சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 3, 2013

கேரள மீன் சந்தையும் திருட்டு மீன் வறுவலும்

மீனைப் பார்த்து தான் மீனை வாங்கனும் இது தான் வீட்டில் சொல்லிக் கொடுத்தது. ஆனால் மீன் விற்கும் சேச்சியைப் பார்த்து தான் மீன் வாங்கினோம் கேரளாவில் இருந்தவரை. இது 2005ல் திருவனந்தபுரத்தில் இருந்த போது நடந்த விஷயம்.


அந்த புராஜெக்ட்டில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான். திருவனந்தபுரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் தான் இருந்தோம். நான் தான் நிர்வாக அதிகாரி என்பதால் அவர்களுக்காக மெஸ்ஸின் நிர்வாகம் என்னிடம் தான் இருந்தது. வாரம் இருமுறை அசைவம் என்பது நடைமுறை.

அதுவும் முதலில் சமையற்காரராக இருந்த ஒரு வயதான மலையாளி பிரமாதமாக கேரள உணவுகளை சமைத்துக் கொடுத்து அசத்திக் கொண்டு இருந்தார். நான் அது வரை மீன் வறுவல் என்பது தோசைக்கல்லில் போட்டு பிரட்டி எடுத்தே சாப்பிட்டு வந்தேன். அவரோ பக்குவமாக நெய்மீனை எண்ணெய்யில் பொறித்து கொடுத்தால் நான் மட்டுமே அதிகமான அளவு பொறித்த மீனைத் தின்பேன். சரக்கும் உண்டு என்பது கூடுதல் சுவாரஸ்யம்.


அங்கு சென்ற புதிதில் ஆபீஸ் அசிஸ்டெண்ட்களிடம் மீன் வாங்க பணம் கொடுத்து அனுப்பிவிடுவேன். சில வாரங்களில் மீன் வாங்க செல்வதற்கு அடிதடியே நடந்தது. என்னடா விஷயம் என்று விசாரித்தால் மீன்சந்தையில் விற்கும் கேரளபெண்கள் பழைய சினிமாவில் பார்ப்பது போல் லுங்கியும் ஜாக்கெட்டும் மேலே துண்டு மட்டும் அணிந்திருப்பார்கள் என்று தெரிய வந்தது. நம்மூர் போல் ஆண்களும் சந்தைக்கு விற்க வரமாட்டார்கள். விற்பனை முழுவதும் பெண்கள் வசம் தான்.

அதற்கு தான் பசங்க மாலை வேளைகளில் மீன் சந்தைக்கு செல்ல அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிந்ததும் நானும் கோதாவில் இறங்கினேன். இன்று தப்பு என்று தோன்றினாலும் 24 வயதில் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது.


புதனன்றும் சனியன்றும் மாலையானால் ஒரு ஜீப்பில் ஆறு பேர் மீன் வாங்கச் செல்வோம். நியாயமாகப் பார்த்தால் டிரைவரை மட்டும் ஜீப்பில் அனுப்பினால் போதும் மீன் வாங்க. சபலம் யாரை விட்டது. அது போன்ற கேரளத்து சேச்சிகளை பார்ப்பதற்காகவே ஜீப் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

சில வாரங்களில் நாங்கள் ஒரு கம்பெனியில் பணிபுரிபவர்கள் என்றும் வாரம் இரண்டு முறை 20 கிலோவுக்கு மேல் மீன் வாங்க வருகிறோம் என்று தெரிந்தவுடன் எங்கள் ஜீப்பிற்கு மீன்சந்தையில் வரவேற்பு அதிகமானது.


உள்ளே நுழையும் போதே ஒவ்வொருவனையும் ஒரு சேச்சி வரு வரு என்று வரவேற்று கடைக்கு அழைத்து செல்வார். அந்த கடையில் உள்ள மீனை ஒருத்தனும் பார்க்க மாட்டான். முடிந்த வரை வழிந்து பேசி விலையை விசாரித்து விட்டு பிறகு என்னிடம் வருவார்கள். நானும் ஒரு கடையில் சேச்சியுடன் ஜொள்ளு விட்டு விலையை விசாரித்துக் கொண்டு இருப்பார்கள்.

பிறகு ஒரு கடையில் வாங்கிச் சென்றால் மற்ற கடையில் உள்ள சேச்சிகள் எல்லாம் சாபம் விட்டு திட்டுவார்கள். பொழுது நன்றாக போனதால் சிரித்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மற்றொரு நாளில் மீண்டும் வரவேற்பும் திட்டும் கிடைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு பிரச்சனையில் கேரள சமையற்காரர் வேலையை விட்டு நின்று விடவே ஊரிலிருந்து கருணாநிதி என்ற சமையற்காரரை அழைத்து வந்தேன். அவர் ஏற்கனவே வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் துணை சமையற்காரராக இருந்தவர். பயங்கர ஜொள்ளு பார்ட்டி. 45 வயதாகியும் அவருக்கு திருமணமாகவில்லை.

வந்த புதிதில் ஒழுங்காக சமைத்துக் கொண்டிருந்த கருணா நாங்கள் மீன் வாங்க போய் ஜொள்ளு விட்டு வரும் மேட்டரை தெரிந்து கொண்டு நானும் வருவேன் என அடம் பிடிக்க ஆரம்பித்தார். சரி போனால் போகிறது என்று அழைத்துச் செல்ல ஆரம்பித்தோம்.

கொஞ்ச நாட்களிலேயே ஒரு மீன் விற்கும் பெண்மணியை கரெக்ட் செய்து விட்டார். நாங்கள் போய் வாங்கி வந்த காலம் போய் அந்த பெண்மணியே சரியாக மீன் வாங்கும் நாட்களில் எங்கள் மெஸ்ஸிற்கு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.

ஜொள்ளு விட முடியாதது சற்று வருத்தமாக இருந்தாலும் ஒரு வேலை குறைந்தது சற்று ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஆப்பு வைப்பது போல் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு ஞாயிறு அன்று நாள் அலுவலகத்தின் பின்புறமுற்ற மிளகு தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். ஒரு ஒதுக்குப்புறத்தில் சத்தம் வரவே நாங்கள் சத்தம் போடாமல் சென்று பார்த்தால் கருணா அந்த மீன்கார பெண்மணியை மடியில் அமர வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தார். (அந்த சம்பவத்தை இதை விட கெளரவமாக எழுத முடியாது).

அவரு அந்த பெண்மணியை என்ன செய்தாலும் நாங்கள் அப்படியே விட்டு இருப்போம். அந்தாளு ஜொள்ளு பார்ட்டின்னு முன்னமே தெரியும். ஆனால் கடுமையான கோவம் வந்ததற்கு காரணம் அவர்களின் அருகில் ஒரு தட்டு முழுக்க மீன் வறுவல் இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமையென்பதால் நாங்கள் போதையில் இருந்தோம். அவரை அப்படியே எழுப்பி செவுட்டிலேயே நாலு விட்டு அந்த பெண்மணியை துரத்தி விட்டோம். அதன் பிறகு ஒரு மாதம் வரை எங்கள் மெஸ்ஸில் சிக்கனும் மட்டனுமே அசைவமாக இருந்தது.

ஆரூர் மூனா செந்தில்

19 comments:

  1. இன்றைய நடைமுறை இருமுறை மட்டும் சைவமா...? ஆக மீன் மட்டும் அன்று சாப்பிடவில்லை...!? ஹிஹி...

    ReplyDelete
  2. இப்போதே கேரளா சென்று மீன் வாங்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வரும்போது எனக்கு ஒரு ப்ளேட் நெய்மீன் வறுவல் பார்சல்.

      Delete
  3. செவுட்டில் அறை விட்டதெல்லாம் ஓவர். Don't you think it is none of your business? பொறாமை யாரை விட்டது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அவரு அந்த பெண்மணியை என்ன செய்திருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் நன்கு பசித்து சாப்பிட வேண்டும் என்பதற்காக 3 மணிவரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். அவரோ எங்களுக்கு முன்பாகவே ஒரு தட்டு நிறைய மீன் வறுவலை எடுத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தார். அது தான் கோவத்தை வர வழைத்தது.

      நாங்க எல்லாம் மீன் வறுவலுக்காக தானே உயிர் வாழுறோம்.

      Delete
    2. சரி சரி பூசி மெழுக வேண்டாம்.

      Delete
    3. அய்யய்யோ நம்புங்க, நான் அந்த சமயம் வேறொரு பெண்ணை சைட் அடித்துக் கொண்டு இருந்தேன். தூண்டி விட்டு பழசெல்லாம் கிளறி விடுவீங்க போல இருக்கே.

      Delete
    4. மேல சொல்லுங்கப்பு... அப்டிலாம் விட முடியாது

      Delete
    5. அய்யய்யோ நம்புங்க, நான் அந்த சமயம் வேறொரு பெண்ணை சைட் அடித்துக் கொண்டு இருந்தேன். தூண்டி விட்டு பழசெல்லாம் கிளறி விடுவீங்க போல இருக்கே.

      Delete
    6. என்னது சொன்னதையே சொல்லிக்கிட்டு, சின்ன புள்ள தனமா

      Delete
    7. அவ்வளவு தான் அப்பு, இதுக்கு மேல வார்த்தையை விட்டால் பிறகு எனக்கு வில்லங்கமாகி விடும்.

      Delete
    8. வீட்ல தங்கமணிக்கு இவ்ளோ பயமா.. நீங்க வெளிய பெரிய புலின்னு தெரியும்.. ஆனா வீட்ல சின்ன .... நு தெரியாது... என்னத்த சொல்ல

      Delete
    9. இத வெளிய சொல்ல எனக்கு என்ன வெக்கம். எனக்கான தேவைகளை செய்து தருகிறாள். கூடவே கொஞ்சம் மொத்தவும் செய்கிறாள். அவ்வளவு தானே. அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. வாழ்க்கை சந்தோஷமா இருக்கு பாஸூ.

      Delete
    10. ரொம்ப சந்தோசம் அப்டி தான் இருக்கணும்.. என்னத்த கொண்டு போக போறோம். வாழ்த்துக்கள் பாஸு.

      Delete
  4. மீன் வறுவல் மேல அவ்வளவு உசிரா????????முடியலயே சாரே

    ReplyDelete
    Replies
    1. பின்ன இதுல கூடவா சந்தேகம்

      Delete
  5. yours way of writing super... am regularly read your articles.... nice and awesome tooo

    ReplyDelete
  6. முயற்சிக்கிறேன் நன்றி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...