சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 28, 2012

தாண்டவம் - சினிமா விமர்சனம்

இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ராக்கியில் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சி போட்டிருந்தார்கள். நானும் போக நினைத்தேன். வேலை காரணமாக போக முடியவில்லை. ஆனால் வேலைக்கு போகும் போது பார்த்தால் கூட்டம் பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தது. சரி 11.30 காட்சிக்காவது போகலாம் என்று நினைத்திருந்தேன். வேலையை முடித்து கிளம்பிக் கொண்டு இருக்கும் போது சக ஊழியர் கண்ணை சிமிட்டினார்.

படமா சரக்கா என்று பட்டி மன்றம் நடந்ததில் அடுத்த காட்சிக்கு கூட போகலாம் என்று படத்தை ஒத்தி வைத்து பாருக்கு கிளம்பி வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு 3 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் எடுக்க வந்தால் மொத்தமே 50 பேர் தான் இருந்தார்கள். நான் அப்போதே உசாராகியிருக்க வேண்டும். போதை சற்று கண்ணை மறைத்ததால் தடுமாறி விட்டேன். படம் பார்த்து விட்டு வெளியில் வந்தால் தக்காளி தலைவலி தான் மிச்சம். வீட்டுக்கு போய் வீட்டம்மாகிட்ட திட்டு வாங்கி்ட்டு தூங்கியிருந்தா கூட நல்லாயிருந்திருக்கு்ம் என்ற ஞானம் படம் முடிந்த பின்பே வந்தது.

உலகசினிமாவின் காப்பியாக இருந்தாலும் நான் முன்பே பார்க்காததால் தெய்வத்திருமகள் பிடித்திருந்தது. இந்த படம் எந்த ஒரு புதுமையும் இல்லாமல் சப்பென்று வந்தது தான் கொடுமையாகி விட்டது. அரதப்பழசான கதையை லண்டன், கண்பார்வையற்றவர் என்று கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். மனைவியை கொலை செய்த வில்லன்களை துவம்சம் செய்யும் அதே பழைய குரோதம் டைப் கதை தான்.

வழக்கம் போல் விக்ரம் நடிப்பு அருமை. கண்ணில்லாத ஒருவன் செய்யும் அனைத்து செயல்களையும் அதே இயல்புடன் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் தான். ஒரு சண்டையில் வில்லன்கள் சட்டையை கிழித்து உடம்பை காட்டும் காட்சியில் என்னை மறந்து விசிலடித்தேன். சில சமயங்களில் கழுத்துப் பகுதியில் தோல் தளர்ந்து வயதானது அப்பட்டமாக தெரிகிறது.

அனுஷ்கா முகமும் சரி, உடல் வனப்பும் சரி பார்ப்பவர்களையெல்லாம் ஜொள்ளு விட வைக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார். ஒரு காட்சியில் ஆபரேசன் முடிந்து ஒரு ஆண்ட்டி டாக்டரும் இவரும் வரும் போது இவரும் ஆண்ட்டி போலவே தெரிகிறது தான் மைனஸ்.

எமிஜாக்சன் அம்சமாக இருக்கிறார். இவர் தமிழில் பேசுவது கொச்சையாக இல்லாமல் இயல்பாகவே இருக்கிறது. மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள் போல. விக்ரமை ஒருதலையாக காதலித்து காத்துகொண்டே இருக்கிறார். நமக்கெல்லாம் இது போல் வாய்க்காது போல.

சந்தானம் முதல் காட்சியிலிருந்து அதகளத்தை துவக்கி விடுகிறார். படத்தின் டென்சனை குறைத்து கலகலப்பாக மாற்றுகிறார். இவரது வசனங்கள் படபடவென திரையரங்கிற்குள் பட்டாசை வெடிக்க வைக்கின்றன.

நாசர் இலங்கை தமிழர் போலீஸ். ஓரு நாட்டை பூர்வீகமாக கொண்டவருக்கு எப்படி மற்றொரு நாட்டில் காவல்துறையில் உயரதிகாரி வேலை கொடுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. வசனம் தமிழில் அமைய வேண்டும் என்பதற்காக இருக்குமோ.

ஜெகபதிபாபு நல்லவராக அறிமுகமாகி வில்லனாவது தான் எதிபாராத ட்விஸ்ட். லட்சுமி ராயும் துக்கடா கேரக்டரில் வந்து போகிறார். தம்பிராமையா, டெல்லிகணேஷ், சரண்யா போன்றோரும் இருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் உயிரின் உயிரே பாடலுக்கு பெண்கள் கூட தம்மடிக்க எழுந்து போகிறார்கள். கணவர் காவல்துறையில் என்னவாக இருக்கிறார் என்று கூட தெரியாமல் அனுஷ்கா இருப்பதெல்லாம் பூச்சுற்றும் வேலை.

அதுக்காக படத்தை மோசம், வேஸ்ட் என்று ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. கொஞ்சம் பார்க்கிறார் போல கொடுத்திருக்கார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் திரையரங்கிற்கு சென்றால் ஒருமுறை பார்க்கலாம்.


ஆரூர் மூனா செந்தில்

28 comments:

  1. ///நாசர் இலங்கை தமிழர் போலீஸ். ஓரு நாட்டை பூர்வீகமாக கொண்டவருக்கு எப்படி மற்றொரு நாட்டில் காவல்துறையில் உயரதிகாரி வேலை கொடுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. வசனம் தமிழில் அமைய வேண்டும் என்பதற்காக இருக்குமோ.///

    தாரளமாக முடியும்! இங்கு ஆர்மி ஜெனரல் கூட ஆகலாம். ஜாதி மதம் கலர் பார்த்து பதவி கொடுப்பது நம் நாட்டில் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சகோ.

      Delete
  2. Replies
    1. ரைட்டோ ரைட்டு.

      Delete
  3. Mr. செந்தில்...இங்கு ஜனாதிபதியாக மட்டும் ஆக முடியாது. அதற்கு மட்டும் இங்கு பிறந்து இருக்கணும்.

    அதே சமயம் ஒரு குப்புசாமி இங்கு ஊர் சுற்றி பார்க்க வந்த போது அவர் மனைவிக்கு இங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை அமெரிக்க குடிமகன்/ள்.
    அந்த குழந்தை அதற்குப் பிறகு இந்தியாவிலே வளர்ந்தாலும் அமெரிக்க ஜானதிபதியாகவும் ஆகலாம்.

    ReplyDelete
    Replies
    1. மேலதிக தகவலுக்கும் நன்றி சகோ.

      Delete
  4. Agree with Nambalki... that is certainly possible in US

    ReplyDelete
    Replies
    1. நன்றி பெப்பின்

      Delete
  5. சகோ
    பல புலம் பெயர்ந்த தமிழர்கள்
    இங்கிலாந்தில் காவல் துறையில் பணியில்
    இருக்கிறார்கள்

    த ம 2020

    ReplyDelete
    Replies
    1. ரெண்டாயிரம் ஒட்டு போட்டதற்கு நன்றி ராம்ஜி யாகூ.

      Delete
  6. சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி... பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். நான் கூட சில சமயங்களில் கலாய்ப்பேன் கண்டுகொள்ள வேண்டாம். நீங்கள் என் பிரியத்துக்குரிய நண்பர். சிவப்பான குணமாலா போலவே இருக்கிறீர்கள்.

      Delete
  7. தாண்டவம்....தாண்டுமா....? 10 நாளை...?

    ReplyDelete
    Replies
    1. தாண்டும் ஆனா தாண்டாது மச்சி.

      Delete
  8. Replies
    1. ருத்ர தாண்டவமில்லை, சாதா தாண்டவம் தான்.

      Delete
  9. //..நாசர் இலங்கை தமிழர் போலீஸ். ஓரு நாட்டை பூர்வீகமாக கொண்டவருக்கு எப்படி மற்றொரு நாட்டில் காவல்துறையில் உயரதிகாரி வேலை கொடுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை...///

    புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமெரிக்காவில் நியூயோர்க்கில் காவல்த்துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒரு ஈழத்தமிழ்பெண்கூட இருக்கிறார்! மொத்தம் 10 அல்லது 12 பேர் பணியாற்றுகிறார்கள் என நினைக்கிறேன். இன்றுகூட ஒரு ஈழத்தமிழரைச் சந்தித்தேன். தனக்கு நேர்முகத்தேர்வு முடிந்துள்லது எனச் சொன்னார். அது மட்டுமல்ல நியூயோர்க் காவல்த்துறையில் தமிழ் தெரிந்தவர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கும்படியும் அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும் எனவும் நியூயோக் பொலிஸாரின் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.
    http://www.nypdrecruit.com/inside-nypd/language-opportunities

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சகோ.

      Delete
  10. ஸார் ,எனக்கு ஒரு டவுட்டு நீங்க எப்ப பார்த்தாலும் படத்துக்கு காலை காட்சி போரிங்க அல்லது 11.00மணி காட்சி போய் படத்த பார்த்துரீங்க.அப்ப உங்க வேலை நேரம் தான் என்ன ?வேலையே நீங்க போரது தான் டைம் மா!.

    இதை சீரிசாக கேட்க வில்லை.ஒரு போது அறிவுக்கு தான்.
    தவறாக கேட்பின் தம்பியை மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. காலையில் 7 மணிக்கு துவங்கி 11.30க்கு முடிந்து விடும். தேவைப்பட்டால் கொஞ்சம் சீக்கிரம வந்து விடலாம்.

      Delete
  11. //சந்தானம் முதல் காட்சியிலிருந்து அதகளத்தை துவக்கி விடுகிறார். படத்தின் டென்சனை குறைத்து கலகலப்பாக மாற்றுகிறார். இவரது வசனங்கள் படபடவென திரையரங்கிற்குள் பட்டாசை வெடிக்க வைக்கின்றன.///

    இது சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மொக்கராசு மாமா

      Delete
  12. பல பதிவுகள் படிக்கும் போது ஏற்பட்ட குழப்பத்தை கொட்டயாச்சு!!!

    ReplyDelete
    Replies
    1. புரியல பாஸ்.

      Delete
  13. //உயரதிகாரி வேலை கொடுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. வசனம் தமிழில் அமைய வேண்டும் என்பதற்காக இருக்குமோ.// ஹி ஹி ஹி

    // உயிரின் உயிரே பாடலுக்கு பெண்கள் கூட தம்மடிக்க எழுந்து போகிறார்கள்.// ஹா ஹா ஹா செம டைமிங் பாஸ்...

    ஒரு காலத்துல ராக்கி ல மட்டும் தான் படம் பார்ப்பேன்... பழைய நினைவுகளைக் குத்திக் கிளறிவிட்ட அருமையான பதிவு # போற போக்குல ஒரு பஞ்ச விட வேணாமா!

    ReplyDelete
  14. ஆக மொத்தத்துல தாண்டவம் காசுக்கு தண்டம்:)சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க கமலக்கண்ணன்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...