சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, May 10, 2012

மும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா

நான் அப்பொழுது திருவாரூரில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், என் சித்தப்பா ஒருவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரைப்போல் ஒரு நபரை வேறு எங்கும் பார்க்க முடியாது. மனிதர் பழகுவதற்கும் அடுத்தவருக்கு ஒரு உதவி என்றால் முன்னின்று செய்வதற்கும் அவரைப்போல் ஒருவர் கிடையாது. ஆனால் அவர் ஒரு ஜொள்ளர். வயது வித்தியாசமெல்லாம் அவருக்கு கிடையாது.

யார் ஒருவர் புடவைக்கட்டிக் கொண்டு அவரது கடைக்கு வந்தாலும் அவரிடம் வழிந்து பேசுவார், அதுவும் அழகாக இருந்து விட்டால் இலவசங்கெலல்லாம் கிடைக்கும். அதில் சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார், பலவற்றில் செருப்படியும் பட்டுள்ளார்.

எங்கள் சொந்தங்களில் எந்த வீட்டு விசேஷம் என்றாலும் அவரே முக்கியஸ்தர் ஆகிவிடுவார், அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்வது என் வயதையொத்த பசங்களை வேலை வாங்குவது எல்லாம் அவரே, ஆனாலும் அவர் சொல்லும் வேலைகளை நாங்கள் விரும்பி செய்வதற்கு காரணம் அவர் சொல்லும் அவரது வாழ்வில் நடந்த கிளுகிளு கதைகள், நாம் நம் வயதில் பார்க்கும் கிழவிகளை பற்றிய டீன்ஏஜ் கதைகலெல்லாம் அவரிடம் இருக்கும்.

எங்களுக்கெல்லாம் அவர் கதாநாயகர், ஏனெனில் எங்களுக்கு அப்பொழுது பதின்வயது என்பதால் பெண்களைப்பற்றிய ஆர்வமிக் வயது என்பதால் தான். எங்கள் தாத்தா நாங்கள் அவரிடம் சுற்றிக் கொண்டிருக்கும்போது எல்லாம் பசங்களை எல்லாம் உன் போல் ஆக்கிவிடாதே என்று எஙகள் சித்தப்பாவை திட்டிக் கொண்டிருப்பார்.

இதில் நாங்கள் நாங்கள் நான் கூறுவது நான், என் அத்தை மகன் சதீஷ் (தற்பொழுது மன்னார்குடியில் பேருந்து நிலையம் எதிரில் புட்பிளாசா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறான்),என் சித்தப்பா மகன் வினோத் (தற்பொழுது ஹூண்டாயில் இன்ஜினியர்),என் மாமா மகன் கெளதமன் (தற்பொழுது உயிருடன் இல்லை) ஆகியோர் தான்.

இந்நிலையில் எங்கள் சித்தப்பா அவரது கூட்டுறவு சங்கத்தின் சார்பாக ஒரு பணிநிமிர்த்தமாக மும்பைக்கு முதல் முறையா செல்ல வேண்டியிருந்தது. அவரோ அதுவரை ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டம், பழைய திருச்சி மாவட்டம் ஆகியவற்றை விட்டு வெளியில் சென்றதில்லை.

வெளியூர் செல்வதால் அதுவரை பேண்ட் போடாத அவர், புதிதாக கடைக்கு சென்று புது பேண்ட், புது சட்டை, புது ஷு ஆகியவற்றை வாங்கி வந்தார், புதிதாக ஹேர் டை அடித்துக் கொண்டார். எங்களுக்கெல்லாம் திடீரென்று அவரின் செய்கை வியப்பை அளித்தாலும் நாங்களும் அவருக்கு கிளம்புவதற்குரிய உதவிகளை செய்து வந்தோம்.

ஒரு நாள் அதிகாலை சைக்கிள் எடுத்து வீட்டுக்கு வந்து என்னை அழைத்தார், என்னவோ ஏதோவென்று அவருடன் சென்றேன். என்னவென்று விசாரித்தால் அவருக்கு மும்பை செல்வதால் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும், பக்கத்து ஊரில் ஆந்திராவில் வேலை செய்த ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறினார்.

சரி என்று அவருடன் சென்று பக்கத்து ஊருக்கு சென்று தேடி வந்தவரை அணுகி கேட்டால் அவரோ தனக்கு தெலுங்கு மட்டுமே தெரியுமென்றும், ஹிந்தி தெரியாது என்றும் கூறி விட்டார், நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம். என்னை வீட்டில் இறக்கி விடும்போது சித்தப்பா நீ யாராவது ஹிந்தி தெரிந்தவர் இருந்தால் விசாரித்து வை நாம் சென்று அவரிடம் அந்த வார்த்தையை கற்று வருவோம் என்றார்.

நானும் என் உறவுக்கார பசங்களும் அவருக்காக தேடியலைந்தால் இரண்டு நாட்களாக யாரும் கிட்டவில்லை, இரண்டு நாள் கழித்து வடஇந்தியாவிலிருந்து செட்டியார் கடைக்கு லோடு ஏற்றி லாரி வந்ததாகவும் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று கேள்விப்பட்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் ததக்கா பிதக்கபவென பிதற்றினார்கள், பிறகு தான் தெரிந்தது வந்தவர்கள் ஒரிசாக்காரர்கள் அவர்களுக்கும் இந்தி தெரியவில்லை என்று. நொந்துகொண்டே திரும்பி வந்தோம்.

சித்தப்பாவுக்கு செல்லும் நாள் நெருங்கி கொண்டு வந்தது. அப்பொழுது என் நண்பன் பிரசாத் ஒரு ஐடியா சொன்னான். எங்கள் ஊரில் கமலாலயம் தென்கரையில் ஹந்தி டியூசன் சென்டர் இருப்பதாகவும் அங்கு சென்றால் உங்கள் சித்தப்பாவுக்கு வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிடலாம் என்றும் கூறினான். மிகுந்த சந்தோஷத்தோடு சித்தப்பா வீட்டுக்கு சென்று அவரிடம் செய்தியை கூறினேன். அவரும் என்னுடன் புறப்பட்டு வந்தார்.

மாஸ்டரிடம் சென்று சித்தப்பாவை அந்த ஹிந்தி வார்ததையை கற்றுக் கொள்ளக் கூறினேன். அவர் டியூசன் சென்டர் உள்சென்று சிறிது நேரம் கழித்து சந்தோஷமாக வந்தார். வெளியில் வந்த ஹந்தி வாத்தியார் வெளியில் வந்து தலையில் அடித்துக் கொண்டு இவரையெல்லாம் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று அலுத்துக் கொண்டார். எல்லாம் சரி என்னடா ஓவர் பில்ட்அப் செய்கிறாயே, அந்த வார்த்தை என்னவென்று கேட்கிறீர்களா? அது பெரிய காமெடி, நம்ம சித்தப்பு மும்பை போய் பலான இடத்துக்கு போனா அங்க பேசறதுக்கு கத்துக்கிட்டு போன வார்த்தை "பூரா கப்டா நிக்காலோ". இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்குறீங்களா, எல்லா துணியையும் கழட்டுன்னு அர்த்தம்,

எப்பூடி

ஆரூர் மூனா செந்தில்


8 comments:

  1. "பூரா கப்டா நிக்காலோ"
    படா ஆளுய்யா உங்க சித்தப்பா.....? ஆமா
    இந்த பதிவு தொடருமா?

    ReplyDelete
  2. /// வீடு சுரேஸ்குமார் said...

    "பூரா கப்டா நிக்காலோ"
    படா ஆளுய்யா உங்க சித்தப்பா.....? ஆமா
    இந்த பதிவு தொடருமா? ///

    ஏங்க இதுக்கெல்லாம் தொடர் போட்டு எழுதினா நம்மளை கலாய்ச்சிட மாட்டாங்களா?

    ReplyDelete
  3. பூரா கபடா/// ....அதுக்கப்புறம் சொல்லுங்க..அது தானே முக்கியம்...ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா சுவைபட எழுதி உள்ளீர்கள், உங்க சித்தப்பா ரொம்ப விவரமானவர் போல கடைசி வரி அருமை.

    வீடு சுரேஸ்குமார் said...
    //இந்த பதிவு தொடருமா?//

    பாஸ் உங்க ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு

    படித்துப் பாருங்களேன்
    சென்னையில் வாங்கலாம் வாங்க

    ReplyDelete
  5. /// கோவை நேரம் said...

    பூரா கபடா/// ....அதுக்கப்புறம் சொல்லுங்க..அது தானே முக்கியம்...ஹி ஹி ஹி ///

    ஏங்க மும்பைக்கு போறதுக்கு முன்னாடி நடந்ததுக்கே இவ்வளவு ஆர்வப்படுறீங்களே, போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நடந்ததப் பத்தி சொன்னாரே அதைக் கேட்டதுக்கு அப்புறம் எனக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க ஜீவா.

    ReplyDelete
  6. /// seenuguru said...

    ஹா ஹா ஹா சுவைபட எழுதி உள்ளீர்கள், உங்க சித்தப்பா ரொம்ப விவரமானவர் போல கடைசி வரி அருமை.

    வீடு சுரேஸ்குமார் said...
    //இந்த பதிவு தொடருமா?//

    பாஸ் உங்க ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு ///

    எங்க சித்தப்பா விவரமானவர் மட்டுமில்ல, அதில ரொம்ப ஆர்வமானவர் கூட.

    ReplyDelete
  7. ஆரூர் மூனா செந்தில் சார்.... என்னை மாதிறி சின்னப் பிள்ளைங்களைக் கெடுக்குறீங்களா...? இருங்க இருங்க... எங்க... இல்ல இல்ல உங்க சித்தப்பாகிட்டே சொல்லுறேன்.

    ReplyDelete
  8. /// AROUNA SELVAME said...

    ஆரூர் மூனா செந்தில் சார்.... என்னை மாதிறி சின்னப் பிள்ளைங்களைக் கெடுக்குறீங்களா...? இருங்க இருங்க... எங்க... இல்ல இல்ல உங்க சித்தப்பாகிட்டே சொல்லுறேன். ///

    அவர்கிட்ட சொன்னீங்கன்னாக்கா உங்களுக்கு ஒரு கதை மட்டும் தான் தெரியுமான்னு கேட்டுட்டு கூட 10 சில்மிஷ கதையும் சொல்வாரு, வேணுமா?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...