சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, May 23, 2013

தேவதைகள் நிலைப்பதில்லை

தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்

வருடங்களும் செல்லச் செல்ல
தேஜஸ் கூடிய அவள் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே
நின்றிருந்தேன் தனிமரமாய்

காதலை சொல்லி விடும்
தைரியம் தான் வரவில்லை
வேகமாக மறுத்து விட்டாலோ
கோவிலுக்கு வராவிட்டாலோ
மீண்டும் காண வாய்ப்பில்லா

கணங்களை உழண்டு யோசித்து
மனதினிலே ஆசைகளை
புதைத்து வைத்து மரமானேன்
காலங்கள் சென்றிருந்த

நான் அறியா ஒரு தருணம்
மின்னும் வெளிச்சத்தில்
அரைகுறை ஆடையுடன்
நிற்கமுடியா நிறை போதையிலே

குலுக்கலாய் ஆடிக் கொண்டு
நின்றிருந்த என் அவளை
மீண்டும் கண்டதிர்ந்தேன்
நள்ளிரவு பப்பினிலே

கணினியைப் படித்து விட்டு
வேலையிலே சேர்ந்தினால்
பூர்வீகம் மறந்திடுமோ
நிலை அதுவும் மாறிடுமோ

சிறு கீற்றாய் திருநீறை
நெற்றியிலே அளவாய் இட்டு
தெருவிலே நடந்து வந்த
என் ஆசை தேவதையை

உரித்து வைத்து கோழிபோல
காண நேர்ந்ததினால் என்
வருத்தத்தை பகிர்கின்றேன் சபையினிலே
இது நியாயமா சொல்லுங்கள்
என் நட்பு நியாயமாரே

ஆரூர் மூனா செந்தில்

17 comments:

 1. kavitha aruma boss...seriousa nalla iruku neenga innum short film edukama irukeenga ?

  ReplyDelete
 2. திரைக்கதை தயாராகிக்கிட்டு இருக்கு, நான் தான் ஹீரோ ஹா ஹா ஹா

  ReplyDelete
 3. \\குலுக்கலாய் ஆடிக் கொண்டு
  நின்றிருந்த என் அவளை
  மீண்டும் கண்டதிர்ந்தேன்
  நள்ளிரவு பப்பினிலே//

  அதெல்லாம் அப்படிதான் பாஸ் கண்டுக்காதீங்க.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்ய பாஸூ, இத்தனை வருடமாகியும் நமக்கு பெருநகர வாழ்க்கை ஒத்து போக மாட்டேங்குதே.

   Delete
 4. இப்போது அதிகமாகி விட்டது கொடுமை...

  ReplyDelete
 5. மீண்டும் கண்டதிர்ந்தேன்
  நள்ளிரவு பப்பினிலே//
  முதிர்ச்சியான அதிர்ச்சி.கவிதை அருமை

  ReplyDelete
 6. ஹி ஹி காயம் பலம் போல!!

  ReplyDelete
 7. உங்களுக்குள் கவித் திறமையும் உண்டோ ! அருமை ..

  ReplyDelete
 8. எல்லாம் காலம் செய்த கோலம்.
  அட! இப்ப எல்லாம் கவிதையிலும் கலக்குறீங்க!

  ReplyDelete
 9. கிராமத்து குயில்கள் நகரத்து மயில்களாகி விட்டனவோ? எல்லாம் காலமாற்றம்தான்!

  ReplyDelete
 10. பார்ரா.. கவிதையெல்லாம் எழுதியிருக்குது பயபுள்ள...!

  ReplyDelete
 11. உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...