சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, January 26, 2013

டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்கள் உதவியாளர் வேலைக்குத் தேவை.

5 நாட்களில் விசா

டிப்ளமோவின் மெக்கானிக்கல், சிவில், ECE, எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள்

குறைந்தபட்சம் ஒரு வருடம் முன்அனுபவம் தேவை.

சம்பளம் : 650 சிங்கப்பூர் டாலர்

OT per Hour : 5 சிங்கப்பூர் டாலர்

ஒரு நாளைக்கு : 4 மணிநேர  OT கட்டாயம்

தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1600 சிங்கப்பூர் டாலர்

தங்குமிடம் இலவசம்

----------------------


பட்டப்படிப்பு முடித்தவர்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1400 சிங்கப்பூர் டாலர்

தங்குமிடம் இலவசம்

----------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, January 25, 2013

பிளாக் ஹாக் டவுன் (Black Hack Down)



நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.

சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.

சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.

இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.

அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.

இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.

இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.

ஆரூர் முனா செந்தில்


டிஸ்கி : நண்பர்களே இது ஒரு மீள் பதிவு

Thursday, January 24, 2013

ஐ சப்போர்ட் கமல்ஹாசன்

சின்ன வயதிலிருந்தே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. எந்த ஒரு குழுவிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் என இரு பிரிவு இருக்கும். நான் ரஜினி ரசிகர் குழுவில் இருந்தேன். அந்த வயதில் எந்த காரணமும் இல்லாமல் ரஜினியை பிடித்ததனால் கமலை பிடிக்காது.


தளபதியும் குணாவும் ஒரே நாளில் வெளியான போது குணாவை மொக்கை என்று கிண்டல் செய்து எங்கள் தெருவில் போஸ்டர் எல்லாம் ஒட்டினோம். போஸ்டர் என்றால் காசு கொடுத்தா அடிக்க முடியும். நோட்டு புத்தகத்தில் இருந்து பேப்பரை கிழித்து அதில் எழுதி சோற்றுப்பருக்கைகளை கொண்டு ஒட்டுவோம்.

அதே போல் பாண்டியனும் தேவர் மகனும் ஒரே நாளில் வெளியான போது கமல் ரசிகர்களிடம் இருந்து அதே போன்றதொரு அவமானத்தை நாங்கள் திரும்ப வாங்கிக் கொண்டோம். எனக்கு கூட தேவர்மகன் அளவுக்கு பாண்டியன் சூப்பர் ஹிட்டாக அமையவில்லையே என்று அழுகையாக வந்தது.

பிறகு வயது ஏற ஏற மெச்சூரிட்டி வந்து எந்த படத்தை நாங்கள் மொக்கை என்று காலி செய்து கழுவி ஊத்தினோமோ அதே குணா எனது சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தில் கமலின் உழைப்பு அசர வைத்தது.


அன்றும் இன்றும் என்றும் எனது பேவரைட் படம் அன்பே சிவம் தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த படம் தான். ஆனால் அந்த படம் கூட சரியாக ஒடவில்லை. இன்று நமக்கு சரியான மொக்கை என்று நாம் நினைக்கும் கமல் படம் சில வருடம் கழித்து மறக்க முடியாத படமாக அமைகிறது.

இப்பொழுது விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு இந்த படத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லை. எப்பொழுதும் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்க்கும் நான் இந்த படத்திற்கு முன்பதிவே செய்யவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் கமலை ஆதரிக்காவிட்டால் மனிதநேயமிக்கவனாக இருக்கமாட்டேன் என்று தோன்றியது.

அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு படம் எடுத்து வெளியில் வந்து நல்லாயில்லா விட்டால் அதுவே ஆட்டோமெட்டிக்காக பெட்டிக்குள் போகப் போகிறது. அதுவும் கமலின் படங்களுக்கு இரண்டே நிலை தான். சூப்பர் ஹிட்டு அல்லது சூரமொக்கை. சீண்டாமல் விட்டிருந்தாலே அது பாட்டுக்கு வந்து போய் இருக்கப் போகிறது.


படத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவனை வில்லன் போல் காண்பித்தால் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாகும் என்று நீங்கள் நினைப்பது நகைப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. இதே கமல் தான் ஹேராம் படத்தில் ஒரு இஸ்லாமியனான ஷாருக்கானை நல்லவனாகவும் தீவிர இந்துத்வாவான கமலை கெட்டவனாகவும் சித்திரித்திருந்தார். அதற்காக இங்குள்ள இந்துக்கள் எல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனாரா என்ன.

இத்தனைக்கும் படம் அட்டர் பிளாப். படம் பார்க்க போனவன் எல்லாம் இன்டர்வெல்லுடன் வெளியில் தெறிச்சி ஓடி வந்தான். சீண்டப்படாமல் போனதாலேயே அது புறக்கணிப்பட்டது. அது போல் இந்த படத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அதுவும் மொக்கையாக இருந்திருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும்.


இப்பொழுது வீணான பிரச்சனையை கிளப்பி படத்திற்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டியை கிளப்பி விட்டீர்கள். இது தேவையற்ற பிரச்சனை என்று நான் நினைப்பதால் கமல்ஹாசன் பக்கம் நான் நிற்கிறேன்.

இது நியாயமற்றது. ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு தங்களது சமூகத்தை அவமானப்படுத்துகிறது என்று நினைத்தால் அது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும். மற்றவர்களும் பார்த்து சொல்வது தானே நியாயமாக இருக்கும். ஒரு படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து படத்தினை வெளியிட விடாமல் தடுக்க முடியுமென்றால் எதற்கு அரசாங்கம். நிர்வகிக்க மக்கள் பிரதிநிதிகள் எதற்கு.

இடையில் ஒருவர் ப்ளஸ் விட்டு பொங்குகிறார். கமல்ஹாசன் முத்தக்காட்சியை வைத்து சமூகத்தை அவமானப்படுத்துகிறார் என்று. ஏனப்பா இவ்வளவு கட்டுப்பாடும் சம்பிரதாயங்களும் கொண்ட உன் சமூகத்தில் இருந்தே ஆர்யா படங்களில் முத்தக்காட்சியை வைக்கிறார். நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். சுத்தப்படுத்துவதை தங்களது இடத்தில் இருந்தே துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் ஆர்யாவை மன்னிப்பு கேட்க வைத்து பிறகு கமல்ஹாசனிடம் பொங்கலை வைத்துக் கொள்ளவும்.

ஒரு மதத்தினை பின்பற்றும் நீங்கள் உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு வந்து இது உங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று சொன்னால் அதை கேட்டு இணையத்தில் கண்டனம் தெரிவித்து இஷ்டத்திற்கு எழுதித் தள்ளுவது நியாயம் என்றால் ஒரு பகுத்தறிவுவாதியான நான் மற்றொரு பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார் என்று நான் நம்பி அவரை ஆதரித்து பதிவு எழுதுவதும் நியாயம் தான்.

தமிழ்நாட்டுல மட்டும் தானே நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். நான் ஆந்திராவுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தால் என்ன செய்ய முடியும். என்னைப் போல் பலர் காலைக் காட்சி பார்க்க ஆந்திரா கிளம்புகின்றனர். நகரியிலோ அல்லது புத்தூரிலோ பார்த்து விட்டு ஒரு மணிநேரத்தில் சென்னைக்கு திரும்பி விட முடியும். அநியாயமா ரஜினி ரசிகனான என்னை கமலுக்கு ஆதரவாக பதிவு போட வச்சிட்டீங்களே.

28ம்தேதி தடையை நீக்கினால் மறுபடியும் இரண்டாம் முறை பார்க்கப்போகிறேன். அவ்வளவு தான்.

படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களில் ஒருவனான


ஆரூர் மூனா செந்தில்




டிஸ்கி : நண்பர்களே மிக முக்கிய செய்தி சென்னையை அடுத்த ஆந்திராவின் எல்லையோர நகரான கூடூரில் படம் திரையிடப்பட்டு உள்ளது. அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலில் ஏறினால் இரண்டு மணிநேரத்தில் கூடூர் வந்துவிடும். அங்கு 40 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஹாயாக திரும்ப வந்து விடலாம்.



Wednesday, January 23, 2013

பெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு நடக்கிறதா?

ரொம்ப வருடங்களாக அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சென்னையில் பிரியாணி என்றால் என் முதல் சாய்ஸ் பெரியமேடு பிரியாணி தான். அதன் சுவையை அடிச்சிக்கவே முடியாது. இன்றும் கூட வெறும் 90 ரூபாய்க்கு நான்கு பெரிய பீஸ் மட்டனுடன் பிரியாணி கொடுக்கிறார்கள்.



எப்பொழுது சென்ட்ரல் பக்கம் வந்தாலும் வேலை முடிந்ததும் நடந்து வந்தாவது பெரியமேட்டில் பிரியாணி தின்று விட்டு பிறகு நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து ரயிலில் செல்வது வழக்கமாக வைத்திருந்தேன்.

நண்பர்கள் ஒன்று கூடி கெட்டூகெதர் பார்ட்டி குடும்பத்துடன் கொண்டாடினால் கூட விருந்துக்கு கிலோக்கணக்கில் இங்கிருந்து பிரியாணி வாங்கி கொண்டு போய் விழாவை சிறப்பிப்பது வழக்கம்.

நமது பதிவுலக நண்பர்கள் பலபேர் கூட பெரியமேடு பிரியாணி கடையின் வழக்கமான கஸ்டமர்களே. எந்தவித சர்ச்சையும் இன்றி இத்தனை நாட்கள் சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இரண்டு நாட்களாக போட்டு மனதை வருத்தப்பட வைத்துக் கொண்டு இருக்கிறது.



என்னுடைய நண்பனின் மாமா ஒருவர் விஜயவாடாவில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார். திங்களன்று நண்பன் வீட்டில் அவரை பார்த்து அளவளாவிக் கொண்டு இருந்தேன். பேச்சு பல இடங்களில் சுற்றித் திரிந்து பிரியாணிக்கு வந்தது.

நான் பெரியமேடு பிரியாணியைப் பற்றி அவரிடம் பெருமையாக கூற அவரோ 90 ரூபாய்க்கு நான்கு துண்டு மட்டனுடன் பிரியாணி வாய்ப்பே இல்லையென்றும் நான் வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்த்து சொல்வதாக கூறினார்.

அவரை அழைத்துக் கொண்டு நான் வழக்கமாக பிரியாணி சாப்பிடும் கடைக்கு அழைத்துச் சென்றேன். அந்தக் கடை பெரியமேடு மசூதியின் எதிர்ப்புறம் உள்ள சந்தில் முதல்மாடியில் உள்ளது. தரைத்தளத்தில் லாட்ஜ் மற்றும் பார்சல் கட்டித்தருவது உண்டு.

எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் அந்த இடத்திற்கு நாங்கள் சென்று சாப்பிட அமர்ந்தோம். பிரியாணி இலையில் பறிமாறப்பட்டது. மட்டன் துண்டுகளை கையால் சோதித்தும் சாப்பிட்டும் பார்த்தவர் இது மட்டனே கிடையாது வீல் என்று கூறினார்.

வீல் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. பிறகு விளக்கம் வெளியில் வந்து கேட்ட பிறகு தான் சொன்னார். மாட்டுக் கன்றுக்குட்டி கறி தான் ஆங்கிலத்தில் வீல் என்று கூறினார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது வழக்கமாக விஜயவாடாவில் நடைபெறும் ஒன்று தான் என்று சொன்னார். எலும்புத்துண்டுகள் மட்டும் மட்டனுடையது என்றும் கறித்துண்டுகள் எல்லாம் வீல் என்றும் அவை தெரியா வண்ணம் கலக்கப்படும் என்றும் சொன்னார்.

சரி இன்றும் மற்றொரு கடையில் சோதித்து பார்த்து விடலாம் என்று அதே சந்தில் முன்சொன்ன கடைக்கு முன்பு உள்ள மற்றொரு கடையில் இன்று சாப்பிட்டோம். அதையும் சாப்பிட்டுப் பார்த்து வீல் கறி என்றே சொன்னார்.

சொன்னவர் தனது வேலையை முடித்து விட்டு சத்தமில்லாமல் விஜயவாடாவுக்கு ரயிலேறி போய் விட்டார். கேள்விப்பட்ட நாங்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளோம். காலம்காலமாக சாப்பிட்டு வந்த கடையில் இந்தளவுக்கு டகால்டி நடக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வேளை அவர் சொன்னது பொய்யாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மையாக இருந்தால் இது ஏமாற்று வேலையல்லவா. நண்பர்களே தங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் பகிருங்கள். நான் சொன்னதில் தவறு இருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

எது உண்மை என்று புரியாமல் மண்டை குழம்பி கிடக்கும்


ஆரூர் மூனா செந்தில்

Tuesday, January 22, 2013

பயன்பாட்டில் இருந்த இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் இன்ஜின்

இந்தியா முழுவதும் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் ப்ராட்கேஜாக மாற்றப்பட்டு வருகின்றன. கிட்டத்த அனைத்து பாதைகளும் மாற்றப்பட்டு விட்ட நிலையில் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் ரயில்கள் சென்று கொண்டிருந்தன.

கடந்த மாதம் அவையும் நிறுத்தப்பட்டு ப்ராட்கேஜாக மாற்ற வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதுநாள் வரை ஒடிக் கொண்டு இருந்த ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் மற்றொரு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. 


இந்தியாவின் கட்டேக்கடேசியான உபயோகத்தில் இருந்த மீட்டர்கேஜ் இன்ஜின்கள் இவை தான். திருவாரூரில் இருந்த தம்பி தியாகேசன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த இன்ஜின்களை போட்டோ எடுத்து அனுப்பினார். அனுப்பிய தியாகேசனுக்கு நன்றிகள் பல. 


---

 
நீங்களும் பார்த்து வழியனுப்பி வையுங்கள். இனி மீட்டர்கேஜ் இன்ஜினை எங்கும் பார்க்க முடியாது.

நன்றி : தியாகேசன்


ஆரூர் மூனா செந்தில்

Monday, January 21, 2013

புத்தக கண்காட்சி - அறியாத தகவல்கள் - அரிய புகைப்படங்கள்

இந்துவா பொறந்தவன் கோயிலுக்கு போகலைனா தெய்வகுத்தம்னு சொல்றது போல பதிவெழுதுறவங்கன்னா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவா போடனும். கூடவே வாங்கின புத்தகங்களின் லிஸ்ட்டையும் விலையுடன் பகிரனும். இல்லைனா பிரபல(?) பதிவர்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.


ஆனா எல்லாப் பதிவர்களின் புத்தக கண்காட்சி பதிவையும் படித்துப் பார்த்தால் ஒரே டெம்ப்ளேட் தான். நானும் அதே போல் எழுவில்லையென்றால் ஆடையில்லாதவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்கிற மாதிரி என்னையும் ஒதுக்கிடுவாங்களோன்னு பயத்துல தான் இந்த பதிவு.

என்னடா தலைப்புல என்னன்னவோ விஷயங்கள் இருக்கிற மாதிரி இருக்கு, ஆனா பதிவுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லையேன்னு நினைக்கிறவங்க புத்திசாலிகள், வருங்காலத்தில் பிலாசபி பிரபாகரன் அளவுக்கு வம்பு வளர்க்கும் பதிவரா வளர வாய்ப்பிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு வீடுதிரும்பல் ப்ளாக்கை நினைவுபடுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.


தமிழ் டைப்பிங், பதிவை படிக்கிறது, பதிவை சுவைபட எழுதுவது போன்ற விஷயமெல்லாம் இரண்டு வருடத்திற்குள் தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே ஊறிய விஷயம். எனக்கு தெரிந்து 2002ம் ஆண்டிலிருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது.

அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.


இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகளில் எல்லாம் என்னுடைய அக்காமார்கள், மற்றும் தமிழாசிரியர்கள் எனக்கு நல்ல புத்தகம் என்று அறிமுகப்படுத்திய புத்தகங்களையெல்லாம் வாங்கி விட்டேன், பிறகு சிறந்த நாவலாசிரியர்கள் என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கியாகி விட்டது.

இந்த வருடம் வாங்குவதற்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் மற்றும் நண்பர் பாலகணேஷின் சரிதாயணம் மட்டும் வாங்கினால் போதும் பர்சை அவிழ்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் காஞ்சமாடு கம்புல புகுந்தது போல நிறையவே புத்தகங்களை வாங்கி விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சிகரமான தலைப்பு மட்டுமே.


கூடுதலாக இரண்டு சாப்ட்வேர் தமிழ்வழிக் கல்வி சிடிக்களை வாங்கினேன். போட்டோஷாப் மற்றும் வெப்டிசைனிங் தான் அவை. நேற்று போட்டோஷாப் சிடியை போட்டுப் பார்த்தேன், ஓரளவுக்கு புரிந்தது. இதை வைத்து இரண்டிலும் புகுந்து பார்த்து விட வேண்டியது தான்.

படித்து பார்த்தால் தான் இந்த புத்தகங்களின் தரம் புரியும். மீனாட்சி புத்தக நிலையத்தில் புகுந்து சுஜாதாவின் புத்தகங்களை கன்னாபின்னாவென்று வாங்கி விட்டேன், வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்த்தால் தான் தெரிகறது. ஏற்கனவே என்னிடம் இருந்த பல சுஜாதாவின் தொகுப்புகளில் இந்த நாவல்கள் இருக்கிறது என்று. எல்லாம் படித்த நாவல்கள்.

ராஜூ முருகனின் வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடராக இருந்தாலும் ஏற்கனவே எல்லா பகுதியையும் படித்து விட்டதால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது படித்ததெல்லாம் மறந்திருக்கும், அப்பொழுது வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு நாட்கள் பதிவுலக நண்பர்களோடு அளவளாவி கூத்தடித்தது நல்ல அனுபவம். நட்புகளை மேலும் நெருக்கமாக்கியது. நேற்று நானும் மெட்ராஸ் பவன் சிவாவும் சென்று பார்த்தால் ஒரு பதிவரையும் காணவில்லை. போரடிக்கவே அங்கிருந்து காமராஜர் அரங்கிற்கு கிரேசி மோகனின் கிரேசி கிஷ்கிந்தா நாடகத்திற்கு ஜூட் விட்டோம்.

பைக்கை எடுத்து வெளியில் வருவதே பெரும்பாடாகி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் போக்குவரத்து காவலர்கள் கார்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எப்படியும் ஆயிரம் கார்களுக்கு மேல் உள்ளே வரமுடியாமல் திரும்பி விட்டனர்.

நிர்வாகத்தினர் அடுத்த முறையாவது ஒழுங்கான இடத்தை தேர்வு செய்தால் வரும் மக்கள் நிம்மதியாக வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். போதும் ரொம்பவே பேசியாச்சு.

இனி பதிவர் மரபுப்படி நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன். அதில் சிறந்த புத்தங்களாக நான் நினைப்பதின் விமர்சனங்களை பகிர்கிறேன்.

தூக்கு கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி - விலை ரூ.200/-

மரப்பசு - தி.ஜானகிராமன் - விலை ரூ.100/-

வீடு கனவு இல்லத்துக்கான கைடு - தாஸ் - விலை ரூ.125/-

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன் - விலை ரூ.120/-

9/11 மாபெரும் சதியின் பின்னணி - பா.ராகவன் - விலை ரூ.150/-

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - விலை ரூ.250/-

வெளிச்சத்தின் நிறம் கருப்பு  மர்மங்களின் சரித்திரம் - முகில் - விலை ரூ.200/-

மோஸாட் இஸ்ரேலிய உளவுத்துறை - என்.சொக்கன் - விலை ரூ.110/-

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் - எஸ்.ராமக்கிருஷ்ணன் - விலை ரூ.225/-

அரவாணிகள் - மகாராசன் - விலை ரூ.210/-

சம்பிரதாயங்கள் சரியா - மஞ்சை.வசந்தன் - விலை ரூ.40/-

உடலினை உறுதி செய் - சி.சைலேந்திரபாபு - விலை ரூ.120/-

தோல் - டி.செல்வராஜ் - விலை ரூ.400/-

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - பா.ராகவன் - விலை ரூ.110/-

அமெரிக்க உளவுத்துறை FBI ரகசியங்கள் - என்.சொக்கன் - விலை ரூ.110/-

ISI நிழல் அரசின் நிஜ முகம் - பா.ராகவன் - விலை ரூ.120/-

கொலம்பிய போதை மாபியா - பா.ராகவன் - விலை ரூ.140/-

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - ராமன் ராஜா - விலை ரூ.220/-

தரணிகண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர் - எ.சங்கர்ராவ் - விலை ரூ.150/-

பாட்ஷாவும் நானும் சுரேஷ்கிருஷ்ணா - விலை - ரூ.125/-

போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

21ம் விளிம்பு - சுஜாதா - விலை ரூ.43/-

உயிராசை - சுஜாதா - விலை ரூ.22/-

24ரூபாய் தீவு - சுஜாதா - விலை ரூ.24/-

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - விலை ரூ.24/-

கமிஷனருக்கு கடிதம் - சுஜாதா - விலை ரூ.19/-

வடிவங்கள் - சுஜாதா - விலை ரூ.22/-

விபரீதக் கோட்பாடு - சுஜாதா - விலை ரூ.20/-

நீர்க்குமிழிகள் - சுஜாதா - விலை ரூ.11/-

ஓடாதே சுஜாதா - விலை - ரூ.24/-

சரிதாயணம் - பாலகணேஷ் - விலை ரூ.60/-

நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார் - விலை ரூ.15/-

கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார் - விலை ரூ.10/-

இது தான் மகாமகம் - தந்தை பெரியார் - விலை ரூ.3/-

புரோகிதர் ஆட்சி - கந்தையா பிள்ளை - விலை ரூ.12/-

யார் இந்த இராமன்? - அறிவரசன் - விலை ரூ.12/-

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள் - திக வெளியீடு - விலை ரூ.12/-

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் - விலை ரூ.15/-

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - திக வெளியீடு - விலை ரூ.10/-

சோதிட ஆராய்ச்சி - தந்தை பெரியார் - விலை ரூ.15/-

கடவளர் கதைகள் - சாமி - விலை ரூ.12/-

செயின்ட் கிட்ஸ் வழக்கும் பொது வாழ்க்கையும் - கி.வீரமணி - விலை ரூ.10/-

பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி -விலை ரூ.8/-

திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார் - விலை ரூ.5/-

ஆர்.எஸ்.எஸ் பற்றி - கி.வீரமணி - விலை ரூ.8/-

பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் - திக வெளியீடு - விலை ரூ.20/-

திருக்குர்ஆன் - திருக்குர்ஆன் அறக்கட்டளை - இலவசம்

அம்மா நீ வருவாயா - கவியாழி கண்ணதாசன் - இலவசம்


----------------------------

ஆரூர் மூனா செந்தில்




Sunday, January 20, 2013

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை



1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

டிஸ்கி : நெட்டில் படித்தேன் பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன். இதில் ஒரு வரி கூட நான் டைப்பவில்லை.

நன்றி : கானாடுகாத்தான் கிழவி, தமிழ்க்குடில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...