சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்த கதை

 இன்று நான் இவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு போவேன் என்று நினைக்கவேயில்லை. இன்று தங்கமணியை அழைத்துக் கொண்டு 12.30 மணிக்கு அயனாவரத்தில் உள்ள மருத்துவமனைக்கு போக வேண்டும். அதனால் 11.30 மணிக்காட்சிக்கு போக முடியாது. அதனால் இன்று சினிமாவை விட்டு விடலாம் என்று தான் எண்ணினேன்.


காலை 7.30 மணிக்கு எதேட்சையாக ஏஜிஎஸ் வெப்சைட்டை பார்த்ததும் ஆச்சரியத்தில் விசிலடித்தேன். ஏனென்றால் பெரிய மாஸ் ஹீரோக்கள் படங்களுக்கு தான் 9 மணிக்காட்சியோ காலை  மணிக்காட்சியோ போடுவார்கள்.

இந்த படத்திற்கு எதிர்பார்க்கவேயில்லை. இருந்தாலும் எத்தனை இருக்கைகள் நிறைந்து இருக்கிறது என்று பார்க்க வெப்சைட் உள்ளே நுழைந்தால் மூன்று வரிசை இருக்கைகள் முழுவதும் நிறைந்ததாக காட்டியது.

மற்ற இருக்கைகள் காலியாகத்தான் இருக்கிறது, நேரிலேயே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று திரையரங்கிற்கு விரைந்தேன். பைக் ஸ்டாண்டில் பார்த்தால் இரண்டு பைக்குகள் மட்டுமே நின்றிருந்தன. ஆச்சரியத்துடன் பைக்கை விட்டு டிக்கெட்டை எடுத்து அரங்கிற்குள் நுழைந்தால் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார். யோசித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன்.


படம் இடைவேளையில் தான் தெரிந்தது என்னுடன் அமர்ந்து படம் பார்த்தவர்கள் 20 பேர் மட்டுமே. அடப்பாவிகளா எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க. அதே சமயம் காலை வேளையில் ஏகப்பட்ட போன்கால்கள் வந்து என்னை படத்துடன் ஒன்ற விடாமல் செய்தது. நல்லாயிருங்கடா.

--------------------------------------

படத்தில் முதலில் அறிமுகமாவது நாயகியாக இருந்தாலும் சின்னப் பொண்ணாக தெரிந்ததால் யோசித்தேன். அடுத்த காட்சியில் பிந்து மாதவியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன் இவர் தான் நாயகியோ என.

ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் பிந்துமாதவியை முதல் காட்சியில் பார்த்ததும் பிரச்சோதகம் பீறிக்கிட்டு கிளம்பியது. ஐந்து நிமிடம் என்னை நானே ஆசுவாசப்படுத்தி சமாதானமடந்தேன். இவரிடம் நிறைய விஷயம் இருக்கிறது. சரியாக டியூனானால் சிலுக்கை விட அதிக உயரத்திற்கு போவார்.


நாயகி ஸ்ரீதிவ்யா பேரழகினு எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கவனி்க்க வைக்கும் களையான முகம். எல்லோருக்கும் பதின்ம வயதில் வரும் விடலைக் காதல் இவளை அந்த வயதில் நான் பார்த்திருந்தால் எனக்கும் பெரிதாகவே காதல் பூத்திருக்கும். இந்த எருமை மாட்டு வயசில எப்படி வரும்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது.

---------------------------------------

எதிர்நீச்சல் பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட அந்த சுவாரஸ்யம் இதில் சற்று குறைவு தான். ஆனாலும் சரியாக இரண்டரை மணிநேரமும் பார்த்து சிரித்து மகிழ ஏற்ற படம் இது,

படம் முடிந்து வெளியில் வருகிறேன். தியேட்டரில் பயங்கர கூட்டம், முழுக்க முழுக்க காலேஜ் பசங்க தான். இந்த எதிர்பார்ப்பை சில வருடம் தக்க வைத்துக் கொண்டால் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகர்களுள் ஒருவராகி விடுவார்.

கரெக்டா சொல்லனும்னா ஜஸ்ட் காமெடி டைம் பாஸ் மூவி.

படம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக 20 நிமிடத்தில் விமர்சனத்தை போட்டு விட்டு தங்கமணியுடன் மருத்துவமனைக்கு கிளம்பி போய்விட்டேன்.

ஆரூர் மூனா செந்தில்

16 comments:

  1. Replies
    1. ஆமாங்க, ஆனால் 11.30 காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது.

      Delete
  2. நம்ம சங்கத்துப்பேரை வச்சதுக்காவது
    நானும் நாளைப் பார்க்க உத்தேசித்துள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்து விமர்சனம் எழுதுங்கள் நன்றி அய்யா

      Delete
  3. எனக்கும் பிடித்தது.. விமர்சனம் சுடச்சுட தயாராகிட்டு இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. போடுங்கள் நானும் பார்த்து மகிழ்கிறேன்

      Delete
  4. சிவா-கு போட்டியா ஆ.மூ.செந்தில்தான்-னு கோடம்பாக்கம் ஃபுல்லா ஒரு பேச்சு பரவிக்கிட்டு இருக்குது போல...

    ReplyDelete
    Replies
    1. அப்படி நம்புனா அடுத்த படத்துக்கு நான் தான் ஹீரோவா

      Delete
  5. Replies
    1. நன்றி சிவஞானம்ஜி

      Delete
  6. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் .... பாஸ் ...
    நாங்களும் பயணத்துல கூட வரலாமா ...???

    ReplyDelete
  7. நான் இன்று வாசித்த அனைத்து பக்கங்களிலுமே பதிவர் சந்திப்பை பற்றிய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது ... மகிழ்ச்சியாக இருந்தது ... என்றேனும் ஒரு நாள் நானும் அதன் பகுதியாக இருக்க ஆசையாக இருக்கிறது ...!!!

    ReplyDelete
  8. படம் பார்த்த கதையும் படவிமர்சனமும் நன்று! வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  9. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
    http://blogintamil.blogspot.com/2013/09/5.html?showComment=1379718612357#c7139904404420736012
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...