மன்னிக்கனும். இது மூணு மாசத்துக்கு முன்னமே எழுதியிருக்க வேண்டிய பதிவு. கொஞ்சம் வேலை இருந்ததால் சில நாள் தள்ளிப் போச்சு. அதன் பிறகு சோம்பேறித்தனத்தால் எழுத தோணவில்லை. இப்பொழுது எழுத வேண்டும் என்று முடிவு செய்து வலுக்கட்டாயமாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
நினைவுகளை பின்னோக்கி தள்ளி நடந்த சம்பவங்களை அசை போட்டு எழுத வேண்டியிருக்கிறது. பார்ப்போம். எந்த அளவுக்கு சாத்தியம் என்று.
என் அப்பாவுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக ஏப்ரல் மாதத்தில் 25 நாட்களுக்கு மேல் திருவாரூரில் தங்கியிருந்ததாலும் வேலையில் சேர்ந்து சில மாதங்கள் வரை லீவு எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததாலும் கொஞ்ச நாட்களுக்கு ஊருக்கு செல்லாமல் இருந்து செப்டம்பர் மாதம் தான் சென்றேன்.
வெள்ளியன்று ஊருக்கு கிளம்பியதால் முகமூடி சென்னையில் பார்க்க முடியவில்லை. சனி இரவு திருவாரூர் நடேஷ் திரையரங்கில் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்து நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தால் ஒருத்தனும் ஊருக்குள் இல்லை. சரியென்று நீண்ட நாட்களுக்கு பிறகு திருவாரூரில் தனியாக சினிமாவுக்கு சென்றேன்.
ஆனால் நான் செய்த தவறு ஒன்று என்னவென்றால் நீ்ண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு செல்கிறோமே, அங்கும் தண்ணியடித்தால் அப்பா வருத்தப்படுவார் என்று நினைத்து அந்த ட்ரிப் முழுவதும் தண்ணியடிக்கவில்லை. ஆனால் அது மகா தவறென்று படம் தொடங்கியதும் தான் தெரிந்தது.
டிக்கெட் எடுக்கும் போதே நண்பன் ராஜி, அவன் தம்பிகள் முத்து, பிரமையா சகிதம் வந்தான். கையில் பாலிதீன் கவர் இருந்தது. என்னிடம் சில நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பையில் சரக்கு என்று சொல்லி கண்ணடித்து விட்டு சென்றான்.
நானும் பால்கனி உள்ளே சென்று ஒரு ஓரமாக மின்விசிறிக்கு கீழ் அமர்ந்தேன். இத்தனைக்கும் அது குளிரூட்டப்பட்ட திரையரங்கு. படம் போட்டதும் எனக்கு முதல் வரிசையிலிருந்து ஒரு கும்பல் சரக்கை ஊத்தி திரையரங்கின் உள்ளேயே அடிக்க ஆரம்பித்தது.
சரக் சரக்கென்று சத்தம் சற்று எட்டிப் பார்த்தால் உள்ளேயே பத்து குரூப்புக்கு மேல் தண்ணியடித்துக் கொண்டு இருந்தது. வெளியில் அடித்து விட்டு வந்தவர்களோ சலம்பிக் கொண்டு இருந்தார்கள். எனக்குள் ஒரு மணி டொய்ங் என்று அடித்தது. நம்முடைய திட்டம் ஊத்திக் கொண்டதே, பேசாம நாமும் கூட சரக்கடித்து விட்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. வீட்டை நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.
படம் போட்டு அரைமணிநேரத்தில் ஏசியை நிறுத்தி விட்டார்கள். அரங்கம் முழுவதும் சரக்கு வாசனை மிதக்க ஆரம்பித்தது. நான் மின்விசிறிக்கு கீழ் அமர்ந்திருந்ததால் காற்று வந்தது. தப்பித்துக் கொண்டேன் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்புக்கும் மண் விழுந்தது.
சற்று நேரத்தில் மற்றுமொரு குரூப் உள்ளே நுழைந்தது. அவர்களுக்கு இடமில்லாததால் என்னை இருக்கை மாறி அமரச் சொல்லி கேட்டார்கள். நானோ கடுப்பில் மறுக்கவே அவர்கள் கெஞ்சினார்கள். சரியென்று அதே வரிசையில் கடைசி இருக்கைக்கு வந்து அமர்ந்தேன்.
இவர்களும் உட்கார்ந்ததும் கையில் கிளாஸை பிடித்து செல் வெளிச்சத்தில் சரக்கை ஊத்தி அடிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு நெடி மூக்கில் ஏறியதும் இன்னும் கடுப்பானது. சற்று நேரத்தில் பரோட்டாவை பிரித்து அந்த இருட்டிலேயே தின்றார்கள். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து விசிலடிக்க ஆரம்பித்தார்கள்.
நானோ கடுப்பின் உச்சத்தில் இருந்தேன். அவர்கள் செய்த அலம்பலுக்காக அல்ல. நிர்வாண ஊரில் ஒருவன் மட்டும் ஜட்டியுடன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி. அதுவும் இயலாமையின் கடுப்பு இருக்கிறதே, அதை சொல்லி புரியவைக்க முடியாது.
இன்டர்வெல் விட்டதும் அரங்கின் உள்ளே ஏகப்பட்ட தெரிந்த நண்பர்கள் இருந்தாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் தனியே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது மூர்த்தி என்ற ஒரு தெரிந்த பையன் போதையில் வந்து என் முன்னே தம்மடித்துக் கொண்டு அப்புறம்ணே எப்ப ஊர்லேர்ந்த வந்தீங்க என்றான்.
அவனுக்கு பதினேழு அல்லது பதினெட்டு தான் வயது இருக்கும். நான் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து திருவாரூரை விட்டு கிளம்பிய பிறகு பிறந்த பையன் அவன். என் முன்னே புகையை விட்டுக் கொண்டு அதுவும் முகத்திலேயே விட்டுக் கொண்டு பேசினான். மொத்த கடுப்புக்கும் சேர்த்து ஒரே அறை விட்டேன். அறையை வாங்கிக் கொண்டு அழுதுக் கொண்டே சென்றான்.
இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் இன்னும் மோசமாக வேர்க்கத்துவங்கியது. பொறுத்து பார்த்த நான் ஒரு கட்டத்தில் சட்டை, பனியனை கழற்றி வைத்து விட்டு வெற்றுடம்புடன் படத்தை பார்த்தேன். இதுக்கு மேல ஒருத்தனுக்கு வெறுப்பின் உச்சக்கட்டம் வரமுடியாது என்று தானே நினைக்கிறீர்கள்.
எனக்கு வந்ததே பக்கத்தில் சரக்கடித்த பசங்களில் ஒருத்தன் டபக்கென்று என் காலின் அருகிலேயே வாந்தியெடுத்தான். எடுத்து முடித்ததும் அதன் மேலேயே படுத்து மட்டையானான். அவன் கூட வந்தவர்கள் யாரும் அதனை பற்றி கவலைப்படாமல் படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.
சுற்றி சரக்கு வாசனை, காத்து இல்லாமல் சட்டையை வேறு கழட்டியிருந்தேன். போதாத குறைக்கு என் காலின் அருகிலேயே வாந்தி வேறு. அந்த இடத்தில் மட்டும் நானும் போதையில் இருந்தேன் என்றால் கலாட்டா வேறு மாதிரி இருந்திருக்கும்.
படம் முடிந்ததும் எல்லோரும் கத்திக் கொண்டும் தம்மடித்துக் கொண்டும் சென்றார்கள். நான் மட்டும் கொலை காண்டுல வெளியில் வந்தேன். இரவு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு தான் படுத்தேன்.
அதனை போக்க மீண்டும் சென்னை வந்ததும் ஒரு முக்கால் பங்கை உள்ளே விட்டதும் தான் வெறுப்புகள் அனைத்தும் வடிந்தது. சரக்கடித்த மற்றவர்களின் சலம்பலுக்கு இடையே சரக்கடிக்காமல் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே அய்யகோ. மெட்ராஸ் பவன் சிவக்குமாரே உமக்கு கோயில் கட்டித்தான்யா கும்பிடனும்.
ஆரூர் மூனா செந்தில்

அப்படியா சேதி
ReplyDeleteஆமாங்கண்ணா
Deleteபேசாம மூக்கை மூடிக்கொண்டு (மூக்குமூடி) படம் பார்த்திருக்கலாம்.... விமர்சனம் தேறியிருக்கும்...
ReplyDeleteஇந்த அறிவுரையை அந்த சமயத்துல சொல்றதுக்கு ஆளில்லையே ராசா ஆளில்லையே.
Deleteஇந்த பதிவு யார் ஸ்டைல் ????????
ReplyDeleteஇவ்வளவு கற்பனையோட எழுதுவது யாரு.......???????
அண்ணா எனக்கே தெரிலீங்கண்ணா. நீங்க தான் கண்டுபிடிக்கனும்.
Deleteசட்டையில்லாத செந்திலை கற்பணை செய்கிறேன் என்னைப்போல சரக்கடித்த தொப்பை? ஹா ஹா ஹா!!
ReplyDeleteசேம்பிளட் காட்டான்
Deleteவிதி விஸ்வரூபம் எடுத்து விளையாடி இருக்கு. சட்டை இல்லன்னாலும் சாட்டைய கைல கொண்டு போயிருக்கலாம்.
ReplyDeleteஅப்போதைக்கு சாட்டை படம் ரிலீஸ் ஆகவில்லை சிவா.
Deleteசரக்கடித்த மற்றவர்களின் சலம்பலுக்கு இடையே சரக்கடிக்காமல் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே அய்யகோ.!!!! Romba kastamne
ReplyDeleteஆமாம்ணே.
Deleteமச்சி ரொம்ப கஷ்டந்தான்... அந்த கஷ்டத்திலும் நீ முழு படமும் பார்த்ததுக்கு உனக்கு இன்னொரு புல் சொல்லனுமய்யா...
ReplyDeleteமச்சி சொல்றது தான் சொல்ற லா மார்ட்டினா சொல்லு.
Delete:))))
ReplyDeleteஇதுக்கு நான் என்ன பதில் சொல்றது :))))
Deleteமாம்ஸ்...எங்க..முகமூடி விமர்சனம்...ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன்....
ReplyDelete