சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, April 14, 2013

சென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே.


எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் டிராபிக் ரூட்டை தெரிந்து கொள்வது எனக்கு ஒரு ஹாபி போல. திருவாரூரில் இருந்த வரை திருவாரூர், மன்னார்குடி, மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஊர்களின் வழிப்பாதையை சந்துபொந்து வரை தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.


கும்பகோணம் மட்டும் விதிவிலக்காக அதிகம் போகாத ஊராக இருந்தது. சென்னைக்கு வந்த பிறகு சிலகாலம் வழிதெரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. சில மாதங்களில் அதையும் தெரிந்து கொண்டேன். இதற்கு கூட ஒரு ஐடியா வைத்திருந்தேன். சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வந்தால் சென்னையில் வழிப்பாதையை தெரிந்து கொள்ளலாம் என்பதே அது.

அதையும் அப்ரெண்டிஸ் சேர்ந்த பிறகு மாலை வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்து மாதக்கணக்கில் சுற்றித் தான் தெரிந்து கொண்டேன். நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் பலஊர்களுக்கு மாற்றலானதால் அந்தந்த ஊர்களில் திரிந்து வழிப்பாதையை தெரிந்து கொள்வது என்னுடைய பெரிய பொழுதுபோக்கு.


பெங்களூர், மதுரை, விருதுநகர், ஐதராபாத், வாரணாசி, டெல்லியில் ஒரு பகுதி, நாகர்கோயில், கொச்சி, நெல்லூர் என பல ஊர்களில் வேலை பார்த்ததால் அந்தந்த ஊர்களில் எங்கிருந்து எங்கு செல்வது என்றாலும் எனக்கு அத்துப்படி.

ஆனால் பலஊர்களில் இதற்காக நான் பட்ட சிரமங்கள் எனக்குத்தான் தெரியும். திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்க்க செல்லும் போது தங்கியிருந்த இடம் கழக்கூட்டம். அங்கிருந்து சாஸ்தாமங்கலம் என்ற ஏரியாவுக்கு செல்வதற்காக கம்பெனியின் பழைய ஸ்கூட்டரில் சக ஊழியருடன் புறப்பட்டேன்.

அது எனக்கான சுக்ரதிசை நாள் என்று தெரியாமல் போய் விட்டது. அந்த ஸ்கூட்டருக்கு ஒரு தன்மை உண்டு. வண்டி புறப்பட்டதும் மூன்று கிலோ மீட்டர் ஒழுங்காக செல்லும் பிறகு கார்ப்பரேட்டர் அடைத்துக் கொள்ளும். மெக்கானிக்கிடம் காட்டி அடைப்பை எடுத்து விட்டால் தான் மறுபடியும் ஸ்டார்ட் ஆகும்.


மறுபடியும் மூன்று கிலோமீட்டர் செல்லும். மறுபடியும் கார்ப்பரேட்டர் அடைப்பு, மெக்கானிக் சரிசெய்ய வேண்டும். இந்த கதை எனக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். அந்த சமயம் எனக்கு மலையாளத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாது.

திருவனந்தபுரத்திற்கும் புதுசு. தட்டுத் தடுமாறி ஒவ்வொரிடமும் வழிகேட்டு செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. கழக்கூட்டத்திற்கும் சாஸ்தாமங்கலத்திற்கும் 17 கிலோமீட்டர். மதியம் சாப்பிட்டு விட்டு புறப்பட்ட நாங்கள் வண்டியை சரிசெய்து சாஸ்தாமங்கலத்திற்கு செல்வதற்கு மாலை ஆறுமணியாகி விட்டது.

வண்டியை அன்று தள்ளி தள்ளி ஏகக்கடுப்பாகி விட்டது. இரவு நெடுநேரம் கழித்து திரும்ப வேண்டியதாகியதாலும் கேரளாவில் ஒன்பது மணிக்கெல்லாம் ஒயின்ஷாப்பை அடைத்து விடுவார்கள் என்பதாலும் ஆபீசில் இருந்த நண்பர்களிடம் ரெண்டு புல் வாங்கி வைக்கச் சொல்லியிருந்து அன்று இரவு முழுவதும் குடித்து தீர்த்து தான் அசதியை போக்க முடிந்தது.


அன்றிலிருந்து நான் கேரளாவை விட்டு திரும்பும் வரை எல்லோரும் எனக்கு சாஸ்தாமங்கலம் என்று பெயரிட்டு கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அதுபோலவே அந்த ஸ்கூட்டரை நான் கேரளாவை விட்டு செல்லும் வரை தொடவே இல்லை.

1997ல் நான் சென்னைக்கு வந்த புதிதில் என் பெரியப்பா பையன் சதீஷ் "மை இந்தியா" என்ற படத்திற்கு பிரிவியூ இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தான். என்னுடன் என் நண்பன் இந்திரனை அழைத்துக் கொண்டு சென்றோம்.

வழி தெரியாது என்பதால் பெரியார் நகரிலிருந்து எப்படி செல்ல வேண்டும் என்று க்ளாஸ் எடுத்தான். பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் 42 பஸ் பிடித்து பாரிமுனை சென்று அங்கிருந்து சைதாப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி எதிர்பக்கம் சென்றால் ராணிசீதை ஹாலின் பக்கத்து ரோட்டில சென்றால் இந்த பிரிவியூ தியேட்டரை அடையலாம் என்று.

நாங்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக பாரிமுனையில் இறங்கி மற்றவர்களிடம் விசாரித்து சைதாப்பேட்டைக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி அந்த இடத்தை விசாரித்து சென்று அடைந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் போல் இருவரும் உணர்ந்தோம்.

இத்தனைக்கும் என்னுடன் வந்த நண்பன் இந்திரன் அக்மார்க் சென்னைக்காரன்.

ஆரூர் மூனா செந்தில்

13 comments:

  1. அட ஆமாண்ணே நம்ம ஊர்லலாம் ஒரே ரூட் தான் எந்த பஸ்ல ஏறுனாலும் நம்ம ஊர தாண்டி தான் போகணும் சென்னைல எத்தன பஸ் மாறி மாறி போக வேண்டி இருக்கு 47b 7a 117c அப்படின்னு குழப்புரங்க ஸ் ஸ் ஸ் முடியல்ல

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் ரூட் கொஞ்சம் பழகிடுச்சின்னா, பஸ் நம்பரே தேவையில்லை. செல்லும் வழிகளை வைத்தே போய் விடலாம். ஆனால் இன்னும் ஊரிலிருந்து வரும் சிலர் அந்த வழியாக செல்லும் வேறு பேருந்துகள் வந்தாலும் ஏறமாட்டார்கள். அந்த குறிப்பிட்ட இலக்க பேருந்து வந்தால் தான் ஏறிச் செல்வார்கள்.

      Delete
  2. சென்னையில் ட்ராவல் கார் ஓட்டும் பல ட்ரைவர்களுக்கு வழியே சுத்தமாத் தெரியாது. யாரையாவது போய் விசாரிச்சுட்டு வாங்கன்னா.... யாருக்கு உண்மையாவே ஒன்னுமே தெரியாதோ அவுங்களைக் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சு அவுங்ககிட்டே கேட்டுக்கிட்டு வருவாங்க. வழி சொல்லும் ஆசாமியும் தெரியலைன்னு ஒப்புக்கொண்டால் தகுதிக் குறைச்சல் என்று எதாவது ஒரு தவறான வழியைச் சொல்லுவார்!!!


    கடைசிப்படம் சூப்பர்!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசி கோபால் அம்மா

      Delete
    2. மூனா,

      எனக்கென்னமோ சென்னையில் வழி கண்டுப்பிடிப்பது தான் எளிதாக தெரிகிறது, எப்படியும் ஒரு லேண்ட் மார்க் இருக்கும்,அதுக்கிட்டே போய் சேர்ந்திடலாம். அங்கே இருந்து சரியான இடத்தினை அடைய தான் கொஞ்சம் மெனக்கெடனும்.

      ஆனால் நிறைய பேரு தப்பான லேண்ட் மார்க் சொல்லிடுவாங்க, அவங்க சொன்ன லேண்ட் மார்க் எங்கேயோ இருக்கும்,ஆனால் அதுக்கு பக்கம்னு சொல்லி அலைய விடுவாங்க,அதான் பிரச்சினையே :-))
      -------------

      துளசிகோபால் மேடம்,

      சென்னையில் டிராவல் கார் ஓட்டுறவங்க எல்லாம் வெளியூர் ஆட்கள்,அதுவும் அப்போ தான் வந்து சேர்ந்திருப்பாங்க,6 மாசம் மேல ஒரே இடத்தில வேலையில இருப்பதில்லை,எனவே எப்போதும் புது டிரைவர்களே இருப்பதால் இந்த நிலை. சிலப்பேர் அவங்க ஊருல ஓட்டுறாப்போல ,சிக்னல் பார்க்காம,சைட் பார்க்காம காட்டுத்தனமா வேற ஓட்டுறாங்க :-))

      Delete
    3. வவ்வால்,

      வந்து சில மாதங்கள் கழித்து ஒரு லேண்ட் மார்க்கை சொல்லி கண்டுபிடிப்பது சிரமமான காரியமாக இருக்காது. வந்த சில தினங்களில் கண்டுபிடிப்பது சிரமம் தானே.

      Delete
  3. சென்னை வந்த புதுசில எனக்கும் துளசி டீச்சரின் அனுபவம்தான் செந்தில். தெரியாட்டி தெரியாதுன்னு சொல்ல மாட்டாங்க நொன்னைங்க... இப்டிக்கா ரைட்ல போயி, லெஃப்ட்ல திரும்புன்னு ஏதாவது சொல்லி தேவையில்லாம அலைய விடுவாங்க. சென்னையின் தனி முகம்! இப்போ எல்லா ஏரியாவும் ஓரளவு பழகி விட்டது! உங்களின் அனுபவஙகளை விவரித்த விதம் சுவாரஸ்யம்!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் கணேஷ அண்ணே. பல முறை இவர்களிடம் வழிகேட்டு ஓய்ந்து போய் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமலே வந்திருக்கேன்.

      Delete
  4. ஆமாங்க வவ்வால். நீங்க சொன்னது ரொம்பச்சரி. காளிகாம்பாள் கோவிலைத்தேடி அலைஞ்சோம். ட்ரைவர் அன்னிக்குதான் வேலையில் சேர்ந்துருக்கார்ன்னு அப்புறம் தெரிஞ்சது.

    அட்லீஸ்ட் ஒரு மேப் வைக்கலாம் வண்டியில். அதுவும் இல்லை:(

    அப்புறம் லேண்ட் மார்க்ன்னு ட்ரான்ஸ்ஃபார்மர், பால் பூத் எல்லாம் சொல்வாங்க. சாலைகள் பெயர் மாற்றம் வேறு. மகாராஜபுரம் சந்தானம் சாலைன்னு ஸ்ரீ கிருஷ்ணகான சபாவுக்கு ஒரு நாள் அலைஞ்சோம். கடைசியில் க்ரிஃபித் ரோடு அது. முப்பாத்தம்மன் கோவிலாண்டைன்னு சொல்லி இருந்தால் சட்னு கொணாந்துருப்பேனே ன்னு ஆட்டோக்காரர் சண்டைக்கு வந்தார்:[-)

    ReplyDelete
    Replies
    1. இன்று அனைத்து கால்டாக்ஸி காரர்களுக்கும் நாம் தான் வழி சொல்ல வேண்டியிருக்கிறது துளசி அம்மா.

      Delete
  5. நான் சென்னையில இருந்த ஒரு வருஷமும் எனக்கு வேற மாதிரியான லக் அமைஞ்சது. சென்னையிலேயே 2 ஆண்டுகள் பணம் கலெக்சன் செய்யும் வேலையில் இருந்த நண்பர் பல இடங்களையும் பற்றி நான் சென்னைக்கு போகும் முன்பே தெளிவாக சொல்லிவிட்டார்.

    திங்கள் கிழமை காலை 6.45 மணிக்கு முதன் முதலில் தி.நகர் மூசா சாலையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லும்போது, பெட்டி படுக்கையுடன் சென்றேன். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி ரங்க நாதன் தெரு (கூட்டமே இல்லை) வழியாக நடந்து தி.நகர் பேருந்து நிலையம், பர்கிட் ரோடு வழியாக போய் குறிப்பிட்ட இலக்கை சரியாக அடைந்துவிட்டேன். இதில் இன்னொரு விசேசம் என்னவென்றால், நான் மாம்பலம் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது கையில் இருந்த லக்கேஜ்களை பார்த்துவிட்டு ஆட்டோக்காரரகள் சூழ்ந்தார்கள். அப்போது சென்னையில் இருந்த நண்பர் சொல்லிக்கொடுத்த மாதிரி, "தேங்க்ஸ்னா....பக்கத்துலதான் வீடு..." என்று சொல்லிவிட்டு அந்த பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி ரொம்ப கேஷூவலாக நடந்து சென்றது இந்த பதிவைப்பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது.

    -------------------------------
    பிறகு கேமரா லைனில் பணிபுரிந்தபோது ஷூட்டிங் வண்டியிலும், இன்னொரு மீடியேட்டரின் டூவீலரிலும் அடிக்கடி வெளியே சென்றதால் நன்றாக வழி தெரிந்தது. பிறகு நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு ரெண்டு இடங்களிலும் அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதால் பழைய சைக்கிள் வாங்கி விட்டேன்.

    நான் தங்கியிருந்த புரசைவாக்கம் ஏரியாவில் இருந்து பேருந்தில் வடபழனிக்கு வருவது என்றால் பீக் ஹவரில் ஒண்ணரை மணி நேரம் கூட ஆகும். ஆனால் சைக்கிளில் நியூ ஆவடி ரோடு வந்து பச்சையப்பா கல்லூரி, நெல்சன்மாணிக்கம் ரோடு, சூளைமேடு ஹை ரோடு, கோடம்பாக்கம் பாலம், என்று வரும்போது 20 முதல் அரை மணி நேரம்தான் ஆகும். அது தவிர வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கும், வடபழனியில் இருந்து தசரதபுரத்துக்கும் நடக்கும் நேரமும் மிச்சம்.
    ------------------------------

    பேருந்தில் செல்லும் சூழ் நிலை வந்தால் நான் இருக்கும் பகுதி என்றில்லை, இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி உள்ள சாலையில் செல்லும் பேருந்து வந்தால் கூட ஏறி விடுவேன். நள்ளிரவில் பல நேரங்கள் அப்படி ஆனது உண்டு. ஒரு சில சமயம் நள்ளிரவு 2 மணி சமயத்தில் நைட் சர்வீஸ் பேருந்துகளில் வந்து ஈகா தியேட்டர் அருகில் இறங்கி குறுக்கே நடந்து சென்று ரோந்து போலீசார் நிறுத்தி கேள்வி கேட்கும்போது திணறாமல் ரொம்ப கேஷூவலாக பதில் சொல்லிவிட்டு வந்த அனுபவமும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சரவணன்

      Delete
  6. நல்ல அனுபவம்தான்! மெட்ரொ ரயில் குழப்படியில் இப்போது கொஞ்சம் வழி கண்டுபிடிப்பது சிரமமாகத்தான் உள்ளது சென்னையில்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...