சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, April 9, 2012

அப்பா....

எனக்கு தெரிந்து சிறு வயதிலிருந்தே என் அப்பாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருந்தது. எந்த குளிருக்கும் ஸவெட்டர் போட்டுக் கொள்ள மாட்டார். சிறு காய்ச்சலோ, ஜலதோஷமோ வராது. எனக்கு சிறு வயதில் இருந்தே என் அப்பாவைப் போல் எந்த உடல் நலக்குறைவையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டுமென்று முயற்சி கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட அன்றைய என் அப்பா,

சிறுவயதில் நான்காம் வகுப்பு படிக்கும் போது என்னை ஆசிரியர் அடித்ததால் தழும்பாகி விட்டது. என்னைக் குளிப்பாட்டும் போது அதனை பார்த்து விட்டு உடனடியாக வந்து ஆசிரியரை மிரட்டிய என் அப்பா,

நான் பதின்வயதில் ஒரு சினிமாவுக்கு பொய் சொல்லி விட்டு சென்று விட்டேன். ஆனால் நேரமாகி வீட்டுக்கு வராததால் நேராக பள்ளிக்கு சென்று என் வகுப்பு ஆசிரியரை "நீ தான் என் பையனை எங்கோ உன் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளாய், இன்னொரு முறை அனுப்பினால் உன்னை தொலைத்து விடுவேன்" என்று மிரட்டிய என் அப்பா,

பட்டயப்படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் நான் சுற்றிக் கொண்டிருந்த போது என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடிவந்த ரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளரை அணுகி எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து என் எதிர்காலத்தையே மாற்றிய என் அப்பா,

நான் ஒரு பெண்ணை காதலிப்பதை தெரிந்து கொண்டதும் என் தம்பியிடம் "அவன் வாழ்க்கையில் சம்பாதித்து விட்டு பொறுப்பானவனாக மாறிய பிறகு தான் காதலித்துள்ளான், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளட்டும்" என்று பொண்ணை பார்க்காமலே என் திருமணத்திற்கு சம்மதித்த என் அப்பா,

நான் வேலையை விட்டு விட்டு சொந்த நிறுவனம் தொடங்கி மிகப்பெரிய அளவுக்கு சரிவு ஏற்பட்டு சென்னையில் இருக்க முடியாத அளவுக்கு மனமொடிந்த நிலையில் இருக்கும் போது என்னை திருவாரூருக்கு அழைத்து சென்று மீட்டெடுத்த என் அப்பா,

இன்று என் அப்பா,

என் தம்பியின் திருமணத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த என் அப்பாவுக்கு மலத்தில் ரத்தம் கலந்து போக ஆரம்பித்தது. உடல்சூடு அதிகமாகி இருக்கும் என்று உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தார். ஆனாலும் ரத்தம் வருவது நிற்கவேயில்லை. பிறகு திருவாரூரில் உள் ஒரு மருத்துவரிடம் காட்டிய போது அவர் மருந்துகள் எழுதிக் கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட பிறகு ரத்தம் வருவது நின்று போனது, ஆனால் வயிறு உப்ப ஆரம்பித்தது.

உடனடியாக திருவாரூரில் ஸ்கேன் செய்து பார்த்த போது மலக்குடலில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தஞ்சாவூரில் உள்ள ரோகிணி மருத்துவமனையில் பயாப்ஸி டெஸ்ட் எடுத்தோம். ரிசல்ட் வர ஒரு வார தாமதமாகும் என்றும் தஞ்சையில் உள்ள சுடர் மருத்துவமனையில் மருத்துவரை அணுகினால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி விடலாம் என மருத்துவமனையில் தெரிவித்ததால் உடனடியாக அங்கு அட்மிட் செய்து ஆபரேசன் மூலம் கட்டியை தொடாமல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மலக்குடலை வெட்டி எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தெரிவித்ததால் ஆபரேசனுக்கு நாள் குறிக்கப்பட்டது.

அது போல் அவர்கள் குறிப்பிட்ட தினத்தில் ஆபரேசன் துவங்கியது. என் அப்பாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் அது போக ஏகப்பட்ட ஒன்று விட்ட சகோதரிகள், சகோதரர்கள் என மருத்துவமனையில் ஆபரேசன் தியேட்டருக்கு எதிராக கூட்டம் கூடியது. ஆனால் நாங்கள் சாதாரண ஆபரேசன் என்று நினைத்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். மூன்று மணிநேரம் கழித்து சர்ஜன் எங்களை உள்ளே அழைத்தார். வெட்டி எடுக்கப்பட்ட குடல்பகுதியை காண்பித்து அதில் உள்ளது கேன்சர் கட்டி என்றார். அவ்வளவு தான். அந்த இடமே வேறு மாதிரியாக மாறி விட்டது. குடும்பத்தினர் அழ ஆரம்பித்தனர். அப்பா ஐசியுவில் நினைவில்லாமல் ஒரு நாள் முழுக்க இருந்தார்.

என்ன தான் பகுத்தறிவுவாதி என்றாலும், எவ்வளவோ ஆத்திகர்களுக்கு எதிராக சொற்போர் நடத்தியிருந்தாலும், கடவுள் ஒன்று இருந்தால் என் அப்பாவை காப்பாற்றட்டும் என்று வேண்டும் அளவுக்கு என் மனநிலை மாறியது. நானும் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தேன். அது வரை என் தம்பியிடம் பல மனஸ்தாபங்களால் பேசாமல் இருந்த நான் என் அப்பா தான் முக்கியம் என்று அவனிடமும் பேச ஆரம்பித்தேன்.

நேற்று முன்தினம் பயாப்ஸி ரிப்போர்ட் வந்தது. அதில் அவர் சொல்லியிருந்தது போல் தான் இருந்தது. டாக்டர் ரிப்போர்ட்டை பார்த்து விட்டு என் அப்பாவுக்கு கேன்சர் கட்டியை முற்றிலுமாக நீக்கியாகி விட்டது. வேண்டுமென்றால் கீமோதெரபி எடுத்துக் கொள்ளலாம் என்றார். இன்னும் குறைந்தது 10 நாட்களாவது அவர் மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்றார்.

ஐந்து நாட்கள் ஐசியு வில் வைத்திருந்து நேற்று தான் தனி ரூமுக்கு என் அப்பாவை மாற்றினர். நான் வெளியில் சென்றிருந்ததால் அவர் கூப்பிடும் போது நான் இல்லை என்பதால் வந்ததும் திட்ட ஆரம்பித்தார். என் மனம் மகிழ ஆரம்பித்தது. பழைய கோவம் இன்னும் கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் பலமாக திட்டவும் முடிந்தால் என்னை அடிக்கவுமாவது என் அப்பா உடல்நலம் தேறி வரவேண்டும். அவர் கையால் எத்தனை அடி வேண்டுமானாலும் வாங்க கண்ணீருடன் காத்திருக்கும்,

ஆரூர் மூனா செந்தில்

45 comments:

  1. அப்பா விரைவில் நன்கு குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்..செந்தில்!

    ReplyDelete
  2. எல்லாம் நல்ல படியாக நடக்கும் செந்தில்....

    கவலை வேண்டாம்....

    ReplyDelete
  3. கவலை வேண்டாம் பாஸ்! அப்பா விரைவில் குணமடைவார்!

    ReplyDelete
  4. /// வீடு சுரேஸ்குமார் said...

    அப்பா விரைவில் நன்கு குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்..செந்தில்! ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  5. /// NAAI-NAKKS said...

    எல்லாம் நல்ல படியாக நடக்கும் செந்தில்....

    கவலை வேண்டாம்.... ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி நக்கீரன்.

    ReplyDelete
  6. /// ஜீ... said...

    கவலை வேண்டாம் பாஸ்! அப்பா விரைவில் குணமடைவார்! ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி ஜி.

    ReplyDelete
  7. செந்தில்: நல்ல நேரத்தில் கண்டுபிடித்து கட்டியை அகற்றி விட்டார்கள். அப்பா உங்கள் அனைவரோடும் நீண்ட நாள் இருக்க பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  8. நல்லதே நடக்குமென நம்புவோம் செந்தில்.

    ReplyDelete
  9. /// மோகன் குமார் said...

    செந்தில்: நல்ல நேரத்தில் கண்டுபிடித்து கட்டியை அகற்றி விட்டார்கள். அப்பா உங்கள் அனைவரோடும் நீண்ட நாள் இருக்க பிரார்த்திக்கிறேன் ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி அண்ணே.

    ReplyDelete
  10. /// ! சிவகுமார் ! said...

    நல்லதே நடக்குமென நம்புவோம் செந்தில். ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  11. ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு. அப்பா பற்றி கொஞ்சம் பேரு தான் எழுதுறாங்க.

    ReplyDelete
  12. தந்தையை நன்றாக கவனித்து, பார்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  13. ALL IS WELL THEY FOUND THE TUMOR ON RIGHT TIME I PRAY FOR YOUR FATHER GET WELL SOON

    ReplyDelete
  14. மனதை நெகிழவைக்கிறது உங்கள் பதிவு. மீண்டும்அப்பா உடல் நலம் தேறி உங்கள திட்டவும் அடிக்கவும் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  15. நல்லதே நடக்கும்...

    ReplyDelete
  16. தந்தையின் நோய் கொடுமை எப்படி இருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் .. கண்டிப்பாக உங்கள் தந்தை புரண நலம் பெற்று வருவார்கள் .. கடவுள் இருக்கின்றார் நண்பா

    ReplyDelete
  17. /// கோவி.கண்ணன் said...

    ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு. அப்பா பற்றி கொஞ்சம் பேரு தான் எழுதுறாங்க. ///


    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன்.

    ReplyDelete
  18. /// surya said...

    தந்தையை நன்றாக கவனித்து, பார்த்துக்கொள்ளுங்கள் ///


    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி surya

    ReplyDelete
  19. /// mohamed salim said...

    ALL IS WELL THEY FOUND THE TUMOR ON RIGHT TIME I PRAY FOR YOUR FATHER GET WELL SOON ///

    thanku for your comment salim

    ReplyDelete
  20. /// ரஹீம் கஸாலி said...

    மனதை நெகிழவைக்கிறது உங்கள் பதிவு. மீண்டும்அப்பா உடல் நலம் தேறி உங்கள திட்டவும் அடிக்கவும் பிரார்த்தனைகள். ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி ரஹீம் கஸாலி.

    ReplyDelete
  21. /// சங்கவி said...

    நல்லதே நடக்கும்... ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி சங்கவி

    ReplyDelete
  22. /// மௌனகுரு said...

    He will be alright soon don't worry. ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி மௌனகுரு.

    ReplyDelete
  23. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...

    தந்தையின் நோய் கொடுமை எப்படி இருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் .. கண்டிப்பாக உங்கள் தந்தை புரண நலம் பெற்று வருவார்கள் .. கடவுள் இருக்கின்றார் நண்பா ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி ராஜா.

    ReplyDelete
  24. தங்கள் அப்பா ,நலம்பெற்று நீடூடிவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !

    ReplyDelete
  25. அப்பா எல்லா நலனும் பெற்று நல்லபடியாக வீடு திரும்புவார் செந்தில்.. உங்களுக்கு கடவுள் பக்தி இருக்கோ இல்லையோ, என்னைப்போன்ற ஆட்களுக்கு நிறைய இருக்கு.. நம்மை மீறி இயங்கும் ஏதோ ஒரு சக்திக்கு இயற்கை என பெயர் வைப்பதும், இறைவன் என பெயர் வைப்பதும் ஒன்றுதான்..நான் வணங்கும் என் இறைவனிடம் நிச்சயம் அப்பாவிற்காக ஒரு பிராத்தனை செய்கிறேன்.. எந்தக்கவலையும் வேண்டாம் செந்தில்.. அப்பா நல்லபடியாக வருவார்.

    ReplyDelete
  26. தங்களின் அப்பா உடல் நிலை நலம்பெற்று நீடுழிவாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன்....

    ReplyDelete
  27. /// Nesan said...

    தங்கள் அப்பா ,நலம்பெற்று நீடூடிவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ! ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி Nesan

    ReplyDelete
  28. /// கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

    அப்பா எல்லா நலனும் பெற்று நல்லபடியாக வீடு திரும்புவார் செந்தில்.. உங்களுக்கு கடவுள் பக்தி இருக்கோ இல்லையோ, என்னைப்போன்ற ஆட்களுக்கு நிறைய இருக்கு.. நம்மை மீறி இயங்கும் ஏதோ ஒரு சக்திக்கு இயற்கை என பெயர் வைப்பதும், இறைவன் என பெயர் வைப்பதும் ஒன்றுதான்..நான் வணங்கும் என் இறைவனிடம் நிச்சயம் அப்பாவிற்காக ஒரு பிராத்தனை செய்கிறேன்.. எந்தக்கவலையும் வேண்டாம் செந்தில்.. அப்பா நல்லபடியாக வருவார். ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி மணிகண்டவேல்

    ReplyDelete
  29. /// eniyavan said...

    தங்களின் அப்பா உடல் நிலை நலம்பெற்று நீடுழிவாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.... ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி eniyavan.

    ReplyDelete
  30. உங்கள் தந்தையார் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  31. /// ஹாலிவுட்ரசிகன் said...

    உங்கள் தந்தையார் குணமடைய பிரார்த்திக்கிறேன். ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி ஹாலிவுட்ரசிகன்.

    ReplyDelete
  32. May god cure his disease and ease his struggle.

    ReplyDelete
  33. இதை face book மூலமே அறிவேன். இதுவே இறுதி சோதணையாக இருக்க இறைவனை பிராதிகிறேன். இனி நல்லதே நடக்கும் அண்ணா

    ReplyDelete
  34. கட்டியை சரியான நேரத்தில் அகற்றிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
    டாக்டர்களின் ஆலோசனைப் படி தேவைப் பட்டால் கீமோ தெரபி தொடரவும். எல்லாம் நல்ல படியா நடக்கும்.
    ஐயப்பன் துணையிருப்பான், நான் வேண்டிக்கொள்கிறேன். நான் வேண்டியவற்றை கொடுத்தவன் உங்களுக்கும் கொடுப்பான். சபரி மலை போய் வாருங்கள்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  35. நல்லதே நடக்கும் நண்பரே ! கவலைப்பட வேண்டாம் ! விரைவில் நன்கு குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் !

    ReplyDelete
  36. ஒவ்வொருவருக்கும் தன் முதல் கதாநாயகன் அப்பா தான். இறைவன் என்று ஒருவன் இருந்தால் என்று யோசிக்க வேண்டாம் அப்பாவின் மீது நாம் வைத்துள்ள அன்பே அவரை நலமடையச் செய்யும். இருந்தும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. kandippa seekkirame veetukku vanthu ungalai nalla adippanga , kavalai padatheenga sir

    ReplyDelete
  38. /// Pebble said...

    May god cure his disease and ease his struggle. ///


    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி Pebble

    ReplyDelete
  39. /// மணிவண்ணன் said...

    இதை face book மூலமே அறிவேன். இதுவே இறுதி சோதணையாக இருக்க இறைவனை பிராதிகிறேன். இனி நல்லதே நடக்கும் அண்ணா ///

    கண்டிப்பாக மணி. திருவாரூர் வந்தால் வீட்டுக்கு வந்து அப்பாவை பார்த்து விட்டு செல்லவும்.

    ReplyDelete
  40. /// sriram said...

    கட்டியை சரியான நேரத்தில் அகற்றிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
    டாக்டர்களின் ஆலோசனைப் படி தேவைப் பட்டால் கீமோ தெரபி தொடரவும். எல்லாம் நல்ல படியா நடக்கும்.
    ஐயப்பன் துணையிருப்பான், நான் வேண்டிக்கொள்கிறேன். நான் வேண்டியவற்றை கொடுத்தவன் உங்களுக்கும் கொடுப்பான். சபரி மலை போய் வாருங்கள் ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி sriram.

    ReplyDelete
  41. /// திண்டுக்கல் தனபாலன் said...

    நல்லதே நடக்கும் நண்பரே ! கவலைப்பட வேண்டாம் ! விரைவில் நன்கு குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் ! ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  42. /// seenuguru said...

    ஒவ்வொருவருக்கும் தன் முதல் கதாநாயகன் அப்பா தான். இறைவன் என்று ஒருவன் இருந்தால் என்று யோசிக்க வேண்டாம் அப்பாவின் மீது நாம் வைத்துள்ள அன்பே அவரை நலமடையச் செய்யும். இருந்தும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிய வாழ்த்துக்கள் ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி seenuguru

    ReplyDelete
  43. /// selvasankar said...

    kandippa seekkirame veetukku vanthu ungalai nalla adippanga , kavalai padatheenga sir ///

    தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி selvasankar.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...