சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, April 28, 2012

தம்மு - சிங்கமகன் - திரை விமர்சனம்



கலீஜா படத்துல சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, ஓடும் ஸ்கார்ப்பியோவின் மீது குதித்ததும் முன் இரண்டு சக்கரங்கள் பிய்த்துக் கொண்டு ஓடுவதும், மாஸ் மகாராஜா ரவிதேஜா வீரா படத்தில் ஒரே குத்தில் JCBயை பத்தடி தூரத்திற்கு பறக்க விடுவதும், பவர் ஸ்டார் பவன் கல்யாண் கொமரம் புலி படத்தில் பத்தடி தூரத்தில் இருந்து ஒருவன் துப்பாக்கியால் சுட்டதும் சீறி வரும் குண்டை ஜஸ்ட் லைக் தட் ஒரு கத்தியால் திசை மாற்றி விடுவதும், ஊசரவெல்லி படத்தில் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் நாற்காலியில் கட்டப்பட்டு இருக்கும் போது ஜூனியர் என்டிஆர் தரையில் கால்களை ஊன்றாமல் அப்படியே பறந்து எதிரிகளை பந்தாடுவதும் தமிழ்நாட்டில் பிறந்த சினிமா ரசிகனுக்கு பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இவை தான் அவர்களின் அதிகபட்ச ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் தன்மை.

நாமெல்லாம் C கிளாஸ் ரசிகனுங்க. என்னதான் தெலுங்கு படத்தில மேற்சொன்ன மாதிரி ஹீரோக்கள் படுபயங்கர ஹீரோயிசத்தை காட்டியதும், மூளை "இது உண்மையில்லை, ரொம்பத்தான் காதுல பூ சுத்துறானுங்க" ன்னு கதறினாலும் மனசு "அடடடா என்ன ஒரு அட்டகாசமான சண்டை" என்று விசிலடிச்சான் குஞ்சாக கூவுகிறது.

நேற்று ஜூனியர் என்டிஆர் நடித்த படமான தம்மு வெளியாகிறது என்று தெரிந்ததும் முதல் காட்சியே போய் விடனும் என்று முடிவு செய்து விட்டேன். இது வரை வெளியான அனைத்து வகை ஹீரோயிசத்தையும் மிஞ்சும் வகையில் என்ன தான் செய்யப்போகிறார் என்று பார்க்கவே அம்பத்தூர் முருகன் திரையரங்கத்திற்கு சென்றேன். ஏற்கனவே மனவாடுகளான ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் முக்கால்வாசி திரையரங்கை நிறைத்திருந்தார்கள்.

படத்தின் கதை தெலுங்கு படம் என்பதாலும் விமர்சனம் படிப்பவர்களில் பெரும்பாலானோர் படம் பார்க்க மாட்டார்கள் என்பதனாலும் கதையை ஓரளவுக்கு விலாவரியாக சொல்லி விடுகிறேன்.

ராயலசீமா பகுதியில் உள்ள இரு கிராமங்களின் தலைவர்களான நாசர் மற்றும் சுமன் இடையே பகை. எப்போது பார்த்தாலும் இரு கிராமங்களும் அடிக்கடி மோதி ஏகப்பட்ட உயிரிழப்பை சந்திக்கின்றன. இதற்காக மத்தியஸ்தம் செய்ய வரும் ஒருவர் வித்தியாசமாக தீர்ப்பளிக்கிறார். ஏன் தினமும் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள், வருடத்தில் இரண்டு நாள் மட்டும் சங்கராந்தி சமயத்தில் (நம்ம பொங்கல் தானுங்க) மோதிக்கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் யாரை வேணுமேன்றாலும் வெட்டிக் கொள்ளலாம், போலீஸ் தலையிடாது என்று. ஆஹா என்ன அருமையான தீர்ப்பு.

சுமன் குடும்பத்தில் சுமனைத்தவிர மற்ற ஆண்கள் அனைவரும் செத்து விடுகின்றனர். அப்பொழுது சுமனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்தவுடன் செத்து விடுகிறது. சுமன் அதனை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு சொல்லாமல் பருவம் வரும் வரை இந்தக்குழந்தை வெளியூரில் படித்து அனைத்து சண்டைகளையும் கற்று வந்து உங்களை காப்பாற்றுவான் என்று கூறி குழந்தையின் பிணத்தை கோட்டா சீனிவாசராவிடம் ஒப்படைக்கிறார்.

அடுத்த சீசனில் நடக்கும் சண்டையில் சுமனும் செத்து விடுகிறார். அந்த குழந்தை வந்து நம்மை காப்பாற்றும் என்று ஊர் மக்கள் அனைவரும் காத்திருக்கிறனர். பிற்காலத்தில் எங்கோ அனாதையாக வளரும் நம் ஹீரோ அந்த குழந்தையாக ஊருக்கு வந்து மக்களை காப்பாற்றுவார் என்பதை நான் சொல்லவும் வேணுமோ. எல்லோராலும் யூகிக்க முடிந்த அதுதாங்க கதை.

அட அட அடடா ஹீரோவின் அறிமுகமே சூப்பராக இருக்கிறது. காரை சுற்றி வில்லன்கள் நிற்க முதல் மாடியிலிருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு காரின் மீது குதித்ததும் காரின் நான்கு கதவுகள், பானட் மற்றும் டிக்கி அனைத்தும் பிய்த்துக் கொண்டு சுற்றி நிற்கும் எதிரிகள் மீது தாக்கி அனைவரும் வீழ்ந்து விடுகிறார்கள். தியேட்டரே விசில் சத்தத்தில் அலறுகிறது. இயக்குனர் எப்படியெல்லாம் யோசித்திருப்பார்.

அடுத்த காட்சி ஹீரோவுக்கு எதிரில் வில்லன் துப்பாக்கியை நீட்டுகிறார். மற்றவர்களாக இருந்தால் ஒரு ஜம்ப்படித்தோ குனிந்தோ தப்பிப்பார்கள். ஆனால் ஜூனியர் என்டிஆர் பின்பக்கம் கையை கட்டி கிட்டே வந்து தோள்பட்டையால் துப்பாக்கியை தட்டி விடுகிறார்கள் பாருங்கள். எல்லா ஹீரோவும் அவரின் பின்னால் கை கட்டி நிற்கிறார்கள்.

படத்தில் த்ரிஷா மற்றும் கார்த்திகா என இரு ஹீரோயின்கள். ஹீரோவுக்கென நேர்ந்து விடப்பட்டவர்கள் போல. இஷ்டத்திற்கு என்டிஆரின் மேல் விழுந்து கொஞ்சுகிறார்கள். இரண்டு ஹீரோயின்களுடன் சேர்ந்து தெலுங்கின் சம்பிரதாயமான குத்தாட்டமும் இருக்கிறது.

கீரவாணி தான் இசை. பாடல்கள் ஏற்கனவே ஆந்திராவில் செம ஹிட்டாம். எல்லாமே செம குத்தாக இருக்கிறது.

படத்தில் பானுப்பிரியா, பிரம்மானந்தம், ஆலி, வேணு, சம்பத் குமார், கிஷோர் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

படம் ஓவர் ஹீரோயிசமாக இருந்தாலும் எனக்கு பார்க்கும் போது விசிலடித்து சந்தோஷமாக பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. மூளையை செயல் இழக்க வைத்து மனதை மட்டும் குஷிப்படுத்தும் இந்த மாஸ் மசாலா ஆந்திராவில் சூப்பர் ஹிட் தான்.

ஆரூர் மூனா செந்தில்

12 comments:

  1. // தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கலாம். // நல்ல வேலை நான் இவைகளில் ஒன்றைக் கூட பார்த்தது இல்லை. ஆனால் பார்க்க வேண்டும் போல் உள்ளது \.

    //ஆஹா என்ன அருமையான தீர்ப்பு.// செம காமெடி போங்க

    அருமையான விமர்சனம். இருந்தும் இந்தப் படத்தை நான் பார்க்கமாட்டேன் என்று நீங்களே சொன்ன காரணத்தால் கண்டிப்பாக பார்க்கமாட்டேன்

    நன்றி. விமர்சனம் சூப்பர்

    ReplyDelete
  2. seenuguru said...

    நன்றி. விமர்சனம் சூப்பர் ///

    மிக்க நன்றி சீனுகுரு.

    ReplyDelete
  3. தம்மு...!எப்படியிருக்கோ தெரியலை! உங்க வம்பு நல்லாயிருக்கு.....ச்சீ! விமர்சனம் நல்லாயிருக்குங்கோ!

    ReplyDelete
  4. /// வீடு சுரேஸ்குமார் said...

    தம்மு...!எப்படியிருக்கோ தெரியலை! உங்க வம்பு நல்லாயிருக்கு.....ச்சீ! விமர்சனம் நல்லாயிருக்குங்கோ! ///


    ரொம்ப நன்றிங்கோ சுரேஷ்.

    ReplyDelete
  5. உங்களுக்கு தெலுகு தெரியுமா? த்ரிசா மற்றும் கார்த்திகா இடையே குறைந்தது 15 வயது வித்யாசம் இருக்கும் எப்படி இருவரும் ஹீரோயினை ஒரே படத்தில்?

    ReplyDelete
  6. /// மோகன் குமார் said...

    உங்களுக்கு தெலுகு தெரியுமா? த்ரிசா மற்றும் கார்த்திகா இடையே குறைந்தது 15 வயது வித்யாசம் இருக்கும் எப்படி இருவரும் ஹீரோயினை ஒரே படத்தில்? ///

    என்னண்ணே இப்புடி கேட்டுப்புட்டீங்க, நான் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தது ஆந்திராக்காரன் கம்பெனியில் தானே. த்ரிஷாவின் முகத்தில் முதிர்ச்சியடைந்தது அப்பட்டமாக தெரிகிறது.

    ReplyDelete
  7. அம்பத்தூர் முருகனில் எல்லாம் பிட்டு படம் தானே போடுவான், நெட்,டிவிடி வந்த பிறகு பிட்டுக்கு மவுசு போயிடுச்சு போல தெலுகு படம் போடுறாங்க .தொப்புள்ள வடை சுடுறது , பாயாசம் காய்ச்சுறது போல ஜில்பான்ஸ் சீன் எதுவும் இல்லையா :-))

    ReplyDelete
  8. /// வவ்வால் said...

    அம்பத்தூர் முருகனில் எல்லாம் பிட்டு படம் தானே போடுவான், நெட்,டிவிடி வந்த பிறகு பிட்டுக்கு மவுசு போயிடுச்சு போல தெலுகு படம் போடுறாங்க .தொப்புள்ள வடை சுடுறது , பாயாசம் காய்ச்சுறது போல ஜில்பான்ஸ் சீன் எதுவும் இல்லையா :-)) ///

    ஏங்க நீங்க அம்பத்தூருக்கு வர்றதேயில்லையா? தியேட்டரை இடித்து 3 தியேட்டர் கொண்ட முருகன் சினிமாஸ்ஸாக மாற்றி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது.

    ReplyDelete
  9. ஓஹோ எல்லாம் மாறிப்போச்சா இப்போ , நான் பருத்தி வீரன் படம் வந்தப்போ வந்தேன்,ராக்கில தான் படம் பார்த்தேன், இப்போதும் அந்த பக்கம் வருவதுண்டு ஆனால் படம் பார்க்க செல்வதில்லை.(ஹி...ஹி ராக்கி பக்கத்திலவே அடாசா ஒரு வைன் ஷாப் உண்டு,(ரெண்டு இருக்கு இல்லை) சரக்க போட்டு தான் பருத்தி வீரன்னையே பார்த்தேன் ஏன்னா நானும் ஒரு வீரன்ல)

    ReplyDelete
  10. /// வவ்வால் said...

    ஓஹோ எல்லாம் மாறிப்போச்சா இப்போ , நான் பருத்தி வீரன் படம் வந்தப்போ வந்தேன்,ராக்கில தான் படம் பார்த்தேன், இப்போதும் அந்த பக்கம் வருவதுண்டு ஆனால் படம் பார்க்க செல்வதில்லை.(ஹி...ஹி ராக்கி பக்கத்திலவே அடாசா ஒரு வைன் ஷாப் உண்டு,(ரெண்டு இருக்கு இல்லை) சரக்க போட்டு தான் பருத்தி வீரன்னையே பார்த்தேன் ஏன்னா நானும் ஒரு வீரன்ல) ///

    இப்பொழுதெல்லாம் இரண்டு திரையரங்க வளாகத்திலும் சரக்கடித்தால் உள்ளே விடமாட்டார்கள். அந்த அளவுக்கு சீர் செய்து மெயின்டெயின் செய்கிறார்கள்.

    ReplyDelete
  11. என்னது சிட்டிக்கு வெளியில் இருக்கும் தியேட்டரிலும் ரூல்ஸ் போடுறாங்களா இப்போ தெரியுது ஏன் படம் எல்லாம் சரியா ஓட மாட்டேன்குதுனு, ஒரு குடிமகனா இதெல்லாம் தட்டிக்கேட்க மாட்டிங்களா? இதெல்லாம் இப்படியே விட கூடாது எதாவது செய்யணும் பாஸ்!

    அண்ணாசாலை ஷாந்தி தியேட்டரில் பெருசா "மதுவருந்தி வருபவர்களை உள்ளே விட முடியாதுனு போட்டு இருப்பான் ஆனாலும் வீம்புக்கு தீர்த்தம் அடிச்சுட்டு தான் போவேன், கொஞ்சம் நேரம் ரூல்ஸ் பேசிட்டு அப்புறம் விட்டுடுவாங்க , இப்போ சமீபத்தில என்னாச்சுனு தெரியலை டெஸ்ட் செய்து பார்க்கணும் , எங்கே ஏரியா பக்கம் எல்லாம் தியேட்டரில சரக்கடிச்சா கூட கண்டுக்க மாட்டாங்க ரொம்ப நல்லவய்ங்க :-))

    ReplyDelete
  12. /// வவ்வால் said...

    என்னது சிட்டிக்கு வெளியில் இருக்கும் தியேட்டரிலும் ரூல்ஸ் போடுறாங்களா இப்போ தெரியுது ஏன் படம் எல்லாம் சரியா ஓட மாட்டேன்குதுனு, ஒரு குடிமகனா இதெல்லாம் தட்டிக்கேட்க மாட்டிங்களா? இதெல்லாம் இப்படியே விட கூடாது எதாவது செய்யணும் பாஸ்!

    அண்ணாசாலை ஷாந்தி தியேட்டரில் பெருசா "மதுவருந்தி வருபவர்களை உள்ளே விட முடியாதுனு போட்டு இருப்பான் ஆனாலும் வீம்புக்கு தீர்த்தம் அடிச்சுட்டு தான் போவேன், கொஞ்சம் நேரம் ரூல்ஸ் பேசிட்டு அப்புறம் விட்டுடுவாங்க , இப்போ சமீபத்தில என்னாச்சுனு தெரியலை டெஸ்ட் செய்து பார்க்கணும் , எங்கே ஏரியா பக்கம் எல்லாம் தியேட்டரில சரக்கடிச்சா கூட கண்டுக்க மாட்டாங்க ரொம்ப நல்லவய்ங்க :-)) ///


    சிம்பிள் லாஜிக்ங்குங்க. தப்பு குறைவா நடக்கிற இடத்துல கண்காணிப்பும் குறைவாத்தான் இருக்கும். அம்பத்தூர்ல படம் பாக்க வர்றவங்கள்ல பாதிப் பேரு போதையில தான் வருவானுங்க. அதான் கவனிப்பு அதிகமா இருக்கு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...