சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, January 1, 2014

2014ம் ஆண்டிற்கான சபதங்கள்

அன்பு நண்பர்களே, அன்பர்களே, மகாதியான அடியார்களே, வாசக நண்பர்களே, தோத்தவண்டா வலைத்தள ரசிகர்களே, என் மீது வன்மம் கொண்டவர்களே, எதிர் முகாம்வாசிகளே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


என்னிடம் அருமையான 7 பதிவிற்குரிய விஷயங்கள் சிந்தனையில் இருந்தன. இடைப்பட்ட காலத்தில் ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் இருந்ததாலும் போன இடத்தில் பட்டறையைப் போட்டு மகாதியானத்தை வளர்த்ததாலும் பதிவு பக்கமே வர முடியவில்லை.

அந்த விஷயத்தை இனிமேல் யோசித்து சில நாட்களுக்குள் பதிவாக எழுத வேண்டும். இல்லையென்றால் மறந்து போய் விடவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் சமூகத்திற்கு என்னால் ஆற்ற முடிந்த கடமையை தவற விட்டதாகுமல்லவா.

சரி சென்ற 2013ம் ஆண்டு எப்படி இருந்தது என்றும் எடுத்த சவால்களை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறேன் என்பதையும் இந்த ஆண்டுக்கான சவால்களையும் பார்ப்போம்.


சென்ற ஆண்டு பெரிய சவால்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இரண்டே இரண்டு தான் எடுக்கப்பட்டது. ஒன்று அதுவரை இருந்த என் கடனை அடைப்பது, ஒரு நல்ல விஷயத்தை உருவாக்குவது.

நல்ல விஷயம் ஆண்டின் முதல் பாதியில் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி நல்ல படியாக இரண்டாம் பாதியில் அமைந்தது. எல்லா பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்க ஊக்கமாக அது இருந்தது.

கடன் தான் நான்கு மடங்கு எகிறி பத்து லட்சத்தை அனாயசமாக தாண்டி விட்டது. மிக முக்கியமான தேவையின் பொருட்டு வாங்கிய கடன் தான் என்பதால் மன திருப்தியுடன் அதனை அடைத்தாக வேண்டிய வேலையை தொடங்க வேண்டும்.


எடையை குறைக்க வேண்டுமானால் டயட்டை கடைபிடிக்க வேண்டும். நல்ல விஷயத்திற்காக டயட் சாப்பாடை செய்து கொடுக்க சிரமம் இருந்ததனால் சென்ற ஆண்டு டயட்டை துவங்கி ஒரு வாரத்திலேயே கைவிட வேண்டியது ஆகிற்று.

இரண்டு நாட்களுக்கு முன் முழு மகாதியானத்தில் வயக்காட்டில் மல்லாக்கப் படுத்து சிந்தித்ததில் உதயமானது இந்த ஆண்டிற்கான சபதங்கள்.

முதல் சபதம் தேவையில்லாமல் கோவப்படுவதை கைவிடுவது தான். சும்மாவே பொங்குவது, எங்கு பார்த்தாலும் காலரை ஏத்தி விட்டு திரிவது, வம்புக்கு வாங்கடா என்று வலியப்போய் எல்லாப் பிரச்சனையிலும் முன்னாடி நிற்பது என்று முன்னர் செய்த அலப்பறைகளை நிறுத்துவது தான். 


சற்று யோசித்துப் பார்த்தால் இது எல்லாமே அனாவசியம் என்று தோன்றியது. அதனால் இனிமேல் எங்கேயும் பொங்கலே கிடையாது. எல்லா இடத்திலும் சமாதானம் தான், அரே ஓ சாம்பா.

எந்த ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செயல்படுத்தத் துவங்கினாலும் அதனை பாதியில் நிறுத்துவதற்கும் ஆர்வமின்றி தொடர வேண்டியிருப்பதற்கும் முக்கியமான காரணம் மகாதியானம் தான். 

இதனால் கடந்த பத்தாண்டுகளில் நான் இழந்தது ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகள், எனவே மகாதியானத்தை இந்த ஆண்டு முழுவதும் நிறுத்துவது என்று முடிவு செய்து நேற்றிரவே கமண்டலத்தின் மீது சத்தியம் செய்தாகி விட்டது.

சத்தியத்தை தொடர வேண்டியது தான் எனக்கான சவால். நினைத்த இலக்கை அடைந்தவுடன் வேண்டுமானால் தொடர்ந்து கொள்ளலாம் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளேன்.

அடுத்தது கட்டுக்கடங்காமல் போன கடனை வரையறைப்படுத்தி படிப்படியாக அடைக்கத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டுக்குள் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்து விடுவேன் என்றே எண்ணுகிறேன்.

அடுத்தது எனக்கு மிகுந்த சிரமமான சவால், வேறென்ன வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி உடம்பை குறைப்பது தான். டயட்டை தொடர முடியாத காலத்தில் சாதாரண உணவுப்பழக்கத்திலும் டயட்டை தொடர முடிந்த காலத்தில் ஸ்ட்ரிக்ட்டான டயட்டிலும் இருந்து உடம்பை குறைப்பேன் என்று என் கணினி மீது சத்தியம் செய்கிறேன்.

சிறிது கூட பயிற்சி இல்லாமல் விளையாட்டாக பதிவெழுத துவங்கிய நான் இப்போது சொல்லிக் கொள்ளும்படி எழுதுவதே பெரிய விஷயமாக எண்ணுகிறேன். இதனை இன்னும் வளர்த்துக் கொண்டு எழுத்தின் தரத்தை உயர்த்த நிறைய பயிற்சி எடுத்து குறைவாக எழுதினாலும் தரமாக எழுத முயற்சிப்பேன் என்று உறுதி எடுக்கிறேன்.

குறும்பட ஆர்வம் பெரிதாக ஆரம்பித்து நான்கு படங்களுக்கு இதுவரை பக்கா ஸ்டோரிபோர்டு எழுதி வைத்தாகி விட்டது. ஆனால் என் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய வேலையின் காரணமாக படபிடிப்பு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

அதனையும் நல்லபடியாக எடுத்து முடிப்பேன் என்று உறுதி எடுக்கிறேன். ஒரு கைக்குட்டையும் சில காதல்களும் என்ற குறும்படத்தில் நாயகனாக நடிக்க இருக்கும் மயிலனை சில மாதங்கள் காத்திருக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி சென்னையில் சொந்த வீடு, சென்னையில் சொந்த மகிழுந்து, ரயில்வே உத்யோகத்தில் உயர்வு போன்ற இப்போதைக்கு அத்தியாவசியமிலலாத இலக்குகளை எல்லாம் சில வருடங்களுக்கு தள்ளி வைக்கிறேன்.

இத்தனை காலம் என்னையும் என் எழுத்துக்களையும் பொறுத்துக் கொண்டு ஆதரவையும் விமர்சனங்களையும் வழங்கிக் கொண்டு இருக்கும் பாசமிகு நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்பே சிவம்

ஆரூர் மூனா

45 comments:

  1. நீங்கள் உறுதி எடுத்துக் கொண்டது எல்லாம் நடக்க வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன், தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  2. அன்பே ஆரூர் மூனா.
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோகுல்

      Delete
  3. வாழ்த்துக்கள்ஜி............

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜமால்

      Delete
  4. இனிய புத்தாண்டு நலவாழ்த்துகள் செந்தில்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜிக்கா

      Delete
  5. yeppaa aanaa moonaa.sabatham pottatchille velaiyai aarambi. vaazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  6. மகாதியானத்தில் இல்லாத ஆள்கூட எனக்கு என்ன பேச்சு?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ஒரு வருசம் தான்ணா, மற்ற சபதங்களை முடிச்சிட்டு ஒடியாந்துர்றேன்ணா.

      Delete
  7. Replies
    1. நன்றி சார். என் நண்பன் சண்முகநாதன் என்ற செங்கோட்டைக்காரன் இருக்கான். அவனுக்கு நாங்கள் வைத்துள்ள பட்டப் பெயர் கூட வாத்தியார் பையன் தான். உங்கள் பெயரைப் பார்த்ததும் அவன் நினைவு வந்து விட்டது.

      Delete

  8. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாரதிதாசன் அய்யா, தங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      Delete
  9. நக்கீரனார் போன் பண்ணினாலும் நீங்க கோப படமாட்டீங்க அப்படிதானே ?

    ReplyDelete
  10. எண்ணியவை ஈடேற
    வாழத்துக்கள்

    ReplyDelete
  11. மகா தியானத்தை நிறுத்தப்போகிறீரா ? காமெடி கீமெடி பண்ணலையே...

    எல்லா வருடங்களை விட 2014 உங்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமையப்போகிறது... ஏன் என்று உங்களுக்கே தெரியும்... வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. உனக்கு புரிந்ததால் நன்றி பிரபா

      Delete
  12. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆங்கில நல்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தாங்கள் எடுத்த சபதங்கள் எல்லாம் ஈடேற எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொக்கன் அவர்களே

      Delete
  13. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே

      Delete
  14. சபதங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் ஐயா

      Delete
  15. உறுதி எடுத்துக் கொண்ட அனைத்தும்
    முழுமையாய் நிறைவேற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

      Delete
  16. Replies
    1. நன்றி அய்யா.

      Delete
  17. 31 டிசம்பர் 2014 அன்று இதே பதிவை மறுபதிவிட்டு நீங்கள் எடுத்த சபதங்கள் அனைத்தும் நிறைவேறிவிட்டன என்றொரு பதிவிட என் அன்பான வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி அஜீஸ் அண்ணே

      Delete
  18. wish you all success and fine articles awaiting from am senthil ji

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன் அவர்களே

      Delete
  19. Anna Keep it up..
    All the Best
    Wishing u and your family a very Happy New Year

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிதா சரண்

      Delete
  20. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேவதாஸ் சார்.

      Delete
  21. யோகம் வருதுய்யா..நல்ல விஷயம் கூட்டி வருதுய்யா..எல்லாத்தையும் மாத்தி, அதுஅதிர்ஷ்டத்தில் ஆழ்த்துமய்யா..புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. புதிய ஆண்டில் புதிய எண்ணங்கள் ,,
    செயல்கள்,,உங்கள் சபதங்கள்
    அனைத்தும் இனிதாய் நடந்தேற
    எனது வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  23. புத்தாண்டு ஒளிமிகுந்த சத்தாண்டாக மலர
    என் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் .

    ReplyDelete
  24. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே.
    மஹா தியானத்தை நிறுத்தப்போறிங்களா?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...