சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, February 4, 2012

ஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பகுதி 3



பிணங்கள் தோண்யெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 7 கூட்டாளிகளும் 07.07.1988 அன்று கைது செய்யப்பட்டனர். சங்கரின் மனைவி ஜெகதீசுவரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.

பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டைரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.

சங்கர் அவனுடைய காதலி விஜி, மது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் "பச்சை" குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான். மார்பில் 3வது மனைவி சுமதியின் பெயரை பொறித்திருந்தான்.

சங்கரின் 4வது மனைவியான பெங்களூர் லலிதாவை காணவில்லை. போலீசுக்கு பயந்து அவள் ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக மோகன் (ஆட்டோ சங்கர் தம்பி) போலீசாரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து திருவான்மியூர் பெரியார் நகரில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்று தோண்டினார்கள்.

சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்டு தரை இருந்தது. அதை தோண்டியபோது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு சிமெண்டு பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீசார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டியபோது உள்ளே எலும்புக் கூடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்புக்கூட்டின் மீது எந்தவித துணியும் இல்லை. நிர்வாணமாக இருந்தது. எலும்புக்கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர். லலிதாவை கொலை செய்து நிர்வாணமாக புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது. அது பெண்ணின் உடல்தான் என்று டாக்டர்கள் உறுதி செய்தனர். இதனால் ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:-

1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).

2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.

3. திருவான்மியூர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).

4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).

5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)

6. கோவிந்தராஜ் (வயது 28).

கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆரூர் மூனா செந்தில்
(தொடரும். . .)

இதன் முந்தைய பாகங்கள் பகுதி 1 / பகுதி 2

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...