சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Showing posts with label ஹிட்டு சந்தோஷம். Show all posts
Showing posts with label ஹிட்டு சந்தோஷம். Show all posts

Sunday, November 6, 2011

ஒரு லட்சம் ஹிட்டடித்த நம்ம வலைப்பூ - வாசகர்களுக்கு நன்றி

ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 10 மாதமாகிறது . இதிலும் இடையில் 3 மாதங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்ததால் எழுதவில்லை. இந்த காலக்கட்டத்த்தில் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 100000 தை தொட்டு விட்டது. வலைப்பூ ரசிகர்களின் பேராதரவோடு ஹிட்களின் எண்ணிக்கை ஐந்திலக்கத்தை தொட்டு விட்டது. இது வரை வலைப்பூ பதிவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நம்ம பிளாக்கை இப்பொழுது தான் உறவினர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள் மத்தியில் பிரபலமாகி படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நண்பர்கள் ஆதரவுடன் நம்ம ப்ளாக் ஹிட்டு.

ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி



ஆரூர் முனா செந்திலு (தோத்தவன்டா)



Tuesday, September 13, 2011

கிடைத்தது மத்திய அரசு வேலை

ஒரு வழியாக அதோ இதோ என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருந்த ரயில்வே வேலை கிடைத்தே விட்டது. நான் 2000-ம் ஆண்டு ரயில்வேயில் அப்ரென்டிஸ் முடித்தவன். அன்றிலிருந்து நேற்று வரை சீனியாரிட்டி படி வேலை வரவில்லை. அதற்குள் நான் வேறு துறைக்கு வேலைக்கு சென்று விட்டேன். பிறகு சொந்தமாக பிஸினஸ் செய்து வந்தேன். இதற்கிடையில் நான் கடந்த ஜனவரியில் ரயில்வேயில் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நுழைவுத்தேர்வு எழுதினேன். தேர்வு முடிவுகள் வர தாமதமானதால் நான் அதைப்பற்றி மறந்தும் விட்டேன். நேற்று ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நான் தேர்வாகி விட்டதாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.

சந்தோஷம்.

இன்றிலிருந்து நான் மத்திய அரசு ஊழியர். அதுவும் ரயில்வே ஊழியர். நேற்று இரவிலிருந்து பார்ட்டிகள் தொடங்கி விட்டது. நேற்று வரை தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட இன்று தொடர்பு கொண்டு வாழ்த்துகின்றனர். பார்ட்டிக்கு நாள் குறிக்கின்றனர். இப்பொழுது கூட நான் பார்ட்டியில் பிஸி.
சரி நண்பர்களே. பார்ட்டி முடிந்ததும் சந்திப்போம்.


நன்றி


ஆரூர் முனா செந்திலு




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...