சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, April 5, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

ஏற்கனவே டெல்லிபெல்லி படத்தினை பார்த்து விட்டதாலும் இரண்டரை மணிநேரம் தியேட்டரில் அமர்ந்திருக்க உடல்நிலை ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் இருந்ததாலும் படத்திற்கு போவதை தவிர்த்து வீட்டிலேயே அமர்ந்து விட்டேன்.


ஒன்னேமுக்கால் மணிக்கு ஒரு அலாரம் மண்டையில் அடித்தது. 2லிருந்து 4 வரை கரண்ட் இருக்காது. வீட்டில் சும்மா உக்கார்ந்து இருப்பதை விட திரையரங்கிற்கு செல்லலாம் என்று நினைத்து ராசா வண்டியை தியேட்டருக்கு விட்டேன்.

1.45க்கு ஆரம்பித்த படம் 4 மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. டெல்லிபெல்லியில் பல ராவான காட்சிகளையும் வசனங்களையும் பார்த்து மிரண்டு போன எனக்கு இந்த படம் படுசைவமாகவே தெரிந்தது.


டெல்லிபெல்லியில் இரண்டு காட்சிகள் படுஆபாசமாக இருக்கும். வீட்டு ஓனர் ஒரு கில்மாவிடம் இருக்கும் போது குணால்ராய் கபூர் அவருக்கு தெரியாமல் போட்டோ எடுத்து விட்டு கில்மாவின் அந்த இடத்தை அமுக்கி ஜாக்கெட்டுக்குள் பணத்தை சொருகும் காட்சி.

இன்னொன்று அதுபோல் பூர்ணா ஜெகந்நாதன் கணவனிடம் இருந்து தப்பிக்க ஹோட்டலுக்கு வந்து ஒரு அறையினுள் இம்ரான்கானும் பூர்ணா ஜெகந்நாதனும் கில்மாவில் ஈடுபடுவது போல் நடிக்கும் ஒரு காட்சி.


தமிழில் இரண்டையும் தான் எப்படி எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். குணால்ராய் கபூர் வேடத்தில் நடித்திருக்கும் சந்தானம் தனது குழுவினருடன் ஏதாவது யோசித்து காட்சியை மாற்றியிருப்பார் என்று பார்த்தால் அந்த காட்சியையே நீக்கி விட்டார்கள்.

அதே போல் ஹோட்டல் கில்மா காட்சியையும் ஆர்யாவும் அஞ்சலியும் போர்வைக்குள் இருப்பது போல் காட்சி ஆபாசமில்லாமல் எடுத்து விட்டார்கள். எனக்குத்தான் எதையோ எதிர்பார்த்த சப்பென்று ஆகிவிட்டது.


இனி டெல்லிபெல்லியை ஒதுக்கி வைத்து விட்டு சேட்டையை மட்டும் பார்ப்போம். மூன்று பத்திரிக்கைத் துறை நண்பர்கள், அவர்களிடம் ஆர்யாவின் காதலி மூலம் டையமண்ட் வந்து சேருகிறது. டையமண்ட் பற்றிய விவரம் அறியாமல் அவர்களிடம் இருக்கும் அதனை வில்லன் கைப்பற்ற முனைகிறார். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதே சேட்டையின் கதை.

ஆர்யாவுக்கு இது போன்ற படத்தில் நடித்ததற்காக கைவலிக்கும் வரை குலுக்கலாம். எந்தவித ஹீரோயிசமும் இல்லாத ஒரு ஹீரோ கேரக்டரில் நடித்ததற்காக. இன்ட்ரொடியூஸ் சீனில் பத்து பேரை பொளப்பதும், ஓரு ஹீரோயிச பாடலும் இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் நிஜமான கதாநாயகன் சந்தேகமில்லாமல் சந்தானம் தான். ஏற்கனவே பல படங்களில் பல காட்சிகள் ரீப்பிட்டு ஆனதால் காமெடி படங்களுக்கு செல்வதே கடுப்பாகி இருந்த சமயத்தில் சற்றும் சளைக்காமல் கவுண்ட்டர் காமெடி செய்து அசத்தியிருக்கிறார். இந்த ஆய் மேட்டர் புதுசா தமிழில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் சற்று குமட்டலாக இருக்கலாம்.

இந்தியில் பார்த்ததால் அதனை எந்த அளவுக்கு கெடுக்காமல் எடுத்திருக்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அதனை குறையின்றி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் டைட்டிலில் நகைச்சுவை சூப்பர் ஸ்டார் என்று போடுகிறார்கள். பாத்துக்கங்க தம்பி இந்த ஆணவத்துல அழிஞ்சவங்க தான் அதிகம்.

படத்தில் சந்தேகமில்லாமல் வேஸ்ட் கேரக்டர் பிரேம்ஜி தான். ஆனால் அந்த ஒரு பாடலுக்கு நடனமாடியதால் தப்பித்துக் கொள்கிறார். இதற்கு எதற்கு ஸ்டார் காஸ்ட் என்று தான் தெரியவில்லை. ஏதாவது புதுமுகத்தையே போட்டிருக்கலாம்.

ஹன்சிகா அழகாக இருக்கிறார் என்று சொல்வதே பார்மாலிட்டிக்கு சொல்வது என்று ஆகிவிடும். வேறென்ன விமர்சனம் என்றால் இது போல் சொல்வது தான் சம்பிரதாயம்.

அஞ்சலிக்கு அழகே பக்கத்து வீட்டு போன்ற ஒரு மேக்கப்பில்லாத எளிய தோற்றம் தான். ஓவர் மேக்கப் போட்டு கெடுத்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்து இருக்கிறார். நமக்கு அங்காடி தெரு அஞ்சலி போதுமப்பா.

படத்தின் மிகப்பெரிய தடைக்கல் பாடல்கள் தான். டெல்லிபெல்லியில் பாடல்களே இருக்காது. படமும் ஒன்றை மணிநேரத்தில் முடிந்து விடும். தமிழில் பாடல்கள் சேர்த்து இரண்டு மணிநேரமாக்கி விட்டு இருக்கிறார்கள்.

படத்தை பிரித்து மேய்கிறேன் பேர்வழி என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு செல்லாமல் சி கிளாஸ் ரசிகனாக சென்றால் விசிலடித்து கைதட்டி ரசித்து விட்டு வர ஒரு அருமையான பொழுது போக்கு சித்திரம் சேட்டை.

ஆரூர் மூனா செந்தில்


10 comments:

  1. எதிர்ப்பார்த்து ஏமாந்தால் சிறிது சிரமம் தான்... ஹிஹி...

    விமர்சனத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. நான் கூட அதையே தான் நினைச்சேன்.. தூக்கிட்டானுன்களா.... இந்தில மட்டும் எப்டி ஏத்துக்குரான்களோ.. என்ன இருந்தாலும் தியேட்டர்ல பாக்ர ஐடியா இல்ல

    ReplyDelete
  3. அப்போ டெல்லி பெல்லி அளவுக்கு இல்லை ! ! லிப் லாக்கிங்காவது உண்டா ???

    ReplyDelete
  4. "பொழுது போக்கு சித்திரம் சேட்டை " விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. அங்காடி தெரு அஞ்சலி - அப்படியே அடுத்த வீடு பெண் தான்... ஹ்ம்ம்... பெருமூச்சி விட்டேன் :)

    ReplyDelete
  6. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத தமிழ்ப்படங்களில் இதுவும் ஒன்று...

    ReplyDelete
  7. அண்ணே நான் பார்த்துட்டேன் எனக்கு பிடிச்சு இருக்கு

    ReplyDelete
  8. அதான் U Tv "மோஷன் "Pictures தயாரிசிருன்காங்களா

    ReplyDelete
  9. நமக்கு அங்காடி தெரு அஞ்சலி போதுமப்பா :) mmhhmm

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...