சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, February 1, 2012

ஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பகுதி 2


சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29.5.1988ல் போலீசில் புகார் செய்தார்கள். இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது.

காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது" என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான்.

மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.

சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 பேர் பிணங்களையும் திருவான்மியூர் பெரியார் நகர் ரங்க நாதபுரத்தில் தெனாலி கால் வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலையின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் 3வது அறையில் போலீசார் தோண்டினார்கள். 15 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன. 2வது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீசார் வெளியே எடுத்தனர்.

அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டில் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் தோண்டி எடுத்தனர். 4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப்போகாமல் அப்படியேருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும் அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது.

ஆரூர் மூனா செந்தில்


1 comment:

  1. தொடருங்கள் சார் ! (உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது ! அது எனக்கு மட்டுமா இல்லை, மற்ற நண்பர்களுக்குமா என்று தெரியவில்லை. கவனிங்க சார் !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...