சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

இந்த தீபாவளி வித்தியாசமாகத்தான் இருந்தது. இதுவரை எந்த தீபாவளியன்றும் காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் வெளியில் வந்ததில்லை. இந்த ஆண்டு தான் இந்தப்படத்தை பார்ப்பதற்காக காலை மூணரை மணிக்கு எழுந்து பல்துலக்கி முகத்தை கழுவி அரக்க பரக்க கிளம்பி தியேட்டருக்கு சென்றால் என்னை விட மோசமான நிலையில் பல பேர் இருந்தனர். கும்பலோடு கோயிந்தா போட்டு திரையரங்கிற்குள் நுழைந்தேன்.

கடந்த சில மாதங்களாக வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து நொந்து போய் இருந்த காரணத்தால் இந்த படமாவது சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். வேண்டுதல் நிறைவேறியதா என்பதை விமர்சனத்தில் பாருங்கள்.

விஜய்(ஜெகதீஷ்) மிலிட்டரியில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட ஆள் விஜய்யிடம் சிக்குகிறான்.

அவனை தனியறையில் வைத்து விசாரணை செய்யும் போது இரண்டு நாட்களில் மும்பையில் 12 இடங்களில் குண்டுவெடிக்கப்போவதை அறிகிறார். எந்த விதமான துப்புகளும், குறிப்புகளும் கிடைக்காமல் இருக்கும் போது தனது புத்திசாலித்தனத்தால் அவனை தப்ப விட்டு தன் மிலிட்டரி டீமுடன் பின்தொடர்ந்து சென்று 12 இடத்திலும் குண்டுவைக்க சென்ற மனிதவெடிகுண்டுகளை ஒரே சமயத்தில் சுட்டுக் கொல்கிறார்.

இதனை அறிந்த வில்லன் மும்பைக்கு வந்து விஜய் பற்றிய விவரங்களை கண்டறிந்து டார்கெட் செய்கிறார். க்ளைமாக்ஸில் வில்லனை சுட்டுக் கொன்று விட்டு மீண்டும் மிலிட்டரிக்கு வேலைக்கு செல்கிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

ஒரு படம் அதுவும் தீபாவளிக்கு வரும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். பக்கா எண்டர்டெய்னர் மூவி. ஒரு இடத்தில் கூட தொய்வு விழவில்லை. படம் துவங்கி அரைமணிநேரத்திற்குள் நாம் படத்தினுடன் ஒன்றி விடுவோம். அதன் பிறகு படம் முடிந்ததும் தான் மீள்கிறோம்.

மாஸ் எண்டர்டெய்னர் இப்படித்தான் இருக்க வேண்டும். அதுவும் சமீப காலங்களில் சகுனி, தாண்டவம், மாற்றான் போன்ற படங்களை முதல் நாள் பார்த்து நொந்து போன எனக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது. இது விஜய் வழக்கமான படமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் டாகுடர் நடித்துள்ளார்.

விஜய் படத்தில் அழகாக இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உதவியுடன் ஜம்மென்று வருகிறார். இயல்பாக நடிக்கிறார். நடனம் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன. குறுந்தாடி பக்காவாக பொருந்துகிறது. இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.

தமிழ் சினிமாவின் இலக்கணம் மாறாத லூசுப் பெண் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால். அழகாக இருக்கிறார். குத்து சண்டை வீராங்கனையாம். விஜய்யின் மீதுள்ள கோவத்தில் ஒரே குத்தில் எதிரியை வீழத்தி நாக்அவுட் செய்கிறார். விஜய்யை காதலிக்க வீட்டு பால்கனி வழியாக ஏறி வீட்டுக்குள் குதிக்கிறார். இதனை மீறி இன்னும் சொல்லலாம் தான். நம்ம பதிவுலகத்திலேயே அதிகமான காஜல் ரசிகர்கள் இருக்கிறார். அவர்கள் வர்ணித்துக் கொள்வார்கள்.

சத்யன் விஜய் நண்பராக மும்பையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறார். விஜய் நடத்தும் ஆபரேசனில் உதவுகிறார். முதலில் ராணுவத்தை விட போலீசே புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்னும் அவர் படத்தின் முடிவில் ராணுவம் தான் உயர்ந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

ஜெயராம் சிறு கேரக்டரில் படத்தில் கதையின் ஓட்டத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத கதாபாத்திரத்தில் வருகிறார். இருக்கிறார் செல்கிறார். அவ்வளவே. படத்தில் வில்லன் பாத்திரம் அமைதியாக வந்து கடைசியில் விஜய்யை இரண்டு அடி அடித்து பிறகு அடிவாங்கி செத்துப் போகிறார்.

அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல, விஜய்க்கு இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும். ஏற்கனவே பத்திரிக்கைகளில் படித்தும் நண்பர்கள் மூலம் சில விஷயங்கள் படத்தை பற்றி கேள்விப்பட்டும் எதிர்ப்பார்ப்பை சற்று குறைவாக வைத்துக் கொண்டே சென்றேன். அதனை மீறி அசத்தி ஜெயித்து விட்டார்கள்.

படத்தில் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் தினத்தன்று ஒரு வில்லனின் கையாளை தப்ப விட்டு அவனை தன் 12 படை வீரர்களுடன் பின் தொடர்ந்து சென்று அவர்கள் பிரிந்து செல்லும் போது விஜய் டீமும் பிரிந்து சென்று ஒரே நேரத்தில் 12 பேரையும் சுட்டுக் கொல்லும் காட்சி பெரியதாக பேசப்படும்.

அது போல 5 வீரர்களின் பெண் உறவினர்களை கடத்தி சென்று விஜய்யை கண்டுபிடிக்க வில்லன் முயற்சி செய்யும் திட்டத்தில் புத்திசாலித்தனமாக தன் தங்கையை நுழைத்து தன் வீட்டு நாய் உதவியுடன் கண்டுபிடிக்கும் காட்சியும் அசத்தலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட வேண்டும். காலையில் 4 மணிக்கு காட்சிக்கு செல்லும் போது வெளியில் இருந்த கட்அவுட், பேனர் எதையும் கவனிக்காமல் அவசர அவசரமாக பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே சென்று விட்டேன். படம் முடிந்து திருப்தியான மனநிலையில் வெளியே வந்தால் பயங்கர கூட்டம் நின்று கொண்டிருந்தது அடுத்த காட்சிக்காக.

அதில் ஒரு புத்திசாலி ரசிகன் அங்கு இருந்த ஒரு சிறு கட்அவுட்டுக்கு ஆயிரம் வாலா வெடியை மாலையாக போட்டு பற்ற வைத்து விட்டான். தியேட்டர்காரர்கள் வந்து நெருப்பை அணைத்து விட்டு அவனை துரத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்திசாலி ரசிகனின் செயலை நினைத்து வரும் வழியெல்லாம் சிரித்துக் கொண்டே வந்தேன். இவர்களை நம்பி கட்சியை ஆரம்பித்தால் பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம்.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. இருந்தாலும் நல்ல மாஸ் எண்டர்டெயினர் படத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லை. படத்திற்கு பெண்களின் ஆதரவும் இருக்கிறது. இன்று எங்கள் தெருவில் உள்ள முக்கால்வாசி குடும்பத்தினர்கள் இன்று படத்திற்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.



ஆரூர் மூனா செந்தில்

62 comments:

  1. தீபாவளிக்கு விஜய்க்கு ஒரு ஹிட் படமா? மகிழ்ச்சி. காவலன், வேலாயுதம், நண்பனை தொடர்ந்து நான்காவது ஹிட் அவருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ணே. நல்ல எண்டர்டெயினர் மூவி.

      Delete
  2. சுடச்சுட விமர்சனம்..

    ஆனா மொத்த கதையும் சொல்லி டாகுட்டர் ரஸிகர்களை கடுப்பேத்திட்டிங்க...:)))

    ReplyDelete
    Replies
    1. படத்தின் கதையில் ஒன்றும் சிறப்பில்லை. திரைக்கதை தான் பக்கா பேக்கேஜ். பார்த்து ரசியுங்கள்.

      Delete
  3. ooke.முதல் விமர்சனம் பார்க்கலாம்னு வந்திருக்கு. சொன்சிடெர் பண்ணிடலாம் செந்தில் :-)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெய். இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  4. காலையிலே தீபாவளி ஆரம்பம் ஆயிட்டுதே... எப்படியோ படம் ஹிட்... விமர்சனத்திற்கு நன்றி...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  5. ம்....


    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்தரசு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  6. Replies
    1. டேய் மச்சான், உனக்கும் தங்கைக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  7. சூடான துப்பாக்கி விமர்சனத்திற்கு நன்றி செந்தில் அண்ணே.

    ராக்கி தியேட்டரில் தானே பார்த்தீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஷ்வா. ராக்கி இல்லை முருகன் தியேட்டர்

      Delete
    2. இருவது வருடங்களுக்கு முன்பு நானும்கூட அம்பத்தூர் வாசிதான். முருகனில் கடைசியாக படம் பார்த்தது 2006 இல் (ஏதோ ஒரு மொக்கை படம்-விக்ரமன் இயக்கத்தில், மாதவன்,ஜோதிகா நடித்தது).

      இப்போது முருகன் தியேட்டர் முருகன் காம்ப்ளெக்ஸ் ஆகிவிட்டது. இருந்தாலும் அங்கே வந்து படம் பார்க்கவேயில்லை.

      தியட்டர் எப்படி அண்ணே? ஓக்கேவா?

      Delete
    3. பழைய முருகனை மாற்றியமைத்தும் கூடுதலாக இரண்டு திரையரங்கங்களை கட்டி மூன்று திரையரங்கம் கொண்ட வளாகமாக மாற்றி விட்டனர். க்யூப் ப்ரோஜக்சன், நல்ல சவுண்ட் சிஸ்டம் என நன்றாக உள்ளது.

      Delete
  8. மாம்ஸ். புல்லட் மாதிரி விமர்சனம்.செம ஸ்பீடா.தீபாவளி நல்வாழ்த்துகள்.அப்புறம் போய் எண்ணை தேய்ச்சு குளிப்பீங்களா..?

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் பாட்டி இறந்த காரணத்தால் தீபாவளி கிடையாது ஜீவா. சம்பிரதாயங்கள் மட்டும் கட்.

      Delete
  9. நல்லா இருக்குன்னு பெரியவங்க சொல்றீங்க பார்த்துடலாம்.... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....(அப்புறம்ன்னே ஒரு ரெண்டு பேருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கீங்க????!!!!!)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரிச்சர்ட், மாற்றி விட்டேன்.

      Delete
    2. இந்த பேரும் நல்லாதான் இருக்கு...சரிண்னே இனிமே நான் எதுவும் சொல்லலண்னே!!!!!!!! (ரொம்ப கிறக்கமோ!!!!!)

      Delete
    3. ஹி ஹி ஹி, ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்யும் போது வேகமாக அடிப்பதனால் மாற்றி அடித்து விடுகிறேன் என்று நினைக்கிறேன். மறுபடியும் நன்றி ராபர்ட் (இப்பசரியாத்தான் அடிச்சிருக்கேனா)

      Delete
  10. இந்த தீபாவளி தளபதியோட சரவெடி


    வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  11. துப்பாக்கி நல்லாக வெடித்திருக்கு.

    நன்றி.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  12. /////////////ஒரு படம் அதுவும் தீபாவளிக்கு வரும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். பக்கா எண்டர்டெய்னர் மூவி.//////////

    எந்த சாமானிய ரசிகனும் எதிர்பார்ப்பது ........இத...இதத்தான்.

    ///////////////இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.///////////////////

    ஏண்ணே... மறுபடியும் இதே மாதிரி எதிர்பார்த்து போய் சகுனி, தாண்டவம், மாற்றான் போன்ற படங்களை முதல் நாள் பார்த்து நொந்து போகணுமா?

    ------------------------
    பொதுவாக படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். அதை எல்லாம் ரசிகன் படம் பார்த்து முடித்த பிறகு தியேட்டரை விட்டு வெளியில் வந்த பிறகு பேசினால் ஓ.கே.

    ஆனால் படத்தின் முதல் சீனைப் பற்றி கேவலமான கமெண்ட் ரெண்டாவது சீனிலேயே படம் பார்த்துக்கொண்டே இருக்கும்போது ரசிகர் வாயிலிருந்து வந்தால் படம் கோவிந்தா.

    இது எல்லாருடைய படத்துக்கும் பொருந்தும்.

    ஆக மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... நம்பி படம் பார்க்க சென்ற எல்லாருக்குமே அதிரடி தீபாவளிதான் என்பது விமர்சனத்தில் இருந்து புரிகிறது.
    ---------------------

    ReplyDelete
  13. செந்தில் என்ன சொல்றீங்க..மூன்றரைக்கே கிளம்பி போனீங்களா.. உலகத்திலேயே அதிவேகமான விமர்சனம்ன்னு நினைக்கிறேன்..கிளப்புங்க.. கிளப்புங்க..நான் இப்ப படிக்கலை..படம் பாத்துட்டு வந்து படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுமதி

      Delete
  14. Padam Sariyana Mokkai.Ivar anegama Vijay rasigara irupparnu ninaikiren

    ReplyDelete
  15. Mahessu Aji(li)th rasigara irupparnu ninaikkiren...

    ReplyDelete
  16. மகேசு மற்றும் அன்பு நான் என்ன நினைக்க அதை சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  17. நன்றி செந்தில், பதிவர் நண்பர்களுடன் நீங்கள் காட்டும் பாசத்துக்கு அளவே இல்லியா , காலைலே மூன்றரை மணிக்கு எழுந்து படம் பார்த்து உடனே அருமையான விமர்சனம் எழுதி நண்பர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளித்த நீங்கள்தான் உண்மையான "நண்பேண்டா".
    மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜீம்பாஷா.

      Delete
  18. தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சின்னமலை.

      Delete
  19. அப்போ படம் நல்லா இருக்கா .........சரி ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைமன்ட் தான் .......ஆனால் பதிவர்களுக்கு ......?

    ReplyDelete
    Replies
    1. பதிவர்கள் கிழிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கு செல்வின்.

      Delete
  20. நீங்களே பாராட்டிடீங்கன்னா படம் நூறு நாள்தான்...கலக்கரீங்க...பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி முருகேசன்

      Delete
  21. படித்ததே புல் அரிக்கிற மாதிரி இருக்கு... படம் பார்த்தா..கண்டிப்பா சீட்டுல உட்கார மாட்டேன்..சூப்பர் ண்ணா....

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருநாவுக்கரசு. எதுக்கும் படத்துக்கு போகும் போது முழுக்கை சட்டை போட்டு போங்க.

      Delete
  22. அர்ஜுன் , விஜயகாந்த் விட்டு சென்ற தீவிரவாதிகளை அழிக்க விஜய் புறப்பட்டு விட்டார் .....ஏற்கனேவே வேலாயதம் பார்த்து நொந்து போய் இருந்த தீவிரவாதிகள் இனி இப்படத்தை பார்த்து ஓடி போகட்டும் இந்தியாவை விட்டு ....

    ReplyDelete
    Replies
    1. ஒரு தோட்டா மூலம் வில்லனின் படையையே காலி செய்து விட்டார்.

      Delete
  23. என் விருப்ப நடிகரின் படம் ஓடும் என்ற நம்பிக்கை யூட்டிய அண்ணன் செந்திலுக்கு தீபாவளி வாழ்த்துகளுடன். நன்றி படத்தை பார்த்துர வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரிப் பார்த்து விட வேண்டியது தானே.

      Delete
  24. ஆரூர் ஜி.......happy diwali to you & your family!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  25. சுவையான விமர்சனம்! விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றி படம்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  26. Replies
    1. நன்றி கார்த்திகேயன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  27. Replies
    1. நன்றி சகோ

      Delete
    2. CAN I SHARE YOUR VIWES IN MY FB AND BLOCK...

      Delete
    3. கண்டிப்பாக.

      Delete
  28. Web Hosting India


    அப்போ கண்டிப்பா படம் நாளைக்கே போய் பார்க்கலாம்னு நினைக்கிறேன்....!

    ReplyDelete
  29. senthil ji.. parkalam padam eppadi irukunnu...

    ReplyDelete
  30. விமர்சகர் கதை சொல்லக் கூடாது என்பது எழுத்து தர்மம். மீறி, சஸ்பென்ஸ் காட்சிகளையும் திறந்து விளக்கிவிட்டீர்கள்! :(((

    ReplyDelete
  31. அருமை ஆமுசெ அய்யா

    ReplyDelete
  32. நல்ல படம் தான்... ஆனால் கதாநாயகி வரும் நேரங்களில் , பாடல் வரும் நேரங்களில் தம் அடிக்க செல்கிறார்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டீர்கள் தல :) அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய விஜய் படம் :)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...