சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, August 8, 2012

பஞ்சேந்திரியா - கோயம்பேட்டில் நடக்கும் பார்க்கிங் டிக்கெட் மோசடி

சில நாட்களுக்கு முன் காலையில் வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அம்பத்தூரிலிருந்து எஸ்டேட், பாடி வழியாக லூகாஸ் செல்லும் சாலை காலையிலும் மாலையிலும் எப்படி டிராபிக்கில் மாட்டி விழிபிதுங்கும் என்று சொல்ல தேவையில்லை. ஒரு முறை மாட்டியவர்களுக்கே நன்கு தெரியும்.

எஸ்டேட் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சிக்னலில் நிற்கும் போது ஒரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் சர்ரென்று வந்து நின்றது. சிக்னல் விழுந்த அடுத்த வினாடி ஸ்கூட்டி பறந்தது. அந்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. எப்படி ஒரு பெண்மணி நம்மை முந்திச் செல்லலாம் என்று.

நானும் பைக்கை எடுத்துக் கொண்டு பின்னாடி விரைந்தேன். பிரிட்டானியா வரை துரத்தி சென்றேன். ம் ஹூம். வண்டியை நெருங்கக் கூட முடியவில்லை. பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் ஏற்பட்ட டிராபிக்கில் ஸ்கூட்டி நின்றது. நானும் நின்றேன். ஒரு நிமிடம் தான் கிடைத்த கேப்புக்குள் ஸ்கூட்டி சர் சர்ரென்று நுழைந்து போய்க் கொண்டே இருந்தது.

நானும் விடாமல் பின்னாடி துரத்தி சென்றேன். நான் லூகாஸ்ஸில் நேரே செல்ல வேண்டும். ஆனால் ஸ்கூட்டி வலப்புறம் அண்ணாநகர் நோக்கி திரும்பியது. நான் எப்படியாவது அவரை முந்திச் செல்ல வேண்டும் என்று எண்ணி நான் சாலையிலிருந்து பிரியும் இடம் வரை நெருங்க முடியாததால் ஸ்கூட்டியை முந்திச் சென்ற பின்பே மீண்டும் வேலைக்கு செல்வது என்று முடிவு செய்து வலப்புறம் வண்டியை திருப்பினேன்.

கொஞ்ச தூரத்திற்கு டிராபிக் இல்லாததால் வேகமாக சென்று ஸ்கூட்டியை அண்ணா நகர் 6வது மெயின் ரோட்டில் முந்தினேன். ஸ்கூட்டியில் வந்த ஆண்ட்டியை வென்று விட்ட திருப்தி. பிறகு அங்கிருந்து திருமங்கலம் சாலை வழியாக சென்று நாதமுனியில் திரும்பி வழக்கமான சாலையை அடைந்து வேலைக்கு சென்றேன்.

அன்று முழுவதும் திமிருடன் தான் திரிந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு நான் செய்தது தப்போ என்று மனம் சிந்திக்க ஆரம்பித்தது. பிறகு தான் என்ன ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தோம் என்று புரிந்தது. அதன் பிறகு இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். பாடியில் மற்றுமொரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் என்னை முந்தி சென்றது. அடுத்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. என் வண்டியை முடுக்கினேன். அய்யோ யாராவது சொல்லுங்களேன், நான் நல்லவனா? கெட்டவனா?

-------------------------------

தமிழகத்தை நெருங்குகிறது தண்ணீர் பஞ்சம்


-----------------------------------------

பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு ஏதாவது வேலையாக சென்றால் ஊழியர்கள் அலட்சியப்படுத்துவது தாமதப்படுத்துவது தமிழகமெங்கும் சகஜமாக நடப்பதொன்றாக ஆகிவிட்டது. நமக்கும் பழகிப் போய் அது போல் அவர்கள் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்றாகி விட்டது.

இந்த மாதம் என் சம்பளத்தில் D.A விடுபட்டு போய்விட்டது. அதனை சரிசெய்து பணத்தை வாங்க வேண்டுமென்றால் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸீல் உள்ள வேஜஸ் செக்சனுக்கு சென்று அதற்கென்று உள்ள அதிகாரியைப் பார்த்து தான் செய்ய வேண்டும். சென்ற வாரம் வியாழக்கிழமை சென்றால் அந்த அதிகாரி லீவு என்றும் அடுத்த வாரம் வாருங்கள் என்றும் சொன்னார்கள்.

ஒருவர் வரவில்லையென்றால் அத்துடன் அந்த பணிகள் நின்று விடுமா என்று கடுப்படித்துக் கொண்டே வந்தேன். ஆனால் பதில் தான் கிடைக்கவி்ல்லை. நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் சென்றேன். அந்த அதிகாரி அதுவரை வேலைக்கு வரவில்லை.

நான் சென்று அரைமணிநேரம் கழித்து தான் வேலைக்கு வந்தார். வந்தவுடன் கேட்டால் இப்பத்தானே வந்திருக்கிறேன் என்று கடுப்படித்தார். பிறகு அரைமணி நேரம் கழித்து மீண்டும் சென்று என் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள பிழையை சொன்னேன். சம்பள பில்லை வாங்கிப் பார்த்தவர் அப்படி உக்காரு கூப்பிடுறேன் என்றார்.

மணி 12.30 ஆகியது. என்னை அழைத்து கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை. மெக்கானிக் வரவேண்டும். நீ போயிட்டு லஞ்ச் டைமுக்கு அப்பறம் வா என்று சொன்னார். நாள் தள்ளிக் கொண்டு போகிறதே என்று கடுப்பாகி நான் உட்கார்ந்து முடித்து கொண்டு தான் போவேன் என்றேன். பிறகு முனகிக் கொண்டே கம்ப்யூட்டரை ஆன் செய்து செய்து கொடுத்தார்.

அடப்பாவி்ங்களா நானும் ரயில்வே ஊழியன், அவனும் ரயில்வே ஊழியன். என்னைப் போல் தான் சம்பளம் வாங்குகிறான். ஆனால் இந்த HR மற்றும் அக்கவுண்டஸ் ஊழியர்கள் மட்டும் எந்த ஏரியாவில் வேலை செய்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் போல. இவனுங்களை திருத்தவே முடியாதா?

---------------------------------

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் பதிவர்கள்


-----------------------------------------

இன்று என் அப்பா அவசர வேலையாக சென்னை வந்திருந்தார். வந்தவர் அவரது வேலைக்காக வெளியில் சென்று விட்டு மதியம் போன் செய்து வேலை முடிந்து விட்டது. எனக்கு இன்றிரவு திருவாரூர் செல்வதற்கு டிக்கெட் எடுத்து விடு என்றார். கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.

நுழைவாயிலில் ஒருவர் அதிகாரமாக நிப்பாட்டி 5ரூபாய் கொடு என்று சீட்டு கொடுத்தார். எப்பொழுதுமே கேள்வி கேட்காமல் காசை எடுத்து கொடுக்கும் நான் இன்று யதார்த்தமாக சீட்டைப் பார்த்தேன். அதில் எந்த இடத்திலும் இரு சக்கர வாகனத்திற்கு என்று அச்சிடப்படவில்லை. கார்களுக்கு மட்டும் என்று போட்டிருந்தது.

அவரிடம் இது பற்றி கேட்டேன். அவர் இது தான் டிக்கெட்டு காசை எடு என்றார். ஐயா நான் பணம் கொடுக்க தயங்கவில்லை. பைக்கிற்குரிய சீட்டை கொடுத்து விட்டு காசை பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். சிறிது நேரம் என்னை முறைத்துப் பார்த்தவர் சத்தம் போடாமல் சென்றார். அப்பொழுது தான் புரிந்தது. இத்தனை ஆண்டுகளாக பல நூறு முறை அவர்களிடம் நான் காசை கொடுத்து ஏமாந்திருக்கிறேன் என்று.

இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். யாரும் கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் செல்ல நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. யாராவது உங்களிடம் கேட்டால் டிக்கெட்டை கேளுங்கள். அதில் இருசக்கர வாகனத்திற்குரிய சீட்டு என்று அச்சிடப்பட்டு இருக்காது.

அதனை அவர்களிடம் கூறினால் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டாயிரம் பைக்குகள் உள்ளே சென்று திரும்புகின்றன. ஒரு பைக்கிற்கு 5ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தினம் பத்தாயிரம் வீதம் மாதம் மூன்று லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். உஷார்.

ஆரூர் மூனா செந்தில்


38 comments:

  1. முந்தைய பதிவு : (விபத்துகள் பலவிதம் கவனம் வேண்டும் தினம் தினம்)

    இன்று இப்படி ஒரு துரத்தலா ?

    பதிவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கலாமே...

    முடிவில் உஷாரான தகவல்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (T.M. 1)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி தனபாலன்

      Delete
  2. விழ்ப்புணர்வு போஸ்ட் எல்லாம் போட ஆரம்பிச்சிட்டியா....இனி...மத்தவங்க...என்ன ஆகுறது....???????

    அவங்களுக்கும்...சான்ஸ் கொடுயா...

    ReplyDelete
    Replies
    1. யோவ் நான் எங்கய்யா விழிப்புணர்வு பத்தி பதிவு போட்டேன். ஒரு சம்பவத்தை பகிர்ந்துகிட்டேன். கலவரத்தை கிளப்பி விடாதேய்யா, உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி. உங்க போனை எதிர்பார்த்து வீடு சுரேஷ் காத்திருக்காப்பலாயாம் ஒரு முறை போன் பண்ணுங்க.

      Delete
  3. கோயம்பேடு கொள்ளக்காரர்களின் கூடாரமாகி விட்டது உண்மையே!
    என் நண்பர் கூட கூறினார் ஸ்கூட்டி பெண்கள் வேகமாகசெல்வதாக! அப்போது நம்ப வில்லை! இப்போது நம்புகிறேன்!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி சுரேஷ்

      Delete
  4. மூனா,

    ஆணாதிக்கமா,பெண்ணாதிக்கமா தெரியாது ,பார்க்க நல்லா இருந்தா சேஸ் செய்து இருக்கேன், அது தெரியாமல் செய்யணும், தெரிஞ்சா ஓவர் பந்தா விடுங்க :-))

    அப்போ நான் யாரு?

    ஸ்கூட்டியை தொறத்த முடியாத பைக்கா? பைக் பாடியில் டி.வி.எஸ்-50 எஞ்சின் மாட்டி ஓட்டுறீர் போல:-))

    ------

    நீர் பல்க் ஆ இருக்கவும் பார்க்கிங் கேட்டவன் சும்மா போயிட்டான், அவனுங்க ஒரு கேங் , இளிச்சவாயன் மாட்டினா அடிச்சுப்புடுவாங்க பார்த்து கையாளுங்க.

    சென்ட்ரலில் சைடில் மின்சார வண்டி நிலையம் பக்கமா நுழைஞ்சாலே பார்க்கிங் காசு கேட்கிறாங்க, அப்போ அதுவும் இப்படித்தான் இருக்குமோ? ஆளைப்பார்த்து கேட்பானுங்க போல.

    சில தடவை கொடுத்து இருக்கேன் சில தடவை பார்க்கிங் செய்யாமல் ஏன் கேட்டு திட்டுவாங்கி வந்து இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே உடனடி தீர்வுல சுகமா இருக்குங்க, கொஞ்சம் தள்ளி நின்னு யோசிச்சா தான் நாம பண்ணது தப்பா சரியான்னு தெரிய வரும். எனக்கும் முதல்ல சுகமாத்தான் தெரிஞ்சது. என்னை விட்டு விலகி சிந்திச்சதுக்கு அப்புறம் தான் நான் ஆதிக்க மனப்பான்மை புரிஞ்சது. நீங்களும் அது மாதிரி முயற்சி செய்யுங்க. உங்களாலும் முடியும்

      -----------------------------

      ஒரு அநியாயத்தை தட்டிக் கேட்க நீங்க முரட்டுத்தனமாத்தான் இருக்கணும்னு அவசியமில்லங்க. நீங்க கூட உறுதியா இருந்து பாருங்க. உடம்பு பெரிய விஷயமில்லீங்க. மனஉறுதி தான் வேணுங்க வவ்வால்.

      Delete
    2. மூனா,

      // நீங்க கூட உறுதியா இருந்து பாருங்க. உடம்பு பெரிய விஷயமில்லீங்க. மனஉறுதி தான் வேணுங்க வவ்வால்.//

      நீங்க சொல்வதைப்பார்த்து சிரிப்பு தான் வருது.

      தப்பா நினைச்சுக்க வேண்டாம் பதிவுகளில் கூட நீங்க தைரியமா எதுவும், யாரையும் பார்த்து சொன்னதாக எனக்கு நினைவில்லை, அப்படி இருக்க மன உறுதிக்கு எல்லாம் சொல்றிங்க. நான் ஏன் சொன்னேன் என்றால் ஏதோ உணர்ச்சிவேகத்தில நீங்க எங்காவது பேசி மூஞ்சுல கோடு போட்டுறப்போறாங்கன்னு தான்.

      எனக்கு இப்பவும் எல்லா ஏரியாவுலவும் ஆட்களை தெரியும், என்ன டச் விட்டுப்போச்சு.நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு பொழைப்பை பார்க்க ஆரம்பிச்சாச்சு.

      நீங்க கனவுலகில் இருப்பதாக படுகிறது , எல்லாம் சகவாச தோஷம் தான் :-))

      குடிக்க தண்ணீர் வைக்கலைனு எக்ஸ்பிரஸ் அவென்யூல கேட்டு கலாட்டா செய்யலாம் அங்கே எல்லாம் வாயால பேசுவாங்க, முனியாண்டி விலாசில் தண்ணீர் வையினு கேட்டால் வைக்கமாட்டாங்களா, ஆனால் அப்போ நாமே மினரல் வாட்டர் பாட்டில் வாங்குவோம், அதான் நடைமுறை வித்தியாசம்.முனியாண்டி விலாசில் மினரல் வாட்டர் ஓசில கேட்டால் என்ன கிடைக்கும்னு தெரியும் தானே :-))

      Delete
    3. பதிவுலகில் பதிவர்களை தேடித்தேடி போய் வம்பிழுப்பது தான் தைரியம் என்றால் அந்த தைரியமே எனக்கு தேவையில்லை. தன் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு மாட்டுபவர்களையெல்லாம் வம்பிழுப்பது தான் தைரியம் என்று நீர் எண்ணிக் கொண்டுள்ளீர் போலும். வெளியில் வாருங்கள் ஐயா. அதன் பிறகு பதிவர்களை குற்றம் சொல்லுங்கள். நீர் தைரியசாலி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

      தமிழகத்தின் எல்லா ஏரியாவிலும் உங்களுக்கு ஆட்களை தெரியும் என்றால் இதற்கு முன்பு அரசியலில் அல்லக்கையாக இருந்தீரோ.

      என் அடையாளத்தை கொண்டு யார் வம்புக்கும் போகாமல் என்னை தேடி வரும் பிரச்சனைகளை நான் சந்தித்தாலே போதும் என்கிறேன். அதற்கே தைரியம் வேண்டுமல்லவா?

      நீங்கள் கேபிள் சங்கரை கலாய்க்க வேண்டுமென்றால் அவரது பிளாக்குக்கு போய் உரண்டை இழுங்கள். படிக்கும் எங்களுக்கும் பொழுது போகும்.

      Delete
    4. மூனா,

      இப்படி எதாவது நினைச்சுடக்கூடாதுன்னு தான் ,தப்பா எடுத்துக்காதிங்கன்னு சொன்னேன்.

      நான் எங்கே தமிழகத்தின் எல்லா ஏரியாவும்னு சொன்னேன் சென்னையில் சொன்னேன்,மேலும் அரசியல்வாதிங்க எனக்கு அல்லக்கையா இருக்காங்கன்னு வச்சுக்கோங்க :-))

      புகைப்படம் போடுவதில் என்ன தைரியம் என எனக்கும் தெரியவில்லை. அதையே எல்லாம் பிடித்து தொங்கிக்கொண்டே இன்னிக்கு போட்டோ போட்டால் தான் தைரியம்னு ஒருதர் சொல்வீங்க,நாளைக்கு மாபியா பத்திலாம் பதிவு போடுற கொலை செஞ்சு இருக்கியா செஞ்சிட்டு பேசுன்னு சொல்வாங்க எல்லாருக்கும் நிருபிச்சுக்கிட்டு இருந்தா என் பொழைப்பை யார் கவனிப்பா ?

      மேலும் கேபிளை கலாய்க்க இங்கே சொல்லவில்லை, அது அப்படியாக காட்சிப்படுத்தாதீர்கள்,நன்கு அறிந்த ஒரு சம்பவத்தினை சொல்லலாம் என்பதால் நான் அந்த உதாரணம் சொன்னேன் மேலும் ,டீசண்டான ஏரியாவில் தான் சட்டம் பேச இயலும் என்பதை விளக்க எளிதாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், நானும் ஆரம்பத்துல வெளில சட்டம் எல்லாம் பேசிக்கொண்டிருந்தேன், வங்கிப்போன்ற இடத்தில் செல்லுப்படியாச்சு, ஆனால் லோக்கலான ஏரியாவில் பேசினா இப்ப இன்னான்றனு, அப்படியே ஒரு கும்பல் சேர்ந்துக்கிறாங்க,சரி நம்ம அனுபவத்தினை உங்களுக்கும் சொல்லலாம்னு அதை சொன்னேன்.

      //அதற்கே தைரியம் வேண்டுமல்லவா?//

      உங்களுக்கு தைரியம் இருக்கு தான், ஒரு துடிப்பில் நிஜ உலகில் ரொம்ப கேள்விக்கேட்டு பிரச்சினையாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சொன்னது. என் நல்லெண்ணம் ,விளக்கெண்னை எல்லாம் சொன்னது எனது தப்பு தான் :-))

      நீங்க அதுக்குள்ள மன உறுதி,தைரியம் வளர்த்துக்கணும்லாம் சொன்னதால் முந்தைய பின்னூட்டம் சொல்லவேண்டியாச்சு.

      இப்போ ஒரு அரசியல்கட்சியை விமர்ச்சிக்கிறாங்க பதிவுல அந்த தலைவர் முன்னாடியா போய் பேசுறாங்க, பேசிட்டு வர முடியுமா?

      அதே போல ஒவ்வொருவருக்கும் ஒரு களம் ,அடையாளம் இருக்கு.

      உங்களுக்கு பொழுது போனால் என்ன போகலைனால் என்ன , இதே போல பதிவு போடுங்க எனக்காவது பொழுது போகட்டும், நன்றி!

      Delete
    5. ஏங்க உங்களுக்கு பொழுது போனால் எனக்கென்ன போகலைனா எனக்கென்ன.

      அது போல் எல்லாருக்கும் ஒரு களம் இருக்கு, ஒரு அடையாளம் இருக்கு. உங்களுக்கு சொந்த களமும் இல்லை. அடையாளமும் இல்லை. நீ்ங்கள் பிரபலமானதற்கு காரணம் கேபிளின் தளம் மட்டும் தான். அதை புரிந்து கொள்ளுங்கள்.

      யாரா இருந்தால் என்ன அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் வேண்டுமல்லவா. எல்லோரும் பதிவில் அவர்களது புகைப்படத்தை போடுவதில்லை. ஆனால் மற்ற பதிவர்களுடன் தொடர்பில் உள்ளார்கள். உங்களுடன் தொடர்பில் உள்ள பதிவர்கள் யாரென்று சொல்லுங்கள், இது வரை இல்லையென்றால் இனிமேலாவது பதிவர்களுடன் சகஜமாக கலந்து கொள்ள முயற்சியுங்கள். உங்கள் அடையாளம் யாருக்கு வேண்டும், உங்களது தொடர்பு மட்டுமே வேண்டும். நீங்கள் மட்டும் எல்லோரையும் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியாது என்றால் என்ன நியாயம் வவ்வால்.

      Delete
    6. மூனா,

      // நீ்ங்கள் பிரபலமானதற்கு காரணம் கேபிளின் தளம் மட்டும் தான். அதை புரிந்து கொள்ளுங்கள். //

      இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த காமெடி :-))

      அவரெல்லாம் தமிழ்ப்பதிவுலகில் எங்கே இருந்தார்னு தெரியும் முன்னே என் பெயர் அறியப்பெற்றாச்சு, என்ன நான் திரட்டிகளில் எல்லாப்பதிவும் இணைக்க மாட்டேன்.

      தமிழ்மணம் என்ற திரட்டியால் தான் நீங்கள் எல்லாம் பிரபலம்,அதை விட்டு வெளியில் போனால் ஒருத்தரும் கண்டுக்கம்மாட்டாங்க, இதில பிரபலாம் பிரபலம். ஆளை விடுங்கப்பா எல்லாருக்கும் பிரபல போதை ஏறிக்கிடக்கு :-))

      என்ன களம் இல்லை வளம் இல்லைனு ...என்ப்பதிவுக்கு வந்தால் தொடர்பு கொண்டுவிட்டுப்போறாங்க எங்கே தொடர்பு எல்லைக்கு அப்பாலா என்ப்பதிவு இருக்கு :-))

      ஒரு 20 பதிவர்களுக்கு மேல ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது , சென்னையில் மட்டும் 7000 பதிவர்களுக்கு மேல் இருக்காங்க இதெல்லாம் நல்லாப்பாருங்க.

      நன்றி ,வணக்கம்!

      Delete
  5. மூனா,

    பதிவர்கள் ஃபோட்டோவில் மேலே வானம்னு விரல் காட்டுறது நக்ஸ் அண்ணாச்சி தானே ?

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா அவருதானுங்க உங்கள கூட தேடிக்கிட்டு இருக்காருங்க. முடிஞ்சா செல் நம்பர் குடுங்க. விருப்பமில்லீன்னா நீங்க ஸ்கைப்புல வந்து நக்கீரன் அண்ணன் கிட்ட பேசுங்கண்ணா.

      Delete
  6. Replies
    1. ஷூ மட்டும் நல்லாயிருந்து ப்ரயோஜனமில்லீங்களே.

      Delete
  7. மாப்ள நக்கஸ் ஐ மறைத்து விட்டீர்களே...

    ReplyDelete
    Replies
    1. அவரு கடவுள்னு வானத்தை நோக்கி கை காட்டுனாருங்க

      Delete
  8. இன்று முதல் ஆன்ட்டி-ஹீரோ ஆரூர் முனா. என்று அழைக்கப்படுவீராக!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வணக்கம்

      Delete
  9. நக்கி மாமா என்ன சொல்லுறாரு போட்டோவுல?

    ReplyDelete
    Replies
    1. நான் கடவுள்னு சொல்லுறாரு

      Delete
  10. ஹையா...வௌவால் வந்துடுச்சி..இங்கயும்..இனி நல்லா பொழுது போகும்...

    ReplyDelete
    Replies
    1. என்ஜாய் பண்ணுங்க ஜீவா

      Delete
  11. நல்ல சேஸிங்க்....(அத கண்டினியூ பண்ண வேண்டாம் - பேட் பாய் ஆகிடுவீங்க)கோயம்பேடு நல்ல தகவல் அது எனக்கும் ஏற்பட்டது, ஆனா அவிங்க ஏதோ கணக்கு வச்சிருக்கானுக... உங்ககிட்டா வாங்காம விட்ருக்காங்க நான் கேட்டபோது என்கிட்டயும் வாங்காம விட்டுட்டாங்க இத்தனைக்கும் என் மூஞ்சி அத்தன ரஃபா இல்ல... ஆனா பலபேர்கிட்ட ஒரு மாதிரி மிரட்டி வாங்குறாங்க..., ஒரு வேளை அவங்க டிக்கெட் வாங்காம உள்ளே விடலைனா அப்போதைக்கு குடுத்துட்டு அப்புறமா சரியான இடத்துல புகார் பன்றது சரின்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் சரியான சமயத்துல தவறை சுட்டிக்காட்டுனா பயப்படுவானுங்கனு்னு நினைக்கிறேன்.

      Delete
  12. விரைவில் ஒரு மகிழ்ச்சியான தருனத்தில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சதீஷ்

      Delete
  13. ///வவ்வால்August 9, 2012 2:15 AM //

    வவ்வால் சரியாத்தாம்பா பேர் வச்சிருக்கே....

    பேய் உலாத்துர நேரத்துல வந்து கமெண்ட் போட்ருக்கே....

    ReplyDelete
  14. விபத்துகள் பலவிதம் கவனம் வேண்டும் தினம் தினம்.//
    இப்பபோதான் புரியுது நீங்க ஏன் அடிக்கடி சில்லறை வாருனீங்கன்னு, ஆமா போற வர்ற அயித்தையை எல்லாம் ஒவர்டேக் பண்ண நினைச்சா அப்படிதான்.!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சில்லறை வாரி வாரியே பாக்கெட்டு ரொம்பிடுச்சி.

      Delete
  15. ரொம்ப பவ்யமாதான் நிக்குறீங்க, ஆனா சொல் பேச்சு கேட்க மாட்டீங்க போல!!!

    ReplyDelete
    Replies
    1. சொல்பேச்சு கேட்டிருந்தாத்தான் விளங்கியிருப்பேனே ராபர்ட்

      Delete
  16. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் செந்திலு....
    வவ்வால பேச சொல்லுயா.....

    ரோஓஓஓஓஓஓஓஓஓஓஒம்ப....ஆசையா இருக்கு.....

    பதிவர் சந்திப்புக்கு வர சொல்லுயா......

    ReplyDelete
    Replies
    1. நக்ஸ்,

      அடிக்கடி உங்க ஊருப்பக்கம் வரும் ஆள் தான் எப்போ வேண்டுமானால் வந்து உங்களை கலாய்ப்பேன் உஷார் :-))

      சொந்தக்காரங்க இருக்கற ஊரு தான்.

      Delete
  17. செந்தில் உங்க தளம் திறக்க நிறைய நேரம் எடுத்துக்குது......

    WAITING FOR TAMIL 10-ன்னு ரோம்ப நேரம் காட்டுது....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் 10ல ஏதோ பிரச்சனை போல இருக்கு தலைவரே.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...