சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, April 26, 2011

ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்று சேர முயற்சி

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற தமிழக மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பழ. நெடுமாறன் பேசுகையில், "உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்துக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைக் கூட இலங்கைக்குள் அனுமதிக்காத தைரியம் ராஜபக்ஷேவுக்கு உண்டு.

இலங்கைக்குள் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்காத ராஜபக்ஷே, இப்போது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மே 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிங்களவர்களை தூண்டி வருகிறார்.

போர்க் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை இப்போது எவ்வாறு முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். ராஜபக்ஷே மீது விசாரணை இல்லாமல் தடுக்க இந்தியா உதவி செய்யும். இதை முறியடிக்க தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ராஜபக்ஷே போர்க் குற்றவாளி என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்," என்றார்.

"இப்போது விடுதலைப் புலிகள் குறித்து பேசாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்று தெரிந்து கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசிவருகின்றனர். விடுதலைப் புலிகள் குறித்து விமர்சனம் செய்ய எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை.

வைகோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கொள்கையில் இருந்து விலகப்போவதில்லை. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான். அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை.

தமிழீழம் மலர, ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்," என்றார் வைகோ.

தா.பாண்டியன் பேசுகையில், "இதுவரை நாம் போராடிய போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க இந்தியா முழுவதும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி போராட நாம் தயாராக வேண்டும். அப்போதுதான் ராஜபக்ஷேவுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும்," என்றார்.

பத்திரிக்கை செய்தி

ஆரூர் முனா செந்திலு


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...