சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - சினிமா விமர்சனம்

திருவாரூரில் அதுவும் முன்னணி ஹீரோ இல்லா ஒரு படத்தில் இவ்வளவு கூட்டமா என வியந்து போனேன். ஆச்சரியம் தான். நண்பன் படத்துக்கே 35 பேர் மட்டுமே வந்த சிறுநகரம் இது. ஆனால் வந்த கூட்டம் அனைத்தும் சந்தானம் மற்றும் இயக்குனர் ராஜேஷூக்காக என்பது மட்டும் உண்மை. திமுக நகர செயலாளர் தியேட்டர் வாசலில் நின்று அனைவருக்கும் ஜாங்கரி கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த தலைவர் திமுகவில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கு.

படம் எப்படி இருக்கு. சிறப்பான நடிப்பு, மிகச்சிறந்த கதை, ஆக்சன், செண்டிமெண்ட் இல்லாமல் வழக்கம் போல இயக்குனர் ராஜேஷின் படம் இது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கற பாஸ்கரன் போன்ற அதே டைப் காமெடி படம் இது. ஆனால் நமக்கு அலுக்கவேயில்லை.

படத்தி்ன் கதை என்ன? நாயகன் உதயநிதி ஹன்சிகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பிறகு ஹன்சிகாவும் காதலித்து எப்படி இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் படம். இந்த மாதிரி படத்துல கதை இவ்வளவு தான் இருக்கும். ஆனால் சொன்ன விதத்தில் வழக்கம் போல அசத்துகிறார்.

உதயநிதி, ஆதவன் படத்தில் கடைசி காட்சியில் வந்து டயலாக் பேசும் போது எனக்கு பயமாயிருந்தது. இவர் படத்தில் ஹீரோவாக நடித்தால் பார்க்க சகிக்காது என்றே நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் சற்று முன்னேறியிருக்கிறார். டயலாக் பேசினால் உதடு அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால் நடிப்பு, போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இந்தப்படம் ஜாலியானபடம் என்பதால் நடிக்க சிரமப்படாமல் உணர்ச்சிகளை காட்டாமல் நகைச்சுவையிலேயே அசத்தி விடுகிறார். ஒரு சில இடங்களில் மட்டும் நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என்பது தெரிகிறார்.

ஹன்சிகா பொம்மை போல் இருக்கிறார். ப்ராம்ட்டில் வசனம் பேசுகிறார். படத்திலேயே சொல்லி விடுகிறார்கள். பார்ப்பதற்கு குஷ்பு போல இருக்கிறார் என்று, நான் என்ன சொல்ல. மற்ற படங்கள் போல சில காட்சிகளில் தலை காட்டுவது இல்லாமல் நிறைய காட்சிகளில் வருகிறார்.

சந்தானம் படத்தின் நிஜ ஹீரோ. ராஜேஷின் முதல் இரு படங்கள் போல இதிலும் படம் முழுக்க வருகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. இதில் அய்யர் பையனாக வந்து சில இடங்களில் கோவத்தை கட்டுப்படுத்த காயத்ரி மந்திரம் சொல்லும் போது தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ். தனியாளாக படத்தினை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார். சினேகாவும் ஆண்ட்ரியாவும் அவ்வாறே வந்து செல்கின்றனர். சினேகா ஆண்ட்டியாகி விட்டார் என்பது தெரிகிறது.

பாடல்கள் ஏற்கனவே சின்னத்திரை விளம்பரத்தில் வந்து ஹிட்டாகி விட்டதால் சொல்வதற்கு ஒன்னுமில்லை. ஆனால் வேணாம் மச்சான் வேணா என் பாடல் வந்தவுடன் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடுகிறது. அதுவும் "கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா" என்ற வரிக்கு கூடுதல் அப்ளாஸ்.

சரண்யா வழக்கம் போல இன்னோசன்ட் அம்மாவாக வருகிறார். உதயநிதி மற்றும் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியிலும் அசத்துகிறார். அழகம் பெருமாளுடன் சிறு செண்ட்டிமெண்ட்டிலும் சூப்பர்.

படம் எப்படி என்று சொல்ல வேண்டியதெல்லாம் இல்லை. ஏன், எதற்கு என்று யோசிக்காமல் நான் சிறந்த விமர்சகன் என்று நோண்டாமல் சென்றால் பார்த்து சிரித்து குடும்பத்துடன் மகிழ அருமையான படம். பார்த்து சிரித்து ரசியுங்கள்.

இன்னும் நிறைய சொல்லலாம், ஆனால் நீங்கள் கண்டிப்பாக இந்தப்படத்தை தியேட்டரில் சென்று தான் ரசிக்க வேண்டும், இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு படம்.

நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே பார்ப்பேன்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் பின்னூட்டத்திற்கு பதில் நாளை தருகிறேன். நன்றி.


14 comments:

  1. // : நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் பின்னூட்டத்திற்கு பதில் நாளை தருகிறேன். நன்றி.//

    பொறுப்பான ஆளுப்பா. ஆன்லைனில் 40 பேர் உங்களோட இந்த விமர்சனம் இந்த நிமிஷம் படிச்சிட்டு இருக்காங்க வாழ்த்துக்கள் செந்தில்

    ReplyDelete
  2. திருவாரூர் தைலம்மை தியேட்டர் இன்னும் இருக்கா? உங்க ஊரில் படம் பார்த்ததில்லை. ஆனா தைலம்மை தியேட்டர் போஸ்டர் எங்க ஊர் வரை ஒட்டுவாங்க

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். நானும் கண்டிப்பாக பார்ப்பேன் தியட்ரில்

    ReplyDelete
  4. //நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே பார்ப்பேன்.//

    இன்பநிதிக்கு கொண்டாட்டம்தான்!!

    ReplyDelete
  5. ஏனுங்க,,,விமர்சனத்தை எப்போதும் முன்னதா தருவீங்க,,என்னாச்சு..??
    சினேகா ஆண்டி ஆனது இப்போ தான் தெரியுதா உங்களுக்கு?...

    ReplyDelete
  6. கிளை மன்றங்கள் தொடங்க அனுகவும்...என்று போஸ்டர்ல போட்டிருக்காங்க....அப்ப அடுத்த தளபதி இவரா?

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம் ! படம் பார்த்து விட்டு சொல்கிறேன் !

    ReplyDelete
  8. /// மோகன் குமார் said...

    பொறுப்பான ஆளுப்பா. ஆன்லைனில் 40 பேர் உங்களோட இந்த விமர்சனம் இந்த நிமிஷம் படிச்சிட்டு இருக்காங்க வாழ்த்துக்கள் செந்தில் ///

    மிக்க நன்றிண்ணே, நமது எழுத்தெல்லாம் மற்றவர்களை ஒப்பிடும் போது சிறந்ததல்ல என்று எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பு தான் நமக்கு ஊக்கம்.

    ReplyDelete
  9. /// மோகன் குமார் said...

    திருவாரூர் தைலம்மை தியேட்டர் இன்னும் இருக்கா? உங்க ஊரில் படம் பார்த்ததில்லை. ஆனா தைலம்மை தியேட்டர் போஸ்டர் எங்க ஊர் வரை ஒட்டுவாங்க ///

    தைலம்மை இன்னும் இருக்குண்ணே, சோழா மற்றும் நடேஷூம் இருக்கின்றன. பேபி மற்றும் செங்கம் தியேட்டர்களை தான் மூடி விட்டார்கள்.

    ReplyDelete
  10. /// seenuguru said...

    அருமையான விமர்சனம். நானும் கண்டிப்பாக பார்ப்பேன் தியட்ரில் ///

    கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான் இது . பாருங்கள் சீனுகுரு.

    ReplyDelete
  11. /// ! சிவகுமார் ! said...

    //நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே பார்ப்பேன்.//

    இன்பநிதிக்கு கொண்டாட்டம்தான்!! ///

    என்ன சிவா, மொட்டையா கொண்டாட்டம்னுட்டீங்க, வருமானம்னு சொல்லுங்க.

    ReplyDelete
  12. /// கோவை நேரம் said...

    ஏனுங்க,,,விமர்சனத்தை எப்போதும் முன்னதா தருவீங்க,,என்னாச்சு..??
    சினேகா ஆண்டி ஆனது இப்போ தான் தெரியுதா உங்களுக்கு?... ///

    இப்பொ நான் சென்னையில் இல்லைங்க ஜீவா. சொந்த அலுவல் காரணமாக திருவாரூரில் இருக்கின்றேன். இங்கு காட்சி நேரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

    சினேகா இது வரை திரையில் மேக்கப் போட்டு மறைத்து இருந்தார். இந்தப்படத்தில் மேக்கப் போட்டும் அப்பட்டமாக தெரிகிறது.

    ReplyDelete
  13. /// வீடு சுரேஸ்குமார் said...

    கிளை மன்றங்கள் தொடங்க அனுகவும்...என்று போஸ்டர்ல போட்டிருக்காங்க....அப்ப அடுத்த தளபதி இவரா? ///

    என்னங்க குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குறீங்க. அப்பா தளபதினா புள்ளதானுங்களே, குட்டி தளபதி.

    ReplyDelete
  14. /// திண்டுக்கல் தனபாலன் said...

    நல்ல விமர்சனம் ! படம் பார்த்து விட்டு சொல்கிறேன் ! ///

    தங்களின் கருத்துக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...