சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, January 31, 2012

ஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பகுதி 1


தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 ஆண்டு காலம் நீடித்தது. ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், `திகில்' சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரை கொடூரமான முறையில் படு கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். அப்பொழுதே இந்த வழக்கு மிகப்பரபரப்பாக பேசப்பட்டதால் தற்போதைய காலக்கட்டத்தில் மறந்தவர்களுக்கு நினைவூட்டும் தொகுப்பு.

வழக்கின் விவரங்களை தொகுத்து கொடுத்துள்ளேன். ஐந்து பகுதி வரும் என்று நினைக்கிறேன். சென்னை திருவான்மியூரில் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்பட்டான். சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மியூர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஓட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன் மிகவும் தீவிரமாக ஈடுபட்டான்.

திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் (லாட்ஜ்) சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தை கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு வந்து விபசாரம் நடத்தினான். சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான். பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் "ஏர்கண்டிஷன்" வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளை செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.

இந்த நவீன பங்களாவுக்கு கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர் விபசார விருந்து படைப்பான். ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசார தொழிலில் இறங்கியதால் அவனுக்கு பல காதலிகள் இருந்தார்கள். அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.

இப்படி பெங்களூரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளை தனது 4வது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்பவனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனை சிக்கலில் மாட்டி விட்டன.


ஆரூர் மூனா செந்தில்

(தொடரும் ...)

5 comments:

 1. தொடருகிரேன் மாப்ளே!

  ReplyDelete
 2. இவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன்..

  ReplyDelete
 3. /// விக்கியுலகம் said...

  தொடருகிரேன் மாப்ளே! ///

  தொடருவதற்கு நன்றி மாமா.

  ReplyDelete
 4. /// சேகர் said...

  இவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.. ///

  ஆமாம் சேகர் அனைத்து விவரங்களும் கட்டுரையில் வருகிறது.

  ReplyDelete
 5. விறுவிறுப்பாக செல்கிறது ! தொடருங்கள் ! நன்றி !

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...