சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, January 29, 2012

ப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்சனம்



நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.

சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.

சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.

இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.

அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.

இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.

இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.

ஆரூர் முனா செந்தில்

14 comments:

  1. விமர்சனம் நன்றாக இருக்கிறது. நன்றி.

    கடைசியாக ஏன் வீடியோ கேம் படம் ஒன்று போட்டிருக்கீங்க? படத்திலிருந்து ஒரு காட்சி போடலாமே?

    ReplyDelete
  2. Ada.....
    Unmaithan...senthil....
    S.L.----war....movie yaga
    nam thamizharin
    parvai-yel
    edukka vendum....

    ReplyDelete
  3. /// ஹாலிவுட்ரசிகன் said...

    விமர்சனம் நன்றாக இருக்கிறது. நன்றி.

    கடைசியாக ஏன் வீடியோ கேம் படம் ஒன்று போட்டிருக்கீங்க? படத்திலிருந்து ஒரு காட்சி போடலாமே? ///

    நன்றி ஹாலிவுட் ரசிகன், அந்த புகைப்படத்தை நீக்கி விட்டேன்.

    ReplyDelete
  4. /// NAAI-NAKKS said...

    Ada.....
    Unmaithan...senthil....
    S.L.----war....movie yaga
    nam thamizharin
    parvai-yel
    edukka vendum.... ///

    ஆமாம் தலைவரே.

    ReplyDelete
  5. வித்தியாசமான பார்வை....போரின் வலியை நமக்கு நன்கு உணர்த்தும் படம் இது....ஏதோ நாமே போர் நடக்கும் இடத்தில இருப்பது போன்று இருக்கும்...... நானும் இந்த படத்தை எனது பார்வையில் எழுதி உள்ளேன்.....நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...
    http://hollywoodraj.blogspot.com/2011/11/black-hawk-down-2001.html

    ReplyDelete
  6. /// ராஜ் said...

    வித்தியாசமான பார்வை....போரின் வலியை நமக்கு நன்கு உணர்த்தும் படம் இது....ஏதோ நாமே போர் நடக்கும் இடத்தில இருப்பது போன்று இருக்கும்...... நானும் இந்த படத்தை எனது பார்வையில் எழுதி உள்ளேன்.....நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...
    http://hollywoodraj.blogspot.com/2011/11/black-hawk-down-2001.html///

    நன்றி ராஜ். இப்பொழுது தான் உங்களது விமர்சனத்தை படித்தேன், அருமை.

    ReplyDelete
  7. போர் படங்களின் மீது பெரிய அபிப்ராயம் உண்டு எனக்கு.இது சேவிங் பிரைவட் ராயன் படம் பார்த்ததிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.ஒரு அருமையான சிறந்த போர் படத்தின் விமர்சனத்தை அழகாக அனைவரும் புரிந்துக்கொள்ளும் படி ஏகுவாக வழங்கியுள்ளீகள்.நன்றிகள் பல.

    இது போன்ற கதையம்சங்கள், இரண்டாம் உலக போரில் பாதிக்கப்பட்ட யூதர்கள் பற்றிய படங்கள் பார்க்கும் போதெல்லாம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலமையே நெஞ்சில் வரும்..கண்டிப்பாக ஒரு படமாவது இதை பற்றிய உண்மையை சொல்லி வர வேண்டும் சகோ.

    ReplyDelete
  8. enna una blog keela vilakku eriyudhu??

    ReplyDelete
  9. /// Kumaran said...

    போர் படங்களின் மீது பெரிய அபிப்ராயம் உண்டு எனக்கு.இது சேவிங் பிரைவட் ராயன் படம் பார்த்ததிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.ஒரு அருமையான சிறந்த போர் படத்தின் விமர்சனத்தை அழகாக அனைவரும் புரிந்துக்கொள்ளும் படி ஏகுவாக வழங்கியுள்ளீகள்.நன்றிகள் பல.

    இது போன்ற கதையம்சங்கள், இரண்டாம் உலக போரில் பாதிக்கப்பட்ட யூதர்கள் பற்றிய படங்கள் பார்க்கும் போதெல்லாம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலமையே நெஞ்சில் வரும்..கண்டிப்பாக ஒரு படமாவது இதை பற்றிய உண்மையை சொல்லி வர வேண்டும் சகோ. ///

    கண்டிப்பாக சகா

    ReplyDelete
  10. /// ! சிவகுமார் ! said...

    enna una blog keela vilakku eriyudhu?? ///

    இருண்டு கிடக்குற உலகத்துல என்னால ஏத்த முடிஞ்சது ஒரு விளக்குதான் சிவா. ரொம்ப நெஞ்ச நக்கிட்டேனோ# டவுட்டு

    ReplyDelete
  11. பிளாக் ஹாக் டாண் தாக்குதலானது ஒசாமா பின்லேடனின் தாக்குதலில் ஒன்றே என்று பா.ராகவன் எழுதிய "அல்கொய்தா" நூலில் தெரிவித்திருந்தார்.

    ReplyDelete
  12. ஈழத்தமிழர்களின் மீது குண்டு வீசிய சிங்கள விமான தளத்தினை தாக்கிய தமிழ்ப்போராளிகளின் உண்மைப்போராட்டத்தை "எல்லாளன்" திரைப்படத்தில் நீங்கள் காணலாம்.

    ReplyDelete
  13. இந்த நிகழ்வு வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒன்று. ஒசாமா பின் லாடன் தனது வீடியோவில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வு, அமெரிக்காவின் 'பலம் வாய்ந்த ஒரு நாடு' என்ற இமேஜை குலைத்த ஒரு நிகழ்வு..

    படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...