சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

முதலிலேயே முடிவு செய்து விட்டு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட சீரியஸான காட்சிகள் அமைக்கக்கூடாது என, அதே போல் மருந்துக்கு கூட சீரியஸான காட்சிகள் இல்லை. பொண்ணு ஊரை விட்டு ஓடிப்போகும் போதும், காதலி ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் போதும் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொண்டு அடுத்த காட்சிக்கு கடந்து போகிறார்கள்.


படத்தின் கதை இதுதான். ஊரின் பெரிய மனுசன் பொண்ணை வேலையில்லாமல் பொறுக்கிக் கொண்டு இருக்கும் வாலிபன் காதலிக்கிறான். பொண்ணு வீட்டில் எதிர்ப்பு உருவாகி வேறொரு பையனுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாள் நாயகனும் நாயகியும் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள். பிறகு என்னவாகிறது என்பதே கதை.

எனக்கு தெரிந்து இதே கதையம்சத்துடன் இது வரை 9999 படங்கள் வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு காரணம் படத்தின் திரைக்கதை தான். துணிந்தே படத்தை எடுத்துள்ளார்கள்.


படத்தில் கதை நடக்கும் களம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பக்கத்தில் உள்ள சிலுக்குவார்பட்டி. கூடவே குலதெய்வம் பேரும், எல்லோருக்கும் பாண்டி என்று முடியும் படி பெயர் வைத்திருப்பதும் படத்தின் பின்நவீனத்துவம்.

சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு காலை 9 மணிக்காட்சி திரையிட்டது தான். படத்தில் ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான நகைச்சுவை நாயகனாக வந்து செல்கிறார். இந்த படம் அவரது மார்க்கெட்டை மேலே எல்லாம் தூக்கி விடாது. அதுபோல் கீழேயும் இறக்கி விடாது. வழக்கம் போலவே நன்றாக காமெடி செய்கிறார். நடனமாடுகிறார். சுமாராக நடிப்பும் வருகிறது.


நாயகியாக ஸ்ரீதிவ்யா லதாபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் எந்த பெண்ணுக்காவது லதாபாண்டி என்று பெயர் வைத்தால் எல்லோரும் கூப்பிடும் போது லதா என்று தான் கூப்பிடுவார்கள். இந்த படத்தில் தான் நாயகியின் அம்மா கூட லதாபாண்டி லதாபாண்டி என்று கூப்பிடுகிறார்.

பள்ளிசெல்லும் நாயகி வேடத்திற்கு நிஜமாக பொருந்துகிறார். நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் இது போன்ற பெண்ணை பார்த்திருந்தால் சைட் அடித்திருக்கலாம் என்று ஏங்க வைத்த இயல்பான அழகு.


சத்யராஜ் படத்தின் ஆகச்சிறந்த(?) பலம். ஊர் பெரிய மனுசனாக படம் முழுக்க மீசையை முறுக்கி விட்டு திரிகிறார். கெளரவமே பெரிது என வாழும் கேரக்டர். க்ளைமாக்ஸில் அசத்தியிருக்கிறார்.

சூரி படத்திற்கு படம் முன்னேறி வருகிறார். படம் முழுக்கவே நாயகனுடன் வரும் பாத்திரம். நன்றாக செய்துள்ளார். பல காட்சிகளில் வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறார்.


படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று பாடல்கள். எல்லாப் பாடல்களும் ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட்டானால் பார்க்கவும் ரசிக்கவும் வைக்கிறது. சூப்பர் இமான்.

ஹீரோயினுக்கு காதல் வருவது காமெடியாக இருக்கிறது. மைனர் ஹீரோயினின் கல்யாணத்தை போலீஸில் சொல்லி நாயகன் நிறுத்தி விடுகிறாராம். அவளுக்கு நாயகன் மேல் காதல் வந்து விடுகிறதாம்.

பிந்து மாதவி ஒரு காட்சியில் வந்து போகிறார். நாயகியின் அம்மாவுக்கு நாயகனை மகள் காதலிப்பது பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் வீட்டு மாடு கிணற்றில் விழுந்தும் நாயகன் காப்பாற்றுகிறார். நாயகியின் அம்மா நாயகனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். அடப்போங்கப்பா. 

எல்லா ஊர்களிலும் அந்த வயதில் ஒரு சங்கம் வைத்துக் கொண்டு இருக்கும் வாலிபப் பசங்களை பார்த்து இருக்கலாம். ஊர் பெரிய மனிதர்களிடம் எப்போதும் முறுக்கிக் கொண்டு திரிவதும் எந்த விழாவானாலும் அதற்கு பந்தாவாக போஸ்டர் அடிப்பதும் இன்றும் தமிழ்நாடு கிராமங்களில் நடந்து வரும் விஷயம் தான். அதனை இயல்பு மீறாமல் காட்டியுள்ளனர்.

பெரிய மனுசனுக்கு நாலு அல்லக்கைகள் இருப்பதும் அவர்கள் எப்போதும் அவரை ஏத்தி விட்டு திரிவதும் அதனால் அவர் விரும்பி கூட பொண்ணுக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைக்க முடியாமல் போதும் ரசிக்க வைக்கிறது.

எதிர்நீச்சல் அளவுக்கு அதிரிபுதிரி ஹிட்டும் இல்லாமல் மனம்கொத்தி பறவை போல் சுமாரும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் ஒரு மீடியம் ஆவரேஜ் ஹிட் படம் இது. லாஜிக்குகளை பார்க்காமல் மனம் விட்டு சிரித்து வரும் படியான ஒரு படம் இது. பார்த்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்

21 comments:

  1. செம பாஸ்ட் விமர்சனம் ஆனா மூனா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்

      Delete
  2. அதுக்குள்ளவா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்‌ப்ரஸ்

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி மகேஷ்

      Delete
  4. ஆனா மூனா அவர்களே...! நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  5. விமர்சனம் நன்று !!... படம் பார்த்த கதை எங்கே ???

    ReplyDelete
    Replies
    1. மாலையில் போட்டு விடுகிறேன்.

      Delete
  6. //நாயகியாக ஸ்ரீவித்யா //

    குருஜி, கரெக்க்ஷனுக்கு மன்னிக்கவும். நாயகி ஸ்ரீவித்யா அல்ல,ஸ்ரீதிவ்யா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி, இப்போ மாற்றி விடுகிறேன்

      Delete
  7. //படம் பார்த்த கதை எங்கே ???//\

    ஆமா, குருஜி, சிவகார்த்திகேயன் வழக்கம்போல் நடித்துவிட்டார். நீங்க மட்டும் ஏன் வழக்கமான திரைப்படம் பார்த்த கதை விட்டுவிட்டீர்?

    ReplyDelete
    Replies
    1. தனி பதிவாக இன்று மாலை வெளியிடுகிறேன்

      Delete
  8. "மனம்விட்டு சிரித்து மகிழ " நன்றி. பார்த்து ரசிக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  9. super fast review thank you boss !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம்ராம்

      Delete
  10. சுடச்சுட நல்ல விமரிசனம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா.

      Delete
  11. எதுக்கு விமர்சனம் எல்லாம் எழுதுறீங்க... பணம் போட்டு படம் பார்க்குறவங்க பார்த்துட்டுப் போறாங்க... உங்களுக்கு யாரையாவது கலாய்க்கனும்னா நாட்டுல நடக்குற அராஜகங்கள கண்டியுங்க..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...