சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, February 6, 2012

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3

இரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.)

இதன் முந்தைய பாகங்களான முதல் பகுதி / இரண்டாம் பகுதி படிக்க

நேரே என்னிடம் வந்த கோச் எப்படி நீ இவ்வாறு பேசலாம் என்று கேட்டார் அவ்வளவு தான். அவருக்கு தபதப வென அடி விழுந்தது. அவர் என்னை நோக்கி வந்ததும் ஆட்டக்களத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எப்படி அந்த கோச் என்னிடம் வந்து பேசலாம் என்று கோபப்பட்டு என்ன ஏதுவென்று விசாரிக்காமல் அவரை பின்பக்கத்திலிருந்து அடி வெளுத்து விட்டார்கள். பிறகு பள்ளித் தாளாளர் வரை பிரச்சனை சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகே பிரச்சனை முடிந்தது.

பத்தாவது தான், நான் என் நண்பர்களுடன் பிட்டு படங்களுக்கு செல்ல ஆரம்பித்தக் காலம். திருவாரூரில் செங்கம் மற்றும் பேபி ஆகிய தியேட்டர்களில் பிட்டு படங்கள் போடுவார்கள். டிக்கெட் 4 ரூபாய் தான் இருக்கும். முக்கால்வாசி மதிய நேரங்களில் தியேட்டரில் தான் இருப்போம். சில நாட்களில் எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியாராக இருந்த ராஜமாணிக்கம் வாத்தியாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன் மறைவாக போய் பால்கனியில் அமர்ந்தெல்லாம் படம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அந்த இரண்டு தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன.

அப்பொழுது தான் சிராக்கோ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில பிட்டுப் படம் வந்தது. திருவாரூரிலேயே 80 நாட்களுக்கு மேலாக ஓடிய படம் அது. கிட்டத்தட்ட அந்தப்படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். போதும், இதற்கு மேல் அசைவமாக வேண்டாம்.

அதே போல் பெண் பிள்ளைகளை சைட் அடிக்க ஆரம்பித்த நேரமும் இது தான். முதல் பெண்ணின் பெயர் புவனி*. திருவாரூரில் புதுத்தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் அவர்கள் வீடு இருந்தது. அவள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ விளையாட்டில் வீராங்கனையாக இருந்தாள். அவர்கள் தினமும் பயிற்சி செய்யும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு நானும் என் நண்பன் கணேசும் சைக்கிளில் செல்வோம். அங்கு அவள் பயிற்சி முடியும் வரை காத்திருந்து அவளுக்கு பின்னாலேயே வீடு வரை வருவோம். ஏன் அவனுடன் என்றால் அவனும் அவளை சைட் அடித்தான். எங்களுக்குள் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. அவள் யாரை நோக்குகிறாளோ மற்றவர் விலகி விடுவது என்று. ஆனால் நடந்ததே வேறு. அவள் வேறு ஒருவனை காதலித்து அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஒடி விட்டாள்.

சில நாட்கள் நாங்கள் விரக்தியுடன் திரிந்தோம். இந்த பெண் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. என்று முழுதாக முளைக்காத தாடியை வைத்துக் கொண்டு சோகமாக திரிந்தோம். பிறகு ஒரு நாள் மடப்புரம் தெட்சணாமூர்த்தி மடத்தில் புவனி1*ஐப் பார்த்தோம். பிறகென்ன மீண்டும் ஷேவிங் செய்து கொண்டு மனதில் கனவுகளுடன் வியாழக்கிழமை தோறும் மடத்திற்கு சென்றோம் அவளுக்காக. இந்த கணேஷ் பயலும் என்னுடனே சேர்ந்து அவளுக்காக மடத்திற்கு வந்தான். பிறகு அந்த பிகரும் ஊத்திக் கொண்டது வேறு ஒரு சோகக்கதை.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பதினொன்றாம் வகுப்பு அதே பள்ளியில் முதல் குரூப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே இருந்த நண்பர்கள் குழாம் பிரிந்து புதிய நண்பர்கள் குழாம் அமைக்கப்பட்டது. தினேஷூம் மஞ்ச ரொட்டி விஜயனும் என்னுடன் நெருங்கிய சினேகிதர்களானார்கள். தியேட்டரில் பிட்டு படம் பார்த்த காலம் முடிந்து எவன் வீட்டில் உறவினர்களெல்லாம் ஊருக்கு போகிறார்களோ அடுத்த சிலமணிநேரத்திலேயே விசிஆர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் அதிலும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள இருந்ததை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன்.

பதினொன்றாம் வகுப்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு சிறப்பு இருந்தது. ஆமாம் அந்த வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தாராம். நாங்கள் கூட அதே கடைசி பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். பதினொன்றாம் வகுப்பில் காலாண்டுக்கு பிறகு சுத்தமாக மதியம் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டு ஊர் முழுவதும் சுற்ற ஆரம்பித்து வீணாய் போக ஆரம்பித்தேன்.

ஆரூர் மூனா செந்தில்

(தொடரும்...)

16 comments:

  1. கனா காணும் காலங்கள் அருமை ....

    ReplyDelete
  2. கலைஞர் படித்த பள்ளியா இது...ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது ....

    ReplyDelete
  3. அதே பெஞ்ச்....அப்புறம் ஏன் அரசியலுக்கு நீங்க வரல.....

    ReplyDelete
  4. இளமை காலங்கள் ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல இருக்கே....துள்ளுகிறது இளமை ...

    ReplyDelete
  5. சிராகோ.....அந்த.... குதிரையில் போகும் போது ஒரு பிட்டு கூட இருக்குமே ...அந்த படம் தானே ....

    ReplyDelete
  6. என்னது....உங்க உதவி தலைமை ஆசிரியருமா ....விளங்கிடும்......உருப்பட்ட மாதிரிதான்

    ReplyDelete
  7. சரளா....கோகோ ......கோ ..(போய் ) விட்டாள் அடுத்தவனோடு ..நல்ல ஒத்துமை

    ReplyDelete
  8. /// கோவை நேரம் said...

    கலைஞர் படித்த பள்ளியா இது...ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது ... ///

    ஆமாங்கய்யா, அவர் மட்டுமல்ல பேராசிரியர் க. அன்பழகன் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரும் அதே பள்ளியில் படித்தவர்களே.

    ReplyDelete
  9. /// கோவை நேரம் said...

    அதே பெஞ்ச்....அப்புறம் ஏன் அரசியலுக்கு நீங்க வரல.... ///

    தமிழ்நாட்டை கெடுக்க எங்க ஊர்லேர்ந்து ஒருத்தர் பத்தாதுங்களா?

    ReplyDelete
  10. /// கோவை நேரம் said...

    சிராகோ.....அந்த.... குதிரையில் போகும் போது ஒரு பிட்டு கூட இருக்குமே ...அந்த படம் தானே ... ///

    அதே படம் தானுங்கய்யா, நீங்களும் விளையாடியிருப்பீங்க போலருக்கே.

    ReplyDelete
  11. /// கோவை நேரம் said...

    என்னது....உங்க உதவி தலைமை ஆசிரியருமா ....விளங்கிடும்......உருப்பட்ட மாதிரிதான் ///

    அதை விட கொடுமை 12ம் வகுப்புல அவருக்கு நாங்க தாங்க டிக்கெட் வாங்கிக் கொடுப்போம்.

    ReplyDelete
  12. /// கோவை நேரம் said...

    சரளா....கோகோ ......கோ ..(போய் ) விட்டாள் அடுத்தவனோடு ..நல்ல ஒத்துமை ///

    என்னே உங்க டைமிங்கான ரைமிங், என்னவோ போங்க.

    ReplyDelete
  13. பதிவுலக கலைஞர் திராவிட போர்வாள் ஆரூர் முனா!!

    ReplyDelete
  14. /// ! சிவகுமார் ! said...

    பதிவுலக கலைஞர் திராவிட போர்வாள் ஆரூர் முனா!! ///

    வாழ்க, வாழ்க (நம்மளை நாமே பாராட்டிக்கலனா எப்படி)

    ReplyDelete
  15. Senthil: Pl. dont write ladies name as it is. (Like your class mate that you have written). Pl. change the real names.

    Also u are posting the same 2 photoes of your school for this series. You can probably post your childhood photoes

    ReplyDelete
  16. /// மோகன் குமார் said...

    Senthil: Pl. dont write ladies name as it is. (Like your class mate that you have written). Pl. change the real names.

    Also u are posting the same 2 photoes of your school for this series. You can probably post your childhood photoes ///

    பெயரை மாத்திட்டேன். அப்புறம் அடுத்தடுத்த தொடர்ச்சிகளில் பெயரை போட மாட்டேன் அண்ணே, அது போல் அடுத்த பகுதிகளில் என்னுடைய பழைய போட்டோக்களை போடுகிறேன் அண்ணே.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...