சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, November 12, 2012

மனம் கவர்ந்த தீபாவளி

சிறுவயதில் இருந்தே தீபாவளி என்றால் ஒரு சந்தோஷம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. தீபாவளிக்கான முதல் சந்தோஷம் எங்கள் வீட்டு பலகாரம். என் அம்மா 20க்கும் மேற்பட்ட பலகாரங்களை செய்வார். சாப்பிட்டு மகிழ்வதே முதல் காரியமாக இருந்தது.

தீபாவளியன்று விடியற்காலை எண்ணெய் தேய்ப்பது நாங்கள் இருந்த வீட்டுக்கும் வீட்டு ஓனர் வீட்டுக்கும் ஒரே கொல்லை தான். அவர்கள் வீட்டில் ஆட்கள் அதிகம் இருப்பார்கள். விடியற்காலையில் அப்பா எழுப்பி விடுவார். புலம்பிக் கொண்டே எழுந்திரிப்பேன். எண்ணெய் தேய்த்ததும் கொல்லையில் வெந்நீர் போடும் அடுப்பின் அருகில் அமர்ந்து கொள்வேன்.

பக்கத்து வீட்டு ஆட்களும் கொல்லையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் பேசி கலாய்த்துக் கொண்டு அடுப்பில் இருக்கும் நீர் சுட்டதும் குளியல். அதன் பிறகு அப்பா பூஜையறையிலிருந்து எடுத்து கொடுக்கும் புதுத்துணிகளை போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விடுவேன்.

அடுத்ததாக பட்டாசுகள். என் அப்பா சிறுவயதில் இருநூறு ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்குவார். அதில் எனக்கென பிரிக்கப்பட்ட பங்கை எடுத்து வெயிலில் காயவைப்பது, இரண்டு மூன்று பிஜிலி வெடிகளை பிரித்து அதில் உள்ள வெடிமருந்தை ஒருவெடியாக செய்து வெடிப்பது. வெடிக்காமல் போன வெடிகளை பிரித்து வெடிமருந்தை நேரடியாக புஸ் கொளுத்தி விளையாடுவது என அனைத்தும் அருமையான நினைவுகள் தான்.

தீபாவளிக்கென புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது முதல்காட்சி பார்க்கும் சுகம் இருக்கிறதே. அப்பப்பப்பா, அதனை வார்த்தைகளில் அடக்க முடியாது. நான் முதல் முதலாக நண்பர்களுடன் தீபாவளியன்று சென்ற திரைப்படம் அவசர போலீஸ் 100. அந்த சமயத்தில் எனக்கு பத்து பதினொரு வயது இருக்கும். தனியாக சென்று படம் பார்த்ததில் பெரியமனுசனாகி விட்ட நினைப்பு.

பள்ளிப்படிப்பு முடிந்து சென்னைக்கு படிக்க வந்ததும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பட்ட சிரமங்கள் கொடுமையாக இருக்கும். 1998 தீபாவளிக்கு நான் திருவாரூர் செல்ல பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். நின்று நின்று பார்த்து கடைசி வரை பேருந்து கிடைக்கவில்லை. நடுராத்திரிக்கு பிறகு ஒரு கட்டத்தில் பேருந்துகளே இல்லை.

தீபாவளிக்கு மறுநாள் திரும்பவும் சென்னை வந்தாக வேண்டும். அழுகையே வந்து விட்டது. விடியற்காலை 2 மணிக்கு பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறி பாண்டி சென்று அங்கிருந்து மாறி மாறி காலை 9 மணிக்கு திருவாரூர் சென்றேன். தீபாவளியை தவற விட்டது போன்ற உணர்வே இருந்தது.

சென்னையில் படிக்கும் காலத்தில் திரையரங்கிற்கு சினிமா பார்க்க செல்லும் போது தான் என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களையே பார்க்க முடியும். அனைவரும் கல்லூரிப் படிப்புக்கு வெளியூரில் இருந்தார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் வெகு சொற்பம் தான். நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வருவேன்.

வீட்டுக்கு வந்ததும் நல்லி எலும்பு அதிகம் போட்டு மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல் உடன் தோசை பிரமாதமான சாப்பாடு. மறுபடியும் வெடி வெடிக்க வேண்டும் என்பதற்காகவே அரக்கபரக்க தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவிடுவேன்.

இந்த காலத்து பசங்களுக்கு இது போன்ற சந்தோசங்கள் குறைந்து விட்டது. காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது. பட்டாசை வெடிப்பதை குறைத்துக் கொண்டு விட்டனர்.

இந்த ஆண்டு எனது பாட்டி காலமான காரணத்தால் தீபாவளி கிடையாது. எனவே பிறந்ததிலிருந்து முதல் முறையாக இந்த தீபாவளியன்று என் பெற்றோரை பிரிந்து இருக்கிறேன். அதுவே பெரிய வருத்தமாக இருக்கிறது. அடுத்த முறை சேர்த்து கொண்டாடி விட வேண்டியது தான்.

நாளை சென்னையில் இருப்பதால் முதல் காட்சி துப்பாக்கி பார்க்க இருக்கிறேன். காட்சி காலை நான்கு மணிக்கு எனவே நம் வலைதளத்தில் 8 மணிக்கே துப்பாக்கி விமர்சனம் எதிர்பார்க்கலாம்.

என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் இனிய இனிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுங்கள்.


ஆரூர் மூனா செந்தில்

32 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  2. 20க்கும் மேற்பட்ட பலகாரங்களை செய்வார். சாப்பிட்டு மகிழ்வதே முதல் காரியமாக இருந்தது.

    உங்கள பார்த்தாலே தெரியதுங்க அத வேற பதிவிட்டு சொல்லனுமா ?
    தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  3. என்னதான் கோடிரூபாய் கையில இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊருல தீபாவளி மாதிரியான பண்டிகை கொண்டாடுறது ஒரு வித தனி சந்தோஷத்தை தரும். அடுத்த ஆண்டு மீண்டும் அந்த மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.

    திருவாரூர் சரவணன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்.

      Delete
  4. //////
    வீட்டுக்கு வந்ததும் நல்லி எலும்பு அதிகம் போட்டு மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல் உடன் தோசை பிரமாதமான சாப்பாடு. மறுபடியும் வெடி வெடிக்க வேண்டும் என்பதற்காகவே அரக்கபரக்க தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவிடுவேன்.

    //////////

    எல்லார் வாழ்விலும்
    இருக்கும் ஒரு பிளாஷ்பேக்...

    நல்லது

    ReplyDelete
    Replies
    1. பின்ன உண்மை அதுதான மச்சி.

      Delete
  5. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மச்சி உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  6. அருமையான நினைவுகள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  7. தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லாம் வளமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. ராஜி அக்கா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரருக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  9. அருமையான நினைவுகள்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  10. இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  11. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  12. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  13. மச்சி தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மச்சி உனக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  14. It's 8.11 a.m on 13th Nov. 2012. Waiting for your Thuppakki Review..!

    ReplyDelete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆயிஷா

    ReplyDelete
  16. மலரும் நினைவுகளை, கிளரிவிட்டது தங்காளின் இந்த கட்டுரை அன்பரே...

    அழகாக எழுதுகிறீர்கள், தொடருங்கள் தொடர்கிறோம்.

    தீபாவளி 2013-க்கான என் இனிய தீபவாளி அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. ஆ...ங்... மறந்துவிட்டேன். த.ம. 34.

    :-)))))))))))))))))))))

    ReplyDelete
  18. ஆ...ங்... மருபடியும் மறந்துவிட்டேன். இன்று நமது தினம்.... அதாவது *குழந்தைகள் தினம்*

    இன்னும் குழந்தைகளாகவே உள்ள நாம் இதனைக் கொண்டாடி மகிழ்வோம் செந்தில் :-))))

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...