சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, March 27, 2012

கிராமத்து பொண்ணு அம்பிகாவிடம் வாங்கிய பல்பு

புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் எனது பெரியம்மா வீடு இருந்தது. நான் கோடை விடுமுறையில் வருடம் தவறாமல் அங்கு செல்வேன். என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டில் முத்துவீறு என்ற நண்பன் இருந்தான். நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலரா கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது, வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம்.

அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை கால திருவிழாக்களில் நடைபெறும் கரகாட்டம் ஏக பிரசித்தம். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கரகாட்டத்தில் காபரேவுக்கு இணையான காட்சிகள் நடைபெறும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். நானும் முத்துவீறுவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். என் பெரியம்மாவிடம் திருவிழாவுக்கு சென்று மறுநாள் காலை வருவதாக கூறி செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்.

அந்த ஊர் திருவிழாவில் நடைபெற்ற கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். அடிக்கடி என்னையே ஜாடையாக அவள் பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை கரெக்ட்டு செய்யலாம் என்று மெல்லிய குரலில் சிக்னல் அனுப்பினேன். அந்த பக்கம் இருந்தும் சிக்னல் வந்தது. நமக்கு அதுதான் முதல் முறையென்பதால் தயங்கி கொண்டே அவள் பின் சென்று மிக மெல்லிய குரலில் "உன் பெயர் என்ன" என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள்.

முத்துவீறுவு இதையெல்லாம் பார்த்தவுடன் பயம் ஏற்பட்டது. என்னிடம் வந்து "வாடா நாம் வீட்டிற்கு செல்வோம்" என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். "இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ" என்றேன். முத்துவீறு சபலப்பட்டான். கூடவே பயமும் அவனுக்கு இருந்தது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது, கையால் சைகை செய்வது, இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.

கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று முடிவு செய்து அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினாள். முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினேன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். நான் அவளை பின் தொடர்ந்தேன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டேன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தேன்.

ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் . அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையேறி ஓடிவிட்டாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உஷாராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த இடம் நோக்கி நகர்ந்தேன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் ஒதுங்கும் போது உள்ளிருந்து ஒருவன் கையைப் பிடித்து இழுத்ததாக அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.

அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குள்ளேயே முட்டிப்போட்டு செல்ல ஆரம்பித்தோம். முத்துவீறு அழுது கொண்டே வந்தான். விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை அருகில் வந்திருந்தோம். பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம். இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .

அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீறு, அதேபோல் திருவிழா, ஆனால் வேறொரு ஊர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். "என்னடா முத்துவீறு ரெடியா" என்று கேட்டு திரும்பிப் பார்த்தேன். அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இது ஒரு மீள்பதிவு.

24 comments:

  1. நீங்க எழுதற கதை கிளுகிளுப்பாவே இருக்கே, நீங்க விவரமான ஆளு தான்.

    ReplyDelete
  2. அண்ணா முட்டி ரொம்ப தேஞ்சிடுச்சோ # டவுட்டு

    ReplyDelete
  3. செந்தில் சார்,நல்ல அனுபவம்,
    எனக்கும் இதுபோல் அனுபவம் நிரைய உண்டு சார்.

    உண்மை விரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  4. /// மயில்வாகனா said...

    நீங்க எழுதற கதை கிளுகிளுப்பாவே இருக்கே, நீங்க விவரமான ஆளு தான். ///

    ஹி ஹி ஹி நன்றி மயில்வாகனா

    ReplyDelete
  5. /// தஞ்சை குமணன் said...

    அண்ணா முட்டி ரொம்ப தேஞ்சிடுச்சோ # டவுட்டு ///

    மருந்து தேய்க்க தயாரா இருக்கிற மாதிரியே கேள்வி கேக்குறியேப்பா.

    ReplyDelete
  6. /// எனது கவிதைகள்... said...

    செந்தில் சார்,நல்ல அனுபவம்,
    எனக்கும் இதுபோல் அனுபவம் நிரைய உண்டு சார்.

    உண்மை விரும்பி.
    மும்பை. ///

    அந்த அனுபவங்களை பகிரலாமே.

    ReplyDelete
  7. சார் நான் கறம்பக்குடிதான் நீங்க சொன்னது போலவே முத்துக்கருப்பையா கோவில் திருவிழா ரொம்ப விஷேசம்தான். நீங்க சொன்ன கதை கிளுகிளுப்போட ஆர்வமாகவும் இருந்துச்சி வாழ்த்துக்கள்.
    அப்படியே டைம் கிடைச்சா என்னுடைய ப்ளாக் வந்துட்டு ஏதாவது சொல்லிட்டு போங்க. நன்றி சார்.

    ReplyDelete
  8. /// தமிழ்விடுதி சத்யபிரபு said...

    சார் நான் கறம்பக்குடிதான் நீங்க சொன்னது போலவே முத்துக்கருப்பையா கோவில் திருவிழா ரொம்ப விஷேசம்தான். நீங்க சொன்ன கதை கிளுகிளுப்போட ஆர்வமாகவும் இருந்துச்சி வாழ்த்துக்கள்.
    அப்படியே டைம் கிடைச்சா என்னுடைய ப்ளாக் வந்துட்டு ஏதாவது சொல்லிட்டு போங்க. நன்றி சார். ///

    நன்றி சத்யபிரபு. கண்டிப்பாக உங்கள் வலைத்தளத்தை பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. அடங்கப்பா...அது எப்படிய்யா மூஞ்சிய மட்டும் பச்சப்புள்ள கணக்கா மெயின்டைன் பண்ற ராசா!

    ReplyDelete
  10. /// விக்கியுலகம் said...

    அடங்கப்பா...அது எப்படிய்யா மூஞ்சிய மட்டும் பச்சப்புள்ள கணக்கா மெயின்டைன் பண்ற ராசா! ///

    ஹி ஹி ஹி போங்க மாமா, எனக்கு வெக்க வெக்கமா வருது.

    ReplyDelete
  11. ஆஹா...தீராத விளையாட்டு பிள்ளை...போல...உங்க அனுபவம் ரொம்ப கிளு..கிளு ன்னு இருக்கு....

    ReplyDelete
  12. /// Kovai Neram said...

    ஆஹா...தீராத விளையாட்டு பிள்ளை...போல...உங்க அனுபவம் ரொம்ப கிளு..கிளு ன்னு இருக்கு.... ///

    அதில்லை ஜீவா, நம்முடையது எல்லாமே முயற்சித்தது தான், ஒன்னு கூடு சக்சஸ் ஆகலையே. அதைப் பத்தி வருத்தப்பட்டா தனி பதிவே போடணும்.

    ReplyDelete
  13. அவள் பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது...........
    /////////////////////////////////////////////
    அது இப்போ வரைக்கும் அப்படியே தான் இருக்கு .........

    ReplyDelete
  14. /// அஞ்சா சிங்கம் said...

    அவள் பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது...........
    /////////////////////////////////////////////
    அது இப்போ வரைக்கும் அப்படியே தான் இருக்கு ......... ///

    காலையில் இருக்கையில் இருந்து எழுந்து என் மண்டையை உத்துப் பார்த்தப்பவே நினைச்சேன் சிங்கம்.

    ReplyDelete
  15. Very very thanks sir. I am very happy for ur comment. Because i got the first comment from u

    ReplyDelete
  16. /// தமிழ்விடுதி சத்யபிரபு said...

    Very very thanks sir. I am very happy for ur comment. Because i got the first comment from u ///

    பரவாயில்லைப்பா, உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காமல் கேளு, நான் சொன்னபடி உனது வலைத்தளத்தை மாற்றியமை.

    ReplyDelete
  17. ஏனுங், அம்பி உங்களையே நெனச்சி சாப்டாம தூங்காம காத்துக்கெடக்குரா,
    ஒரு எட்டு வந்து பாத்துட்டு போறது;

    ReplyDelete
  18. /// விஸ்வநாத் said...

    ஏனுங், அம்பி உங்களையே நெனச்சி சாப்டாம தூங்காம காத்துக்கெடக்குரா,
    ஒரு எட்டு வந்து பாத்துட்டு போறது; ///

    ஏனுங் விஸ்வநாத் , ஒரு முறை முட்டி தேஞ்சு அனுபவப்பட்டது போதாதா?

    ReplyDelete
  19. யப்பா கண்ணதாசன் மாதிரி மப்புல இருந்தே எழுதுவீங்களோ அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  20. ////அடிக்கடி என்னையே ஜாடையாக அவள் பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது.////

    அப்படியா?

    ReplyDelete
  21. /// MANO நாஞ்சில் மனோ said...

    யப்பா கண்ணதாசன் மாதிரி மப்புல இருந்தே எழுதுவீங்களோ அவ்வ்வ்வ்...
    ///

    எனுங்க மனோ, எழுத்து போதையாயிருந்தா எழுதினவனும் போதையிலுமா இருப்பான். யோசிங்க.

    ReplyDelete
  22. />/ வீடு K.S.சுரேஸ்குமார் said...

    ////அடிக்கடி என்னையே ஜாடையாக அவள் பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது.////

    அப்படியா? />/

    அட ஆமாங்க, தலைய தொட்டுப் பார்த்தேன்ல.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...