சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, October 7, 2013

பஞ்சேந்திரியா - ரயில்வே வேலையும், கடுப்பேற்றிய பதிவர் சந்திப்பும்

பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்றவங்க தன் வீட்டுக்கு அருகிலேயே இடம் இருப்பது மாதிரி பார்த்துக்குறாங்க. ஐந்து நிமிசம் முன்னாடி கிளம்புறது உடனே வந்துடுறது அவங்களுக்கு வசதியா இருக்கலாம். நான் கிளம்பனும்னா ஒரு திட்டம் போட்டு கிளம்பி இடத்துக்கு வந்து சேரவே மணிநேரத்திற்கு மேல் ஆகும். நாம போய் சேர்ந்தவுடனே சந்திப்பை முடிச்சிட்டு கிளம்பிடுறது, நாம மட்டும் கேனையன் மாதிரி எங்க போறதுன்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கிறது. பலமுறை இது எனக்கு நடந்து இருக்கிறது.

நேற்றும் அது தான் நடந்தது. நான் வீட்டிலிருந்து கிளம்பி பதிவர் சந்திப்புக்கு வந்து சேரும் நேரத்தை விட குறைவு பதிவர் சந்திப்பு நடந்த நேரம். ஒருத்தர் என்னன்னா இன்னிக்கி சீன ஓப்பன் டென்னிஸ் பைனல் இருக்கு நான் பார்த்தாகனும், கிளம்புறேன்னு கிளம்புறார். அடுத்தவங்க அடுத்தடுத்த வேலைகளை பார்க்க போயிட்டாங்க.

நான் மட்டும் என்ன செய்யிறதுன்னு தெரியாம மண்டை காஞ்சிப் போயி தேவையே இல்லாம டிநகரில் இருந்து பாரீஸ் கார்னர் வரை வந்து அங்கு ஒரு மொக்க ஓட்டலில் சாப்பிட்டு பர்மா பஜாரில் மேய்ந்து சில டிவிடிக்களை வாங்கி கொளுத்தும் வெயிலில் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மற்றவர்கள் எல்லாம் புத்திசாலிகள் நான் மட்டும் தான் அடிக்கடி கேனையனாகிடுறேன். # ச்சே என்ன மாதிரியான பதிவர்கள் இடையே வாழ்கிறோம். இருங்கவே அடுத்த பதிவர் சந்திப்பை சந்திர மண்டலத்துல ஏற்பாடு செய்கிறேன்.

----------------------------------

எங்கள் அண்ணன் கவியுலகின் கண்ணன் பதிவுலகின் முடிசூடா மன்னன் கவியாழி அவர்கள் தான் முதன் முதலாக வெட்டி பிளாக்கர்ஸில் நட்சத்திர பதிவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அண்ணன் பெயரை அட்மினில் இருக்கும் பெரிய மனிதர்கள் யாருமே பரிந்துரைக்கவில்லை.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கும் வெட்டி பிளாக்கர்ஸின் ஓனர் வீடு சுரேஷையும் வெட்டி பிளாக்கர்ஸின் அட்மின்கள் சதீஷ் சங்கவி, மயிலன், சிவக்குமார், செல்வின், சங்கரலிங்கம் சார், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோரையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது எல்லாம் வளர்ந்து கொண்டு இருக்கும் கவிஞர்களின் திட்டமிட்ட சதி. தக்காளி இருங்கவே வெட்டாத பிளாக்கர்ஸை ஆரம்பித்து உங்களுக்கு ஆப்பு அடிக்கிறேன்.

----------------------------------

 1100க்கு ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் சீனு


---------------------------------------------

பதிவைப் படிக்கும் நண்பர்களே பதிவர் தங்கங்களே

ஏதோ ஒரு வேலையில் இருந்து சரியான எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களே, ஒரு அரிய வாய்ப்பு. ரயில்வேயில் கலாசி வேலைக்கு 5000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

விண்ணப்பிக்க கடைசித் தேதி 21.10.2013.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். http://www.rrcchennai.org.in/ இந்த வெப்சைட்டை பாருங்கள்.

விண்ணப்பித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எந்த பார்மேட்டில் கேள்விகள் இருக்கும் என்பதையும் எந்த மாதிரி படித்தால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------------------------

அதுபோல் பெரம்பூர் கேரேஜில் அப்ரெண்டிஸ் படிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும். குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு.

FC OBC மாணவர்கள் 40 ரூபாய்க்கு டிடி எடுத்து அப்ளிக்கேசன் பெற்று நிரப்பிக் கொடுத்து ஹால்டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசம்.

அப்ரெண்டிஸ் முடித்த பிறகு ரயில்வே வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே.

இன்றைய பதிவு : சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

ஆரூர் மூனா

24 comments:

  1. விண்ணப்பித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எந்த பார்மேட்டில் கேள்விகள் இருக்கும் என்பதையும் எந்த மாதிரி படித்தால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    >>
    ஓ, சைடு பிசினெஸ் ஆரம்பிச்சாச்சா!?

    ReplyDelete
    Replies
    1. யக்கா, இது பொதுநல சேவை

      Delete
    2. அட.....ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள்...

      Delete
    3. இது வேறயா

      Delete
  2. இருங்கவே அடுத்த பதிவர் சந்திப்பை சந்திர மண்டலத்துல ஏற்பாடு செய்கிறேன்.
    >>
    தண்ணி இல்லை, காத்து இல்ல, வெளிச்சம் இல்லைன்னு கும்ம இப்பவே பதிவு ரெடி பண்ண வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வச்சிக்கிறேன் ஒரு நாள் கச்சேரி

      Delete
  3. 1100க்கு ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் சீனு
    >>>
    நாம்லாம் சின்ன்ன்ன்ன்ன பிள்ளையா இருக்கும்போது நோட்டு புத்தக பேப்பர்ல ஒரு கேமரா செஞ்சு விளையாடுவோம். இப்போ பசங்க படத்துல கூட ஒரு பாட்டுல அந்த கேமரா வரும். அந்த கேமராவுக்கு கூட நம்ம சீனு போஸ் கொடுப்பார்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  4. உங்களையே கடுப்பேத்திட்டாங்களா நம்ம பதிவர்கள்! ஆச்சர்யமா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சுரேஸ்

      Delete
  5. கேள்வி எந்த பார்மட்டில் இருக்கும்னு சொல்றதுக்கு பதில் கேள்விதாளே குடுத்தால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப குழப்புறீங்களே

      Delete
  6. Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  7. விண்ணப்பித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எந்த பார்மேட்டில் கேள்விகள் இருக்கும் என்பதையும் எந்த மாதிரி படித்தால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நல்ல சமூக சேவை. எப்பவுமே இப்படித்தானா, இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?

    ReplyDelete
    Replies
    1. இப்படியே வாழ்ந்தாச்சு நண்பரே. ரொம்ப இளமையா இருக்கீங்க எல்லாம் கப்சாவா

      Delete
  8. சந்திர மண்டலத்துக்கெல்லாம் நம்மால பிரியாணி பார்சல் அனுப்பமுடியாது.
    ஹரே ஓ சாம்பா....

    ReplyDelete
    Replies
    1. அதுதான அஜீஸ், நீங்க பேசாம கூரியர்ல அனுப்பிடுங்க

      Delete
  9. சந்திர மண்டலத்துக்கெல்லாம் நம்மால பிரியாணி பார்சல் அனுப்பமுடியாது.
    ஹரே ஓ சாம்பா....

    ReplyDelete
  10. //ஏதோ ஒரு வேலையில் இருந்து சரியான எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களே, ஒரு அரிய வாய்ப்பு. ரயில்வேயில் கலாசி வேலைக்கு 5000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. //

    கலாசி என்ன வேலை ?

    கல் ஆக உட்கார்ந்து கொண்டு வருவோர் எல்லோருக்கும் ஆசி வழங்கும் வேலையோ ??

    நான் ரெடி.

    அப்ளை செய்து விட்டேன். ரிப்ளை எப்போது வரும் ?

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. குட்டிச் செவுத்துல உக்காந்துக்கிட்டு போறவங்களை எல்லாம் கலாய்க்கிறதுக்கு பேரு தான் கலாசி

      Delete
  11. கலாசி வேலை என்றால் என்ன? இதில் என்னென்ன வேலை பணியிடங்கள் அடங்கி உள்ளன.இதற்கு என்ன கல்வி தகுதி? தேர்வு தமிழில்லா, ஆங்கிலத்திலா?

    ReplyDelete
    Replies
    1. அது கடைநிலை ஊழியர் வேலை. உதவியாளர் வேலை போன்றது. கலாசி என்பது ஹிந்தி வார்த்தை, குறைந்த பட்ச தகுதி பத்தாவது, தேர்ச்சி பெற்றால் சம்பளம் ஆரம்பமே 18000 கிடைக்கும், அப்புறம் ரயில்வே இலவச பாஸ்.

      Delete
  12. dear mr.senthil, my sis has applied for kalasi exam. need help. pls send me ur phone no to 7502398164.
    -Sriram

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...