சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, September 17, 2012

சுவையான சாப்பாடு சாப்பிட - ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம்


ஆளாளுக்கு சாப்பாட்டு கடைய பத்தி எழுதுறாங்க. நான் எவ்வளவு பெரிய சாப்பாட்டு பிரியன். நான் எழுதலைனா சாமி கண்ண குத்திடாதா. இதோ துவங்கிட்டேன். இந்த கட்டுரை படிக்கிறவங்களுடைய ருசியை தூண்டி விட்டா தோத்தவண்டா நிர்வாகம் பொறுப்பல்ல.

நேற்று வீட்டம்மாவுடன் ஷாப்பிங் சென்றிருந்தேன். ஷாப்பிங் முடிய 4 மணியாகி விட்டது. சாப்பிடாமல் இருந்ததால் பசித்தது (சாப்பிட்டா பசிக்குமான்னு கேள்விலாம் கேக்கப்பிடாது).அண்ணாநகரின் வழியாக வரும் போது சிந்தாமணி சிக்னலுக்கு அருகில் முதல் மெயின் ரோட்டில் ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம் கண்ணில் பட்டது.

கடையின் பெயர் வித்தியாசமாக இருந்ததை தவிர வேறு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கடைக்குள் நுழைந்தோம். படிக்கட்டே வி்த்தியாசமாக இருந்தது. அண்டர்கிரவுண்டில் கடை இருந்தது. நுழைந்ததும் அருமையான உள்கட்டமைப்பு பார்க்கவே நன்றாக இருந்தது.

எல்லா இடங்களிலும் எல்சிடி டிவி துல்லியமான இசை. அரையிருட்டில் லைட்டிங். நல்ல சோபா செட் என எல்லாம் கவர்ந்தது. அருமையாக லாமினேட் செய்யப்பட்ட மெனு கார்டு. எழுத்துக்கள் எல்லாம் டைம்ஸ் நியு ரோமனில் இட்டாலிக்கில் படிக்க அருமையாக இருந்தது. ஒவ்வொரு பக்கமாக திருப்பி முழுவதும் படித்து விட்டு ஆர்டர் செய்தோம்.

எனக்கு நண்டு ரசம், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை, வான்கோழி பிரியாணி, மொகலாய் சிக்கன் மசாலா. என் வீட்டம்மா சைவமாதலால் டொமேட்டோ சூப், பனீர் டிக்கா, செஸ்வான் ப்ரைடு ரைஸ், பேபிகார்ன் மசாலா.

சர்வர் முதலில் டாட்டா வாட்டர் ப்ளஸ் வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து வைத்தான். பிறகு சர்வர் கொண்டு வந்த நண்டு ரசத்தை ருசித்தேன். சிறிய நண்டு காலுடன் அதில் இருந்தது. நண்டின் காலில் கொடுக்கு இருந்தது அதிர்ச்சியை அளித்தது. சமாளித்துக் கொண்டேன். மசாலாவும் பெப்பரும் தூக்கலாக இருந்தது. சிறிது சிறிதாக சுவைத்தேன். நல்ல சுவையாக இருந்தது. (ஏம்ப்பா நான் சரியாத்தான் எழுதுறேனா)

நண்டு நன்றாக வெந்திருந்தது. சுவையாகவும் இருந்தது. கடித்து நொறுக்கி சாப்பிட்டவுடன் எங்கே துப்புவது என்று பார்த்தேன். எந்த மூலையும் அசுத்தமாக இல்லை. அடடே ஆச்சரியமாக இருந்தது. மேசையில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த டிஸ்யூ பேப்பரை விரித்து வைத்து அதில் துப்பி அழகாக மடித்து தட்டின் அருகிலேயே வைத்துக் கொண்டேன். சர்வர் அதனை கவனிக்காதது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இடையில் பனீர் டிக்காவை வீட்டம்மாவின் தட்டிலிருந்து எடுத்து சுவைத்தேன். வெளியில் சூடு குறைவாக இருந்தது. அவர்கள் கொடுத்திருந்த பச்சை சாஸில் முக்கி எடுத்து ஒரு கடி. ஆ, அடப்பாவிகளா என் நாக்கில் சுட்டு விட்டு விட்டது. வெளியில் சூடு குறைவாகவும் உள்ளே கடும் சூட்டுடன் இருந்த ஒரு டிஷ்ஷை இப்போது தான் பார்த்தேன்.

பிறகு சர்வர் வந்து சதுரமான வெள்ளைக்கலர் பீங்கான் பிளேட்டை வைத்தார். நன்கு பளிச்சென்று இருந்தது அது. மற்ற அயிட்டங்களும் வந்து சேர்ந்தது. பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன். கிரேவியில் அவித்த முட்டையை துருவி போட்டிருந்தது பார்க்க கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

இரண்டையும் கலந்து அதில் சிறிது ப்ரெயின் ப்ரையை வைத்து முதல் கவளத்தை வாயில் வைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை சென்றடைந்தது. இதயம் சிலிர்த்தது. கண்கள் பனித்தது. அட அட அடடா தெய்வீக சுவையப்பா இது.

அடுத்த கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் ரெண்டாவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

மூன்றாவது கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் மூன்றாவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

நான்காவது கவளம் எடுத்து சுவைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை மீண்டும் சென்றடைந்தது. இதயம் மறுக்கா சிலிர்த்தது. கண்கள் நான்காவது வாட்டி பனித்தது. அட அட அடடா மறுபடியும் தெய்வீக சுவையப்பா இது.

தட்டில் பிரியாணி காலியாகி இருந்தது. ஒரு கிளாஸ் டாட்டா வாட்டர் பிளஸ் தண்ணீரை முழுவதும் குடித்தேன். அரை வயிறு திருப்தியாக நிறைந்திருந்து. மறுபடியும் பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன்.

முதல் கவளம்... அய்யோ அடிக்காதீங்கப்பா முடிச்சிக்கிறேன். சத்தியமாக சொல்கிறேன். சுவையான சாப்பாடு என்றால் அதுதான். சாப்பிட்டதில் மிகவும் சுவையை கொடுத்தது மொகலாய் சிக்கன் கிரேவி தான். முந்திரி பருப்பை அரைத்து செய்யப்பட்ட மசாலா ராயலான சுவையை சிக்கனுக்கு அளித்தது.

நீங்கள் சாப்பிட சென்றால் கூட ப்ளெயின் பிரியாணியையும் மொகலாய் சிக்கன் கிரேவியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் இலகுவாக கலந்து சாப்பிட்டு பாருங்கள். சுவையை உணர்வீர்கள்.

அது போலவே முட்டையை செமி பாயில்டாக மட்டன் ப்ரெயினுடன் கலந்து இருந்தது சுவையை கூட்டிக் கொடுத்தது. நேற்று சாப்பிட்டதன் ருசியை இப்பொழுது வரை உணர்ந்து கொண்டுள்ளேன் என்பதிலேயே உணவின் தரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

விலை தான் சற்று கூடுதலாக ரூ.900/- வந்தது. அதில் நான் கேட்காமலேயே கொண்டு வந்து வைத்த ரெண்டு வாட்டர் பாட்டிலுக்கும் நாற்பது ரூபாய் போட்டிருந்தது. அடடா பிரமாதம் போங்கள்.

நான் ஏழைப் பதிவர் என்பதால் கையில் காமிரா இல்லாததால் உணவத்தையோ, உணவையோ புகைப்படம் எடுக்க முடியவில்லை. எனவே இன்று புகைப்படமில்லா பதிவு மட்டுமே.

இந்த கட்டுரை கேபிள் சங்கரையோ மோகன் குமாரையோ நினைவுபடுத்துவதாக உங்களுக்கு தெரிய வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது.

ஆரூர் மூனா செந்தில்

70 comments:

  1. ஏன் பாஸ், நீங்க சாப்பிட்டத மட்டும் டேஸ்ட் எப்படி இருக்கிறதென்று எழுதிருக்கீங்க. உங்க வீட்டம்மா சாப்பிட்டதோட எப்படி இருக்குன்னு கேட்டு அதையும் எழுதிருக்கலாம். வெஜ் வாசகர்களுக்கு உதவியா இருந்திருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அவங்களையும் பதிவு போட சொல்லிடுவோம்.

      Delete
  2. Replies
    1. சத்தியமா புரியலீங்கண்ணா.

      Delete
  3. //நான் ஏழைப் பதிவர் என்பதால் கையில் காமிரா இல்லாததால் உணவத்தையோ, உணவையோ புகைப்படம் எடுக்க முடியவில்லை
    //

    900 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு ஏழை பதிவர்ந்னு சொன்னா நம்ப நாங்க என்ன டெசோ அமைப்பில் உள்ளவர்கள் என்று நினைத்தீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. நான் டெசோவுல இருக்கேன்னா ஒத்துக்குவீங்களா?

      Delete
  4. Yowwwwww
    senthilu.......
    :)
    :)
    :)

    ippothaikku
    ithurhan......

    ReplyDelete
    Replies
    1. மக்களே நல்லா பாத்துக்கங்க, இந்த ஆங்கில கவிதைக்கு நான் பொறுப்பல்ல. எனக்கே படிச்சாலும் புரியல. இதுக்கு முழுப் பொறுப்பு நக்கீரன் மட்டும் தாங்க.

      Delete
  5. ங்கொய்யாலே....படிச்சிட்டு நல்லா சிரிச்சேன். :-)))
    ரூ.900/- ரொம்ப சீஃப்பா!!!!! இருக்கே, ரொம்ப ஏழைப்பதிவர்தான் ஒத்துக்கிடறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இந்த பதிவு உங்களுக்கு யாரையும் நினைவுபடுத்தவில்லை இல்லையா ஜெய். அப்பாடா நான் தப்பிச்சேன்

      Delete
  6. பாஸ்
    நாளக்கி
    வாரேன்

    ReplyDelete
  7. பாஸ்
    நாளக்கி
    வாரேன்

    ReplyDelete
  8. உண்மையிலே நீங்க ஏழை தான் டோலரே....

    ReplyDelete
    Replies
    1. நான் ஏழை என்று நம்பிய டோலர் ராஜ் வாழ்க.

      Delete
  9. Replies
    1. நன்றி சகோதரரே.

      Delete
  10. சிரிக்க முடியாம சிரிச்சுகிட்டு இருக்கேன்


    கேபிள் & நான் : டோட்டல் டேமேஜ் !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா சந்தோஷம் அண்ணே.

      Delete
  11. பிரபல பதிவர் பட்டம் வாங்காம விட மாட்டீங்க போலருக்கே நீங்க தான் அடுத்த அதிஷா !

    ReplyDelete
    Replies
    1. பிராப்ள பதிவர் பட்டம் கிடைக்காம இருந்தா சரி அண்ணே.

      Delete
  12. 900 roobaikku saappidum elai pathivar senthil vaalga...!!

    ithellam overAa illa...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன். சாப்பாட்டுக்கு செலவு பண்ணாலும் என்னால ஒரு காமரா உள்ள செல்போன் வாங்க முடியலையே? நீங்களாவது சொல்லுங்க நான் ஏழை தானே.

      Delete
  13. 900 ரூபாய் பில் வந்தது மட்டும்தான் இருக்கு . பில் குடுத்தேன் அப்படின்னு எதிவுமே இல்லியே ?

    ReplyDelete
    Replies
    1. அதை சொல்லமாட்டோம்ல. சொல்லிட்டா நான் ஏழைங்கிறத நீங்க எப்படி நம்புவீங்க சிவா.

      Delete
  14. உடம்பை குறைக்க ஐடியாவே இல்லே போலிருக்கே...! ?

    ReplyDelete
    Replies
    1. குறைப்போம் சார். ஆனா சாப்பிட்டுக்கிட்டே குறைப்போம்.

      Delete
  15. \\அருமையாக லாமினேட் செய்யப்பட்ட மெனு கார்டு. எழுத்துக்கள் எல்லாம் டைம்ஸ் நியு ரோமனில் இட்டாலிக்கில் படிக்க அருமையாக இருந்தது. \\

    செம கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிகண்ணன்

      Delete
  16. //சர்வர் முதலில் டாட்டா வாட்டர் ப்ளஸ் வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து வைத்தான்.//

    //பிறகு சர்வர் வந்து சதுரமான வெள்ளைக்கலர் பீங்கான் பிளேட்டை வைத்தார்.//

    சுவைத்த நண்டு ரசம் எழுத்தின்(விழிப்பின்) பண்பையே மாற்றிவிட்டதே !!!

    ReplyDelete
    Replies
    1. அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு தமிழன்பன்.

      Delete
  17. நாக்கு ஊருதைய்யா ஜொள்ளு ஒழுகுதைய்யா..

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை சென்று சாப்பிட்டு பாரைய்யா.

      Delete
  18. பாஸ் நல்ல காமடி போங்க - அந்த கடை பக்கம் போகாமலேயே சாப்பிடாமலேயே எப்படி பாஸ் இப்படி எல்லாம்....

    பாஸ் சத்தியமா நீங்க பரம ஏழை பாஸ்

    ReplyDelete
    Replies
    1. ஏன் பாஸ் இப்படி, சத்தியமா சாப்பிட்டேனுங்க.

      Delete
  19. நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? வர வர வலைப்பதிவுகளை படிச்சா திண்டுக்கல் தலப்பாக்கட்டிக்குள் போயிட்டு வர்ற ஃபீலிங் வந்துடுது :-)

    ReplyDelete
    Replies
    1. நாம தொடர மாட்டோம் லக்கி, சும்மா ஒரு ஸ்கூப்பு தான்.

      Delete
  20. புரட்டாசி மாசம் மச்சி இப்படி பதிவு போட்டு கொல்றியே...!நீ...நல்ல வருவ..!

    ReplyDelete
    Replies
    1. மச்சி உன் ஆசீர்வாதம் இருந்தால் 100 சாப்பாட்டு பதிவு போடுவேன்.

      Delete
  21. nalla padhivu padhivittamaikku nandri
    surendran
    (nirkka yaar adhu soodu soranai paththipesaradhu indha padhivirkkum adharkkum evvidha thodarbum illaye thalaippuveru thamizh naaththam thaangamudiyala ungaludaiya madha parappurai)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேந்திரன்.

      Delete
  22. அந்த நண்டு பெயரை கூறவில்லை என்பதை மிகவும் மென்மையாக தெரிவித்து கொள்கிறேன் அண்ணே

    ReplyDelete
    Replies
    1. நண்டு என்னிடம் பெயர் சொல்லவில்லை என்பதை கடித்துக் கொண்டே சொல்லிக் கொள்கிறேன்.

      Delete
  23. எடுத்து ஒரு கடி. ஆ, அடப்பாவிகளா என் நாக்கில் சுட்டு விட்டு விட்டது. வெளியில் சூடு குறைவாகவும் உள்ளே கடும் சூட்டுடன் இருந்த ஒரு டிஷ்ஷை இப்போது தான் பார்த்தேன்...
    "food RE HEATED IN MICROWAVE OVEN" will be hot inside
    .Gopal

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தகவலுக்கு நன்றி கோபால்.

      Delete
  24. இதில் இன்னும் தட்டின் வட்டவடிவம்..... டேபுள்ளின் உயரம் .. சர்வர்களின் யுனிபார்ம் ..பக்கத்து டேபுள் வாண்டு ..
    வான்கோழியின் பின்புறம் ....இதை எல்லாம் எழுதி இருந்தால் இது முழுமையான பதிவு ..........

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை மெசரிங் டேப்பு எடுத்துட்டு போய் சரியான அளவுடன் பதிவிடுகிறேன் செல்வின்.

      Delete
  25. ஒரு சாப்பாட்டு விஷயத்தை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல முடிவது என்பதே பெரிய விசயம்.
    தற்போது புரட்டாசி மாத விரதம் துவங்கிவட்டதால் ஐப்பசி மாதம் சென்றுதான் பார்க்கவேண்டும்.
    அந்த ஹோட்டலிலி நாங்கள் சாப்பிட தங்களுக்கு ராயல்டி ஏதும் உண்டா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. அது கம்பெனி ரகசியம்ண்ணே.

      Delete
  26. நீங்கள் சொன்ன உணவுகளில் நண்டு ரசம், பிரியாணி தவிர்த்து ஏதும் செட்டிநாடு உணவு அல்ல....... படையப்பா உணவகம் என்று முதன் முதலில் திருப்பூரில் எங்கள் மாமாவால் தொடங்கப்பட்டு சக்கை போடு இன்றும் போட்டு வருகிறது. திருப்பூர் வாசிகளிடம் கேட்டுப்பார்க்கவும். அந்த உணவகத்தில் வேலை பார்த்தவர்களும், எங்கள் செட்டிநாட்டு பகுதிகளை சேர்ந்தவர்களும் பல இடங்களில் படையப்பா என்ற பெயர் வருமாறு கடை தொடங்கி உள்ளார்கள். என் நண்பர்கள் கூட சில இடங்களில் படையப்பா என்று வரும் கடைகளை பார்க்கிறோம் மற்றும் சாப்பிட்டு இருக்கிறோம், உங்கள் மாமாவின் கடையா என்பார்கள் இல்லை என்போம். அவருக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது. திருப்பூரில் மட்டும்தாம். குமரன் ரோடு , காவல் நிலையம் எதிர்புறம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தகவலுக்கு நன்றி சரண்துரை.

      Delete
  27. மச்சி சோத்துக்கடை அருமை...

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி.

      Delete
  28. சரியாக மட்டுமல்ல நன்றாகவே எழுதுகிறீர்கள்!
    சரி, நான் இங்கிருந்தே ஒரு பதிவு கையேந்திபவன் பற்றி போடலாம் என்றிருக்கிறேன்; அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்!

    தலைப்பு: 'நான் கையேந்திய கையேந்தி பவன்!'

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்பள்கி, தலைப்பு சூப்பரோ சூப்பர்.

      Delete

  29. செந்தில் அண்ணே, நீங்க நண்டு ரசம், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை, வான்கோழி பிரியாணி, மொகலாய் சிக்கன் மசாலா ன்னு சாப்பிடறதும் இல்லாம நம்ம டிக்காவையும் டேக்கா குடுக்குறாரே என்கிற உங்க வீட்டம்மாவோட சாபம் தான் நாக்க சுட்டு பொசுக்கி இருக்கு.

    //இரண்டையும் கலந்து அதில் சிறிது ப்ரெயின் ப்ரையை வைத்து முதல் கவளத்தை வாயில் வைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை சென்றடைந்தது. இதயம் சிலிர்த்தது. கண்கள் பனித்தது. அட அட அடடா தெய்வீக சுவையப்பா இது.//

    கேபிள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. மத்ததெல்லாம் உங்க பாணியில் எழுதிட்டு இது மட்டும் அவர் பாணிக்கு ஏன் போறீங்க. திரும்ப திரும்ப எழுதுவதும் உங்களை போன்ற மூத்த (எழுதுவதில் ?)பதிவருக்கு அழகில்லை. :-)

    //நீங்கள் சாப்பிட சென்றால் கூட ப்ளெயின் பிரியாணியையும் மொகலாய் சிக்கன் கிரேவியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் இலகுவாக கலந்து சாப்பிட்டு பாருங்கள். சுவையை உணர்வீர்கள். //

    வான் கோழியை பற்றி தனியாக சொல்வீர்கள் என்று நினைத்தேன். மொகல் சிக்கன் க்ராவியிலேயே மயங்கிப் போய் வான்கோழியை மறந்து விட்டீர்களே.
    எனக்கு வான்கோழி பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசை. அதனாலதான் டக்குன்னு பதிவை படித்தேன். நீங்க வான்கோழி வாங்குநீன்களா இல்லையா?

    //ஒரு கிளாஸ் டாட்டா வாட்டர் பிளஸ் தண்ணீரை முழுவதும் குடித்தேன். அரை வயிறு திருப்தியாக நிறைந்திருந்து. மறுபடியும் பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன்.//

    பிரியாணி சாப்பிடும் போது வேட்டிய லூஸ் பண்ணினா மட்டும் போதாது, தண்ணியும் ஒரு மடக்கு ரெண்டு மடக்கு தான் குடிக்கணும். என்ன நீங்க வெவரம் இல்லாத புள்ளைய இருக்கீங்க. வளர்ற புள்ள நல்ல சாப்புடனும்ல.

    //விலை தான் சற்று கூடுதலாக ரூ.900/- வந்தது. அதில் நான் கேட்காமலேயே கொண்டு வந்து வைத்த ரெண்டு வாட்டர் பாட்டிலுக்கும் நாற்பது ரூபாய் போட்டிருந்தது. அடடா பிரமாதம் போங்கள். //

    அதிஷாவுக்கோ கேபிளுக்கோ போன் போட்டு "கேட்டால் கிடைக்கும்" என்று சொல்ல வேண்டியது தானே.


    மொத்ததுல்ல ரூ 900 எங்களுக்கு செலவில்லாமல் விருந்து வைத்திருக்கிறீர்கள். நிறைய சாப்பாட்டு பதிவுகளை எதிர் பார்க்கிறோம். நல்லா இருக்குண்ணே நல்லா இருக்கு.










    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் ராஜ்குமாரே, இந்த பதிவே கேபிள் மற்றும் மோகன் குமாரை பகடி செய்து எழுதப்பட்டது என்பதை நீங்கள் அறியவில்லை என்றால் நீங்கள் பாவம் தான்.

      Delete
    2. வான்கோழியைப் பற்றி ஏன் எழுதவில்லை என்றால் அது அவ்வளவு சிறப்பாக இல்லை. மொகலாய் சிக்கன் கிரேவியும், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரையும் தான் அட்டகாசம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். நான் இடையில் தண்ணீர் அதிகமாக குடித்ததற்கு காரணம் இன்னும் அதிகம் சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம் தான்.

      Delete
  30. //இந்த பதிவே கேபிள் மற்றும் மோகன் குமாரை பகடி செய்து எழுதப்பட்டது என்பதை நீங்கள் அறியவில்லை என்றால் நீங்கள் பாவம் தான்.
    //

    ஆகா நான் பாவம்தான்.


    //நான் இடையில் தண்ணீர் அதிகமாக குடித்ததற்கு காரணம் இன்னும் அதிகம் சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம் தான்.
    //

    ஓ அதுதான் உங்க சீக்ரட்டா ? ஆனா அது நல்லதில்லை நண்பரே. ஏன்னா நீர் செரிமானம் செய்யும் அமிலத்தினை நீர்த்து போக செய்து விடும். அதனால் செமிக்க அதிக நேரம் ஆகும் அதானால் கொழுப்பு சத்து தான் உருவாகும்.
    சாப்பிடுவதை குறைத்து கொண்டு தேவைபட்டால் ஒரு மடக்கு ரெண்டு மடக்கு குடித்து கொள்ளுங்கள். எங்கள் ஊர் (அபிராமம்) முஸ்லிம் திருமண விருந்தில் தண்ணீரே வைக்க மாட்டார்கள். சாப்பிடுவதை குறைப்பதர்க்காக சாப்பாட்டின் நடுவில் தண்ணீர் குடிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நடை பயிற்சியே பாதி எடையை குறைக்கும். நீங்கள் ungal வேலையிடத்தில் nadakka வேண்டி இருப்பது நல்லதே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ராஜ் குமார்.

      Delete
  31. மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை,
    >>>
    மட்டன் பிரைன் சாப்பிட்டா உங்க பிரைன் வளரும்ன்னு யாராவது சொன்னாங்களா?!

    ReplyDelete
    Replies
    1. ஏன் அக்கா, இருக்கிற மூளை படுத்துற பாட்டையே தாங்க முடியலை, இது இன்னும் வளர்ந்தா என்ன ஆகிறது.

      Delete
  32. பில் வந்தது.... பே பண்ணினீங்களா இல்லையா..?

    ReplyDelete
    Replies
    1. பண்ணியாச்சி சகோ

      Delete
  33. திருப்பூர் படையப்பா வும் ருசிதான்

    ReplyDelete
    Replies
    1. முயற்சித்து பார்த்து விடுகிறேன்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...