சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, February 25, 2013

வெக்கப்படாத வாலிபர் சங்கம்

அது ஒண்ணும் பெரிய சங்கதியில்லை. சாப்பிடுவதற்காக நாக்கை தொங்கப் போட்டு யார் வீட்டிலும் வெக்கப்படாமல் சாப்பிடுவோர் சங்கம் ஒன்று அமைத்து இருந்தால் அதற்கு நான் தான் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்திருப்பேன்.


படிக்கும் காலத்தில் இருந்தே சாப்பாடு ருசிக்கு ப்ரியனாக இருந்தேன். ருசிக்காக கடைகளில் சாப்பிடுவது குறைவாக இருக்கும். சாதாரண சாம்பாரில் கூட வீட்டுக்கு வீடு கைப்பக்குவம் மாறும். அதனாலேயே மதிய உணவுவேளைகளில் என்றுமே என் வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிட்டதே கிடையாது.

என் டிபன் பாக்ஸை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு நண்பர்களது டப்பாவை காலி செய்வதிலேயே குறியாக இருப்பேன். அதுவும் என் நண்பன் நஜிமுதீன் டப்பாவைத்தான் முக்கிய குறியாக வைப்பேன். ஏனெனில் மாதத்தில் முக்கால்வாசி நாள் அவன் பிரியாணி தான் கொண்டு வருவான்.

படிப்பதற்காக சென்னை வந்த பிறகு தேடல் இன்னும் அதிகமாகியது. ஏனென்றால் சென்னையில் நான் சொந்தமாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழல். அதுவரை எனக்கு சமையல் என்றால் என்னவென்றே தெரியாது. சுமாராக பெயருக்கு சமைத்து டப்பாவில் கொண்டு சென்று நண்பர்களுக்கு கொடுத்து விட்டு நான் அவர்களுடைய சாப்பாட்டை சாப்பிடுவேன்.


மிளகுத்தூள் தூக்கலாக போட்டு என் அம்மா வைக்கும் இட்லிசாம்பாருக்கு ஒரு சுவை இருக்கும். இட்லிகளை சாம்பாரில் போட்டு பிசைந்து காலி செய்து விட்டு கடைசியாக சாம்பாரை தட்டில் ஊற்றி குடிக்கும் அளவுக்கு பிரியன். அதே போல் என் அப்பாவின் நண்பரின் மனைவி வைக்கும் கல்யாண வீட்டு சாம்பார் என்றால் கூடுதலாக இரண்டு இட்லிக்களை உள்ளே தள்ளுவேன்.

அதே போல் என் மாமி சமைக்கும் உருளை மற்றும் காரட் போட்டு வைக்கும் இட்லிசாம்பாருக்கோ ருசி வேறு மாதிரி இருக்கும். யார் வீட்டுக்கு சாப்பிடும் நேரத்தில் போனாலும் யோசிக்கவே மாட்டேன். தட்டை வைத்து இரண்டு இட்லிக்களை சாப்பிட்டால் தான் மனசு நிறையும்.

வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணிபுரிந்த போது என்னிடம் தொழிலாளர்களாக பீகாரிகள் இருந்தனர். அவர்கள் வைக்கும் சப்பாத்திக்கும் டாலுக்கும் பொருத்தமோ பொருத்தம். என்னதான் நாம் முயற்சித்தாலும் அந்த சுவையை நம் வீட்டு ஆட்களால் கொண்டு வரவே முடியாது.


அது போல் கண்டெய்னர் லாரி ஓட்டுபவர்கள் லாரியிலேயே சொந்தமாக சமைத்து சாப்பிடுவார்கள். வித்தியாசமாக உப்புமா செய்து அதனுடன் வாழைப்பழத்தை தொட்டுக் கொண்டு சாப்பிடுவர். காலைநேரம் என்றால் முதல் பிளேட் உப்புமா நான் தான் சாப்பிடுவேன்.

ரைத்தா என்றால் அதுவரை வெறும் வெங்காயத்தை தயிரில் போட்டு சாப்பிடுவது தான் என்று நினைத்திருந்த நான் நண்பன் சந்தோஷ் வீட்டில் வெள்ளரி போட்டு ஒரு ரைத்தாவும் பீட்ரூட் போட்டு ஒரு ரைத்தாவும் சாப்பிட்ட போது ரைத்தாவில் வெரைட்டிகள் புரிந்தது.

மராட்டிய நண்பர்கள் எப்பொழுதும் சாப்பாடு சாப்பிடும் போது பச்சை மிளகாயின் நடுவே உப்பை வைத்து எண்ணெய்யில் பொறித்து சைட்டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதை பார்த்து நானும் ஒரு நாள் முயற்சித்தேன். கூடுதலாக இரண்டு கவளம் சாதம் உள்ளே சென்றது.


மிளகு பொங்கல் மிகவும் பிடிக்கும். அதுவரை முழு மிளகு போட்டு தான் பொங்கல் சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை நண்பன் தணிகா வீட்டில் மிளகை உரலில் லேசாக இடித்து போட்டு செய்த பொங்கலின் சுவை அமிர்தம். என்னா இன்னோவேட்டிவ்.

அம்மா இராலுடன் சுரைக்காய் போட்டு செய்யும் கூட்டு இட்லிக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். அதுபோல வாழைக்காயுடன் சுண்டைக்காய் போட்டு செய்யும் கூட்டு கூட இட்லிக்கு அருமையோ அருமை.

படிக்கும் போது தோழி பரிமளா அவர்கள் வீட்டில் இருந்து முள்ளங்கி சட்னி வைத்து எடுத்து வருவார். அதுவரை அப்படி ஒரு சட்னி கேள்விப்பட்டிராத நான் சாப்பிட்டுப் பார்த்ததும் நேரே சைக்கிள் எடுத்து அவங்க வீட்டுக்கு போய் பரிமளாவின் அம்மாவிடம் செய்முறை கேட்டு தெரிந்து வந்தேன்.

பிறகு என்ன என் கைவண்ணத்தில் அதே முறையில் கத்திரிக்காய் சட்னி, கேரட் சட்னி முட்டைகோஸ் சட்னி வரை செய்து பார்த்து விட்டேன். சில சட்னிகள் நன்றாக இருக்கும், பல சட்னிகள் கன்றாவியாக இருந்தது தான் நிஜம். என்னால் எங்கள் வீட்டில் உள்ளோரும் இந்த கொடுமையை அனுபவித்தனர்.

மீன் குழம்பு, இதற்கு வகைகளே சொல்ல முடியாது. ஒவ்வொருத்தரின் கைப்பக்குவத்திற்கும் ஒரு ருசி இருக்கும். புளி அதிகம் போட்டு செய்யும் தமிழ்நாட்டு மீன்குழம்புகள் ஒரு வகையாக இருந்தால் தேங்காய் அதிகம் போட்டு செய்யும் கேரள மீன் குழம்பு வேறொரு வகையாக இருக்கும். அதுவும் கப்பாவுடன் மீன் குழம்பு போட்டு சாப்பிடும் போது அதன் சுவை சொல்லவே முடியாது. ருசித்து பார்த்து முடிவு செய்யுங்கள்.

இவ்வளவு சாப்பாடு சொல்கிறேனே அவையனைத்தும் சமைக்கும் வீடுகளுக்கு சாப்பிடும் நேரத்தில் சென்றால் சாப்பிடு என்று யாரும் ஓரு வார்த்தை சொல்ல வேண்டியது இல்லை. நானே அமர்ந்து தட்டில் போட்டு சாப்பிட்டு விடுவேன். பிறகு நான் தான் வெக்கப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக முடியும். வேறு யாரப்பா, இருக்கிறார் இது போல் சாப்பிட.

இவையனைத்தும் உச்சம் ஐதராபாத்திற்கு சென்று பிரியாணி சாப்பிட்டது தான். அது 2003 ஆண்டு இருக்கும். நண்பன் எட்வினுடன் விமான நிலையம் அருகில் உள்ள கண்டோண்ட்மெண்ட் மைதானத்தில் சரக்கடித்துக் கொண்டு இருந்தோம். அதிகமாக சரக்கடித்த பிறகு நிதானம் தவறி உடனடியாக பிரியாணி சாப்பிட வேண்டும் அதுவும் ஐதராபாத் பிரியாணி தான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இருவரும் பைக்கை விமான நிலைய நிறுத்தத்தில் விட்டு விட்டு டெக்கான் விமானத்தில் டிக்கெட் எடுத்து ஐதராபாத் இரவு 11 மணிக்கு சென்று செகந்திராபாத்தில் பாரடைஸ் பிரியாணி கடையில் சாப்பிட்டு விடியற்காலை பார்சலுடன் சென்னை வந்து வேலைக்கு சென்றோம்.

இந்த செயலுக்கான பணத்தை கிரெடிட் கார்டிலிருந்து எடுத்து விட்டு பிறகு மாதா மாதம் அந்த பணத்தை கட்டுவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குத்தான் தெரியும். எல்லாம் ருசி படுத்தும் பாடு.

 
ஆரூர் மூனா செந்தில்

43 comments:

  1. சரக்கடித்தபின்பு விமானத்தில் சென்று பிரியாணி சாப்பிட்ட உங்கள் நாசுவையும் நகைசுவையும் அருமை.சேலம் எட்வின் அவர்களா?

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்ணா இனிமே தான் முயற்சிக்கனும்.

      Delete
  2. இருவரும் பைக்கை விமான நிலைய நிறுத்தத்தில் விட்டு விட்டு டெக்கான் விமானத்தில் டிக்கெட் எடுத்து ஐதராபாத் இரவு 11 மணிக்கு சென்று செகந்திராபாத்தில் பாரடைஸ் பிரியாணி கடையில் சாப்பிட்டு விடியற்காலை பார்சலுடன் சென்னை வந்து வேலைக்கு வந்தோம்.

    Super thalaivare

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோகரன்

      Delete
  3. ஒத்துக்கிடுறோம்! நீங்க பெரிய ஆளுதான் பாஸ்!
    ஒரு பிரியாணிக்கே பிளைட்டா?? இது ரொம்ப ஓவர்ல! :-)

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி, நன்றி ஜி.

      Delete
  4. வாழ்க தங்களது புகழ். வளர்க தங்களது வெப்சைட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை. என்னை மட்டும் விட்டு விடவும்.

    ReplyDelete
  5. சாப்பாட்டு இத்தனை மெனக்கெடலா? மலைப்பா இருக்கு செந்தில் சார்.. நானெல்லாம் ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிட்டுட்டா கிரவுண்டை சுத்தி எக்ஸ்ட்ரா ரெண்டு ரவுண்டு ஓடிட்டு இருப்பேன்... உங்களைப்பார்த்தாவது சந்தோஷப்பட்டுக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அதனால தான் நான் இப்படி இருக்கேன். நீங்க அப்படி இருக்கீங்க. நன்றி மணிகண்டவேல்.

      Delete
  6. நம்ம கிட்ட ஒரு சீக்ரட் சிக்கன் ரெசிபி இருக்கு ..
    சமைப்பது மிக சுலபம் சாப்பிடுவது அதை விட சுலபம் ..
    நேரில் பார்க்கும் போது சொல்கிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா கேட்டு வாங்கிக்கிறேன் செல்வின்.

      Delete
  7. பசியைக் கிளப்பீட்டீங்க பாஸ்! சுவையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  8. சுவையான / சூப்பரான / கம கம இடுகை செந்தில்! நம்ம வீட்டுக்கும் ஒருநாளைக்குச் சாப்பிட வாங்க :)

    ReplyDelete
    Replies
    1. சொல்லிட்டீங்கள்ல கரெக்ட்டா வந்துடுறேன்

      Delete
  9. அதெல்லாம் சரி... இனி மேல் உடம்பை கொஞ்சம் குறைப்பதிலும் கவனம் செலுத்தவும்....

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  10. பாதிக்கு மேல் படிக்கமுடியவில்லை :( வீட்டு நியாபகம் வந்துருச்சு :(

    நைட்டு சாப்பாடு முடிஞ்சதும் படிச்சுக்கறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நன்றி வருண்.

      Delete
  11. தல என்னையும் உங்க சங்கத்துல சேர்த்துகொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாத்தியார் நண்பரே. நீங்க தான் செயலாளர்.

      Delete
  12. எச்சில் ஊற வைத்து விடீர்கள். "ருசி படுத்தும் பாடு" இல்லை. கொழுப்பு!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.

      Delete
  13. ஹைதராபாத் போய் சாப்பிட்டதெல்லாம் டூ மச்... ரெண்டு பேருமே நிதானம் இல்லாமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா. இருந்தாலும் நான் பணிபுரிந்த கம்பெனியின் தலைமையகம் ஐதராபாத்தில் தான் இருந்தது. வாரம் ஒரு முறை சென்று வருவது வழக்கமாக இருந்தது. அதனால் தான் போதையிலும் கரெக்ட்டாக சென்றிருப்பேன் என நினைக்கிறேன்.

      Delete
  14. நான் கூட கோழிக்கோட்டில் வேலை செய்யும்போது மூணு பிரியாணியை மூச்சு விடாமல் சாப்பிடுவேன்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க கூட சங்கத்தில் உறுப்பினர் தான் போல.

      Delete
  15. //வெக்கப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக முடியும். வேறு யாரப்பா, இருக்கிறார் இது போல் சாப்பிட//
    செயளாளர் , பொருளாளர் பத்விக்கெல்லாம் ஆள் வேணுமா?

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவுக்கு நீங்களும் சாப்பாட்டுப் பிரியரா சேக்காளி, அப்படினா வாங்க உங்களுக்கும் ஒரு பொறுப்பு தரப்படும்.

      Delete
  16. Senthil , excellent article , 15 years back i moved to a small town in Iowa and was waiting to taste Indian food and found a Gujarati restaurant in Chicago (250 miles from my place). I drove to Chicago every other week end to taste the delicacies.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில், நீங்க கூட சங்கத்தில் உறுப்பினராகலாம்

      Delete
  17. "விமானத்தில் டிக்கெட் எடுத்து ஐதராபாத் இரவு 11 மணிக்கு சென்று செகந்திராபாத்தில் பாரடைஸ் பிரியாணி கடையில் சாப்பிட்டு விடியற்காலை பார்சலுடன் சென்னை வந்து வேலைக்கு சென்றோம். "

    இது TOO MUCH

    ReplyDelete
    Replies
    1. போதையில் அனைத்தும் சகஜமக்கா.

      Delete
  18. அடுத்த வாஞ்சூர் பதிவு எப்போது?
    இப்போ வாஞ்சூர் ரொம்பவே உளறிக்கொண்டு இருக்கின்றான்

    ReplyDelete
    Replies
    1. போதுமக்கா, எவ்வளவு தான் பொரட்டி எடுக்கிறது. எனக்கே போரடிக்கிறது.

      Delete
    2. நன்றி செழியன்

      Delete
  19. pasi ruci ariyadhu idhu palasu
    ruci panathin arumai ariyadhu

    ReplyDelete
    Replies
    1. அது புதுசு. நன்றி சேது.

      Delete
  20. படிக்கும்போதே எங்களுக்கும் பசிவந்திடும் போல :)

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி, நன்றி மாதேவி.

      Delete
  21. Hai sir very super nalla ezhuthuringa naan pdisisiturunththale ungalukku comment poda mudiyala. விஸ்வரூபம் (சிறுகதை) padissu pathu ethavathu sollunga sir please visit my blog "www.tamilviduthy.blogspot.in"

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்யபிரபு

      Delete
  22. சமைக்கிறது மட்டுமில்ல சாபிட்றதும் ஒரு கலைதான்னு அழகா சொல்லிட்டீங்க.சூப்பர்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...