சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, February 29, 2012

ஸ்பானிய பெண்ணுடன் 15 நாட்கள் நான்...சத்தியமா பொய் சொல்லலீங்க. ஆனா அதுக்காக இது கில்மாவும் இல்லைங்க. நான் 2006ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். அந்த ஆண்டு சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக அரசு டெண்டர் வெளியிட்டது. அந்த டெண்டரின் கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஏற்கனவே இது போன்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செய்திருக்க வேண்டும் என்று இருந்தது.

எங்கள் நிறுவனத்திற்கு அதற்கு முன் அது போன்ற வேலைகளில் முன் அனுபவம் இல்லாததால் அதற்குரிய அனுபவம் ஏற்கனவே பெற்றிருந்த ஒரு ஸ்பெயின் கம்பெனியுடன் ஜாயின்ட் வென்ச்சர் போட்டு இந்த டெண்டரை பெற எங்கள் கம்பெனி முனைந்தது. டெண்டர் போட்டு அந்த புராஜெக்ட் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

புராஜெக்ட் கிடைத்ததும் Project Analysis Report தயார் செய்வதற்காக அந்த ஸ்பெயின் நிறுவனத்தின் Planning Head ஆக இருந்த அலெக்ஸான்ரியா செ கார்லெ என்பவர் சென்னை வந்தார். எங்கள் பாஸ் என்னை அந்த அம்மிணிக்கு Co-Ordinator ஆக என்னை நியமித்தார். அதன் பணி என்னவென்றால் அந்த அம்மிணி சென்னை வந்ததும் விமான நிலையத்தில் வரவேற்பது முதல் அந்த அம்மிணி Prepare செய்யும் Project Analysis Report ஐ முடித்து திரும்பி அனுப்பி வைப்பது வரை நான் உடனிருக்க வேண்டும்.

ஆஹா நமக்குள் கற்பனை பறக்கிறது. அவளுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வது முதல் வரும் அம்மிணி நன்றாக இருந்தால் பிக்அப் செய்து ஸ்பெயினில் செட்டிலாகி விட வேண்டும் என்பது வரை யோசித்து பார்த்து விட்டேன். நம்மால் முடிந்தது யோசிக்க மட்டும் தானே. அந்த நாளும வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தேன். சில மணித்துளிகளுக்கு பிறகு அவர் வந்தார். அடடடா என்னா கலரு என்னா பிகரு. பார்த்ததும் கொஞ்ச நேரம் மெய்மறந்து நின்றேன். மிகக்கொஞ்ச நேரமே. என்னிடம் வந்து ஆர் யூ மிஸ்டர் செந்தில் என்றாள். ஆஹா என்ன குரல். குயில் ஆங்கிலத்தை ஸ்டெயிலாக பயன்படுத்தியது போல் இருந்தது.

கொஞ்சம் நில்லுங்கள். ஒவர் பில்ட் அப்பாக இருக்குது. ஜொள்ளு கதையா இது என்று நினைக்க வேண்டாம். அந்த அம்மிணியை பற்றிய நல்ல நினைப்பெல்லாம் சில மணிநேரங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு நடந்ததெல்லாம் டெரர் தான்.

வந்து காருக்குள் நுழைந்ததும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். டமால் டுஸ் டகீர். என்னடா புரியாத சப்தம் என்று பார்க்காதீர்கள். என் இதயம் வாய் வழியாக வெளி வந்து உடைந்து நொறுங்கி விட்டிருந்தது. என் எதிர்பார்ப்பெல்லாம் காலி.

அவர் வருதற்கு முதல் நாள் இரவு ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "அத்தான் காபி சாப்பிடுங்க".

நல்ல கனவு, கனவுடனே சென்று விட்டது. அந்த சமயத்தில் என் கற்பனையில் அதே பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "மச்சி நெருப்பு இருக்கா".

கல்யாண கனவு கலைந்து சும்மா குஜாலுக்காவது முயற்சி பண்ணுவோமே, எதிர்பார்ப்பு அடுத்த கட்டமாக இறங்கி வந்தது. அவர் வந்து என் நிறுவனத்தின் மேலதிகாரிகளை சந்தித்த பின் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட கெஸ்ட் அவுஸில் தங்க வைக்க அழைத்து சென்றேன். இரண்டு நாள் ஒய்வு தேவை, டிரைவர் மட்டும் போதும், இரண்டு நாள் கழித்து பணியை துவங்குவோம் என்றார். நான் எங்கள் டிரைவர் அண்ணாதுரையை விட்டு விட்டு சென்றேன். நாமும் உடனடியாக முயற்சித்து விடக்கூடாது பொறுமை காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து காலையில் அவரை அழைக்க சென்றேன். காலையிலேயே வின்டெஜ் கட்டிங் அடித்துக் கொண்டிருந்தார். மிச்சமிருந்த நம்பிக்கையும் கரைந்து ஒடி விட்டது. இனிமேல் இவரை ஒண்ணும் பண்ண முடியாது. நமக்கு நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து மாமா இது தான் அண்ணா சமாதியா என்று கேட்டு வியக்கும பெண்ணே சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன்.

மீதமிருந்த நாட்களும் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் சென்றது. ஒரு நாளைக்கு 3 பாக்கெட் தம்மடிப்பார். ஒரு புல் பாட்டில் அடிப்பார். ஆனால் ஆள் போதையில் இருப்பது போலவே தெரியாது. நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன். நாம இன்னும் வளரணும் என்பது மட்டும் தெரிந்தது.

இதையெல்லாம் விடுங்க. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு நடந்தது என்பதை சொன்னால் நான் ஜோக்கராகி விடுவேன். தமிழோடு கலந்து பேசும் தமிங்கிலீஷ் தெரியும், மலையாளி பேசும் மங்கிலீஷ் தெரியும், அது போலவே தெங்கிலீஷ், ஹிங்கிலீஷ் எல்லாம் கேட்டு விட்டேன். எனவே நான் மிகப்பெரிய இங்கிலீஷ்மேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் வந்து பேசிய இங்கிலீஷ் இருக்கே அப்பப்பப்பா, அது ஸ்பெங்கிலீஷ். இங்கிலாந்துகாரன் பேசும் இங்கிலீஷே புரியாது ஸ்பெயினை தாய்மொழியாக கொண்டவள் பேசும் இங்கிலீஷ் எப்படியிருக்கும். அவள் பேசுவதை கேட்டால் விவேகானந்தா கல்வி நிலையத்தின் ஓனரே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒடுவார். நானெல்லாம் எம்மாத்திரம். சிக்கிட்டேன். பேசிப்பேசியே என்னை சிதைச்சிட்டார்.

கெஸ்ட் அவுஸ் சர்வீஸ் பையனிடம் இவர் ஒன்று கேட்க அவன் என்னைப் பார்க்க நான் ஒன்று சொல்ல அவன் வந்து கொடுத்த பிறகு தான் தெரியும் அவர் கேட்டது வேறு என்று. பலமுறை நடந்த இந்த கூத்தை என் பாஸ் ஒரு முறை பார்த்து விட்டார். பிறகென்ன என்னை கிழிகிழி என்று கிழித்து விட்டார். வெக்கம், மானத்தை விட்டு எப்படியெல்லாம் வேலைப் பார்க்க வேண்டியிருக்கு. துடைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

ஒரு வழியாக அவர் கேட்ட பொருட்களின் ரேட்களை எல்லாம் நான் மார்க்கெட்டில் விசாரித்து கொடுக்க ஒரு வழியாக புராஜெக்ட் ரெடி செய்து விட்டு புறப்பட்டார். ஏர்ப்போர்ட்டில் வழியனுப்பும் போது தாங்க்யூ பார் எவரிதிங் என்று சொல்லி ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டு புறப்பட்டார். கடைசி வரையில் என்னன்னமோ எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். நல்லவேளை தப்பித்தேன்.

அன்றிரவு மீண்டும் கனவு அதே வெள்ளைக்காரப் பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் கேட்டாள் "மச்சி நெருப்பு இருக்கா".

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு தினமும் மட்டையாகும் அளவுக்கு சரக்கடிக்காமல் நான் தூங்கியதில்லை.

ஆரூர் மூனா செந்தில்

29 comments:

 1. பாவம்யா நீ... நான் கூட பசக் பசக்கோன்னு நினைச்சேன். அங்க இதெல்லாம் சகஜம்யா.

  ReplyDelete
 2. அவ்வளவுதானா.....

  ReplyDelete
 3. //நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து//

  What is this?? Needamangalam is a town. Not a குக்கிராமம்.

  I am issuing a legal notice to you for this :))

  ReplyDelete
 4. வெளிநாட்டு ஆம்பிளை எவ்வளவோ மேல். (Male)

  ReplyDelete
 5. super sir,very interesting experrience

  ReplyDelete
 6. செந்திலு உங்க கதை இப்ப ரிலீஸ் ஆகற பிட்டு படம் மாதிரியெ போயிருச்சு....!ஒன்னுமே நடக்கலையா இல்லை தங்கச்சிக்கு பயந்திட்டு பொய் சொல்றிங்களா...டவுட்டு!

  ReplyDelete
 7. /// தஞ்சை குமணன் said...

  பாவம்யா நீ... நான் கூட பசக் பசக்கோன்னு நினைச்சேன். அங்க இதெல்லாம் சகஜம்யா. ///

  அவளுக்கு சகஜமா இருக்கலாம். எனக்கு அது பேரதிர்ச்சியாச்சே.

  ReplyDelete
 8. /// சங்கவி said...

  அவ்வளவுதானா..... ///
  நடந்தது அவ்வளவு தான் சதீஷ், அதுக்கு மேல நம்ம கற்பனையில ஒட்டிக்க வேண்டியது தான்.

  ReplyDelete
 9. /// மோகன் குமார் said...

  //நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து//

  What is this?? Needamangalam is a town. Not a குக்கிராமம்.

  I am issuing a legal notice to you for this :)) ///

  அண்ணே வணக்கம்ணே, நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள முன்னாவல்கோட்டை, ஆதனூர் மண்டபம், கீழப்பட்டு, கோவில்வெண்ணி, சிக்கப்பட்டு, சித்தமல்லி ஊர்களைச் சொன்னேன் அண்ணே.

  ReplyDelete
 10. /// பழனி.கந்தசாமி said...

  வெளிநாட்டு ஆம்பிளை எவ்வளவோ மேல். (Male) ///

  ஆமாங்கய்யா, ஆம்பிளைங்க தான் மேல்(Male)

  ReplyDelete
 11. /// mohamed salim said...

  super sir,very interesting experrience ///

  நன்றி சலீம்

  ReplyDelete
 12. /// வீடு K.S.சுரேஸ்குமார் said...

  செந்திலு உங்க கதை இப்ப ரிலீஸ் ஆகற பிட்டு படம் மாதிரியெ போயிருச்சு....!ஒன்னுமே நடக்கலையா இல்லை தங்கச்சிக்கு பயந்திட்டு பொய் சொல்றிங்களா...டவுட்டு! ///

  ஏங்க ரெண்டாவது நாளே இது வேலைக்காகாதுன்னு தெரிஞ்சி போச்சு, அப்புறம் எங்கேருந்து மறைக்க.

  ReplyDelete
 13. /// சாம் ஆண்டர்சன் said...

  He he he ///

  சாம் மார்த்தாண்டா உங்களுக்காக ஒரு பின்னூட்டத்தை எடக்கு மடக்கில் போட்டிருக்கிறேன். பார்த்து விட்டு பதி்ல் கூறும்.

  ReplyDelete
 14. எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். (உள்மனசு சொல்லி இருக்குமே...அவ்ளோ தானா...)

  ReplyDelete
 15. /// கோவை நேரம் said...

  எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். (உள்மனசு சொல்லி இருக்குமே...அவ்ளோ தானா...) ///

  உங்கள் குரல் என் மனசாட்சி போலவே இருக்கே. ஹி ஹி

  ReplyDelete
 16. ஏன்யா..இன்னிக்கு போஸ்ட் போட எதுவும் தேறலையா???

  இப்ப என்ன சொல்ல வர...???

  அது சரி...
  கீழ என்னவோ வச்சிருக்கியே....
  அது என்ன திருஷ்டி பரிகாரமா ???
  (உன் ப்ளாக்-க்கு..*()&*()&*^*&^%&*&)

  ReplyDelete
 17. /// NAAI-NAKKS said...

  ஏன்யா..இன்னிக்கு போஸ்ட் போட எதுவும் தேறலையா???

  இப்ப என்ன சொல்ல வர...???

  அது சரி...
  கீழ என்னவோ வச்சிருக்கியே....
  அது என்ன திருஷ்டி பரிகாரமா ???
  (உன் ப்ளாக்-க்கு..*()&*()&*^*&^%&*&) ///

  ஏங்க நீங்க அறிவாளி தான படிச்சு புரிஞ்சிக்கங்க, மேட்டர சைலண்டா சொல்லியிருக்கேன். முடிஞ்சா கண்டுபிடிங்க.

  ReplyDelete
 18. /// தமிழ்வாசி பிரகாஷ் said...

  சொந்த கதை ஹி..ஹி.. ///

  சொந்தக்கதை மட்டுமில்ல பிரகாஷ், சோகக்கதையும் கூட.

  ReplyDelete
 19. செந்தில்,
  ரொம்ப சுவாரிசியமா உங்க அனுபவத்தை எழுதி இருக்கேங்க.
  ரொம்ப எதார்த்தமா இருக்கு முக்கியமா "நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன்". ரொம்ப வெளிபடையான ஆளு நீங்க.

  ReplyDelete
 20. /// ராஜ் said...

  செந்தில்,
  ரொம்ப சுவாரிசியமா உங்க அனுபவத்தை எழுதி இருக்கேங்க.
  ரொம்ப எதார்த்தமா இருக்கு முக்கியமா "நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன்". ரொம்ப வெளிபடையான ஆளு நீங்க. ///

  நன்றி ராஜ், இருந்தாலும் அது உண்மைதானுங்களே

  ReplyDelete
 21. நீடாமங்கலம் பொண்ணு அவ்வளவு மட்டமா?? மட்டை ஆகிற ஆளுக்கு எந்தப்பொண்ணா இருந்தா என்ன???

  ReplyDelete
 22. /// Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

  நீடாமங்கலம் பொண்ணு அவ்வளவு மட்டமா?? மட்டை ஆகிற ஆளுக்கு எந்தப்பொண்ணா இருந்தா என்ன??? ///

  அண்ணா, நான் இப்படியெல்லாம் யோசிச்சதுனால தான் பெங்களூரு பொண்ண லவ்வடிச்சு கட்டிக்கிட்டேன் போல.

  ReplyDelete
 23. தம்பி பாதிக்கதைதான் சொல்லி இருக்கீங்க,மீதி எங்க?

  ReplyDelete
 24. போலீஸ் ரெய்டு வந்த பிட்டு பட தியேட்டர் மாதிரி முடிச்சிட்டீங்களே?

  ReplyDelete
 25. ஏகப்பட்ட அனுபவம் இருக்கும் போல? நல்லாத்தான் இருக்கு!

  ReplyDelete
 26. எப்படியோ ஒரு பச்சக் கிடைச்சுதே....

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...