சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 23, 2012

சென்னையின் மிச்சமுள்ள ஆங்கிலேயர்களின் அடையாளங்களில் ஒன்றான மனித சித்ரவதை கூடம்

சென்னையில் இது போன்ற இடம் இருப்பது நம்மில் முக்கால்வாசிப் பேருக்கு தெரியாது. ஏன் எனக்கு கூட சில மாதங்கள் முன்பு வரை தெரியாது. என்னுடன் பணிபுரியும் சகஊழியர் சொன்ன பின்பு தான் தெரியும்.

பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில்வே ஸ்டேசனில் இறங்கியதும் நடைமேம்பாலத்தில் ஏறியதும் பெரம்பூர் செல்ல ஒரு பக்கமும் கேரேஜ் ஒர்க்ஸ் செல்ல மறுபக்கமும் இறங்க வேண்டும். இதில் நீங்கள் கேரேஜ் ஒர்க்ஸ் பக்கம் செல்லும் பாதையில் இறங்க வேண்டும். படியிறங்கியதும் இடது பக்க திருப்பத்தின் முனையில் கேள் நாயக்கர் டீக்கடை சுருக்கமாக கேஎல்லார் டீக்கடை வரும். அதற்கடுத்து ஒரு பாழடைந்த கட்டிடம் தான் இது. மிகவும் சிதிலமடைந்த பகுதி இது.

சுதந்திரத்திற்கு முன்பு வரை ரயில்வே பொருட்களை திருடிய நபர்கள் பிடிபட்டால் நிர்வாணப்படுத்தி இதில் பின்புறமாக கட்டி வைத்து சக்கரத்தை சுழற்றினால் அப்படியே இறுகி மிகுந்த வலியை கொடுக்குமாம். அதன் பிறகு பிரம்பால் பின்புறத்தில் அடிப்பார்களாம். மூன்று நாட்கள் வரை அப்படியே கட்டி வைத்து பிறகே ஜெயிலில் அடைப்பார்களாம்.

சுதந்திரத்திற்கு பின்பு இந்த கொடூர சித்ரவதை நிறுத்தப்பட்டு இப்பொழுது கவனிப்பாறின்றி இந்த இடம் பாழ்பட்டு கிடக்கிறது.

எத்தனையோ மனிதர்களின் கதறல்களையும், வலியையும் கண்ட இந்த இடம் இன்று எதற்கும் சாட்சியின்றி மெளனமாக நிற்கிறது. சென்னையின் மையப்பகுதியில் இப்படியொரு மனித சித்ரவதை கூடம் இருந்தது என்பதை நம்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் உண்மை அதுதான்.

நீங்கள் யாராவது இந்தப் பக்கம வந்தால் ஒரு முறை சென்று பாருங்கள்.

 ஆரூர் மூனா செந்தில்

29 comments:

  1. கேள்விப்பட்டதுண்டு... இப்போது தான் படத்தில் பார்க்கிறேன்... என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து வேதனைப்படுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சென்னை வந்தால் கண்டிப்பாக விசிட் அடியுங்கள்.

      Delete
  2. இந்த இடத்தை திறந்தா வைத்திருக்கிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாங்க, கவனிப்பாரின்றி பாழடைந்து கிடக்கிறது.

      Delete
  3. எப்படி யாரும் கண்டுக்காம இருக்காங்க?

    ReplyDelete
    Replies
    1. அது ரயில்வே இடம்கிறதுனால அப்படியே இருக்கிறது.

      Delete
  4. கேள்விபடாத தகவல்... படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி..

    நல்ல வேலை, தற்போது அது போன்று காட்டுமிராண்டி தன தண்டனைகள் இந்தியாவில் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆயிஷா

      Delete
  5. கேள்வி பட்டது இல்ல பாஸ்...கொடுரமான தண்டனை கூடம் போல் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. சென்னை வந்தீங்கன்னா எனக்கு ஒரு கால் அடியுங்க ராஜ். என் தொழிற்சாலை அருகில் தான் இருக்கிறது. நான் அழைத்து செல்கிறேன்.

      Delete
  6. ஒருமுறை டிஸ்கவரி சேனலில் இந்த மாதிரி டார்ச்சர் மெஷின் பற்றியெல்லாம் விவரிச்சு கொண்டிருந்தபோது பார்த்த ஞாபகம். சென்னையிலும் இப்படியிருப்பது ஆச்சர்யமான விடயம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்கே தெரியாது சகோ

      Delete
  7. செந்தில் 20 வருசத்துக்கு முன்னாடி அயனாவரத்தில் படிச்சப்ப ஐசிஎஃப் கிரவுண்ட்தான் கிரிக்கெட் விளையாடுவோம். இந்த இடமும் போயிருக்கோம். அப்ப ஒரு வாட்ச்மேன் தாத்தா இருந்த ஞாபகம்.....

    வலிகள் மவுனமாக இருக்கும் இடம்.

    ReplyDelete
    Replies
    1. இருபது வருசத்துக்கு முந்தியா அப்ப நீங்க எனக்கும் அங்கிளா ஜெய்.

      Delete
    2. 20 வருசத்துக்கு முன்னாடி எனக்கு 12 வயசு அப்ப கணக்கு போட்டுக்க செந்தில்.

      எப்படி கணக்கு பார்த்தாலும் நான் உன்னைவிட ரெண்டேகால் மாசந்தான் பெரியவனாயிருப்பேன். சும்மா அண்ணே அப்படினே கூப்பிடு :-)))))))))))))))

      Delete
    3. அப்ப எனக்கு தம்பி. (வயச கொறக்க என்னா ஜிகிடி வேலைலாம் பாக்குறாங்கப்பா)

      Delete
  8. ஆச்சரியாமா இருக்கு! சித்திரவதைக் கூடத்தைப் பார்த்து இல்லை!
    இம்புட்டு இரும்பை எப்படி இவ்வளவு நாள் நம்ம பயலுவ விட்டு வச்சானுங்கன்னு!
    இப்ப சென்னையிலே மக்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதை வுட்டுட்டாங்களா என்ன?!

    ReplyDelete
    Replies
    1. நக்கலு, அது ரயில்வே இடம் யாராவது கைய வச்சா நொங்கு எடுத்துடுவானுங்க.

      Delete
  9. அதென்ன இங்கிலீஷ்காரன் இரும்பை திருடறவங்களைத்தான் கட்டி வைத்து அடித்தான்னு சொல்றீங்க!இரும்பு திருடர்கள் அப்போது இருந்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. இரும்புன்னு இல்லீங்க, ரயில்வே பொருட்கள் எல்லாம். ரயில் தயாரிக்க முக்கிய மூலப்பொருள் மரம் தான். மரத்தூள் தான் அன்றைய சமையலுக்கு முக்கியமான எரிபொருள். அப்புறம். மண்ணெண்ணெய், பெயிண்ட் இன்னும் பல.

      Delete
  10. இப்படியொரு இடமிருக்கிறது என்று எப்போதோ வாசித்ததாக ஞாபகம் இருந்தாலும்,அதை அப்போது நம்பவில்லை. இந்த இடுகையின் மூலம், ஊர்ஜிதமாகியதுடன், பல தகவல்களைப் புரிந்து கொண்டேன். புகைப்படங்களுடன் அருமையாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேட்டைக்காரன்

      Delete
  11. இன்ட்லி காட்ஜேட்டை எடுங்க! அதைப் பாருங்க புரியும்!

    ReplyDelete
    Replies
    1. எடுத்தாச்சி, நன்றி.

      Delete
  12. Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  13. அருமையான தகவல் ! நான் இதுவரை கேள்விபட்டதே இல்லை !
    ஒரே ஒரு முரண்பாடு...
    "சுதந்திரத்திற்கு பின்பு இந்த கொடூர சித்ரவதை நிறுத்தப்பட்டு இப்பொழுது கவனிப்பாறின்றி இந்த இடம் பாழ்பட்டு கிடக்கிறது. "
    சுலபமான முறையில் சித்ரவதை செய்வதை அறிந்ததால், இந்த பழைய முறை கைவிடப்பட்டுள்ளது. அதற்கான இடங்களும் மாற்றப்பட்டுள்ளது : )

    ReplyDelete
    Replies
    1. நன்றி கபிலன். இது அரசியல்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...