரிவதால் ச.தே. டைப் புக் வாங்க முடியலையா...?மச்சி...!:-))

  ReplyDelete
  Replies
  1. மச்சி அதுதான் நிறையவே நெட்டில் கிடைக்கிறதே. தனியாக காசு கொடுத்து வேறு வாங்க வேண்டுமா என்ன.

   Delete
  2. ச.தே.டைப்பா?ஏதாவது டைப் அடிக்கும் வழிமுறை சொல்லும் புத்தகமா?

   Delete
  3. சரோஜா தேவி புத்தங்களை அறியாத அப்பாவியா நீங்கள்.

   Delete
 5. பிரமித்துப்போய் விட்டேன் செந்தில்!

  ReplyDelete
  Replies
  1. எதைப் பாத்துங்க, கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. இதுல ஏதோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரியே இருக்கே.

   Delete
 6. Wo, lot of books. Hope you read everything ;-)

  ReplyDelete
 7. எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல, வளைச்சு வளைச்சு புத்தகசந்தை பதிவாப்போட்டு வயிறெரிய விடுறாங்களே, அதுவும் புத்தகப்பட்டியல் வேற முடியலை அவ்வ்வ்!!!
  (ஹி..ஹி என்னால இம்முறை சந்தையை காண முடியாத சூழல் அதான்,பார்ப்போம் 23 வரைக்கும் இருக்கே)

  ReplyDelete
  Replies
  1. புத்தக கண்காட்சி பற்றிய பதிவு போடலைனா நம்மளை பிரபல பதிவர் இல்லைன்னு ஒதுக்கிடுவானுங்க போல. இன்னும் இரண்டு நாள் இருக்கே போய் வாங்கி ஜமாய்ங்க வவ்வால்.

   Delete
 8. உண்மை என்பதை 3 புத்தக பையை பார்த்து புரிந்துகொண்டென்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க நீங்க பார்த்த வரைக்கும் உள்ளது ரொம்ப கம்மிங்கோ, அதுக்கு மேல தூக்கிக்கிட்டு நடக்க முடியாது என்கிற நிலை வந்ததும் தான் பர்சேஸிங் முடிந்தது. ஜெய் கூட என் பையில் இரண்டை தூக்கி சுமந்தார்.

   Delete
 9. //போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

  வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-
  //

  அடக்கொடுமையே வெளியில் 120 ரூ விக்கிற சிபிடி சிடிலாம் 200 ரூக்கு சந்தையில விக்குறாங்களே,ஒரு வேளை ஸ்பெஷலா இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. அது என்ன விலை வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். எனக்கு எந்த சாப்ட்வேரும் தெரியாது. கத்துக்க ஒரு வாய்ப்பு. பார்த்த வரைக்கும் கொஞ்சம் சரக்கு உள்ள சிடி போலத்தான் தெரியுது வவ்வால்.

   Delete
 10. வாங்குன புக்கையெல்லாம் படிச்சு முடிக்கவே ஒரு வருசம் ஆகும் போலிருக்கே...

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க, அதிகபட்சம் இரண்டு மாசத்தில் படித்து விடுவேன்.

   Delete
 11. போடுறோம். நாளைக்கே போடுறோம். அறியாத தகவல்கள் தலைப்பில் Draft -லிருந்து எடுத்து இன்னொரு பதிவு போடுறோம் :)

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ மறுபடியுமா, தூங்குற சிங்கத்த தட்டி எழுப்பிட்டேனோ,

   சூதானமா இருடா சூனாபானா, என்னைச் சொன்னேன்.

   Delete
 12. செந்தில் சீக்கிரமா படிச்சி முடிங்கப்பா.....:-)))

  நான் என் பசங்களுக்கு வாங்கி வந்த புக் லிஸ்டை போட வேண்டியதுதான் :-))))

  இல்லைனா ஏற்கனவே வாங்கி வீட்டு செல்ஃப்ல இருக்கிற புக் லிஸ்டை போட்ரவேண்டியதுதான் :-)

  ReplyDelete
  Replies
  1. நீர் பிறக்கும் போதேபுத்திசாலியா இல்லை இடையில யாராவது செய்வினை செஞ்சிட்டாங்களா

   Delete
  2. கெம்பெனி ரகஸ்யம் வெளில சொல்லமுடியாது மக்கா :-)))

   Delete
  3. ஊருக்கே தெரிஞ்சிருக்கு இதுல ரகசியம் வேறயா. பட்டிக்ஸ் வெளங்கிடும்

   Delete
 13. \\அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.\\

  ஏங்க பதிவர்கள் மேல் என்ன கோபம்?:-))

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க ஒரு ப்ரைவசி இல்லாம போய்டுது. சைட்டு கூட அடிக்க முடியல. யாராவது பாத்துடுவாங்களோன்னு திருட்டுமுழி முழிக்க வேண்டியதா இருக்கு.

   Delete
 14. செந்தில்...! பு.கண்காட்சில பாத்தபோதே நீங்க வாங்கின புத்தகங்கள் பிரமிக்க வெச்சது. இப்போ நீங்க தந்திருக்கற லிஸ்டைப் பாத்தா... நான் கிளம்பினதுக்கப்புறமும் வேட்டையாடியிரு்க்கீங்க. உங்க படிக்கிற ஆர்வத்தை கைதட்டி வரவேற்று தோள்தட்டிப் பாராட்டறேன்- நீங்க நம்ம டைப்ங்கறதால. முகில் எழுதின ‘வெளிச்சத்தின் நிறம் கறுப்பு’ படியுங்க. ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு. இப்ப நான் படிச்சுட்டு வர்றேன். (உங்களை முந்தி புத்தக விமர்சனம் போட்டுருவேன்). சந்திச்சதுல மகிழ்ச்சி மற்றும் அடிக்கடி சந்திக்கணும்னு ஆசை.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக போடுங்க அண்ணே. நான் மற்ற புத்தகங்களை முடித்துவரலேட்டாகும். கண்டிப்பாக அடிக்கடி சந்திப்போம்ணா

   Delete
 15. புத்தக விமரிசனங்களுக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக போடுகிறேன் அம்மா.

   Delete
 16. //அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.//

  விதியாகப்பட்டது வலியது. அதை யாரும் மாத்த முடியாது ஓய்!!

  ReplyDelete
 17. ஆஹா இத்தனை புக்ஸ்ஸா??? இந்த முறை ஃபைனான்ஸ் கொஞ்சம் டைட்.அதுக்கென்ன கடனா உங்க கிட்ட (பணம் இல்லைங்க) புக்ஸ் வாங்கிட்டா போச்சு.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கென்னங்க கொடுத்துட்டா போச்சு.

   Delete
 18. வாழ்த்துக்கள! இன்னும் இரண்டுநாள் பாக்கி இருக்கே !

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அய்யா. பாக்கி புத்தகங்களை அடுத்த கண்காட்ஸியில் வாங்கிக்கலாம்னு இருக்கேன்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...