தமிழக பிரசாரம் முடித்த கையோடு கேரளாவுக்கு சென்ற ராகுல் அம்மாநில முதல்வருக்கு வயதாகி விட்டது. இவரது ஆட்சி நமக்கு தேவையா என்றும், மாநில நிர்வாகத்தை இளைஞர்களாகிய எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் ஆதரவு கேட்டு பிரசாம் செய்தார்.
தமிழக பிரசாரத்தை முடித்து விட்டு கேரள மாநிலம் சென்றார் ராகுல். கொச்சி, ராஜேந்திரன் மைதானத்தில் நடந்த பங்கேற்று பேசிய ராகுல் ; இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு ( அச்சுதானந்தன் ) வயது 87 ஆகி விட்டது இன்னும் அவர் முதல்வராக வந்தால் ஆட்சி காலம் முடியும் போது அவருக்கு வயது 93 வயது ஆகிவிடும். இப்படி ஒரு வயது முதிர்ந்தவர் நமக்கு முதல்வராக வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அநுபவம் கலந்த தலைவர்களுடன் , இளைஞர்கள் துணையுடன் நல்ல நிர்வாகத்தை தருவோம். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவோம் என்றார்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் என்ன இளைஞரா என கேரள இடதுசாரி கட்சியினர் தற்போது கேள்விக்கணைகளை ராகுலை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றனர்.
ஆரூர் முனா செந்திலு
அங்க பேசியதை தமிழ்நாட்டில் யார் படிக்கப்போகிறார்கள் என்ற எண்ணம்தான். அரசியல் வியாதிகளுக்கு மக்களை விட ஞாபகமறதி அதிகம்.
ReplyDelete